திருப்புள்ளம்

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

அமைவிடம்

முகவரி:- அருள்மிகு ஆதி ஜெகந்நாத பெருமாள் திருக்கோயில் ,
திருப்புல்லணி – 623 532,
ராமநாதபுரம் (மாவட்டம்) தொலைபேசி : +91-4567- 254 527,
+91-94866 94035,

தாயார் : ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
மூலவர் : ஸ்ரீ வல்விலி ராமர்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: ஸ்ரீ ஜெகந்னாத பெருமாள்,கல்யாணவள்ளி


திவ்யதேச பாசுரங்கள்

    1348.   
    அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
    குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*
    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    

        விளக்கம்  


    • அறிவதரியான் = அறிய முடியாதவன் என்றால், ‘ஒருவராலும் அறிய முடியாதவன்’ என்று பொருளா? அன்றி, ‘சிலரால் அறிய முடியாதவன்? என்று பொருளா?’ என்று கேள்வி பிறக்கும்; ஒருவராலும் அறிய முடியாதவன் என்றால் முயற்கொம்பு, மலடிமகன், ஆகாசத்தாமரை முதலிய பொருள்கள் போல எம்பெருமானும் அடியோடு இல்லாதவன் என்றதாரும் : ஆகையாலே அது பொருளன்று; ‘பகவத் ஸ்வரூபத்தை நாமே முயன்று அறிந்திடுவோம் என்று முயல்பவர்களால் அறியக் கூடாதவன் என்று பொருள் கொள்க. அவன் தானே தன் இன்னருளாலே தன் ஸ்வரூபஸ்வபாவங்களைக் காட்டிக்கொடுக்க அப்போது அறியலாகுமேயன்றி வேறுவிதமாக அறியலாகாதென்கை. “திவ்யம் ததாமி தே சக்ஷ{: பச்யமேயோகமைச்வரம்” என்று அர்ஜுநனுக்குக் காட்டிக் கொடுத்தாற் போலக் காட்டிக் கொடுக்கில் காணவழியுண்டு.


    1349.   
    கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
    பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
    பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 

        விளக்கம்  


    • இத்தலத்தின் வயல்வளங் கூறுவன பின்னடிகள். முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப்பாட்டில் ஒருகேள்வி கேட்டான்;- ‘பள்ளச் செறுவில் கயலுகள” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெறிவந்து விட்டது; அப்படியிருக்க, ஈற்றடியில் “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று எங்ஙனே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தாலன்றோ இரை தேடவேண்டும்; கொள்வார் தேட்டமாம்படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப்பிடிப்பதாகச் சொல்லுவது பொருந்தாதன்றோ? என்று கேட்டான்; இதற்குப் பட்டர் அருளிச் செய்ததாவது – பிள்ளாய்! நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்திலை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்றுள்ளது காண்; அங்குள்ள மீன்கள் நிலமிதியாலே தூணும் துலாமும்போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குட்டிகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்கள் தேடிப்பிடிக்க வேண்டு மத்தனை யன்றோ? என்றாராம்.


    1350.   
    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*
    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    

        விளக்கம்  


    • அவ்விடத்து வயல்களில் நிகழும் அதிசயத்தைக் கூறுவன பின்னடிகள். செறிந்த சோலைகளில் தேங்காய்கள் இற்று முறிந்து வீழ்கின்றன; அதனைக்கண்ட மீன்கள் ‘நம்மைக் கொள்ளை கொள்வதற்கு ஏதோவொரு வலிய பறவை நீரிற் குதித்தது போலும்’ என் றெண்ணித் துள்ளிச் சிதறுகின்றன; அதனைக்கண்ட குருகுகள் ‘இக்கயல்கள் நம்மையும் கபளீகரிக்க வருகின்றன கொல்’ எனமருண்டு சிதறியோடுகின்றனவாம். தமக்கு இரையாகத்தக்க கயல்களினின்று குருகுகள் அஞ்சுகின்றனவாகச் சொன்னவிதனால் அக்கயல்களின் வலிமை கூறப்பட்டதாம். தேங்காய்கள் விழுந்ததைக் கண்டே குருகுகளும் இரிந்தனவாகக் கொள்ளுதலுமாம்.


    1351.   
    வெற்பால் மாரி பழுது ஆக்கி*  விறல் வாள் அரக்கர் தலைவன் தன்* 
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்*  துணித்த வல் வில் இராமன் இடம்*
    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்*  கவின் ஆர் கூடம் மாளிகைகள்* 
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.  

        விளக்கம்  



    1352.   
    மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
    நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*
    செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
    பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    

        விளக்கம்  



    1353.   
    மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
    மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     

        விளக்கம்  


    • முதலடியின் வியக்கியானத்திலே “கருமாரி பாய்ந்தும் அணைய வேண்டுமாய்த்து (நப்பின்னைப் பிராட்டியின்) வடிவழகு” என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தியுள்ளது: கருமாரி பாய்தலென்பது, கச்சிமாநகரில் காமாட்சியம்மன் ஆலயத்தில் குளத்திலே நாட்டப்பட்டிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களினிடையே குதித்தலாம். பண்டைக்காலத்தில் ஏதேனும் இஷ்டஸித்திபெற வேண்டுவார் இவ்வருந்தொழில் செய்வது வழக்கமாம்: குடல் கிழிந்து சாகவேண்டும்படியான இவ்வருந்தொழிலை வெகு சாதுரியமாகச் செய்து அயாபமொன்றுமின்றியே உயிர் தப்பி இஷ்டஸித்தி பெறுமவர்கள் மிகச்சிலரேயாவர். மிகக்கடினமான இக்காரியத்திற்குத் துணிந்தார்கள் என்றால் இதனால் அவர்கள் பெற விரும்பிய வஸ்து மிகச் சிறந்ததென்பது விளங்குமன்றோ. அப்படியே, நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்தது இவ்வாக்கியமென்க. கருமாறி யென்றும் சொல்லுவர்; கர்ப்பத்தைக் கிழிப்பதென்றபடி.


    1354.   
    குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
    சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
    குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
    புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     

        விளக்கம்  



    1355.   
    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*
    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.

        விளக்கம்  


    • “மறையால் முத்தீயவை வளர்க்கும்” என்று சேர்த்து அந்லயித்து, வேதங்களைக் கொண்டு அனலோம்புகிறவர்கள் என்றுரைத்தலுமாம்.


    1356.   
    துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
    அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*
    மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.

        விளக்கம்  


    • வேயின்முத்தும் = மூங்கில்களினின்றும் முத்து உதிர்வதாகச் சொல்லுவர்கள். “மின்னு சோதி நவமணியும்” என்று சொல்லிவைத்து நவமணிகளுட்சேர்ந்த முத்தையும் பொன்னையும் தனிப்படவுஞ் சொல்லியிருப்பதால் இவையிரண்டும் திருக்காவிரியில் அதிகமாகக் கொணரப்படும் என்றுணர்க. பின்னடிகட்குப் பொருத்தமாக “சஞசச்சாமர சந்த்ர சந்தந மஹா மாணிக்ய முக்தோத்கராந் காவேரி லஹாரீகரைர்விதததீ பர்யேதி ஸா ஸேவ்யதாம்” என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்வத்லோகம் அநுஸந்திக்கத்தகும்.


    1357.   
    கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
    பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*
    கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
    சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       

        விளக்கம்