திருக் கார்வானம்

திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54 வது திவ்ய தேசம் ஆகும். 'கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

அமைவிடம்

பெயர்: திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்கார்வானம்) அமைவிடம் ஊர்: திருக்கார்வானம் மாவட்டம்: காஞ்சிபுரம் மாநிலம்: தமிழ்நாடு தொலைபேசி எண்: +91-94435 97107,
98943 88279 ,

தாயார் : ஸ்ரீ கமல வல்லி
மூலவர் : ஸ்ரீ கள்வன்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: ஸ்ரீ கள்வர் , கோமளவல்லி தாயார்