திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி

பன்னிரண்டு நாமாக்களில் நாராயணன், விஷ்ணு, ஸ்ரீதரன், பத்மநாபன் என்ற நாலு பெயர்கள் நேராக மஹா விஷ்ணுவைக் குறிப்பதாக இருக்கின்றன. த்ரிவிக்ரம, வாமன என்ற இரண்டும் வாமன ப்ரம்மச்சாரியாகக் குட்டையாக வந்து அப்புறம் த்ரிவிக்ரமானாக வளர்ந்து உலகளந்த அவதாரத்தைச் சொல்கின்றன. கேசவன், மாதவன், கோவிந்தன், மதுஸுதனன், ஹ்ருஷீகேசன், தாமோதரன் என்ற பாக்கியுள்ள ஆறு பெயர்களும் லோக வழக்கில் க்ருஷ்ண நாமாக்களாகவே கருதப்படுகின்றன. ராமாவதாரம், நரஸிம்மஹாவதாரம் முதலிய மற்ற அவதாரங்களுக்கு ஏற்பட்ட தனிப் பெயர்கள் இந்தப் பன்னிரண்டில் இல்லை. வேத ஸ¨க்தங்களில் மஹாவிஷ்ணு த்ரிவிக்ரமனாக வந்ததையே விசேஷமாய்ச் சொல்லியிருக்கிறது. பிற்பாடு புராணங்களிலும், பஜனை, ஸங்கீர்த்தனம் முதலானவைகளிலும் க்ருஷ்ணனையே பூர்ணாவதாரம் என்ற விசேஷித்திருக்கிறது. த்வாத ச நாமாக்களிலும் இந்த இரண்டு அவதாரப் பெயர்களே இருக்கின்றன.

அமைவிடம்

போன்- 044 22632633 35 ஆண்டுகள் ... 28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,
சிர்காழி ஸ்ரீ லோகநாயகி. ,

தாயார் : ஸ்ரீ லோக நாயகி
மூலவர் : திரு விக்ரமன்
உட்சவர்: த்ரிவிக்ரம நாராயணன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: தடலான்,மட்டவிழும் குழலி


திவ்யதேச பாசுரங்கள்

    1178.   
    ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
    ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*
    தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
    தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 

        விளக்கம்  


    • இப்பாட்டில் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்னும் எண்கள் அழகாக அமைந்திருத்தல் நோக்கத்தக்கது. இத்திருப்பதியிலெ ழுந்தருளியிருக்கிற பெருமான் (மூல மூர்த்தி) உலகளந்த பெருமாளாதலால் ஒரு குறளா யென்று தொடங்குகிறார் இரண்டாமடியில் எண்ணா என்கிற செய்யாவென்னும் வாய்ப்பாட்டிறந்த காலவினையெச்சம் எனா என்று தொக்கியிருக்கிறது என்று சொல்லி என்பது பொருள் - தாடாளன் - பெருமை பொருந்தியவன், முயற்சியுள்ளவன், இத்தலம் தாடாளன் ஸந்நிதி என வழங்கப்படுதலுமுண்டு.


    1179.   
    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*
    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

        விளக்கம்  


    • மற்றெல்லாருடைய ஆயுளைக் காட்டிலும் நான்முகக் கடவுளின் ஆயுள் நீண்டதென்பது ப்ரஸித்தம். இதனால் அவன் மிக்க அஹங்காரங் கொண்டிருந்தான் சிரஞ்சீவிகளில் நமக்கு மேற்பட்டாரில்லை என்று செருக்குக் கொண்டிருந்த அந்த நான்முகனுடைய கருவத்தை எம்பெருமான் ரோமசரென்னும் ஒரு மஹர்ஷியினால் தொலைத்திட்டன னென்கிறது முதலடியில், ரோமசரென்பவர் சரீரமுழுவதும் அடர்ந்த மயிர்களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்டகாலம் வாழ்ந்திருந்து எம்பெருமானைச் சிந்தனை செய்யவேணுமென்று குதூஹலமுடையவாய், தீர்க்காயுஸ் பெறுவதற்காக ஒரு புண்ய நதிக் கரையிலிருந்து தவஞ்செய்து கொண்டிருக்கையில் அளவு கடந்த ஆனந்தங்கொண்ட ஸ்ரீமந்நாராயணன், இவர் முன்னே வந்து ஸேவை தந்தருளி, உம்முடைய விருப்பத்தைக் கூசாதே வேண்டிக் கொள்ளும் என்று சோதிவாய் திறந்தருளிச் செய்ய, மாமுனிவரும் இவ்வுடம்போடே உன்னை வெகுகாலம் வழிபட வேணுமென்று பேராசை கொண்டிருக்கிறேன் நான் அனேகமாயிரம் ப்ரஹ்ம்மாக்களுடைய ஆயுளை என்னொருவனுக்குக் கல்பித்தருளினால் மஹாப்ரஸாதமாகும் என்று கை கூப்பி விண்ணப்புஞ்செய்ய எம்பெருமான் அப்படியே திருவுள்ளமுவந்து “ மாமுனிவரே! ப்ரஹ்மாவினுடைய ஆயுளின் அவதி உமக்குத் தெரிந்ததே ஒரு ப்ரஹ்மா காலஞ்சென்றால் உம்முடைய உடம்பினின்றும் ஒரு ரோமம் இற்று விழக்கடவது இப்படி ஒவ்வொரு ப்ரஹ்மாவின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று வந்து இனி உம்முடைய உடம்பில் ஒரு ரோமம் இல்லை என்று சொல்லத்தக்க நிலைமை நெருமளவும் நீர்ஜுவித்திருக்கக் கடவீர்! என்று வரம் தந்தருளி மறைந்திட்டனன் - என்பதாக இக்கதையின் விவரணம் கேட்டிருக்கை. இதிஹாஸ புராணங்களிலிருந்து இதற்கு ஆகரம் கண்டு கொள்க. பல கோழ நூறாயிரம் ப்ரஹ்மாக்களின் ஆயுளை ரோமச மஹர்ஷிக்கு வரங் கொடுத்த பெருமானென்று முதலடியாற் சொல்லிற்றாயிற்று.


    1180.   
    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*
    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

        விளக்கம்  


    • நெய்தலோடு இத்யாதி - இத்தலத்தில் வாழ்கின்ற கடைச்சாதிப் பெண்களும் அழகிற் சிறந்துள்ளாரென்பதை ஒரு சமத்காரம் பொலியப் பேசுகின்றனர். கடைசிமார்கள் - உழவுத் தொழில் செய்யும் ஈனசாதி மாதர். கழனிகளில் பயிர்களினிடையே நெய்தல். குவளை, குமுதம் முதலியன உண்டாவது வழக்கம். அவற்றால் பயிரின் வளர்ச்சி குறைபடுமாதலால் அவற்றைக் களை பறிப்பதும் வழக்கம். அங்ஙனமே களை பறிப்பதாகக் கழனிகளில் இழிந்த இழிகுல மக்கள் அந்த நெய்தல் மலர்களையும் குவளை மலர்களையும் தங்களுடைய கண்களாகவே பாவித்தும், குமுத மலர்களைத் தங்கள் வாயாகவே பாவித்தும் நம்முடைய அவயவங்களையேயோ நாம் பறித்தெறிவது ! இஃது என்ன காரியம்! என்று கையொழிந்து களை பறியாமலே வெளியெறுகின்றனராம். மாயக் கவணி, பெரியாழ்வார்திருமொழியில் (3-5-3) “ தம்மைச் சரணென்ற தம்பாவையரைப் புனம் மேய்கின்ற மானினம் காண்மினென்று, கொம்மைப் புயக்குன்றா; சிலை குனிக்குங் கோவர்த்தனம் என்ற பாசுரத்தின் தாற்பாயிசைலியும் இங்கு ஸ்மரிக்கத் தக்கது. கோவர்த்தனகிரியில் வாழும் குறத்திகள் மானேய்மடநோக்கிககள் என்பதைப் பெறுவிக்க நினைத்த பெரியாழ்வார் ஒரு வர்ணனை பண்ணினது போல இவ்வாழ்வாரும் இப்பாட்ழல் இந்த வர்ணனை வைத்தாரென்க. கடைசிமார்களின் அழகே இப்பழ யிருக்குமாயின், குல மாதர்களின் அழகு சொல்ல வேணுமோ என்று கைமுதிகந்யாயந்தோற்றக் கடைசிமார்களைக் கூறியவாறு, ஆடவர்களின் ஜ்ஞாநாநுஷ்டாகங்களை வருணித்தல் போல, மடவார்களின் அவயவ ஸளந்தரியத்தை வருணித்தலும் நகரிக்குச் சிறப்புக் வுறுதலிற் சேர்ந்தாமென்பது உணரத்தக்கது, “ ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என்றாரிறே கீழும். வை - கூர்மை “ மதங்கள் செய்து “ என்றவிடத்து “ வானத்தெழுந்த மழைமுகில் போல் எங்குங், கானத்து மேய்ந்து களித்து விளையாடி, ஏனத்துருவாய் “ என்று பெரியாழ்வார்பாசுரம் அனுஸந்திக்க.


    1181.   
    பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
    நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*
    நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
    செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

        விளக்கம்  


    • [நீலமாவல யித்யாதி.] - இத்தலத்தில் திருமாளிகை களெல்லாம் நவமணிகளிழைக்கப் பெற்றுள்ளவை யென்பதை ஒரு வர்ணனையாக வெளிப்படத்துகிறார்சேராச் சேர்த்தி யாயிருக்கிறதென்கிறார். இருள், சந்திரன், ஸூர்யன் என்னும் இம்மூன்றும் கூழ வாழ்கின்றனவென்று சமத்காரமாக வருணிக்கிறார். அதாவது - நீலமணிகள் முத்துக்கள் பவழங்கள் இவை அங்குள்ள திருமாளிகைகளில் (அல்லது திருக்கோயிலில்) மாறி மாறிப் பதித்துளளதனால், நீலமணிகள் அழுத்தப் பெற்றுள்ள விடங்களில் நீலச்சுடர் மலிந்திருப்பது இருள் மூழக் கிடப்பது போன்றுளது முத்துக்கள் பதிக்கப் பெற்றுள்ள விடங்களில் அவற்றின் வெள்ளொளி நிலவு போன்றுளது; பவழங்கள் பதிக்கப் பெற்றுள்ள விடங்களில் அவற்றின் செஞ்சுடரானது உதய காலத்து ஸூர்யனுடைய சிவந்த வெயில் போன்றுள்ளது. ஆகவே வ்யதி கரணங்களாயிருக்கக்கூடிய பொருள்களும் ஸமாநாதிகரணங்களாயிருக்கப் பெற்ற அழகு வாய்ந்தது இத்தலம் என்றதாயிற்று. தஞ்சு - தஞ்சம், இருளானது மாலைப் பொழுதைப் பற்றுக் கோடாக வுடையதாதலால் “ மாவலதஞ்சுடைய விருள் “ எனப்பட்டது.


    1182.   
    தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
    வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*
    விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
    செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   

        விளக்கம்  


    • பகை-பகைவர் , திருத்தி - த்ருப்தி என்னும் வடசொல்லின் விகாரம் - தர்ப்பணத்தைச் சொன்னபடி விகிர்தமாதர் இத்யாதி - விகிர்தம் - வடசொல், “ வேறுபாடுடைய “ என்று பொருள் மற்றெல்லாரும் போலன்றியே வைலக்ஷண்யம் பொருந்தியமாதர் என்ற படி, அவர்கள், குவளை போன்ற கண்ணழகும் கமலம் போன்ற முகவழகும் செவ்வாம்பல் போன்ற வாயழகுமுடையாய் இத்தலத்தில் வாழ்கின்றாரென்றவாறு


    1183.   
    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 
    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.

        விளக்கம்  


    • (வெற்புப் போலு மித்யாதி.) - சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடாநிற்கையில் அவர்களுடைய முகச் சோதியைப் பார்த்துச் சந்திரன் “ இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெள்கி வருந்துகின்றானென்ற விதனால் - இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன வென்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம். துங்கம் - வடசொல், உந்நதமானது, ஆயம் - தோழி, தோழமை, பனி - அச்சம், துக்கம், நடுக்கம்.


    1184.   
    பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
    செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*
    திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
    தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         

        விளக்கம்  


    • முன்னடிகளிலுள்ள வலம்புரி யென்ற சொற்களில், வலம் என்ற வடசொல் விகாரம் - புற்றுமறிந்தனபோல - புற்றுக்களைச் சிதைப்பது எப்படி எளிதான காரியமோ அப்படி எளிதாகவே அரக்கன் முடிகள் பத்தையும் சிதைத்தமையைச் சொன்னபடி திரை நீத்து இத்யாதி - கடலிலே வாழ்ந்து கொண்டிருந்த சங்குகளானவை இத்தலத்தின் நீர்வளத்தைப் பார்த்துக் கடலில் வாஸத்தை இகழ்ந்து விட்டிட்டு இத்தலத்தில் தாழைகள் மலிந்த கழிகளிலே வந்து சேர்ந்து, பிறகு, வயல்களிலே சென்று பாய்கின்ற அக்கழிகள் மூலமாக வயல்களிலே வந்து சேர்ந்து, அவ்விடத்தில் மiர்நீர்தேங்கி நின்று அது வாய்க்காலாலே ஊரிலே வந்து புகுர அவ்வழியாலே தெருக்களிலே வந்தேறி, அந்நீர்வழந்தவாறே பின்னைப் போகமாட்டாதே அவ்விடந்தன்னிலே கிடந்து சங்குகளையும் முத்துக்களையும் ப்ரஸவிக்கின்றனவாம். இத்தால் நீர்வள நிலவளங்கள் சொல்லப்பட்டன.


    1185.   
    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*
    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 

        விளக்கம்  


    • ப்ரவாளம் என்னும் வடசொல் பவளமெனத் திரிந்தது. பவண - மூங்கில், பசுமையிலும் நெய்ப்புடைமையிலும் திரண்ட வடிவத்திலும் மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறுவர். பிணை - மான்பேடை (அணில்கள் தாவ இத்யாதி) - இத்தலத்துச் சோலைகளின் நிலைமையை வருணிக்கிறார். அணிற்பிள்ளைகள் மரங்களிலே தாவித்திரிவது வழக்கமாகையாலே பாக்குமரங்களின் பணைகளிலே தாவும் போது அந்த உராய்தலினால் பழுக்காய்கள் உதிர்ந்து அவை பலாப்பழங்களின் மேல் “தொப்“ என்று விழ அதனால் அப்பழங்கள் பிளவுற்று உள்ளிருந்து தேன் வெள்ளமிட்டுப் பெருகுகின்றதாம். நெடுமை + இலை நெட்டிலை, “க்ரமுகம்” என்னும் வடசொல் கமுகு எனத் திரிந்தது, பீநம் - வட சொல், தெட்ட பழம் = எம்பெருமானார் இத்திவ்யப்ரபந்த காலக்ஷேபம் நடத்தியருளும் போது இவ்விடத்திலுள்ள “ தெட்ட “ என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லையென்று அருளிச் செய்து வைத்து, பின் பொருகால் திவ்யதேச யாத்திரை யெழுந்தருளும் போது இத்தலத்தின் சோலை வழியே வந்து கொண்டிருக்க, அங்கே காவல் மரங்களின் மீது சில சிறு பிள்ளைகள் ஏறிப் பழம்பறியா நிற்கையில் கீழேயிருந்த சில பிள்ளைகள் , அண்ணே! தெட்டபழமாகப் பார்த்துப் பறித்துப் போடு என்ன அதை யாத்ருச்சிகமாகக்; கேட்டருளின எம்பெருமானார்“ பிள்ளாய்! தெட்ட பழமென்றால் என்ன? அதை யாத்ருச்சிகமாகக் கேட் பழுத்த பழம் “ என்று இப்பிள்ளைகள் சொல்ல, உடையவரும் திருவுள்ளமுவந்து “ இது ஒரு திசைச் சொல் போலே யிருந்தது “ என்றாரென்று பெரியோர்க ளருளிச் செய்யக்கேட்டிருக்கை.


    1186.   
    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*
    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    

        விளக்கம்  


    • - (கழுநீர்கூடி இத்யாதி.) - வண்டுகளானவை செங்கழுநீர் மலர்களிலே பேடைகளுடன் கூடிரமித்து அதனுலுண்டான துவட்சிக்குப் பரிஹாரமாகத் தாமரைப் பூக்களிலே வந்து துயில் கொண்டிருந்து (தேனைப் பருகிக் களை தீர்ந்து) பின்பு தாழைமடற் சுண்ணங்களிலே போய்ப்புரண்டு களிப்பின் மிகுதியாலே இசை பாடுகின்றனவாம். “கேதகி” என்னும் வடசொல் ‘கைதை’ எனவும் ‘சூர்ணம்’ என்னும் வடசொல் சுண்ணம் எனவும் திரிந்தன.


    1187.   
    செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
    அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*
    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 

        விளக்கம்