ஸ்ரீவைகுண்டம்,

தலபுராணம்:- பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம். வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.

அமைவிடம்

முகவரி:- அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்,
ஸ்ரீ வைகுண்டம் – 628 601,
தூத்துக்குடி (மாவட்டம்). தொலைபேசி : +91 4630 256 476,

தாயார் : ஸ்ரீ வைகுந்தவல்லி
மூலவர் : ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : திருநெல்வேலி
கடவுளர்கள்: ஸ்ரீ வைகுண்ட நாதபெருமாள்,ஸ்ரீ வைகுண்ட‌வல்லி,சொர்ணநாயகி(பூதேவி)


திவ்யதேச பாசுரங்கள்

    190.   
    அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*
    உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
    கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.

        விளக்கம்  


    • பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிகவிரும்பி அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.


    277.   
    வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
    கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 
    வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
    தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*

        விளக்கம்  


    • கண்ணபிரானது குழலிசையைக்கேட்ட மேலுலகத்து மாதர் தங்களிருப்பிடத்திலே இருக்கமாட்டாமல் கண்ணனிருக்குமிடத்தில் கூட்டங் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்ட பிறகு அவர்களது மனம் நீர்ப்பாண்டமாய் உருகிற்று; கண்களினின்றும் ஆநந்த பாஷ்பங்கள் துளிர்த்தன; கூந்தல் அவிழ்ந்தன; நெற்றி வேர்த்தது; இப்படிப்பட்ட விகாரங்களை அடைந்துகொண்டே அவ்விசையைக் கேட்டுக்கொண்டு மயங்கிக்கிடந்தனரென்க. பரமபதத்தில் எம்பெருமான் நித்ய்ஸூரிகளைத் தலைவராக்கி அவர்களின் கீழே தன்னையமைத்துக்கொண்டு அவர்களுக்கு நிர்வாஹகனாயிருக்குந்தன்மை பற்றி வானிளவரசு என்றார்; “திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும் பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று இத்தத்துவம் வளர்வது” என்பது பட்டரருளிச் செயலாம். அந்த ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தைகளுக்குக் குசலம் கோருவது போல அநவரதம் இவனுக்கு மங்களாசாஸநம் பண்ணுந்தன்மைபற்றி வைகுந்தக் குட்டன் என்றார்; வைகுந்தர்+குட்டன்;--”சில விகாரமாமுயர்திணை” என்பது விதி. பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரு மில்லாமையால் அங்கு இளவரசராயிருப்பது, தன்னுடைய ஆச்ரித பாரதந்திரியத்துக்கு ஒக்கும்; இவ்விபூதியிலுள்ளாரடங்கலும் ஸ்வதந்திரராகையாலே, ஈரரசு அறுத்துக் கொண்டு மன்னனாயிருக்கவேண்டுதலால் மதுரை மன்னன் என்றார். இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபராகையாலே இவனை நந்தர்கோனிளவரசு என்றார்.


    399.   
     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*
    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

        விளக்கம்  


    • பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது வந்திழிகிற வேகத்தைச் சொல்லுவன பின்னடிகள். கடுத்து=கடுமை-வேகம்.


    472.   
    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*
    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)

        விளக்கம்  


    • பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்- *** மென்ற வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்மஸ்வரூபம், திவ்யமங்கள விக்ரஹம், திவ்யகல்யாண குணம் எனப் பொருள்வாசிகாண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட***மென்னும் வடசொல்லின் விகாராமகக்கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; தனம் = தடம்; ***- துவராவதி- ***- இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப்பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக்கூட்டி உயர்யஸிக்க. “உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரையெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய வெள்ளை” என்று நம்மாழ்வாருக்குப் பகவத்விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப்பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத்திருமொழி” என்ற ஆற்றோருரையி லருளிச்செயல் இங்கு அறியற்பாலது.


    482.   
    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்*  தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்* 
    மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்*  மாமீர் அவளை எழுப்பீரோ*  உன் மகள் தான்-
    ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ*  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ* 
    மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று*  நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.

        விளக்கம்  


    • உரை:1

      எல்லோரும் திரண்டுவந்து அழைக்கவேண்டும்படி கண்ணபிரானுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாயிருப்பா ளொருத்தியை உணர்த்தும் பாசுரம் இது. பாவாய்! கீழ்வானம் வெள்ளென்றதே; இனியாகிலும் எழுந்திராய் என்றழைக்க; இதனைக்கேட்ட அவள், அதற்குள் இராக்காலம் கழிகையாவதென்? கீழ் வானம் வெளுக்கையாவதென்? இஃது உங்களுடைய விரிந்த ஞானம்; அஞ்சுடாவெய்யோனணி நெடுந்தேர் தோன்றாதால் என்று திங்கள் திருமுகத்துச் சேயிழை யாரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையை நோக்கிகக்கொண்டிருக்கையாலே உங்களுடைய முகநிலா கீழ்த்திசையிற் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து பிரதிபிம்பித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெறுத்தது போலத் தோற்றுகிறது; இஃது உங்களுடைய அந்யதாஜ்ஞானம்; வேறு அடையாளமுண்டாகிற் சொல்லுங்கள் என்ன; எருமைகள் பனிப்புல் மேய்கைக்காகச் சென் பரந்தமை ஏற்ற அடையாளமன்றோ? என்கிறார்கள். சிலர், எருமை சிறை வீடு எனப் பாடங்கொண்டு, எருமைகள் சிளையீனின்றும் (தொழுவத்தினின்றும்) விடுக்கப்பட்டு என்றுரைத்தனர் அது பொருத்தமற்றதெனமறுக்க. சிறுவீடு மேய்கையாவது ஊர்ப்பசுக்களுடனே சென்று வெளி வயல்களில் மேய்வதற்கு முன்னே அவரவர்கள் சொந்தமாக அமைத்த நல்ல பசும்புல் நிறைந்த சிறு தோட்டங்களில் மேய்கை. நன்றாகப் பால் தருவதற்காக இப்படி சிறு வீடு மேய விடுதல் ஆயர் வழக்கம்.

      உரை:2

      தூய்மையான மாணிக்கங்களால் ஒளி வீசும் மாடங்களில் எல்லாம் விளக்குகள் எரிய, நறுமண தூபங்கள் கமழத், தூங்குவதற்காகவே இருப்பது போன்ற படுக்கையின் மேல் கண்களை மூடிக் கொண்டிருக்கும் மாமன் மகளே! மாணிக்கங்களால் அழகு பெற்றிருக்கும் கதவுகளின் தாளைத் திறப்பாய்!
      மாமீ! அவளை எழுப்ப மாட்டீர்களா? உங்கள் மகள் தான் ஊமையா? இல்லை செவிடா? மயக்கம் அடைந்துவிட்டாளோ? படுக்கையை விட்டு எழ முடியாதபடி நீண்ட உறக்கம் கொள்ளும் படி யாராவது மந்திரம் போட்டுவிட்டார்களா?
      மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று என்று இறைவனின் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்வோம்! அவளை எழுப்புங்கள்!


    774.   
    வால் நிறத்தொர் சீயமாய்*  வளைந்த வாளெயிற்றவன்,* 
    ஊன்நிறத்து உகிர்த்தலம்*  அழுத்தினாய். உலாயசீர்,*
    நால்நிறத்த வேதநாவர்*  நல்ல யோகினால் வணங்கு,* 
    பால்நிறக் கடல்கிடந்த*  பற்பநாபன் அல்லையே?*

        விளக்கம்  


    • ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில். இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ? ****** என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும் இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ? இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில். வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார். வால் வெண்மை. இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே. சீயம் = சிங்கம். “வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும். ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க. உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி.


    779.   
    படைத்தபார் இடந்துஅளந்து*  அதுஉண்டுஉமிழ்ந்து பௌவநீர்,* 
    படைத்துஅடைத்து அதிற்கிடந்து*  முன்கடைந்த பெற்றியோய்,*
    மிடைத்த மாலி மாலிமான்*  விலங்கு காலன்ஊர் புக,* 
    படைக்கலம் விடுத்த*  பல் படைத் தடக்கை மாயனே!  

        விளக்கம்  


    • “மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம். அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம். அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம். விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க. இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.


    796.   
    மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்*  மண்ணுளே மயங்கி நின்று,* 
    எண்ணும்எண் அகப்படாய் கொல்*  என்ன மாயை, நின்தமர்*
    கண்ணுளாய்கொல் சேயைகொல்*  அனந்தன் மேல் கிடந்த எம்- 
    புண்ணியா,*  புனந்துழாய்*  அலங்கல்அம் புனிதனே!

        விளக்கம்  


    • “மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே!” என்று ஸம்ஸாரிகளின் கொடுமையை நினைத்து வருந்தினார் கீழ்ப்பாட்டில். அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளிலே தாமும் ஒருவராயிருக்கச் செய்தேயும் தாம் அவர்களைப் போலன்றியே எம்பெருமானுடைய பரத்வம், ஸௌலப்பம் முதலிய குணங்களிலே ஈடுபட்டு அவற்றை வாய்வெருவுதலே போதுபோக்காயிருக்கப் பெற்றமை அருளிச் செய்கிறார். 47. பாட்டு காரொடொத்த. “மண்ணுவாய்” “விண்ணுளாய்” இத்யாதி பதங்களுக்கு அடுத்தபடியாக உள்ள (சொல்) என்ற இடைச்சொற்களெல்லாம் வாக்யாலங்காரமாக நினைக்கத் தக்கன. ‘மண்ணுளாய், என்ன மாயைகொல்? விண்ணுளாய், என்ன மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம். அப்ராக்ருதமாய் அதீத்ரியமான திவ்ய மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம். அப்ராக்ருதமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை ப்ராக்குத ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்துக் கண்ணுக்கு விஷயமாக்கா நின்றாய்; ஸம்ஸார நாற்றமே தெரியாத நித்யஸூரிகட்கும் அபரிச்சேத்யனாக விண்ணிலே உள்ளாய்; ப்ரக்குரதி ஸம்பந்தத்தாலேவந்த விபரீதஜ்ஞாதத்தையுடையராய் ப்ரயோஜநாந்தபாரான ஸம்ஸாரிகள் மநோரதிக்கும் மகோதங்களுக்கு அவிஷயமாயிராநின்றாய்; உன் திருவடிகளிலே அநந்யப்ரயோஜநராயிருப்பார்க்கும் உனது நிஜஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பியா நின்றாய்; ஆச்ரித விரோதிகள் உன்னை அறியவொண்ணாதே எதிரிட்டு முடிந்துபோம்படி அவர்கட்கு தூரஸ்தனாயிரநின்றாய்; இப்படி பல்வகையாகப்பரந்து நிற்கவல்ல ஆற்றல் உனக்கே உள்ளது- என்று ஈடுபடுகிறார்


    927.   
    அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
    விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
    நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
    கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)

        விளக்கம்  


    • • இந்த பாசுரத்திலே வரும் அமலன், விமலன், நிமலன் மற்றும் நின்மலன் ஆகிய வார்த்தைகளின் பொருள் ஒன்றே ஆகும், ஆனால் தாத்பர்ய பேதம் மட்டுமே கொள்ள வேணும்.

       

      • எம்பெருமான் பரிசுத்தன் ஆகையாலே, தாழ்ந்தவரான தாம் அரங்கன்சந்நிதிக்குள்நுழைந்தால்எம்பெருமானுக்கு குறைவு வந்து விடும் என்று நினைத்தாராம், ஆனால் எம்பெருமானுக்கோஎந்தவித குறையும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்தவரான ஆழ்வார் அமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

       

      • தன் சிறுமையைப்பாராமல், தன்னை அடியாருக்கு ஆட்படுத்திய பேரொளியைக் கண்டு அனுபவித்து விமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

       

      • பிரமன், சிவன் முதலியவர்களும் அஞ்சி அணுகவேண்டிய ஐஸ்வர்யம் மிகுந்திருந்தும், அடியாருக்குஎளியவனாய் இருக்கும் தன்மையை அறிந்து நிமலன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

       

      • அடியாருடைய குற்றங்களைக் கண்டு அவற்றை போக்யமாகக் கொள்ளும் எம்பெருமானைநின்மலன் என்கிறார்.

       

      • தூய்மையுடையவனாய், ஜகத்காரணபூதனாய், உபகாரகனாய், தாழ்ந்தவனான என்னை அடியாருக்குஆட்படுத்தியவனாய், திவ்யதேஜசைஉடையவனாய், நித்யசூரிகளுக்கு தலைவனாய், பரிமளம் மிக்க சோலைகளையுடைய திருவேங்கடமலை மீதுதங்கியவனாய், ஆஸ்ரிதபாரதந்த்ரனாய், அடியாருடைய குற்றங்களைக் காணாதவனாய், பரமபதத்துக்கு நிர்வாஹனாய், உயர்ந்த மதிள்களையுடைய கோயிலிலே கண்வளர்ந்தருளும் அழகிய மணவாளனுடைய திருவடித்தாமரைகள், தானே வந்து அடியேனுடைய கண்களில் புகுந்ததுபோலே இருக்கின்றன என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

      உரை:1

       

      உரை:2

      பெருமானின் பேரழகில் ஈடுபட்டுப் பாதாதிகேச வருணனையாகப் பாடியுள்ளார். பாதாதிகேச வருணனை என்பது அடிமுதல் முடிவரை உள்ள இறைவனின் அங்கங்களைச் சிறப்பித்துப் பாடுதல் ஆகும்.

       

       


    2042.   
    தொண்டுஎல்லாம் பரவி நின்னைத்*  தொழுதுஅடி பணியுமாறு- 
    கண்டு,*  தான் கவலை தீர்ப்பான்*  ஆவதே பணியாய் எந்தாய்,*
    அண்டம்ஆய் எண்திசைக்கும்*  ஆதிஆய் நீதிஆன,* 
    பண்டம்ஆம் பரம சோதி*  நின்னையே பரவு வேனே. 

        விளக்கம்  


    • ”ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும். நாம்“ என்று நம்மாழ்வாரும், பவாம்ஸ்மு ஸஹவைதேஹயா கிரிஸாநஷுரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதச்சதே.“ என்று இளைய பெருமாளும் பாரித்துப் பேசினாப்போலே அடியேனும் எல்லாத் தொண்டுகளையும் செய்திடுவோமென்று பாரிப்புக்கொண்டு தேவரீரைத் திருவடி தொழவேணு மென்றும் மநோரதங்கொண்டிருக்குமளவால். என்னுஐடய மனத் துன்பங்களை நான் போக்கிக் கொண்டேனாக வழியுண்டோ? தேவரீர் திறத்திலே கைங்கரியம் செய்வதோ, தேவரீர் திருவடிகளைத் தொழுது பணிந்து நிற்பதோ எல்லாம் தேவரீருடைய திவ்யஸங்கல்பத்தினால் நடைபெற வேண்டியவையேயன்றி எலியெலும்பனான நீசனேன் நினைத்தபடி எதுதான் ஆகும்? ஒன்றுமாகாது; என் கவலையை நானே தீர்த்துக்கொள்ளவல்லனோ? அல்லேன். தொண்டு செய்தலும் நின்னைத் தொழுதபடிபணிதலும் தலைக்கட்டப்பெற்றால் கவலைதீரத் தட்டில்லை; அவை தலைக்கட்டுவது தேவரீருடைய ஸங்கல்பத்தாலாகுமத்தனையாதலால் அங்ஙனே தேவரீர் ஸங்கல்பித் தருளவேணுமென்று தேவரீரையே துதித்துப் பிரார்த்திக்கின்றனென்கிறார். “பரந்த சிந்தையொன்றி நின்று நின்னபாதபங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க. எண்டிசைக்கு மாதியாய் = அஷ்டதிக் பாலகர்களுக்கும் பாலகன் என்றபடி. நீதியான பண்டம் = பண்டமாவது தனம்; நீதியானபண்டமானது, முறைமைப்படி ப்ராப்தமான தனம், “சேலாய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையுமவரே“ என்கிறபடியே எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.


    2149.   
    உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறுஊழி,*
    உணர்வார் ஆர் உன்உருவம் தன்னை?,*  உணர்வார்ஆர்-
    விண்ணகத்தாய்!*  மண்ணகத்தாய்!*  வேங்கடத்தாய்!*  நால்வேதப்-
    பண்ணகத்தாய்!*  நீகிடந்த பால்?

        விளக்கம்  


    • திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லைநிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படியிருந்தாலும் அவன் தன்மை அறிவார்தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார். இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால் ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும் “ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.


    2158.   
    வேங்கடமும்*  விண்ணகரும் வெஃகாவும்,*  அஃகாத-
    பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும்,* - நான்குஇடத்தும்-
    நின்றான் இருந்தான்*  கிடந்தான் நடந்தானே,* 
    என்றால் கெடுமாம் இடர்   

        விளக்கம்  


    • எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளியிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார். அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமானபடிகளை நாம் சொல்ல, நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது. உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால் அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும். கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை. உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்தகோலத்திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால் ‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.


    2476.   
    ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
    ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்
    கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
    இடம்நாடு காண இனி.  (2)

        விளக்கம்  


    • இப்பாட்டும் மேற்பாட்டும் சாத்துப்பாசுரங்கள், ஏன்றேனடிமை – அடிமையென்றால் மருந்துபோலே முகம்சுளிக்கும்படியிராதே “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி“ என்ற இளையபெருமாளைப்போலே உத்ஸாஹங்கொண்டு பாரிப்பவனாயினேன் என்கை. இப்படியாகவே, அடிமைக்கு விரோதியாயிருந்த தாபத்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேனென்கிறார் இழிந்தேன் பிறப்பிடும்பை என்பதனால் “மீட்சியின்றி வைகுந்தமாநகர் மற்றது கையதுவே“ என்றார்போலே பரமபதம் ஸித்தம் என்கிற உறுதியினால் இங்ஙனே யருளிச்செய்கிறார். அன்றியே “வைகுந்தமாகும் தம் மூரெல்லாம்“ என்றார்போலே தாமிருக்குமிடத்தையே பரமபதமாக அத்யவஸித்து அருளிச் செய்கிறாராகவுமாம். அமரர்க்கு அமராமை ஆன்றேன் – பிரமன் முதலிய தேவர்களும் என்னைக் கண்டால் கூசி அகலவேண்டும்படி பெரும்பதம் பெற்றேனென்கை. (கடனாமித்தியாதி) கடன்பட்டதானது எப்படி அவசியம் தீர்த்தேயாக வேண்டுமோ அப்படி பண்ணின புண்ணியங்களுக்கு அவசியம் பலன் அநுபவித்தே தீரவேண்டுமிடமான ஸ்வர்க்கலோகம் “கடன்நாடு“ எனப் படுகிறது. புண்யபலன்களை யநுபவிக்குமிடமான சுவர்க்கத்தையும் புண்ணியம் திரட்டுமிடமான பூலோகத்தையும் வெறுத்து அனைத்துக்கும் மேற்பட்ட இடமாகிய திருநாட்டைச் சேர்வதற்குப் பாங்காகப் பரமபக்தி நிரம்பப் பெற்றேனென்றாராயிற்று.


    2543.   
    உண்ணாது உறங்காது*  உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
    எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம்,*  எரி நீர் வளி வான்-
    மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்*
    கண் ஆய் அருவினையேன்,*  உயிர் ஆயின காவிகளே. 

        விளக்கம்  


    • கீழ் “புலக்குண்டலப் புண்டரீகத்த” என்ற பாட்டுப் போலவே இப்பாட்டும் - தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர்மறுதல். இத்துறையின் விரிவு. அப்பாட்டினுரையில் காணத்தக்கது. கண்ணால் காணப்பட்ட நாயகியினுடைய கண்களினழகு இவ்வுலகப் பற்றை நீத்து ஊணுமுறக்கமுமற்று போக நிலையிற் பயின்று அதில் தேர்ச்சிபெற்ற மஹா யோகிகளையும் வசப்படுத்திக்கொள்ள வல்லது என்றதனால், தான் அக்கண்ணழகில் ஈடுபட்டதைக் குறித்து நீ என்னைப் பழிக்க இடமில்லையென்று பாங்கனை நோக்கி நாயகன் கூறினானாயிற்று. வாதிகேணரி அழகிய மணவாளச் சீயர் வேறு வகையாகக் கொள்வர்;- தலைமகளை இயற்கையிற் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினாவின் பாங்களைக் குறித்து உற்றதுரைத்த பாசுரம்’ என்றார். கழற்றெதிர்மறுத்தலாகவே நம்பிள்ளை திருவுள்ளம்.


    2545.   
    மலர்ந்தே ஒழிந்தில*  மாலையும் மாலைப் பொன் வாசிகையும்*
    தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி,*  பொரு கடல் சூழ்-
    தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்!*
    கலந்தார் வரவு எதிர் கொண்டு,*  வன் கொன்றைகள் கார்த்தனவே. 

        விளக்கம்  


    • இப்பாட்டுக்குத் துறைகாலமயக்கு: காலம் இளையது என்றல். நாயகனே நாயகியை விட்டு நீங்கும்போது கார்காலத்திலே மீண்டு வருவேனென்று காலங் குறித்துச் சென்றானாய் அக்காலம் வந்தவளவிலும் தான் வாராதிருக்க, கொன்றை மரங்கள் பூக்கத் தொடங்கியதை நோக்கிக் “கார்காலம் வந்துவிட்டதே, இன்னமும் நாயகன் வரவில்லையே’ என்ற நாயகி கலங்காநிற்க, அது கண்ட தோழி ‘நங்காய்! கார்காலம் வந்ததன்றுகாண்; பிரிந்துசென்ற நாயகருடைய வருகையை முற்பட எதிர்நோக்கிக் கொண்டு நமது மகிழ்ச்சியால் கொன்றைகள் தாமாக அரும்பிநின்றன; அதுவேயன்றிக் காலம் வந்து நன்கு மலர்ந்தனவில்லை’ என்று காலத்தை மயக்கிக்கூறி அவளை ஆற்றுவிக்கிறாள்: “காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு, இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது” எனத் துறையிலக்கணங் காண்க:


    2552.   
    உலாகின்ற கெண்டை ஒளி அம்பு*  எம் ஆவியை ஊடுருவக்-
    குலாகின்ற*  வெஞ்சிலை வாள் முகத்தீர்,*  குனி சங்கு இடறிப்-
    புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான்*  அடியார்-
    நிலாகின்ற வைகுந்தமோ,*  வையமோ நும் நிலையிடமே?

        விளக்கம்  


    • மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க. காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது. பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.


    2652.   
    கல்லும் கனைகடலும்*  வைகுந்த வான்நாடும்,* 
    புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,*  -வெல்ல-
    நெடியான் நிறம்கரியான்*  உள்புகுந்து நீங்கான்,* 
    அடியேனது உள்ளத்து அகம். 

        விளக்கம்  


    • கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார். அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார். எம்பெருமான் திவ்யமங்களவிக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில். வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை. அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது. (வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள்கூறுதல் சிறவாது.) வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச்சொல்லிக்கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும் ஸ்ரீவசநபூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க. “கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்? இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்தபேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.


    2983.   
    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*
    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 

        விளக்கம்  


    • அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார். ஐந்து இந்திரியங்களும் ஐந்து விஷயாந்தரங்களிற் பட்டிமேய்வது இயல்பு. கண்ரூபங்களைக் காண்பதும், காது ஒலிகளைக் கேட்பதும், நாக்கு உணவுகளைச் சுவைப்பதும், மூக்கு மணங்களை மோந்து பார்த்தலும், உடல் உடல்களைத் தீண்டுதலும், ஆக இப்படிப்பட்ட காரியங்கள் இந்திரியங்களுக்கு ஏற்பட்டவை. இவை “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முராரிபும்” என்ற முகுந்தமர்லை ச்லோகத்திற் சொல்லியபடியே நிகழுமாயின் குறையொன்றுமில்லை; விபாரிதமாக நிகழ்வதே உலகவியற்கையாதலின், அந்த நிகழ்ச்சியை மறுக்கக் கூறுகின்றார் முதலடியில். நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!- இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, அவ்வுலகம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. துக்கங்கள் தொலைந்தொழிவதே மோக்ஷமென்று கூறுகின்ற பரம வைதிகர்களில் ஆழ்வார்தலைவராதலால் ‘நலமந்த மில்லதோர்நாடு’ என்கிறார். அதனைப் புக விரும்பியிருப்பவர்களே!- என்று விளித்து அவர்கட்குக்காரியம் விதிக்கிறார் பின்னடிகளில்.


    3079.   
    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
    பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 
    பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
    பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)

        விளக்கம்  


    • எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார். *இச்சாக்ருஹீதாபிமதோரு தேஹ: * என்கிறபடியே அடியவர்களுக்காக ஸ்வஸங்கல்பத்தாலே பரிக்ரஹித்தருளும் திருமேனி தேஜோராசி மயமாயிருக்கும்படியைச்சொல்லகிறார். பயிஞ்சுடரொளி மூர்த்தியை என்பதனால். சுத்தஸத்வமயமாய் ஸ்வரூபப்ரகாசகமான திவ்ய விக்ரஹத்திலீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை. பங்கயக்கண்ணை = கீழ்ச்சொன்ன வடிவழகிலும்கூட அகப்படாதாரையும் அகப்படுத்திக் கொள்ளவல்ல திருக்கண்ணழகிலே யீடுபட்டு “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” என்றாற்போலே பேசுமவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்கை. “க: புண்டரீ கநயந: புருஷோத்தம: க” என்கிறபடியே திருக்கண்ணழகே பரத்வ ஸூசகமாகையாலே அந்தப் பரத்வத்திலே யீடுபட்டவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றவாறு. பயிலவினிய = ‘பயிலப்பயில வினிய’ என்றபடி. பகவத் விஷயத்தில் இடைவிடாத பரிசயம் பண்ணினாலும் இனிமை (-போக்யதை) ப்ரதிபத்தி விஷயமாகுமேயல்லது வைரஸ்யம் ஒருபோதும் தோற்றாதென்று கருத்து. இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “இப்படி வடிவழகும் கண்ணழகும் கண்ணழிவற்றிருக்கையாலே இனியதாயிருக்குமிறே. இதர விஷயங்கள் கிட்டுத்தனையும் ஒன்றுபோலேயாய், கிட்டினவாறே அகல வழிதேடும்படியாயிருக்கும்” என்று- எப்பொழும் நாள் திங்களளரண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுத மென்னும்படியான நித்யாபூர்வமான விஷயமாகையாலே எனை யூழிகாலம் இடையறாத பரிசயம் பண்ணினாலும் ஸாரஸ்யமே அதிகரித்துச் செல்லும் விஷயமென்றபடி.


    3116.   
    இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
    படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*
    சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
    உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.

        விளக்கம்  


    • வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார். மீளாவுகைமாகிய பரமபதத்திற் சென்றவர்கள் மீண்டனரென்பது எங்ஙனே கூடுமென்றே சங்கைக்குப் பெரியோர்கள் இங்குப் பலவிதாமக ஸமாதானாங் கூறுவர்கள்: அச்சிராதிமார்க்கத்தாற் சென்றவர்கள் திரும்பி வருதவில்லையென்றும், அதுவும் அவர்களுடைய சுதந்திரமான இச்சையினால் இல்லையென்றும் இங்கு முக்கியமாக வுணர்க. “உடலோடுங் கொண்டு காடுத்தவனை” என்ற விடத்தை பட்டர் உபந்யஸித்தருளும்போது “பூசின மஞ்சளும் உடுத்தின பட்டும் இட்ட சவடிப்பூணூலும் இட்ட காதுப்பணிகளுமான வொப்பனையில் ஒன்றுங் குறையாதபடி கொண்டுவந்து கொடுத்தவ” னென்றருளிச் செய்தாராம். அது கேட்டவர்கள் “இப்பிள்ளைகள் பிறந்த க்ஷணத்திலேயே கொண்டுபோகப் பட்டார்களாகவன்றோ சொல்லுகிறது; அப்போது இவையெல்லாம் இருக்க ப்ரஸக்தியில்லையே” என்று பட்டரிடம் விஜ்ஞாபிக்க. “ரிஷிபுத்திரர்களாகையாலே பிறக்கிறபோதே அவற்றோடே பிறப்பர்காணும்” என்றருளிச் செய்தாராம். ரஸோக்தியிருந்தபடி.


    3547.   
    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 
    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!

        விளக்கம்  


    • ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்தருளியிருப்பவனும், என்னுடைய வலிய கொடிய வினைகள் எல்லாம் அழிந்து அற்றுப் போகும்படியாகச் செய்கின்ற தூயோனும், என்னைத் தனக்கு உரியவனாக்கி என்னால் தன்னை வைகுந்தநாதனாகப் புகழ் வளவிய இனிய கவிகளைச் செய்யும் குந்தன் என்னும் திருநாமத்தையுடையவனுமான எம்பெருமானை எத்தனை நாள் சிந்தித்தாலும் மனம் நிறைவு உண்டாகுமோ?


    3701.   
    ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
    ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*
    மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
    ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  

        விளக்கம்  


    • எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில் (ஆகஞ்சேர் நரசிங்கமதாகி) மநுஷ்யசரீரத்தில் ஸிம்ஹசரீரம்கலகாது ஸிம்ஹ சரீரத்தில் மநுஷ்யசரீரம் கலகாது இங்ஙனே உலகவியல் பாயிருக்க, ஓராகத்திலே நாமும் சிங்கமும் சேர்ந்தாயிற்று அவனுடைய விலக்ஷணஸங்கல்பத்தாலே ••• விருத்தே வையக்ரீஸுகடிதஸமாநாதிகாணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் (ஸ்ரீரங்கராஜஸ்தவம்) என்று பட்டரருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம் "ஆகம்சேர்" என்பதற்கு–ஒரு வடிவிலே பொருந்திச் சேர்ந்த என்று இங்ஙசே பொருள் கொள்வதிற்காட்டிலும் மற்றொரு வகையான பொருள் மிகச் சிறக்கும் ஆகம் என்று நம்முடைய திருவுள்ளத்தைச் சொன்னபடியார், தமது நெஞ்சிலே மறக்க வொண்ணாதபடி சேர்ந்த நரசிங்கம்–என்று சிறுத்தனைக்காகவும் செருக்கனை முடிக்கவும் ஒருகால் தோன்றி மறைந்த திருவுருவமாயிலும் அது ஆழ்வார்போன்ற பரமபக்தர்களின் உள்ளத்திலே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருக்குமே. ஓராகம் வள்ளுகிரால் பிளந்தான்–இரணியனுடைய முரட்டுடம்பைத் தநது வாயால் சொல்லக்கூசி 'ஓராகம்' என்கிறார். அதனைக் கூரியவுகிரால் ஆயாஸமின்றிப் பிளந்த பெருமான் நித்யாவாஸம்பண்ணுகிற மாகவைகுந்தம் (மஹகம்) என்கிற வடசொல் மாகமெனத் திரிந்தது. "பரமே வ்யோமந்" என்று வேதத்தில் சொல்லுகிறபடி வைகுந்தம் பரமாகாச சப்தவாச்யமாதலால் மாகம் என்றது. மாகம் என்று ஒரு தமிழ்ச் கொல் உண்டென்றும், அது பெருமைக்கு வாசகமென்றும் சொல்லுவர் சிலல் அப்போது பெருமை தங்கிய வைகுற்தமென்றதாகும். அதனைக் காண்பதற்கு, எம்மனம் இராப்பகலின்றியே ஏகமெண்ணும் – என்னுடைய ஹருதயமானது எப்போதும் மநோரதியாநின்றது. இராப்பலவின்றியேன்றது–இரவென்றும் பகலென்றும் வாசியல்லாதபடி யென்றவாறு. ஸம்ஸாரிகளுக்கு இரவொருகாரியமும் பகலொரு காரியமுமாயிருக்கும் ஆழ்வார்க்கு எப்போதும் ஒரே காரியமேயுள்ளது. ஏகம்–வடசொல்.


    3743.   
    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.

        விளக்கம்  


    • இப்பாட்டும் மேகவிடுதூது, பரமபதத்திற்பண்ணுமாதரத்தை என் பக்கலிலே பண்ணினவரன்றோ அவர்; உங்கள் வார்த்தை கேட்டவாறே பதறியோடி வருவர்; எனக்காக வொருவார்த்தை விண்ணப்பஞ்செய்யுங்கோளென்று பின்னையும் மேகங்களை யிரக்கிறாள் ஆறாயிரப்படியருளிசெயல் காணமின்–"அவளுக்கருளி ரென்னவமையுமோ? இன்னாருக்கருளீரென்ன வேண்டாவோ வென்னில், யாவவொருத்தியுடைய நெஞ்சை உமக்குத் திருநாடாகக் கொண்டு நீர் உறைகிறீர் அவளுக்கு அருளீரென்று சொல்லிகோளென்கிறாள்" என்று. தெளிவிசும்புகடிதோடித் தீ வளைத்து மின்னலக்கு மொளிமுகல்காள்!= ஆகாசத்திலே வேகமாக ஸஞ்சரிக்கையும், கொள்ளிவட்டம்போல மின்னல் விளங்கப்பெறுகையும் மேங்களுக்கு இயல்பு. ஆசாரியகளை மேகமாக விலக்ஷிக்கையாலே அவர்களிடத்தும் இந்த விசேஷணம் பொருந்தும். ஆசாரியர்களுக்கு லீலாவிபூதி, நித்யவிபூதின்று ஒரு வாசியின்றி உபயவிபூதியும் ஒரு நீராயிருந்து இங்குப்போல அங்கும் ஸஞ்சரிக்க வல்லமையுண்டாதலால் அதையிட்டுத் தெளிவிசும்புகடி தோடுகை சொல்லிற்று. மேகத்தில் மின்மின்னுவது எப்போதும் கிடையாது; நன்றாக மழை பெய்ய நிற்கும் ஸமயத்தில்தான் மின்மின்னும். தீ வளைத்து மின்னிலகுமென்றதனால் வர்ஷிக்கஸித்தமாயிருக்கிற மேகங்களென்று காட்டப்பட்டு, மஹார்த்தங்களை வர்ஷிக்க ஸஜ்ஜர்களாயிருக்கு மாசாரியர்கள் காட்டப்பட்டாராயினர். மேகங்களை விளிக்கிறதபோது ஒளிமுகில்காள்! என்று விளித்து, எம்பெருமானையும் ஒண்சுடர் என்ற சொல்லால் இங்குச் சொல்லியிருக்கையாலே, ஆசாரியர்கள் எம்பெருமானிற் காட்டில் வேறு பட்டவர்களல்லர் என்பதும், அவனோடு பரம ஸாம்யம் பெற்றவர்களே யென்பதும் தெரிவிக்கப்பட்டதாம். பரமபதத்திலே பண்ணும் வியாமோஹத்தை ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பண்ணி எம்பெருமான் வர்த்திக்கிறானென்பது மூன்றாமடியின் கருத்து. இங்குத் தீவினையேன் என்றது–நெஞ்சிலே விளங்கா நிற்கவும் காணபாட்டாதபடி பாபத்தைப் பண்ணினேனே யென்று நொந்து சொல்லுகிறபடி. (துளிவார்கட் குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே) திருமுடியிலே மாலை சாத்தியிருப்பவர்க்கு என்கையாலே ரக்ஷண தீக்ஷிதர் என்பது காட்டபட்டது. ஆர்த்தரக்ஷணத்திற்கென்று தனிமாலையிட்டிருக்கு மெம்பெருமானுக்கு என் விண்ணப்பத்தைத் தெரிவிக்க வேமென்றதாயிற்று.


    3863.   
    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*
    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.

        விளக்கம்  


    • “கிளி தாவிய சோலைகள் சூழ்திருப்பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவான்” என்ற பின்னடிகளை முன்னம் யோஜித்துக்கொள்வது. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள் கிளியோடொக்கச் சொல்லப்படுவர்கள்; அத்தகைய ஸத்புருஷா;கள் வாழுமிடமான திருப்பேர் நகாரிலுறையும் பெருமான் இருள் தருமா ஞாலம்போலன்றியே எப்போதும் தெளிவையே பண்ணக்கடவதான திருநாட்டை எனக்குத் தருவதாகத் துணிந்திருந்தான்; துர்வலபமான விஷயம் நமக்கு இங்ஙனே எளிதானபடி என்னே! என்று, முன்பு விடாய்த்திருந்த எனது கண்கள் களித்தன; சிந்தையுங் களித்தது என்றாராயிற்று.


    3871.   
    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*
    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)

        விளக்கம்  


    • திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி, எங்குஞ் சூழ்ந்த ஆகாசப்பரப்படங்கலும் ஆபரணம் போன்று விளங்குகின்ற மேகங்களின் முழக்கம் மங்கள வாத்ய கோஷம்போல் செவிப்பட்டது. ஆழ்ந்த கடல்களானவை அலையா நின்றுள்ள திரைகளாகிற கைகளை யெடுத்துக் கூத்தானெ. கீழே சொன்ன மங்களவாத்ய கோஷத்திற்குச் சேர இந்த நா;த்;தனமும் மங்கலமாகக் கூடிற்றென்கை. ஸப்தத்வ{பங்களும் புதுக்கணித்தனர்; (அல்லது) உபஹாரங்களை ஏந்தி நின்றன. இதெல்லாம் யாரைக் கண்டென்ன; (என்னப்பன் வாழ்புகழ் நாரணன்தமரைக் கண்டுகந்தே) ஸ்ரீவைகுண்டத்திற்கு வரப்புறப்பட்ட மஹாபாகவதர்களைக் கண்டு. இது ஒருவருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்ததன்று; ப்ரீதி உள்ளடங்காமற் செய்தது என்பதைக் காட்டும் உகந்து என்பது.


    3872.   
    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*
    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.

        விளக்கம்  


    • மேலுண்டான லோகங்கள் பண்;ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்; நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்களானவை நாராயணன் தமரைக் கண்டவுகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக அமைந்தன. கீழ்ப்பாட்டிலே சூழ்விசும்பணி முகில் தூரியமுழக்கினவென்று சொல்லியிருக்கச் செய்தேயும் அந்த ஒரு கிஞ்சித்காரமும் பண்ணினபோலும். “ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசமெல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்பட்டதென்றுமாம்’ என்பது ஈடு. நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன-நீரணிந்த கடல்களானவை ஒரு கால் ஆடினோமே யென்றிராமல் ஹா;ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்துக்கொண்ன். (நெடுவரையித்யாதி.) அந்தந்த லோகங்களிலுள்ளோர் பெரிய மலைபோலே யிருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள். உலகு என்றது உலகர் என்றபடி; உயந்தோர் என்று பொருள்.


    3873.   
    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*
    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 

        விளக்கம்  


    • ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்;டாடும்படியை யருளிச்செய்கிறார். உலகர்கள் தொழுதனர்-இங்குப் பொதுவாக உலகர்களென்றது ஆதிவாஹிக தேசங்களிலுள்ளார்களைச் சொல்லும். அவர்கள் கைபடைத்த பயன் பெற்றோற்மென்று தொழுது நின்றார்கள்; அவ்வளவோடும் நில்லாமல் தூபத்தையும் நல்ல மலர்மழையையும் ப்ரயோகித்துத் தொழுதார்கள். என்னபாசுரஞ் சொல்லிக் கொண்டு தொழுதார்களென்னில்; (பூமியன்றளத்தவன் தமர்முன்னே) ‘எம்பெருமான் உலகளந்தருளின் செயலுக்குத்அதற்கு று அடிமைப்பட்டவர்களன்றோ இவர்கள் என்று சொல்லிக் கொண்டே தொழுதார்களாயிற்று. அங்குள்ள முனிவர்களும் இரண்டருகும் நின்றுகொண்டு ‘இங்கே யெழுந்தருளவேணும், இங்கே யெழுந்தருளவேணும்’ என்று நல்வரவு கூறி உபசாரித்தார்கள்; பரமபதம் போவார்க்கு இதுவே வழியென்று எதிரேவந்து சொன்னார்கள்.


    3874.   
    எதிர்எதிர் இமையவர்*  இருப்பிடம் வகுத்தனர்* 
    கதிரவர்அவரவர்*  கைந்நிரை காட்டினர்*
    அதிர்குரல் முரசங்கள்*  அலைகடல் முழக்குஒத்த* 
    மதுவிரி துழாய்முடி*  மாதவன் தமர்க்கே.

        விளக்கம்  


    • கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர்-ஆதித்யர்கள் நிலைவிளக்குப்போலே ‘இங்ஙனே யெழுந்தருள்க, இங்ஙனே யெழுந்தருள்க, பார்த்தருள்க, பார்த்தருள்க, என்று கைகளை நிரையே காட்டினார்கள். அர்ச்சிராதிகளான ஆதிவாஹிக கணங்களைச் சொன்னதாகவுமாம். (அதிரி குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த) அதிரல நின்றுள்ள தொனியையுடைய முராஜவாத்யங்கள் அலையெறிகின்ற கடல்போலே முழங்கின. இப்படிப்பட்ட ஸத்காரங்கள் நடைபெறுவது யாவர்க்கு? என்னில்; மதுவிர்துழாய் முடி மாதவன் தமர்க்கே-எம்பெருமானுடைய திவ்யாலங்காரங்களிலேயீடுபட்டவர்களும், பிராட்டி முன்னாகப் பணிந்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு. இவ்விடத்து நம்;பிள்ளையீட்டிலே அற்புதமானவொரு ஸ்ரீஸீக்தியுள்ளது; “இங்கே வைஷ்ணவர்களென்பதுவே ஹேதுவாகப் பங்குபெறாதே திரியுண்ட வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிரிகொண்டு இருப்பிடங்கள் கொடுக்கப்படுகிறபடி” என்று. அதாவது-திருநாட்டிலே இப்படிப்பட்ட ஸத்காரம்; பெறும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த நாட்டில் வர்த்திக்கிற காலத்திலே இங்குள்ளவர்களால் ஒரு ஸத்காரமும் பெறாததோடு திரஸ்காரமும் பெறுகிறார்களே யென்று திருவுள்ளம் நொந்து அருளிச்செய்தபடி. இதற்காக ஒரு இதிஹாஸமுமருளிச் செய்கிறார்-“மிளகாழ்வான் படைவீட்டிலே அகரத்துக்குச் செல்ல ‘நீ ஆந்தராளிகன், உனக்குப்பங்கில்லைக் என்ன, ‘நன்மையல் குறையுண்டாய்ச் சொல்லுகிறிகோளோ? அன்றே’ என்ன, ‘நன்மையில் குறையில்லை, இதிறேஹேது’ என்ன ‘நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்கள் வைஷ்ணவர்களென்று கைவிடப் பெற்றோமிறே’ என்று புடவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினான்” என்று. (இதன் கருத்தாவது) மிளகாழ்வானென்கிற ஸ்ரீ வைஷ்ணவர், அரசன் வித்வானாகையாலே தமக்கும் அவை கிடைக்கூடுமென்றெண்ணி அவ்வரசனிடம் சென்றார்; அரசன் வீரசைவனாகையாலே இவர்க்கு ஒன்றும் தரமாட்டேனென்றான்; ‘ஏன் எனக்குத் தரமாட்டேனென்கிறாய்? எனக்குத் தர்க்கம் தெரியாதா? வியாகரணம் தெரியாதா? மீமாம்ஸை தெரியாதா? எந்த சாஸ்த்ரத்தில் வேணுமானாலும் பாரிiகூஷ செய்துகொள்ளாலாமே’ என்றார். அதற்கு அரசன் ‘ஓய்! உமக்குப் பாண்டித்யத்தில் குறையொன்றும் நினைத்திலேன்; நீர் மஹாவித்வானென்பதறிவேன்; ஆனால் நீர் வைஷ்ணவராகை யாலே தரமாட்டேன்’ என்றான். அதுகேட்டு மிளகாழ்வான் ‘உண்மையில் நமக்கு வைஷ்ணத்வம் இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தினாலாவது நமக்கு வைஷ்ணத்வ இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தனாலாவது நமக்கு வைஷ்ணத்;வம் முண்டாகப் பெற்றதே! என்று ஆனந்தக் கூத்தடித்து க்ராமபூமிகள் பெற்றதற்கு மேற்பட மகிழ்ந்தாராம். இதனால் ப்ராக்ருதர்கள் வைஷ்ணவனென்று திரஸ்காரிப்பதும் நன்றேயென்று காட்டினபடி. இராவணன் த்வாம் து திக் குலபாம்ஸநம் என்று சொல்லி கர்ஹித்ததையே விபீஷணாழ்வான் சிறப்பாகக் கொண்டானிறே.


    3875.   
    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*
    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  

        விளக்கம்  


    • வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம். போதுமின் எமதிடம் புகுதுக – ‘இங்ஙனே யெழுந்தருளவேணும், எங்களதிகாரங்களைக் கைக்கொள்ளவேணும்‘ என்று பிரார்த்தித்தார்களாம். அப்படி அவர்கள் ப்ரார்த்திக்கிறவளவிலே கின்னரர்களும், கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள், கின்னர தேசமென்றும் கருடதேசமென்றும் அங்கே சில நாடுகளுண்டு, அந்நாடுகளிலுள்ளார் பாடினார்களென்றபடி. (வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே) மேலுலகங்களில் வைதிகர்களாய்க்கொண்டு ஸமாராதனம் பண்ணுமவர்கள் தங்கள் ஸமாராதன பலன்களை இவர்களது திருவடிகளிலே ஸமர்ப்பித்தார்கள். முக்திக்குச் சொல்லுகிறவிவர்கள் எதையும் விரும்பாமற் சென்றாலும் தங்கள் தங்களதிகாரங்களைக் கொடுப்பாரும் பாடுவாரும் யாகபலன்களை ஸமர்ப்பிப்பாருமாய் நிற்பது அவரவர்கள் ஸத்தை பெறுவதற்காகவென்க.


    3876.   
    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*
    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.

        விளக்கம்  


    • திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார். வேள்வியுள் மடுத்தலும்-கீழ்ப்பாட்டிற் சொன்ன யாகபல ஸமரிப்பணம் நடைபெற்றவளவிலே யென்றபடி. வேறே சிலர்நறுமணம் மிக்க தூபங்களையிட்டார்கள். வேறே சிலர்காளங்களையும் சங்குகளையும் ஒலிப்பித்தார்கள் காளமென்பது திருச்சின்னம்; காஹளம் காஹளீ என்;பர்வடநுற்லார். காஹன மென்ற சொல்லே காளமெனத் திரிந்தது. ஆழியான்தமர் வானகம் ஆண்மின்கள் என்று வாளொண்கண் மடந்தையர் மகிழ்ந்து வாழ்த்தினர்-எம்பெருமானுடைய கையுந்திருவாழியுமான அழகிலே யீடுபட்டவர்களன்றோ நீங்கள்; வாருங்கள்! இவ்விடத்தை யாறுங்கள்! என்று சொல்லி திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர். வாளொண்கண் என்ற அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை விவாரித்தருளுகிறார் காண்மின்-“தேசாந்தரத்தில் நின்றும் போந்த ப்ரைஜையைத் தாய்மார் குளிரப் பார்க்குமாபோலே ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி”. (மகிழ்ந்து) என்பதனால் ஒருவருடைய நிர்ப்பந்தத்திற்காகச் செய்கிறார்களல்லர், ப்ரீதிதூண்டச் செய்கிறார்களென்பது போதரும் முடிவில் நம்பிள்ளை ஸ்ரீஸீக்தி;


    3877.   
    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-
    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே

        விளக்கம்  


    • மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது. வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே என்று கீழ்ப்பாட்டில் சொன்னது தன்னையே மீண்டும் “மடந்தையர் வாழ்த்தலும்” என்று அநுபாஷிப்பதானது அந்த வாழ்த்துதலிலுண்டான ஆதாரதிசயத்தினாலென்க. திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் வாழ்த்தின வளவிலே, (மருதரும் வசுக்களும் எங்குந்தொடர்ந்து தோத்திரம் சொல்லினர்). மருத் கணங்களும் வஸீ கணங்களும் தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாமிடமெங்குஞ் சென்று புகழ்ந்தார்கள். இங்கே ஈடு!-“ஒரு நிமேஷ மாத்திரத்திலே ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரத்தேறப் போமவர்களாகையாலே, தங்கள் எல்லைக்குள்ளில் புகழ்ந்தவளவால் பரியாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள். அவர்கள் தாங்கள் சடக்கெனப்போகிற விதுக்கு அடி என்னென்னில்; தாங்கள் கண்ணன் விண்ணுற்ர் தொழவே சாரிகின்றது சங்கம் என்றும் காண்பதெஞ்ஞான்று கொலோ என்றும் மாகவைகுந்தம் காண்பதற்கென மனமேகமெண்ணும் என்றும் உடன் கூடுவதென்று கொலோ என்று மிருக்கையாலும் ந ஜீவேயம் கூஷணமபி என்றிருக்குமவன் கருத்தறியுமவர்களாகையாலும்” என்று. வழியில் ஆதாரிப்பவர்களெல்லாரும் என்னவென்று சொல்லி ஆதாரிக்கிறார்களெனன்னில்; (குடந்தை யெங்கோவலன் குடியடியார்க்கே) இவர்கள் திருக்குடந்தை யெம்பெருமானிடத்திலே குடிகுடியாக அடிமைப்பட்டவர்களென்று சொல்லிக் கொண்டு ஆதாரிக்கிறார்களாம். இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட மறக்கமுடியாதபடி திருக்குடந்தைப்பதியின் அநுபவம் செல்லாநின்றதென்று தெரியவரும். திவ்யப்பிரபந்தங்களெல்லாம் லோபமடைந்திருந்தவொரு கால விசேஷத்தில் ஸ்ரீமந் நாதமுன்கிள் அவற்றைப் புநருத்தாரஞ் செய்வதற்குத் திருக்குடந்தைப்பதி விஷயமான ஆராவமுதே யென்கிற திருவாய்மொழியே மூலகாரணமாயிற்றென்று ஜதியுமுளது. த்ர்காலஜ்ஞரான ஆழ்வார் திருவுள்ளத்தில் இது முன்னமே படிந்திருந்தனால் இதையிட்டும் இங்குத் திருக்குடந்தைப் புகழ்ச்சி ப்ராப்தமாயிற்றென்னலாம். திரமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தையே பின்பற்றிப் பேசுகிறவராதலால், நம்மாழ்வார்க்குத் திருக்குடந்தையில் அளவுகடந்த அபிநிவேச முண்டென்பதை யறிந்தே தாம் திருமொழிபாடத் தொடங்கும்போதே தூவி சேரன்னம் துணையோடும் புணரும் சூழ் புனற்குடந்தையே தொழுது என்றும், சொற்பொருளாளீர்சொல்லுகேன் வம்மின் சூழ்புனற் குடந்தையே தொழுவின் என்றும் அருளிச்செய்து, சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தின் முடிவிலும் தண்குடத்தைக் கிடந்தமாலை நெடியானையடிநாயேன் நினைந்திட்டேனே என்று திருக்குடத்தையையே பேசித் தலைக்கட்டினார். அன்றியும் திருக்குடந்தைக் கென்றே தனிப் பிரபந்தமொன்று (திருவெழு கூற்றிருக்i) திருவாய்மலர்ந்தருளினார்.


    3878.   
    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*
    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     

        விளக்கம்  


    • ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில், நித்யர்களும் முக்தர்களும் முறை முறையே எதிரிகொள்ளுகிறார்களாம்; என்ன பாசுரம் சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறர்களென்னில்; (இவர் கோவிந்தன் தனக்குக்குடியடியார் என்று) நித்ய ஸூரிநாதனாயிருக்கிற எம்பெருமான் அந்த நித்யஸூரி நாதத்வத்தைக் குறையாக நினைத்து மண்ணுலகிலே இடைக்குலத்திலே வந்து பிறந்து பசுமேய்க்கையாகிற இழிதொழில் செய்து இதையே தனக்குப் பெருமேன்மையாக நினைக்கின்றவனென்று இந்த ஸௌலப்ய குணத்திலே தோற்று அடிமைப் பட்டவர்களிவர்கள்-என்று சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறார்களாம் கீழ்ப்பாட்டில் அர்ச்சாவதாரப்ராவண்யத்தைச் சொல்லி ஸத்தாரம் பண்ணினார்களென்றது; இப்பாட்டில் விபவாவதார ப்ராவண்யத்தைக் சொல்லி ஸத்சாரம் பண்ணினர்களென்கிறது. முடியுடைவானவர்-எம்பெருமாளுக்குத்தானே திருவபிஷேகமுள்ளது; நித்யஸூரிகளுக்கும் அது உண்டோவென்கிற சங்கைக்கு நம்பிள்ளை பாரிஹாரமுணர்த்துகிறார்-“அவன் ரகூஷகத்வத்துக்கு முடிசூடியிருக்கும்; இவர்கள் அடிமை செய்கைக்கு முடிசூடியிருப்பர்கள்” என்று. கொடியணிநெடுமதின்கோபுரம்குறுகினர்-இவர்கள் வருகிறார்களென்று கொடிகளாலே அலங்காரிக்கப்பட்டிருந்த திருமதிள்கள் சூழ்ந்த திருக்கோபுரத்தைச் சென்று கிட்டினார்கள். (வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே) ஏற்கெனவே எம்பெருமான் வடிவில்லாதவனல்லன்; அப்படியிருந்தும் இப்போது ‘வடிவுடைமாதவன்’ என்று சொல்லுவதன் சுருத்தை நம்பிள்ளை யெடுத்துக் காட்டியருளுகிறார் காண்மின்; “யுவேவ வஸீதேவோபூத் என்று, கம்ஸவதத்துக்குப் பின்பு பிள்ளையைக் கண்ட ஸ்ரீ வஸீதேவரையும் தேவகியாரையும் போலவும், பெருமாளைக்கண்ட சக்ரவர்த்தி புநா; யுவேவ என்று சொல்லிப்பட்டாப்போலவும் தங்கள் வரலாலுண்டான ஹா;ஷத்தாலே புதுக்கணித்தது வடிவு” இங்ஙனே வடிவு புதுக்கணித்ததானது பெருமாளுக்கு மாத்திரமன்று, பிராட்டிக்குங்கூட என்று காட்டுதற்காக மாதவன் என்றது.


    3879.   
    வைகுந்தம் புகுதலும்*  வாசலில் வானவர்*  
    வைகுந்தன் தமர்எமர்*  எமதுஇடம் புகுதஎன்று*
    வைகுந்தத்து அமரரும்*  முனிவரும் வியந்தனர்* 
    வைகுந்தம் புகுவது*  மண்ணவர் விதியே.

        விளக்கம்  


    • அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர். அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே! “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது. இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.


    3880.   
    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*
    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.

        விளக்கம்  


    • மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர். விஷயங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே இருந்து வைத்து அநந்ய ப்ரயோஜநராய் பகவத் குணங்களை யநுபவிக்கப் பெற்ற மஹா புருஷா;களாய் விண்ணுளார்லும் சீரியர் என்று கொண்டாடப் பட்டவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது நம்முடைய பரம பாக்ய மென்று ஒரு தடைவ சொன்னால் போதுமோ? என்கிறார்கள். நல் வேதியர் என்றது நல்ல வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டவர்களென்றபடி. யத்ரர்ஷய ப்ரதமஜா யேபுராணா என்றும், யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: என்றும், தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே என்றும் வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்டவர்களன்றோ. இப்படி கொண்டாடினவளவோடு நில்லாமல் அனந்த வைநதேயாதிகளான அவர்கள் தங்கள் திருமாளிகைகளிலே கொண்டுசென்று ஸ்ரீ பாத தீர்த்தமும் சேர்த்துக் கொண்டமை சொல்லுகிறது இரண்டாமடியில். பதியினில்-பதியென்று இருப்பிடம்; தம்; தம் திருமாளிகைகளிலே கொண்டு புக்கு என்றபடி. இங்கே ஈடு;-“இவனொரு ஸம்ஸாரி சேதநன், நாம் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் என்று வாசிவையாதே இவனை ஸிம்ஙாஸனத்திலே உ பர வைத்து அவர்களுக்குப் பாங்காகத் தாங்களிருந்து திருவடி விளக்குவர்கள்.” நிதியும் நற்சுண்ணமும்-அவ்வளவிலே பகவத்பாரிசார்கைகள் வந்து எதிரேற்பர்கள்; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் திருச்சுண்ண ப்ரணாதத்தையும் நிறை குடங்களையும் (பூர்ண கும்பங்களையும்) மங்கள தீபங்களையும் ஏந்திக் கொண்டு வந்தனர். இங்கு மதிமுக மடந்தையர் என்றதன் உட்கருத்தை நம்பிள்ளை விவாரிக்கிறார் காண்மின்;-“தேசாந்தரம் போன ப்ரஜை வந்தால் தாய்முகம் குளிர்ந்திருக்குமாபோலே ஹா;ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலேயிருக்கிற முகங்களை யுடைவர்கள் வந்து எதிரிகொண்டார்கள்.”


    3881.   
    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*
    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)

        விளக்கம்  


    • இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று. வந்தவ ரெதிரி கொள்ள என்று. “பிராட்டியோடே கூட எம்பெருமான் தான் வந்து எதிரிகொள்ள” என்;;கிற பொருளையருளிச் செய்வர் நம்பிள்ளை. அயர்வறுமமரர்களும் அவர்களது அதிபதியுமாக எல்லாரும் வந்து எதிரி கொள்ளத் தட்டில்லையே. இப்படி எதிரி கொண்டவர்கள் அனைவரும் புடை சூழ ஆனந்த மயமான திருமாமணி மண்டபத்திலே ப்ரஹ்மானந்த சாலிகளான அடியார்களின் அழகோலக்கத்தின் நடுவே இருந்தபடியையாயிற்று இப்பதிகத்திலருளிச் செய்தது, அந்தமில் போரின்பத்து என்ற விடத்து ஈடு;- “ஸம்ஸாரத்தில் ஸீகமென்று ப்ரமிக்கு மித்தனை; துக்கமேயுள்ளது பாண்டு ஒருவன்மேலே அம்பைவிட ஸம்ஸாரத்தில் ஆயிரங் கூற்றில் ஒரு கூஷணமாயிற்று ஸீகமுள்ளது; அத்தனையும் புஜிக்க வொட்டிற்றில்லையே என்றானிறே.” என்பதாம். (அடியரோடிருந்தமை) ஆழ்வார் திருநாட்டிலே எம்பெருமானை யநுபவிக்கப் பெற வேணுமென்று ஆசைப்பட்டாரல்லர்; ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவதென்று கொலோ!” என்று அடியாரோடிருக்கவே ஆசைப்பட்டார்; ஆசைப்பட்டபடியே பெற்ற பேற்றைத் தெரிவித்தாராயிற்று இங்கு.