திருமாலிரும் சோலை

அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.[1] பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.

அமைவிடம்

திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில் மாவட்டம்: மதுரை அமைவு: தமிழ் நாடு,
இந்தியா,

தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி
மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : மதுரை
கடவுளர்கள்: கள்ளழகர் ,கல்யாணசுந்தரவல்லி


திவ்யதேச பாசுரங்கள்

    71.   
    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 
    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 

        விளக்கம்  


    • உரை:1

      பிரானே! நீ எப்படி செங்கீரையாட வேணுமென்றால் உன்னை இடுப்பிலெடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று தங்களிஷ்டப்படி உன்னை யனுபவித்துவருகின்ற இளம்பெண்களும் மனமகிழும்படி ஆடவேணும்; ஸாமாந்யமாகப் பார்க்கிறவர்கள் எல்லாருடையவும் கண்கள் குளிரும்படி ஆடவேணும்; கவிதொடுக்கக் கற்றவர்கள் பிள்ளைக்கவிகள் பாடிக்கொண்டு வரும்படி ஆடவேணும். அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தனனென்பதை மூன்றாமடியில் வெளியிடுகின்றனரென்க. திவ்யதேசங்களில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குணம் விளங்கும்; திருமாலிருஞ்சோலையில் ராஜாதிராஜனாயிருக்கும் தன்மை விளங்குதல் பற்றி “சோலைமலைக்கு அரசே” என்றார்; திருக்கண்ணபுரத்தில் பரமயோக்யனாயிருக்குந் தன்மை விளக்குதல்பற்றி “கண்ணபுரத்து அமுதே” என்றார். ‘அபலம்’ என்னும் வடசொல் அவலமெனத் திரிந்தது.

      உரை:2

      உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் - அவங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை உன்னோடு விளையாடியும், உனக்குத் தேவையானவற்றை உனக்கு அளித்து, உன்னை மகிழ்ச்சியாய் விளையாடச் செய்து மகிழ்வித்து, மகிழ்ந்தனர்.சிறுபிள்ளைகளுடன் கண்ணன் சிரித்து விளையாடுவதையும், தன் மழலை மொழியால் கொஞ்சுவதையும் கண்டவர்கள் கண் குளிரப் பெற்றனர்; கற்றவர்களோ, மிகுந்த மகிழ்ச்சியால் வார்த்தைகளை மறந்து மெய்சிலிர்த்து நின்றனர்; அத்தகைய ஒரு பேரானந்த களிப்பை, என் அப்பனே உன்னைப் பெற்ற எனக்கு அருள்வாயாக!திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

       


    258.   
    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 
    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*

        விளக்கம்  


    • “மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள். இடைப்பிள்ளைகளெல்லாம் தனக்குக் குடைபிடிக்கும்படி வீறுபாடுடைய இக்கணண்பிரானைத் தவிரித்து மற்றொரு சப்பாணிப்பயலுக்கு என்னை உரிமைப்படுத்த நினைத்தீர்களாகில் குடிகெட்டதாம். பிறனொருவனைக் கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் “கொம்மைமுலைக ளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச்செய்யுந் தவந்தானென்?” என்றிருக்குமவளாகையால் அக்கண்ணனிடத்தே பேரவாக்கொண்டு அதற்கேற்பப் பரிமாறப் பெற்றிலேனாகில் சிந்தயந்தியைப் போலே தன்னடையே முடிந்து போவேன்; பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக்கவலையேயாம் என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லுகின்றாளென்க. (சிந்தயந்தி - ஓர் ஆய் மகளின்பெயர்; இவள் குருஜநத்தின் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெறமாட்டாமல் இருந்தவிடத்திலேயே உள்ளேயுருகி நைந்து முடிந்துபோயினள்.) பங்கி - ஆண்மயிர்; “பங்கியே பிறமயிர்க்கும் பகரு மாண்மயிர்க்கும் பேராம்” என்றான் மண்டலபுருடன். நே த்திரம் - ???; கண், இங்கு மயிற்கண். கடைத்தலை - தலைக்கடை; சொல்நிலைமாறுதல். மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால் = “ ‘கண்ணனுக்கு’ என்னாதே இப்படி சொல்லிற்று இவனுக்கு ஓரடியுடைமை சொல்லுகைக்காக; அடியுடைமை சொல்லும்போது ஒரு ???? (கோத்ர) ஸம்பந்தஞ் சொல்லவேணுமிறே” என்ற ஜீயருரை அறியத்தக்கது (??? ஸம்பந்தம் - பர்வத ஸம்பந்தம் என்று சிலேடை.) கொற்றவனுக்கு = கொற்றம்... ஜயம்; அதையுடையவனுக்கென்றபடி. தன் பொருளைத் தானே கைக்கொள்ளவல்லவனுக்கென்க. அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்தவனிறே. கோழம்பம் - குழப்பம்; கலக்கம் என்றவாறு. பெண் மாண்டால் தாய்மார்க்குக் கலக்கமேயன்றோ.


    338.   
    அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
    குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*
    சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
    சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)

        விளக்கம்  


    • அலம்பா, வெருட்டா - ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலம்பி, வெருட்டி என்றபடி: அலம்புதல் - ‘இவர்களின் கீழ் நமக்குக் குடியிருக்க முடியாது’ என்று நிலைதளும்பச் செய்தல்; பிறவினையில் வந்த தன்வினை. (சிலம்பு ஆர்க்க இத்யாதி.) தேவஸ்த்ரீகள் முன்பு நூபுரகங்கையில் நீராட வரும்போது ராவணாதி ராக்ஷஸர்களுக்க அஞ்சித் தாங்கள் இருப்பிடத்தைவிட்டு புறப்படுவது அவ்வரக்கர்கட்குத் தெரியாதைக்காகத் தம் காற்சிலம்புகளை கழற்றிவிட்டு வருவார் சிலரும், அவை ஒலிசெய்யாதபடடி பஞ்சையிட்டடைத்துக்கொண்டு வருவார் சிலருமாயிருப்பர்கள்; எம்பெருமான் அவதரித்து, அரக்கரைக் குலம் பாழ்படுத்த பின்புச் சிலம்பு ஒலிக்க வருவர்களென்க. சிலம்பாறு- நூபுரகங்கையென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அக்காற் சிலம்பினின்று தோன்றியதனாற் சிலம்பாறு என்று பெயராயிற்று. நூபுரகங்கை என்ற வடமொழப் பெயரும் இதுபற்றியதே. நூபுரம்-சிலம்பு, ஒருவகைக்காலணி. இனி இதற்கு வேறுவகையாகவும் பொருள் கூறுவர், ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில், “***“ என்றருளிச் செய்தபடி * மரங்களுமிரங்கும் வகை மணிவண்ணவோவென்று கூவின ஆழ்வார் பாசுரங்களைக்கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால், அதற்குச் சிலம்பாறென்று பெயராயிற்று, சிலம்பு – குன்றுக்கும் பெயர், “சிலம்பொழி ஞெகிழிகுன்றாம்“ என்பது சூளா மணி நிகண்டு. இப்பொருளை ரஸோக்தியின் பாற் படுத்துக.


    339.   
    வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
    பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*
    எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
    செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.

        விளக்கம்  


    • வல்லாளன் என்று- பாணாஸுரனைச் சொல்லிற்றாய், அவனது தோள்களையும், ராவணனது முடிகளையும் போக்குவித்தானென்று உரைத்தலுமொன்று, திருமலையில் ஓரிடந்தப்பாமல் எங்கும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்ற மங்களாசாஸந கோஷமேயா யிருக்குமென்பது, பின்னடிகளின் கருத்து, எல்லாவிடத்திலும்- அநந்யப்ரயோஜநரோடு ப்ரயோஜநாந்தர பரரோடு வாசியற எல்லாரிடங்களிலும் மென்றபடி; புனத்தினைக்கிள்ளிப் புதுஅவிக்காட்டுகிற குறவரும் “உன் பொன்னடிவாழ்க” என்று மங்களாசாஸநம் பண்ணுவார்கள் என்று மேல், “துக்கச்சுழலை” என்ற திருமொழியில் அருளிச் செய்வது காண்க


    340.   
    தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
    தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*
    எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
    அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.

        விளக்கம்  


    • தக்கார்-எம்பெருமானுக்குத் தகுதியானவர்கள், அதாவது நினைவு ஒற்றுமை யுற்றிருக்கை – “ஸர்வாத்மாக்களும் உய்வு பெறவேணும்‘ என்ற அருள் ஒத்திருக்கை. மிக்கார்-அவ்வருள் விஷயத்தில் எம்பெருமானுக்கும் மேற்பட்டவர்கள், அதாவது –எம்பெருமான் இவ்வாத்துமாக்களுடைய குற்றங்களின் மிகுதியையும், தனது ஸ்வாதந்திரியத்தையுங்கொண்டு சீற்றமுற்று, “பொறுக்கமாட்டேன், எந்நாளும் ஆஸுரயோநிகளில் தள்ளிவிடுவேன்‘ என்று ஒருகால் சொன்னாலுஞ் சொல்லக்கூடும். பாகவதர்கள் அங்ஙன்ன்றியே “சலிப்பின்றி ஆண்பெம்மைச் சன்மசன்மாந்தரங்காப்பர்“ என்றபடி என்றுமொக்க அநுக்ரஹ சீரோயிருப்பர் என்க. இதுபற்றியெ பாகவதர்களை ஆச்ரயிக்க வேண்டுமிடத்துப் புருஷகாரந் தேடவேண்டா என்றதும். இப்படிப்பட்ட மஹானக்களை நிலைகுலைத்துக் கொடுமைபுரிகின்ற கபடராக்ஷஸாதிகளை எம்பெருமான் நரகத்திற் புகச்செய்கின்றமை மன்னடிகளிற் கூறியது. சஞ்சலம் – வடசொல். சலவர் – “***“ என்ற வடசொல்லடியாப் பிறந்த பெயர், கபடத்தை யுடையவர்கள் என்பது பொருள் (தெக்கா நெறியே) யமனது பட்டணம் தக்ஷிண திக்கிலேயாகையாலும், நரகத்துக்குப் போவது அவ்வழியாலே யாகையாலும், “தெக்கா நெறி“ என்று யாம்யமார்க்கத்தைச் சொல்லுகிறது. தெக்கு-உக்ஷிணா என்ற வடசொற் சிதைவு, “அவாசிதக்கணம்யாமியந் தெக்கு, சிவேதை மற்றிவை தெற்கெனவாகும்? என்ற திவாகர நிகண்டு காண்க. செல்வன் – பிராட்டியை யுடையவன், * போதமர் செல்வக்கொழுந்திறே பிராட்டி. கான் நெறி – காட்டுவழி, பாவக்காட்டுவழி, என்க, “இறவுசெய்யும் பாவக்காடு“ என்பது காண்க.


    341.   
    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*
    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 

        விளக்கம்  


    • முன்னடிகளிற் கூறப்பட்ட வரலாறு கீழ்ப் பலவிடங்களில் விரித்துரைக்கப்பட்டமை காண்க. தன் அபிமானத் திலகப்பட்ட அவ்விடையர்களை அந்யசேஷத்தில் நின்றும் மீட்டு மலைக்குச் சேஷமாக்கி யருளியவாறு போல, இங்கும் ஸகல சேகநர்களையும் திருமலையாழ்வார்க்குச் சேஷமாக்குகைக்காக எம்பெருமானெழுந்தருளி யிருக்கின்றனன் என்ற கருத்துத் தோன்றும் இவ்வரலாற்றை இங்குக் கூறியதனால். செய்தான்- ஆறாம் வேற்றுமைத் தொகை. தேவலோகத்துள்ள கல்பவ்ருக்ஷத்திற் பூங்கொத்துக்களினின்று பெருகின மது தாரைகளானவை, திருமாலிருஞ் சோலைமலையில் வோடாநின்றின வென்பது- பின்னடிவகளின் கருத்து. இதனால் அம்மலையினது மிக்க உயர்ச்சியைக் கூறியவாறாம்


    342.   
    ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
    ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*
    கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
    திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 

        விளக்கம்  


    • முன்னடிகளிடங்கிய இரண்டு வரலாறுகளுள் கீழ்விரிந்துரைக்கப்பட்டுள்ளன. வாரணம்- வடசொல். “ஆனைகாத்தொரானைகொன்று” என்ற திருச்சந்த விருத்தத்தை ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கவை, முன்னடிகளென்க. (ஒருவாரண மித்யாதி.) ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக்கொன்றான்; ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும் சிசுபாலனும்.) ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.) ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்; (ஸுக்ரீவனும் வாலியும்) ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக்கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.) ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்) என்னிறை போன்று அடுக்குக் காண்க. பின்னடிகளின் கருத்து; - திருமாலிருஞ் சோலைமலையிலுள்ள ஒரு யானைக்கும் அதன் பேடைக்கும் பிரணயகலஹம் நேர்ந்து, அதனால் அப்பேடையானது அவ்யானையைச் சினந்து அதனைத் துறப்போடப்புக, யானையானது அப்பேடையை மற்ற உபயமொன்றினாலும் நிறுத்தப்படாமல், “அழகர் ஸ்ரீபாதத்தின் மேலோணை; நீ என்னைத் துறந்து அகலலாகாது” என்று ஆணையிட, அப்பேடையானது அவ்வாணையை மறுக்கமாட்டாமல் மீளா நிற்குமென்ற விசேஷத்தைக் கூறியவாறு.


    343.   
    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*
    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.

        விளக்கம்  


    • கண்ணபிரான், நம்பி மூத்தபிரானுடன் கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும்போது இடைவழியிற் கூனியிட்ட சாந்தை அணிந்துள்ள தனது திருத்தோள்கள் இறையுங் குறியழியாதபடி சாணுரமுஷ்டிகாதி மல்லர்களைப் பொருதழித்தமை, முன்னடிகளிற் கூறியது. கூனி சாந்து சாத்தினவுடனே பெண்கள் கண்ணாலே இலச்சினையிட்டு விடுகையாலே அச்சாந்தின் குறியையழிக்க இவனுக்குத் தரமில்லையாம். “சாவத்தகர்த்த சாந்தணிதோள்” என்ற சொற்சேர்க்கைப்போக்கால் இக்கருத்துத்தோன்றுமென்ப. தேவரும், முனிவரும் தமக்குப் புகலிடமாகக் கொண்டு நித்தியவாஸம் பண்ணுமிடம் திருமாலிருஞ்சோலையென்பது, பின்னடிகளின் கருத்து. ஆவத்தனம் ஆபத்காலங்களுக்கு உதவக்கூடிய பொருள்; இங்கு ஆவத்தனமென்றது அழகரைக் கணிசித்தென்னலாம்.


    344.   
    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 
    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே

        விளக்கம்  


    • அர்ஜுன்னுடைய தேர்க்குதிரைகள் தண்ணீர்க்கு விடாய்த்து இசைத்தவளவில், அவன்பக்கல் பக்ஷபாதியான கண்ணபிரான், கடிநமான ஸ்தலத்திலும் நீர் நரம்பு அறியவல்லவனாதலால், அங்கு வாருணாஸ்ரத்தைப் பிரயோகித்துக் கீழுள்ளநீரை வெளிக்கிளப்பிக் குதிரைகளைவிட்டு நீரூட்டிப்புரட்டி யெழுப்பிக்கொண்டு போந்து பூட்டிக்கொண்டுவந்து முன்னேநிறுத்த, இதைக்கண்ட மாற்றரசரெல்லாம் அர்ஜுநன்பக்கல் இக்கண்ணனுக்குப் பக்ஷ்பாதமிருந்தபடியென்!, இனி நாம் இவனை வெல்லுகையென்று ஒன்றுண்டோ?‘ என்று குடல்மறுகினமை, முன்னடிகளிற் கூறப்பட்டது. மறுக –மனங் குழம்புகைக்காக. முன்அங்குநின்று – ஸாரத்யம் பண்ணுகைக்கு உரிய இடத்தில் நின்று என்றபடி. மோழை – கீழாறு, எழுவித்தலாவது – மேலெழும்படி. செய்தல். அகஸ்தியமுனிவன் வீற்றிருக்கும் மலய பர்வத்த்திற்சென்று ‘தர்ம்மே நடத்தக்கடவேன்‘ என்று மலயபர்வத்த்தை யெழுதிக் கொடியெடுத்த ‘மலயத்வஜன்‘ என்ற அரசன் தேரேறிக்கங்கைநீராடப் போகாநிற்கச் செய்தே, * மதிதவழ் குடுமியளவிலே சென்றவாறே தேர் வடக்கு ஓடாமல்நிற்க, அவ்வரசன் அவ்விடத்திலே தேரை நிறுத்தி, ‘இங்கே தீர்த்த விசேஷமும் எம்பெருமானும் ஸந்நிதிபண்ணி யிருக்கவேணும்“ என்று நினைத்து இறங்கி ஆராய்ந்து பார்க்க, அவ்விடத்தில் நித்யஸந்நிஹிதரான அழகர் அவ்வரசனை நோக்கி, ‘இவ்வாற்றிலே நீராடு‘ என்று நியமித்தருள, நாமங்கேட்டணர்ந்து நீராட வேண்டுகையால் ‘இவ்வாற்றுக்குப் பெயர் என்?‘ என்று அரசன்கேட்க, ‘முன்பு நாம் உலகளந்தபோது பிரமன் திருவடி விளக்கினகாலத்தில் நம் பாதச் சிலம்பின் நீர் இதிலே தெறித்துச் ‘சிலம்பாறு‘ என்று பெயர்பெற்றது‘ ன்று அழகர் அருளிச்செய்ய, அதுகேட்ட அரசன் அவ்வாற்றில் நீழாடி, கங்காஸ்நாந விருப்பத்தையும் தவிர்த்து அத்திருமாலிருஞ் சோலைமலையிற்றானே பேரன்பு பூண்டிருந்தானென்ற வரலாற்றைத் திருவுள்ளம்பற்றித் “தென்ன்ன் கொண்டாடும்“ என்றருளிச் செய்தார். தென்ன்ன்-தெற்கிலுள்ளான், திசையடியாப் பிறந்த பெயர் இந்த ஜம்பூத்வீபத்தில் தென்திசைக்கண்ணதான பரதகண்டத்தினுள்ளும் தென்கோடியிலுள்ளதாதலால் தென்னாடெனப்படும் பாண்டியநாட்டை ஆளுதல்பற்றி, அவ்வரசனுக்குத் தென்னன் என்று உயிர்மெய் கெட்டு றகரம் னகரமாயிற்று.


    345.   
    குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
    சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 
    அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
    சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 

        விளக்கம்  


    • திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற அஹங்காரிகளைக் குடியழித்துக் காட்டில் ஒட்டியருளும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பது, முன்னடிகளின் கருத்து. சிறு கால் நெறி - கொடிவழி யென்பது தேர்ந்த பொருள்; ‘நேர்வழியே போனால் யாரேனும் பின்தொடர்ந்து நவியக்கூடும்’ என்றஞ்சிக் கொடிவழியே ஓடுவார்களாம். பின்னடிகளுக்கு உள்ளுறை பொருள்; ஸ்வாபதேசத்தில், திருப்பானாழ்வார், தம்பிரான்மார் போல்வாரை வண்டு என்கிறது. வண்டுகள் தேனைவிட்டு மற்றொள்றைப் பருகமாட்டாமையாலே மதுவ்ரத மென்று பெயர் பெறும்; இவர்களும் “உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துளூறிய தேனை” என்ற பகவத் விஷயமாகிற தேனைவிட்டு மற்றொன்றை விரும்பார்கள். வண்டுகள் (ஆறுகால்களை யுடைமையால்) ஷட்பத நிஷ்ட்டமெனப்படும்; இவர்களும் ஷட்பதம் நிஷ்ட்டர்கள்; ஷட்பதம்-த்வயம்- த்வயம்; அதாவது - “ஸ்ரீமந்நாராயண சரணௌ கரணம் ப்ரபத்யே, “ஸ்ரீமதே நாராயணாயநம:” என்ற இரண்டு வாக்கியம். இப்படி த்வயா நுஸந்தரநபார்களான மஹாநுபாவர்கள்எம்பெருமானுடைய திருநாமங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிற்றஞ் சிறுகாலையில் அடி பணியுமாற்றைக் கூறியவாறு.


    346.   

    சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
    அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 

    இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
    சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    


        விளக்கம்  


    • பூதயோநியாயிருக்கச் செய்தேயும், வைஷ்ணவநாம ரூபங்களோடு கூடி, பகவத்பாகவத பக்தியையுடையனவாய்த் திரியும் பூதங்கள் திருமாலிருஞ் சோலைமலையிற் பல உண்டு; அவை அத்திருமலையில் யாரேனும் ஆஸ்திகர்களாக எழுந்தருளக் கண்டால், அவர்களெதிரில் நிற்கமாட்டாமல் அஞ்ஜலி பண்ணிவிட்டு மறைந்திருக்கும்; தேஹசூபோஷணமே பண்ணித்திரியும் நாஸ்திகர்களைக் கண்டால், அவர்களை அவயங்கள் சிதற அடித்துக்கொன்று, அவர்களுடைய தேஹத்தில்நின்றும் “பெருகுகின்ற ரத்தத்தைத் தம்முடைய சாதிக்குத்தக்கபடி தாம் பருகும்போது, அதனை அழகருக்கு ஆராதநரூபேண ஸமர்ப்பித்துப் பருகிக்கொண்டு, இதுவே ஆபத்துக்கு உதவுமிடமென்று இத்திருமலையிலே வாழுமென்க.


    347.   
    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.


        விளக்கம்  


    • கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு. பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும் ரஸம் முற்றிக் களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி - பெண்பானை; பகடு, களிறு - ஆண் யானை.)


    348.   
    மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
    கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 
    விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
    கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)

        விளக்கம்  


    • இத்திருமொழிகற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டுகிறார், இப்பாட்டால், மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள். விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்


    349.   
    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*
    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)

        விளக்கம்  


    • இதில் முன்னடிகளில் கூறிய வரலாறு- கீழ் வன்னாகன்றேவியில் மூன்றாம்பாட்டின் உரையில் விவரிக்கப்பட்டது. ருக்மினியின் சமையலுக்கு ருக்மண் என்றும், ருக்மி என்றும் பெயர் வழங்குவர் உறைத்திடுதல்-மாநபங்கம் பண்ணுதல்; ஐங்குடுமியைத் தானிறே. உறைப்பான்- ருக்மிணிப் பிராட்டியைச் சிக்கனக் கைக்கொண்டு, மீட்கவந்த ருக்மனையும் பங்கப்படுத்திவிட்ட மிடுக்கையுடையவனென்றபடி. பின்னடிகளின் கருத்து:- திருவாமலிருஞ்சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள், நரம்பும் இதழுமாகப் பூக்களைச் சொரிகின்றமை, முறிந்து பொன் மோதிரங்களையும் பொற்காசுகளையும் வாரிப் பிறர்களுக்குக் கொடுப்பது போன்றுள்ளது என்ற உத்ப்ரேக்ஷையைத் திருவுள்ளத்திற்கொண்டு, உபமேயார்த்தத்தை வெளிப்படையாக அருளிச்செய்யாமல் “தாவி வையங்கொண்டதடந் தாமரைகட்கே” என்றதுபோலக் கூறுகின்றனரென்க. கொன்றைப் பூவிலுள்ள நரம்பும் இதழும்- முறிந்த பொன்மோதிரமும் பொற்காசும்போலே யிருக்கும்படி காண்க.


    350.   
    கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
    வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*
    நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
    செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • முன்னடிகளிலடங்கிய வரலாறுகள் கீழ்ப் பலவிடங்களில் விரிக்கப்பட்டன. பின்னடிகளின் கருத்து; திருமலையிலுள்ள மலைப்பாம்புகள் பூர்ணசந்திரனைப்பார்த்து, அவனைத் தமது ஆமிஷமாகக் கருதி, மேற்கிளர்ந்த தமது நாவினால் அச்சந்திர மண்டலத்தை அளையா நிற்குமென்று- இத்திருமலையில் ஒக்கத்தைக் கூறியவாறாம்


    351.   
    மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
    கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*
    புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
    பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • ஆள் வலியாலும் தோள் வலியாலும் நமக்கு ஓரழிவுமில்லையென்று உறுதியாக நினைத்து அஹங்காரியாயிருந்த நரகாஸுரன், தேவர்களை அடர்த்தும், தேவமாதரைப் பிடித்தும், அதிதியினுடைய குண்டலங்களைப் பறித்தும், இங்ஙனொத்த கொடுமைகளாலே தேவர்களைக் குடியிருக்காலொட்டாதபடி பல பீடைகளைச் செய்ய, தேவேந்திரன் த்வாரகையிற் கண்ணனிடத்துவந்து ‘இவனை கிரஸிக்கவேணும்’ என்று வேண்டிக்கொள்ள, பின்பு கண்ணபிரான் அவனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து, ஸத்யபாமைப் பிராட்டியோடே கூடப் பெரிய திருவடியை மேற்கொண்டு, அவ்வஸுரனது இருப்பிடமாகிய பிராக்ஜோதிஸபுரத்துக்கு எழுந்தருளி, தனக்குத் தப்பிப்போகவொண்ணாதபவடி அவளை வளைத்துக்கொண்டு, திருவாழியாழ்வானைப் பிரயோகித்து, உயிர்தொலைத்திட்டு, நெடுங்காலமாய்த் தான் மணம் புனரவேண்டுமென்று மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினபுரியிற் பல திசைகளிலிருந்துங் கொணர்ந்து சிறை வைக்கப்பட்ட கன்னிகைள் பதினாறாயிரத்தொருநூற்றுவரையும் கண்ணபிரான் தான் கைக்கொண்ட வரலாஙிறு, முன்னடியில் அடங்கியது. சூழ்போகுதல்- சூழ்ச்சி; அதாவது, ஆராய்ச்சி வளைத்தல்- போக்கறுத்தல். புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு என்ற இம்மரங்களின் பூக்கள் பொற்கென்ற நிறம் பெற்றிருக்கும்; அப்படிப்பட்ட பூக்கள் நிறைந்த மரங்கள் இத்திருமலையில் ஒழுங்குபட நிற்பது- மலைக்குப் பொன்னரிமாலை என்னும் ஆபரணம் ஸமர்ப்பிப்பது போன்றுள்ளதென்ற உதயரேக்ஷை, பின்னடிகளும் குக்கருத்து பொன்னரிமாலை என்பது- பொன்னாற்செய்யப்பட்ட ஒரு ஆபரண விசேஷம்.


    352.   
    மாவலிதன்னுடைய*  மகன்வாணன்மகள்இருந்த* 
    காவலைக்கட்டழித்த*  தனிக் காளை கருதும் மலை*
    கோவலர்கோவிந்தனைக்*  குற மாதர்கள் பண் குறிஞ்சிப்* 
    பாஒலிபாடிநடம்பயில்*  மாலிருஞ் சோலையதே.

        விளக்கம்  


    • பலி சக்ரவர்த்தியின் ஸந்ததியிற்பிறந்த பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிகுந்த ஆசை பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்தப்புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும், பிரத்யுநனது புத்திரனுமாகிய அநிருந்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுவதற்கு உபாயஞ்செய்ய வேண்டும்’ என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளரால் அறிந்த அந்தப் பாணன் தன் சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாலே பொது நமாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது, நாரதமுனிவனால் கடந்த வரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீக்ருஷ்ணபகவான், பெரிய திருவடியை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோள்மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே, அப்பட்டணத்தின் ஸமீபத்திற் காவல் காத்துக்கொண்டிருந்த சிவபிரானது பரிமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானால் ஏவப்பட்டதொரு ஜ்வாதேவதை மூன்று கால்களும், மூன்று தலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னோடு யகதங்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை உண்டாக்கி, அதன் சக்தியினாலே அவனைத் துரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாஸுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்நிதேவர் ஐவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து, பர்ணாஸுரனோடு போர்செய்யத் தொடங்க, அவனு“குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸுப்ரஹ்மண்யன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ்செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, ஸுப்ரஹ்மண்யனையும் கணபதியையும் உங்ஊகாரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அனேகமாயிரஞ் சூரியர்க்குச் சமமான தனது சக்ராயுதத்தையெடுத்து பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருந்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க அதன்பின் மீண்டு வந்தனன் என்ற வரலாறு அறியத் தக்கது. உஷை அநிருத்தனுக்குச் சேஷமானது வாணனை வென்ற பின்னரேயாதலால் “வாணன் மகளிருக்க காவலைக் கட்டழித்த” எனப்பட்டது. தனிக்காளை. காமனைப்பெற்ற பின்பும் யௌவனப் பருவம் நிகரற்று இருக்குமவன் என்க. “காளையே எருதுபாலைக்கதிபன் நல்லிளையோன் போரம்” என்ற நிகண்டு அறிய.


    353.   
    பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
    அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*
    குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
    நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையுஞ், கேட்பால் பழம் பகைவன் சிசுபாலன்” என்றபடி- காதுகொண்டு கேட்க முடியாதபடி தூஷித்துக் கொண்டிருந்த சிசுபாலனுக்குச் சரமதசையில் கண்ணபிரான் தன் அழகைக் காட்டித் தன்னளவில் பகையை மாற்றியருளினமை, முன்னடிகளிற் போதகரும், நாழம் என்பதில், அம்- சாரியை, நாழ் என்ற சொல் குற்றமென்னம் பொருளாதலை 1. “நாமா மிகவுடையோம் நாழ்” 2. “நாழமவர் முயன்ற வல்லாக்கான்” என அவ்விடத்து உரைப்பர் அப்பிள்ளை. 3. “அஃதே கொண்டன்னை நாழிவளோ வென்னும்” என்ற விடாமுங் காண்க.அவ்வலைமை - கண்ணன் என்றால் பொறாது நிந்திக்கும்படியான அற்பத்தனம். (கொற்றமலை.) தன் அபிமாகத்தில் அகப்பட்டவர்களை ஸம்ஸாரம் மேலிடாதபடி நோக்கும் வெற்றியை யுடைத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நோக்கும். வெற்றியை யுடையத்தானமலை என்றபடி. கொற்றம்- அதிசயம் (நிலமலை.) மணிப்பாறையாயிருக்குமளவன்றியே, நல்ல பழங்கள் புஷ்பங்கள் தரவல்ல மரங்கள் முளைப்பதற்குப் பாங்கான செழிப்பையுடைய நிலங்களமைத்தமலை யென்க (நீண்டமலை.) பரமபதத்திற்கும் ஸம்ஸாரத்திற்கும் இடைவெளி யற்று உயர்ந்துள்ளது.


    354.   
    பாண்டவர்தம்முடைய*  பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்* 
    ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்*  பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*
    பாண்தகு வண்டினங்கள்*  பண்கள்பாடிமதுப்பருக* 
    தோண்டல்உடையமலை*  தொல்லைமாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • ‘பாண்டவர்கள், துரியோதநாதியரோடு ஆடின பொய்ச்சூதில், தங்கள் மனைவியான த்ரௌபதியையுங்கூடத் தோற்றதனால், குருடன் மகனான துச்சாதஸகன் என்பானொரு முரட்டுப்பயல், பஹிஷ்டையாயிருக்க இவளை மயிரைப்பிடித்திழுந்துக் கொண்டுவந்து மஹாஸபையிலே நிறுத்திப் பரிபலப் பேச்சுக்களைப் பேசித் துகிலை உரித்தபோது, அவள் பட்ட வியஸகங்களையெல்லாம், கண்ணபிரான், துரியோதனாதியர் மனைவியர்க்கும் ஆகும்படி செய்தருளினான். அதாவது- அவர்கள் மங்கலநூல் இழந்தமை “சந்தமல்குழலாளலக் கண் நூற்றுவர்தம் பெண்டிருமெய்தி நூலிழப்ப” என்றார் திருமங்கையாழ்வாரும். பாஞ்சாலி- பாஞ்சால தேசத்தாசன் மகள். நூற்றுவர்- தொகைக் குறிப்பு. பின்னடிகளின் கருத்து; - பிறப்பே பிடித்துப் பாட்டேயொழிய வேறொன்றறியாத வண்டுகள் இவைகளைப் பாடிக்கொண்டு தேன் பருகுகைக்குச் செழிப்பான சோலைகள் வேண்டும்; அவை நன்கு வளருகைக்கு நீர் வேண்டும்; அதுக்கீடாக ஊற்றுக்கள் அத்திருமலையில் உள்ளமை கூறியவாறு. தோண்டல்- தொழிலாகுபெயர். திருவனந்தாழ்வானே திருமலையாய்வந்து நிற்கையாலே “தொல்லை மாலிருஞ்சோலை” என்கிறது.


    355.   
    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*
    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • இராமபிரான், பிராட்டியை லங்கையினின்றும் மீட்டுக்கொணர்கைக்காக, சரவணன் முதலிய சாக்ஷஸர்களின் மேல் அம்புகளைச் செலுத்தி, அவர்களை முடித்தமையைக் கூறுவன. முன்னடிகள். கனம்- சுநககூ. என்ற வடசொற்சிதைவு கனங்குழையாள் என்றது- பிராட்டியின் முன்புற்ற நிலைமை பற்றி. பாரித்தல்- பரப்புதல், கழுவேற்றுவித்தல்- சூலாரோஹணஞ் செய்வித்தல்; தூக்கிலேற்றி உயிரை முடித்தல்; இதனால், கொன்றபடியைக் கூறியவாறு, அன்றி, கழு ஏற்றுவித்த- கழு என்னும் பறவைகள் ஏறி ஜீவிக்கும்படி பண்ணின என்று முரைக்கலாம்; இதனால், அரக்கர்களைப் பிணமாக்கின படியைக் கூறியவாறு; பிணங்கள் கழுகுககளுக்கு உணவாகுமன்றோ. பின்னடிகளின் கருத்து- திருமலையிலுள்ள நீரருவிகள் பொன்களைக் கொழித்துக்கொண்டு பெருகாநிற்க, அவற்றிலே லோகமெல்லாம் திரண்டுவந்து நீராடுகிறபடியைக் கூறியவாறாம். இனம் எனினும், குழு எனினும், திரளுக்கே பெயர்


    356.   
    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*
    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  


    • இலங்கையினை என்றது- அகுபெயர் அதிலுள்ள ராவணனையும் மற்ற அரக்கர்களையும் காட்டும். “இலங்கையனை” என்றும் பாடம்; இலங்கைக்காரனை என்பது பொருள். வரி- நீளம், கோடு, நெருப்பு; வரிசிலை- நெருப்பைச் சொரிகிற வில் என்றலுமொன்று. வாய்க்கோட்டம்- என்ற -ஒரு வரையும் நான் வணங்கேன்’ என்ற ராவணனுடைய வாய்க்கோணலைச் சொல்லுகிறது; கோட்டம்- அநீதி, கோணல், இந்திரன், சந்திரன், ஸூர்யன் முதலிய தேவர்களனைவரும் வந்து பிரதக்ஷிணம் பண்ணும்படிக்கீடான பெருமையையுடைய மலை என்பது, பின்னடிகளின் கருத்து.


    357.   
    கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
    மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*
    ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
    ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.

        விளக்கம்  



    358.   
    ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
    ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*
    ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
    ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)

        விளக்கம்  


    • மாலிருஞ்சோலை அதே முடிகள் ஆயிரமானால், தோள்கள் இரண்டாயிரமாமாதலால் “ஈராயிரந்தோள் பரப்பி” என்றருளிச் செய்ய வேண்டாவோ? என்ற சங்கைக்கு இடமறும்படி, ஆயிரமென்பதற்கு அனேகம் என்று பொருள் உரைக்கப்பட்டதென்க. மின் இலக மீமிசைச் சொல்.


    359.   
    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*
    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)

        விளக்கம்  


    • இத் திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டாதொழிந்தது- இப்பாசுரங்களின் பொருளை அறிகையே இது கற்கைக்குப் பயனாமென்று திருவுள்ளம் பற்றி யென்க. (நாலிருமூர்த்தி தன்னை.) வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்று நால்வகையாக கூறப்பட்ட பெரிய வடிவையுடையவனென்பதும் பொருளாம்; அப்போது, இரு என்பதற்கு- இரண்டு என்று பொருளன்று; இருமை- பெருமை. மூர்த்தி- வடசொல் என்ற பிரமாணத்தின்படி ‘அஷ்டாக்ஷா ஸ்வரூபியானவனை’ என்று உரைப்பதும் பொருந்துமென்க. நால்வேதக் கடலமுது என்று- திருமந்திரத்தைச் சொல்லிற்றாய், அதனால் கூறப்படுகிறவன் என்கிற காரணங்கொண்டு, ஆகுபெயரால் எம்பெருமானைக் குறிக்கின்றதென்றது மொன்று.


    453.   
    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 
    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)

        விளக்கம்  



    454.   
    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*
    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • ஏழையாயிருப்பவர் செல்வர் மாளிகைவாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னை விடமாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைத்துக் கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரகூடந்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற்போலவும் நான் உன்னை வளைத்துக்கொண்டேன்; உன்னால் தப்பிப்போக வொண்ணாது என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச்செய்ய; அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்; *** - *** - யா’ என்ற என் மாயையில் உலகமுழுவதையும் பிணிப்புண்டிருக்கச் செய்யவல்ல யான், உம்முடைய வளைப்பில் நின்றும் என்னைத் தப்பவைத்துக் கொள்ளவல்லேனல்லனோ” என்ன; அதற்கு ஆழ்வார், ‘உன் பிராட்டியின்மேலாணை; நீ தப்பிப்போய் உன்னை ஒளித்துக் கொள்ளலாகாது” என்று ஆணையிட; எம்பெருமான், “ஆழ்வீர்! இது என் காணும்? ஆணையிடுவதற்கு இப்போது என்ன பிரஸத்தி?” என்று கேட்க; அதற்கு ஆழ்வார், “எம்பெருமானே! ‘*** - (அடியார்களை ஒருபடியாலும் கைவிடமாட்டேன்) என்று நீ ஓதிவைத்ததெல்லாம் பொய்யாய்த்தலைக்கட்ட நேரிட்டதே என்று ஆணையிடுகிறேன்” என்பதாய்ச் செல்லுகிறது, இப்பாட்டின் முன்னடி. “என்னெஞ்சத் துள்ளித்திங்கினிப்போய்ப் பிறரொருவர், வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் வளைத்து வைத்தேன்” என்ற கலியனருளிச்செயல், முதல் அரையடியோடு ஒப்புநோக்கத்தக்கது. இந்த்ரஜாலம்- கண்கட்டுவித்தை. ஒளித்திடில் - நீ மறைந்தாயாகில் என்றபடி. (நின்திருவாணைகண்டாய்.) “மாயஞ்செய்யேலென்னை உன் திருமார்வத்து மாலை நங்கை, வாசஞ்செய் பூங்குழலாள், திருவாணை நின்னாணை கண்டாய்” என்ற திருவாய்மொழி அறிக. ஆணையிட்டால் அதை மறுக்கமுடியாதென்று கருத்து. (நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை.) “கருமலர்க்கூந்தலொருத்திதன்னைக் கடைக் கணித்தாங்கே ஒருத்திதன்பால், மருவினம்வைத்து மற்றொருத்திக்குரைத்து ஒரு பேதைக்குப் பொய்குறித்துப் புரிகுழன்மங்கை யொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாயுன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயைதானே” என்ற பெருமாள் திருமொழியை நினைக்க. அல்லை - முன்னிலையொருமை வினைமுற்று.


    455.   
    உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
    தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*
    புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
    இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)

        விளக்கம்  


    • மகரந்தமமர்ந்த அரவிந்தத்தின் சுவையறிந்த வண்டு மீண்டொரு முள்ளிப்பூவைத்தேடி ஓடாதவாறுபோல, உன்னுடைய கைங்கரியாஸமறிந்த அடியேன், இனி மற்றொருவன் வாசலைத்தேடி ஓடமாட்டேன்; அப்படி என்னை நீ ஓடவிட்டால் அது உன்றன் மேன்மைக்கே குறையாமுத்தனை; ஆதலால் அடியேனை நெறிகாட்டி நீக்காது திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்ற பிரார்த்திக்கின்றமை முன்னடிகளிற் போதருமென்க. தவம் - ***-. ஒரு வன்றனக்குப் பணிந்து – ஒருவன் தன்னைப் பணிந்து என்றவாறு; உருபு மயக்கம். கடை - வாசல்; தலை - ஏழனுருபு. வாசலிலே என்றபடி. சாயை தேஜஸ்ஸு; அதாவது - ஸர்வாதிகத்வம். ஷாயா என்ற வடசொல் திரிந்தது. கீழ் நான்காம்பத்தில், இரண்டாந்திருமொழியில், இரண்டாம் பாட்டில் “எல்லாவிடத்திலு மெங்கும்பரந்து பல்லாண்டொலி, செல்லாநிற்குஞ் சீர்த்தென்றிருமாலிருஞ் சோலையே” என்றதை விவரிக்கின்றன, பின்னடிகள். இத்திருமலையிலுள்ள குறவர்கள் கொல்லைகளில் வளர்ந்துள்ள தினைக் கதிர்களைப் பறித்து அவற்றைப் பரிஷ்கரித்து எம்பெருமானுக்கு அமுது செய்வித்து, ‘தாங்கள் அநந்யப்ரயோஜகர்’ என்னுமிடம் வெளியாம்படி “உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு” என்று மங்களாசாஸநம் செய்துகொண்டு, அந்தப் புதிய தினைமாவை உண்பாராம். தினை - ஓர்சாமை. இதனை மாவாக்கி உண்பது குறவர் முதலியோரது சாதியியல்பு. ***-***-***-***-***-***-***- என்பவாகலின், தமக்கு ஏற்ற உணவையே எம்பெருமானுக்கும் இட்டனரென்க. குஹப்பெருமாளுடைய அனுட்டானமும் அறியத்தக்கது. இங்குத் தினை என்ற சொல், அதன்கதிர்களைக் குறிக்கும்; பொருளாகுபெயர். “புனைத்தினைகிள்ளி” என்ற பாடம் சிறக்குமென்க. அவி- ***- என்னும் வடசொல் விகாரம்; தேவருணவு என்பதுபொருள்; அவிக்காட்டி என்றது - எம்பெருமானுக்குப் போஜ்யமாம்படி காட்டி என்றபடி. வாழ்க - வியங்கோள் வினைமுற்று. இனம் - கூட்டம். புதியதுண்கை - கல்யாணச் சாப்பாடாக உண்கை என்றுமாம்.


    456.   
    காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு*  அங்கோர்நிழலில்லை நீருமில்லை*  உன்- 
    பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்*  நான்எங்கும்காண்கின்றிலேன்* 
    தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்*  அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று* 
    பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • “உறவு சுற்றமென்றொன்றிலா வொருவன்” என்கிறபடி ஒருவகைச் சுற்றமுமற்றவனான கண்ணபிரான் பாண்டவர் பக்கலில் பந்துத்துவம் பாராட்டியது- “இன்புற மிவ் விளையாட்டுடையான்” என்றதற்கேற்ப லீலாநுகுணமாக ஆரோபிதாகாரமாதலால் “பொய்ச்சொற்றம்” எனப்பட்டது. ‘பேசிச்சென்று’ என்றது - வார்த்தைப்பாடாய், பாராட்டி என்றபடியென்பர். இனி, பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப்பிரதியென்று” என்றொரு வாக்கியங் காணப்படுதலால் அதற்கேற்பப் பொருள் கொள்ளுதலும் ஒன்று; ஆனால், கண்ணபிரான் துரியோதநாதியரை நோக்கி, “எனக்கு உங்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் ஒருநிகரான பக்ஷபாதமே உள்ளது” என்றருளிச் செய்ததாகச் சொல்லப்படுகிற விருத்தாந்தம் பாரதம் முதலிய முதனூற்களிற் காணப்படுகின்றதா என்பது ஆராயத்தக்கது. கண்ணபிரான் தூதுசெல்லும்போது வழியிடையில் விதுரர் திருமாளிகையில் அமுது செய்துவிட்டு வந்தமைகண்ட துரியோதனன், ‘புண்டரீகாக்ஷனே! பீஷ்மரையும் துரோணரையும் என்னையும் ஒரு பொருளாக மதியாமல் ஏதுக்காகப் பள்ளிப் பயலிட்ட சோற்றை உண்டனை?’ என்று கேட்டதற்கு, கண்ணபிரான், ‘எனக்கு உயிர்நிலையாயிராநின்றுள்ள பாண்டவர்கள் திறந்து நீ பகைமைபூண்டிருக்கின்றமையால் எனக்கும் பகைவனாயினை; பகைவனது சோற்றையுண்பது உரிய தாகுமோ? என்று உத்தரங் கூறினதாக மஹாபாரதத்தில் காணப்படுகின்றமையால், அதற்கு விருத்தமாக இங்ஙனே பொய்ச்சுற்றம் பேசினதாகக் கூறப்படுமோ? ஒருகாற் பேசியிருந்தாலும் துரியோதநாதியர் அப்பேச்சை ஏற்றுக் கொள்வரோ? ‘ஒரு க்ஷணத்திற்குமுன் எம்மை நீ பகைவராகப் பேசினாயே’ என்று மடிபிடித்துக் கொள்ளார்களோ? என்று சிலர் சங்கிப்பர்கள்; அதற்குப் பரிஹாரம் வருமாறு:- கண்ணபிரான் துரியோதநாதியரைப் பகைவராகக் கூறியது முதல்முதலாக அவர்களைக் கண்டபோது; பொய்ச்சுற்றம் பேசியது- பிறகு ஸமாதாநம் பேசுங்காலத்தில்; முன்பு பகைவராகச் சொன்ன பேச்சைத் துரியோதநன் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வல்லவனல்லன்; “உன் முகம் மாய மந்திரந்தான்கொலோ” என்றபடி கண்ணபிரானது முகவழகில் மயங்காதாரில்லை ஆதலால், துரியோதனனும் அதில் மயங்கி, முந்தியபேச்சை மறந்துவிடுவான்; ***- ***- என்று பழிக்கப்புக்கபோதும், “***- ***- என்று - கண்ணழகில் மயங்கித் தோற்று விளித்தவனிறே துரியோதநனென்பவன். இனி, பன்னியுரைக்குங்காற் பாரதமாம். பேதம் செய்து - ‘பிணங்காதொழியப்பெறில் எங்களுக்கு ஒரூரமையும்’ என்ற பாண்டவர்களை பத்தூர் கேட்கும்படிபண்ணி, அதுவே ஹேதுவாக இரண்டு வகுப்பினர்க்கும் வைரத்தை வளர்த்து அவர்கள் உறவைக் குலைத்து என்றவாறு. அன்றி, ஆச்ரிதரென்றும் அநாச்ரிதரென்றும் இங்ஙனமே ஒரு வாசியைக்கற்பித்து என்று முரைப்பர். பேதம் ***- என்ற வடசொல் திரிபு. எங்கும்- கண்ணாற் கண்டவிடமெங்கும் என்றுமாம். “கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர், எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தவெந்தாய்” என்ற திருவாய்மொழி இங்க நோக்கத்தக்கது பிணம் - சவம்.


    457.   
    காலுமெழா கண்ணநீரும் நில்லா*  உடல்சோர்ந்து நடுங்கி*  குரல்- 
    மேலுமெழா மயிர்க்கூச்சுமறா*  எனதோள்களும் வீழ்வொழியா*
    மாலுகளாநிற்கும் என்மனனே!*  உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்* 
    சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் அவகாஹிக்க வேணுமென்ற நெஞ்சில் நினைத்தபோதே “காலாழும் நெஞ்சழியுங் கண்சுழலும்” என்றபடி ஸர்வேந்திரியங்களுக்கும் சோர்வு பிறக்குமாதலால், அப்படிப்பட்ட நிலைமை எம்பெருமானருளால் தமக்கு வாய்த்தபடியைக் கூறுகிறார், மூன்றடிகளால்; வைத்த அடியை எடுத்துவைத்து நடக்கத் தொடங்கினால், கால் கிளம்புகின்றதில்லை; ஆநந்த பாஷ்பம் இடைவிடாது பெருகாநின்றது; சரீரம் கட்டழிந்து நடுங்காநின்றமையால் வாய்திறந்து ஒரு பேச்சுப்பேச முடியவில்லை; மயிர்க்கூச்சு ஓய்கிறதில்லை; (உன்னைத் தோளாலணைப்போமென்று பார்த்தால்,) தோள்கள் ஒரு வியாபாரம் பண்ணவும் வல்லமையற்றுச் சோர்வையடைந்தன; நெஞ்சு பிச்சேறிக்கிடக்கிறது. வீழ்வொழியா என்பதற்கு “நிர்விகாரமாய்” என்றிவ்வளவே பெரிய வாச்சான்பிள்ளை பொருளுரைத்தக்கதாக அச்சுப்பிரதிகளிற் காண்கிறது; அது பொருத்தமற்றது; “நிர்வ்யாபாரமாம்” என்றிருந்ததை, “நிர்விகாரமாய்” எனமயங்கி அச்சிடுவித்தனர் போலும். வீழ்வு-சோர்வு; அது ஒழியாமையாவது -எப்போதும் சோர்வுற்றிருக்கை. அதாகிறது - நிர்வ்யாபாரத்வம். இனி “நிர்விகாரமாம்” என்ற அச்சுப்பிரதிப்பாடத்தை, “நிர்விகாரமாம்”எனத்திருத்திக்கொண்டு, “நிர்வ்யாபாரமாம்” என்ற பாடத்தின் பொருளையே அதற்குக் கொள்ளுதல் பொருந்துமென்னவுமாம். மனமே என்றவிடத்து, ஏகாரம் இசைநிறை.


    458.   
    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*
    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “உன்னைவாழத் தலைப்பெய்திட்டேன்” என்ற ஆழ்வார் களித்துக் கூறியதைக்கேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! உமக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தம் ஸிக்ருததுஷ்க்ருதங்கள் மாறி மாறி நடக்கும்; இப்படியே ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிக்கிடப்பதற்கு என்னிடத்துக் கைம்முதலுண்டு; அடிக்கடி உனக்குச் சிரமங்கொடாமல் ருத்ராதிதேவர்களை அடுத்து இப்பிறவிநோயைக் கழித்துக்கொள்வோமென்ற பார்த்தால் உன்னையொழிய வேறொருவர்க்கும் பிறவிநோயின் மருந்தை அறிவதற்குரிய வல்லமையில்லை; அதனை அறியுமவன் நீயேயாகையால், அந்நோயை நீக்கி என்னை உன் கோயில் வாசலைக் காக்கவல்ல அடியவனாக அமைத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கிற படியாய்ச் செல்லுகிறது, இப்பாசுரம். “உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பர்” என்றவிடத்திற்கு உதாஹரணமாகக் காட்டப்பட்ட திருக்கண்ணமங்கையாண்டான் நிலைமையை அடியேனுக்கு அருள்செய்யவேணும் என்கிறார். “திருக்கண்ணமங்கையாண்டான், ஒரு ஸம்ஸாரி தன் வாசலைப்பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டித் தானங் குத்திக்கொண்டபடியைக் கண்டு, ஒரு தேஹாத்மாபிமாநியின் அளவு இதுவானால், பரமசேதநனான ஈச்வரன் நம்மை மயாதிகள் கையில் காட்டிக்கொடானென்று திருவாசலைப்பற்றிக் கிடந்தாரிறே” என்ற திருமாலை வியாக்கியானம் காண்க. பெய்- முன்னிலையொருமை வினைமுற்று.


    459.   
    அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
    இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*
    சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • இளைத்திருந்தேனை என்ற விடத்துள்ள இரண்டனுருபைப் பிரித்து, ஏறி என்ற விளையெச்சதோடு கூட்டியுரைத்தோம். இருந்தபடியே அந்வயித்துப் பொருள் கொள்ளுதலுமொன்று. ஸம்ஸார ஸாகரத்தில் ஆழ்ந்துகிடந்து அலமருகைக்கீடான அஜ்ஞாநத்தை நீக்கி ஞானத்தைப் பிறப்பித்தருளியவாறுபோல, உன்திருவடியோடே சேர்த்தியையும் பண்ணியருளவேணும் என்று வேண்டுகின்றார். இப்பாட்டால் அக்கரை என்று பாபத்துக்குப் பெயராதலால், கருவியாகு பெயரால் ஸம்ஸாரத்தை உணர்த்திற்று; (கருவியாகு பெயராவது- காரணத்தின் பெயர் காரியத்துக்கு ஆகுவது; இங்கு, காரணம் பாபம்; காரியம் ஸம்ஸாரம்) அனத்தம் - அபாயம்; மென்னும் வடசொல் திரிந்தது. என்பதனாலும் இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையை அறிக. இக்கரையேறி - பிறவிக் கடலினின்றும் வெளிப்பட்டு என்றவாறு. ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று துளங்கின அடியேன் உனது நிர்ஹேதுக கிருபையினால் அக்கடலைக் கடந்தேனாகிலும், நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தைச் சிக்கனப் பிடித்தாலன்றி என் அச்சம் தீராதாகையால், ‘ஸ்வதந்திரனான ஈச்வரன் மீண்டும் நம்மை ஸம்ஸாரக்கடலில் தள்ளினாற் செய்வதென்?’ என்று மிகவும் பயப்படா நின்றேனாகையால், இவ்வச்சந்தீரும்படி அபயப்ரதாநம் பண்ணியருளவேணுமென்றவாறு. இதனால், ஸம்ஸாரதசை என்றும், ஸம்ஸாராதுத்தீர்ணதசை என்றும், பரமபதப்ராப்திதசை யென்றும் மூன்று தசைகள் உண்டென்பதும், அவற்றுள் இப்போது ஆழ்வார்க்குள்ள தசை மத்யமதசையென்னும் பெறுவிக்கப்பட்டதாகும். உன்பேர்ருளால் என்றவிடத்து, என்பது அநுஸந்திக்கத்தகும். (அஞ்சேலென்று கைகவியாய்.) என்று அர்ஜுநனை நோக்கி அருளிச்செய்தபடி அடியேனையும் நோக்கி அருளவேணுமென்கிறாரெனக்கொள்க. என்று பரதன் கூறிய அபயமுத்ராலக்ஷணச்லோகத்தில், என்றதனால், கைவிரல்கள் மேல்முகமாக விரிந்திருக்க வேண்டுவது அபயமுத்திரையின் இலக்கணமாகத் தெரிதலால், இங்குக் கைகவியாய் என்கிற விதனை அதற்குச்சேர ஒருவாறு ஔபசாரிகமாக நிர்வஹித்துக்கொள்ள வேணும், அஞ்சே லென்று கைகவியாய் – அபயமுத்திரையைக் காட்டியருளாய் என்று இங்ஙனே திரண்டபொருள் கொள்வது ஏற்குமென்க, அன்றி வேறுவகை உண்டேல் உற்றுணர்க. “***“ என்ற நியாயத்தின்படி) அஞ்சேல் என்னும்போதைக்கு அச்சம் இன்றியமையாத்தாகையால், அவ்வச்சமாவது – “மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொலென்றஞ்சி“ “(கொள்ளக்குறையாத இடும்மைக்குழியில் தள்ளிப்புகப் பெய்திகொலென்றதற்கஞ்சி“ என்றிப்புடைகளிலே திருமங்கையாழ்வார்க்குப் பிறந்த அச்சம் போன்ற அச்சம் எனக்கொள்க.


    460.   
    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 
    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • இன்றைக்கென்றும், நாளைக்கென்றும், நேற்றைக்கென்றும் இப்படி சொல்லிக்கொண்டு கழித்தகாலம் முழுவதையும் பாழே போக்கினேன்; ஏதோ சிறிது ஸுக்ருத விசேஷத்தினால் இன்று உன்னை பிடித்தேன்; இனி நீ என்னைவிட்டுப் புறம்புபோகப் புக்கால், அதற்கு நான் எள்ளளவும் இசையமாட்டேன்; எனக்கு உன்திறத்து இவ்வகை அபிநிவேசம் பிறக்கைக்கீடாக, என் நெஞ்சு உன்னைவிட்டு மற்றொன்றை நினைப்பதேயில்லை யென்னுமிடத்தை ஸர்வஜ்ஞனான நீ அறியாநின்றாயன்றோ? என்கிறார். “பழுதே பல பகலும் போயின்வென்றஞ்சி அழுதேன் அரவணைமேற் கண்டு தொழுதேன்” என்ற பொய்கையார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. (இன்றொடு நாளையென்றே) ‘நேற்றுப்போனேன், இன்று வந்தேன், நாளைக்குப் போகப்போகிறேன்’ என்றிப்படி வ்யவஹரித்துக்கொண்டு கழிக்குங் காலத்திற்குக் கணக்கில்லையிறே. “கிறியே மாயம்” என்ற நிகண்டின்படி, கிறி என்ற சொல் மாயப்பொருளதாகையால், ‘கிறிப்பட்டேன்’ என்பதற்கு ஸம்ஸாரத்தில் அகப்பட்டேன்’ என்று உரைத்தது ஒக்கும்;


    461.   
    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 
    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!

        விளக்கம்  


    • (பத்நீஸம்ச்லேஷத்தில் வேண்டினவடி பாரித்துக்கொண்டிருந்த பிரமசாரி, பின்னை அவளைப்பெற்றால் ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரிய மாட்டாதாப்போல,) அடியேன் கர்ப்பவாஸம் பண்ணிக்கொண்டிருந்தபோதே உனக்குப்பணி செய்யவேணுமென்று பேரவாக்கொண்டிருந்து, பிறந்தபின்பு நெடுநாள் ஸம்ஸாரத்தி வீடுபாட்டால் உன் அனுபவத்தை இழந்திருந்து-, விஷயாந்தரபரனாய்க் கண்டவிடங்களிலுந் தட்டித் திரிந்துகொண்டு வரும்போது தைவவசமாக இன்ற இத்திருமாலிருஞ்சோலையைக் கிட்டி இங்க உன்னைக் காணப்பெற்ற பின்பு இனி விட்டுக் பிரியமாட்டே னென்கிறார். அடிமை செய்யல் உற்றிருப்பன் - கைங்கரியமே புருஷார்த்தம் என்று துணிந்திருந்தேன் என்றபடி. ‘ அன்றே அடிமை செய்யலுற்றிருப்பன்’ என்றதனால், இன்று அடிமைசெய்ய விரும்புவதில் ஸம்சயலேசமுமில்லையென்பது போதரும்.


    462.   
    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 
    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)

        விளக்கம்  


    • இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில், “இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது - ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’ என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் .... விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது. தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்;


    543.   
    பழகு நான்மறையின் பொருளாய்*  மதம் 
    ஒழுகு வாரணம்*  உய்ய அளித்த*  எம் 
    அழகனார்*  அணி ஆய்ச்சியர் சிந்தையுள்* 
    குழகனார் வரில்*  கூடிடு கூடலே!*   

        விளக்கம்  


    • உரை:1

      முதலை கோள்விடுத்து கஜேந்திராழ்வானைக் காத்தருளிய அபதாநத்திலே’ ஈடுபட்டுப் பேசுகின்றாள். (வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:) இத்யாதி ப்ரமாணங்களையுட்கொண்டு “பழகு நான் மறையின் பொருளாய்” என்றன். அக்கிநி, இந்திரன், வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும் வேதங்களில் கர்மகாண்டங்களிலே பரக்கப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பினும் ‘(அங்காந்யந்யா தேவதா:’) என்று அந்த வேதந்தானே அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவபூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே அவயங்களைப் புகழ்ந்து சொல்வதும் அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே தேவதாந்தர ப்ரசம்ஸாபரமான கர்மகாண்டமும் பகவத்பரமேயாகத் தட்டில்லை யென்க. ‘வேததாத்பர்ய ஸர்வஸ்வம்’ என்னும் நூலிலே இவ்விஷயத்தைப் பரக்கப்பேசியுள்ளோம்’ அங்கே விரியக் கண்டு கொள்க. வாரணம்-தற்சமவடசொல். “வாரணமுய்ய வளித்த வெம்மழகனார்” என்ற சேர்க்கையின்பம் நோக்கி ஒரு கருத்துக் கூறலாம்’ அதாவது-கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டவுடனே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடுங்கால் (ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததாந:- ஸ்ரீரங்கராஜஸ் தவம் உத்தரசதகம்) என்றபடி ஆடையாபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரிபில்லாரியாக அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுத்துகிறபடி.

      உரை:2

      வேதியர் மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகும் நான்மறையின் பொருளானவன், மதம் ஒழுகும் கஜேந்திரன் என்னும் யானையின் துயர் தீர்த்து அதை உய்த்தவன், என் அழகன், ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே


    587.   
    சிந்துரச் செம்பொடிப் போல்*  திருமாலிருஞ்சோலை எங்கும்* 
    இந்திர கோபங்களே*  எழுந்தும் பரந்திட்டனவால்* 
    மந்தரம் நாட்டி அன்று*  மதுரக் கொழுஞ்சாறு கொண்ட* 
    சுந்தரத்தோளுடையான்*  சுழலையினின்று உய்துங் கொலோ!* (2)    

        விளக்கம்  


    • மழைக்காலத்திலே பட்டுப்பூச்சிகள் விசேஷமாகப் பறக்கும், அவை காதலனுடைய அதரத்தின் பழுப்புக்கு ஸ்மாரகங்களாய் இருக்குமாதலால் தலைவிக்கு உத்தீபகமாயிருக்கும். ஐயோ! திருமாலிருஞ்சோலைப் புறமெங்கும் பட்டுப்பூச்சி மயமாய்விட்டதே, விச்லேஷகாலத்திலே இவை வந்துதோற்றினால் இனி உயர்தரிக்க வழியுண்டேவென்று வருந்துகின்றாள். “இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான், சிந்தும்புறபில் தென் திருமாலிருஞ்சோலையே“ என்று பெரியாழ்வார் திருமொழி இங்கே நினைக்கத்தக்கது. எம்பெருமானுடைய வடிவுக்குப் போலியான திருமலைக் கண்ணாலே ஸேவித்துக்கொண்டிருந்தாகிலும் ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்தால் அதற்கும் ஆசையில்லாதபடி பாழும் பட்டுப்பூச்சிகள் அம்மலைச் சூழ்ந்து கொண்டு மறைக்கின்றனவே! என்று கருத்தாகவுங் கொள்ளலாம்.


    588.   
    போர்க்களிறு பொரும்*  மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்* 
    தார்க்கொடி முல்லைகளும்*  தவள நகை காட்டுகின்ற* 
    கார்க்கொள் பிடாக்கள் நின்று*  கழறிச் சிரிக்கத் தரியேன்* 
    ஆர்க்கு இடுகோ? தோழீ !*  அவன் தார் செய்த பூசலையே*. 

        விளக்கம்  


    • யானைகள் கரைபொருது விளையாடா நிற்கப்பெற்ற திருமாலிருஞ்சோலை மலைச்சாரல்களில் அரும்புகொண்டு விளங்குகின்ற கொடி முல்லைகளானவை, அவ்வெம்பெருமான் ஸம்போக ஆரம்ப ஸமயத்திற் பண்ணும் புன்முறுவலை நினைப்பூட்டிக்கொண்டு என்னைத் துன்பப்படுத்தாநின்றன. அதற்குமேலே, படாக்களானவை புஷ்பித்து, ஸம்ஸ்லேஷம் நடந்தேறின பின்பு ஒரு தலையில் வெற்றிக்கு ஈடாகப்பண்ணும் பெருஞ்சிரிப்பை நினைப்பூட்டாநின்றுகொண்டு என்னை உருவழிக்கின்றன. தோழீ! அவ்வெம்பெருமான் திருத்தோளில் சாத்திக் கொண்டிராநின்ற மாலையை ஆசைப்பட்டமையாலன்றோ நான் இப்படிப்பரிபவப்பட நேர்ந்தது! இந்தபரிபவத்தை நான் யாரிடத்திற்சென்று முறையிட்டு ஆறுவேன் என்கிறாள். புறவு - சோலைகள் நிரம்பிய ஆராமம். தவளம் - யவனா என்றவடசொல் விகாரம். காட்டுகின்ற - வினைமுற்று. படாக்கள் - பெருங்கொடிகள் கார்க்கொள்ளுகை - அழகுகொண்டிருக்கையுமாம்.


    589.   
    கருவிளை ஒண்மலர்காள்!*  காயா மலர்காள்*  
    திருமால் உரு ஒளி காட்டுகின்றீர்*  எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்* 
    திரு விளையாடு திண் தோள்*  திருமாலிருஞ்சோலை நம்பி* 
    வரிவளை இற் புகுந்து*  வந்திபற்றும் வழக்கு உளதே*      

        விளக்கம்  


    • மழைகாலத்தில், கருவிளைப்பூக்களென்கிற காக்கணம் பூக்களும் காயாம் பூக்களும் விசேஷமாகப் புஷ்பிக்குமாதலாலும், அவை எம்பெருமானுடைய திருமேனிநிறத்தோடொத்த நிறத்தையுடையனவாயிருக்கு மாதலாலும் அவற்றின்காட்சி தனக்கு விரஹதசையில் உத்தீபகமாயிருப்பது பற்றி உண்டாகும் வருத்தத்தை அம்மலர்களை விளித்தே உரைக்கின்றாள். எம்பெருமானுடைய திருநிறத்தை நினைப்பூட்டா நின்று கருவிளைப்பூக்களை! காயாம்பூக்களே! நீங்கள் என்னை முடிக்கும்வகை ஒன்றுமோதான் கற்றது? நான் பிழைக்கும்வகையை அறிவீர்களாகிற் சொல்லுங்கள் என்கிறாள் முன்னடிகளில். இங்ஙனம் யாசிக்கப்பட்ட அம்மலர்கள் ஆண்டாளைநோக்கி, ‘நாங்கள் உமக்கு ஜீவநோபாயம்சொல்லவேண்டும்படி இப்போது உமக்குநேர்ந்த அநர்த்தம் என்ன?‘ என்று கேட்டனவாகக் கொண்டு, அவ்வநர்த்தத்தை முறையிடுகின்றான் பின்னடிகளில்; திருமாலிருஞ் சோலையில் அவாப்தஸமஸ்தகாமரா யெழுந்தருளியிருக்கிற பெரியவர், நானொருத்தி இருப்பதாகவும் நினையாமல் தமது திருத்தோளைப் பெரியபிராட்டியார்க்கு நித்யாநுபவயோக்யமாகக் கொடுத்து அவளும் தாமும் பரமரஸபுஞ்ஜமாய் அநுபவம் நடத்தா நிற்பதைப்பற்றி நான் ஒன்றும் விசாரப்படாமல், ‘அவர் முன்புவிரும்பிப்போந்த வளைகள் நம்கையில் இருக்கின்றனவே. அவற்றைக் கண்டுகொண்டாவது தரித்திருப்போம்‘ என்றெண்ணி நான் என்வீட்டுக்குள்ளே கதவடைத்துக்கொண்டு கிடந்தால், அப்பெரியவர் அதனையும் பொறாமல் சடக்கென ஓடிவந்து என் வீட்டினுள் புகுந்து பலாத்காரமாக அவ்வளைகளைப் பறித்துக் கொண்டு ஓடினரே, இஃது எந்த நீதியிற்சேரும்? இதற்குமேற்பட எனக்கு வேறோர் அநர்த்தம் விளையவேண்டுமோ என்கிறாள்.


    590.   
    பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்!*  ஒண் கருவிளைகாள்* 
    வம்பக் களங்கனிகாள்!*  வண்ணப் பூவை நறுமலர்காள்* 
    ஐம் பெரும் பாதகர்காள்!*  அணி மாலிருஞ்சோலை நின்ற* 
    எம்பெருமானுடைய நிறம்*  உங்களுக்கு என் செய்வதே?*   

        விளக்கம்  


    • குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ என்னும் இவ்வைந்து வஸ்துக்களையும் பஞ்சமஹாபாதகிகள் என்கிறாள். பொற்களவு, கள்குடித்தல் முதலிய மஹத்தான ஐந்துபாதகஞ் செய்தவர்களைப் பஞ்சமஹாபாத்திகள் என்கிறாய்த்து. இவை தனக்குப் பொறுக்கவொண்ணாத ஹிம்ஸையைப் பண்ணுவதுபற்றி இங்ஙனம் கூறினளென்க. “பெரும்பர்தகர் - பெரியபாதகத்தைச் செய்பவர், பாதகம் - பாவம். அன்றி “பெரும்பாதகர்“ என்று - பெரிய ஸாயகர் என்றபடியுமாம். (பொறுக்கமுடியாத வேதனையை உண்டுபண்ணுமவர்கள் என்கை.) இங்கு இரட்டுறமொழிதலாகக் கொள்க. பரமசோதனை எம்பெருமானோடு, அற்பசேதநங்களான குயில்மயில்களோடு, அசேதநங்களான கருவிளை முதலியவற்றோடு வாசியற எல்லாவஸ்துக்களும் எனக்குத் தீங்குவிளைக்க ஒருப்பட்டால் நான் எங்ஙனே பிழைக்கும்படி?; அவன் பிரிந்துபோன மையத்தில் முகங்காட்டி என்னைத் தேற்ற வேண்டியவைகளும் பாதகங்களானால் நான் எங்ஙனம் பிழைக்கவல்லேன்?; பிரிந்தவன் ஒருவனாய், பாதகங்கள் பலவானால் பிழைக்கமுடியுமோ? என்கிறாள் போலும்.


    591.   
    துங்க மலர்ப் பொழில் சூழ்*  திருமாலிருஞ்சோலை நின்ற* 
    செங்கண் கருமுகிலின்*  திருவுருப் போல்*  
    மலர்மேல் தொங்கிய வண்டினங்காள்!*  தொகு பூஞ்சுனைகாள்!* 
    சுனையிற் தங்கு செந்தாமரைகாள்!*  எனக்கு ஓர் சரண் சாற்றுமினே*       

        விளக்கம்  


    • திருமாலிருஞ்சோலைமலைப் பொழில்களில் மலர்ந்துள்ள பூக்களில் தங்குகின்ற வண்டுகளும் சுனைகளும் அழகருடைய திருவுருவை நினைப்பூட்டி நலிவதனாலும், சுனைகளில் அலர்ந்த செந்தாமரை மலர்கள் அவருடைய திவ்யாவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஹிம்ஸிப்பதனாலும் அந்த ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாத ஆண்டாள் அவற்றை நோக்கி ‘அந்தோ! நான் உங்களுக்குத் தப்பிப் பிழைப்பதொரு உபாயம்சொல்ல வல்லீர்களோ?‘ என்கிறாள். துங்கம் - வடசொல். கருமுகில் - முற்றுவமை, “தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றாற்போல. சுனை - நீர்நிலை. சரண் - ஸரணம்.


    592.   
    நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*  நான்- 
    நூறு தடாவில் வெண்ணெய்*  வாய்நேர்ந்து பராவி வைத்தேன்* 
    நூறு தடா நிறைந்த*  அக்கார அடிசில் சொன்னேன்* 
    ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!* (2)        

        விளக்கம்  


    • இப்பாட்டும் மேற்பாட்டும் இத்திருமொழியில் விலக்ஷணமாக அமைந்த பாசுரங்கள். கீழ்ச்சென்ற பாசுரங்களின் ஸைலியும் மேல்வரும் பாசுரங்களின் தீயமான அமைந்திருக்கிறபடியைக் காண்மின். கீழ்பாட்டில் “எனக்கோர் சரண் சாற்றுமினே“ என்றவாறே தளர்ந்து த்வயாநுஸந்தானம் பண்ணினாள், உத்தரகண்டத்தை நன்றாக அநுஸந்தித்தாள், அதற்கு அர்த்தாதகிய கைங்கரிய ப்ரார்த்தனையிலே ஊன்றினாள், காயிகமான கைங்கரிய மென்றும் செய்யமுடியாதபடி தளர்ந்திருக்கும் தஸையாகையாலே வாசிகமான கைங்கரியம்செய்ய விரும்பினாள். அது செய்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில், இப்பாட்டுக்கு ஸேஷபூதம் மேற்பாட்டு. மணங்கமழாநின்ற சோலைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையில் அவாப்த ஸமஸ்தகாமனாய் எழுந்தருளியிருக்கும் எம்பிரானுக்கு அடியேன் நூறுதடா நிறைந்த வெண்ணெயும் நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் வாசிகவுள்ளம் பற்றுவனா? என்கிறாள்.


    593.   
    இன்று வந்து இத்தனையும்*  அமுது செய்திடப் பெறில்*  நான்- 
    ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்*  பின்னும் ஆளும் செய்வன்* 
    தென்றல் மணம் கமழும்*  திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் 
    அடியேன் மனத்தே*  வந்து நேர்படிலே*

        விளக்கம்  


    • “இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?“ என்று (கீழ்ப்பாட்டில் மநோரதித்தபடியே திருமாலிருஞ்சோலை யெம்பெருமான் இன்று இவ்விடமெழுந்தருளி, அடியேன் (வாவா) வாசா ஸமர்ப்பித்த நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்காரவடிசிலையும் அமுதுசெய்தருள்வனாகில் இந்த மஹோபகாரத்துக்குக் கைம்மாறாக அடியேன் இன்னும் நூறாயிரம் தடாநிறைந்த வெண்ணெயும் அக்காரவடிசிலும் ஸமர்ப்பிப்பேன்; அவ்வெம்பெருமான் இங்கெழுந்தருளி இவற்றை அமுது செய்துவிட்டு மீண்டு போய்விடாமல் என் ஹ்ருதயத்திலேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாக இருந்துவிடும் பக்ஷத்தில் “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்“ என்று பெரியார் மநோரதித்த கைங்கரியங்கள் எல்லாவற்றையும் குறையறச் செய்திடுவேன் என்கிறாள். “தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக கொடுப்பேன், அடியேன் மனத்தே வந்து நேர்படில் பின்னுமாளுஞ் செய்வேன்“ என்று யோஜிப்பது. ஒன்றுநூறாயிரமாகக் கொடுத்தலாவது - தான் ஸமர்ப்பித்த தடாக்களில் ஒரு தடாவை அமுது செய்தால் அதற்குக் கைம்மறாறாகப் பின்னும் நூறாயிரம் (லக்ஷம்) தடா ஸமர்ப்பித்தல். இப்படியே பார்த்துக்கொள்க. இதனால், ஆண்டாள் தனது பாரிப்பின் மிகுதியை வெளியிட்டபடி.


    594.   
    காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்* 
    மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ* 
    சோலைமலைப் பெருமான்*  துவாராபதி எம்பெருமான்* 
    ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே*.

        விளக்கம்  


    • ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே மிக்கிருக்கு மாதலால் சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை ஸூசிப்பித்துச் சொல்லுவதுமா யிருக்கவே, அதுகண்ட ஆண்டாள் இது மெய்யாய்த் தலைக்கட்டுமோ பொய்யாய்விடுமோவென்று சிந்திக்கிறாளாய்த்து. மெய்ம்மை கொலோ? என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்தாகலாம். நம்முடைய சித்தவிப்ரமத்தால் இவை பாடுகின்றனவாகத் தோற்றுகின்றதா? அல்லது மெய்கவே பாடுகின்றனவா? என்பது ஒரு கருத்து; இக்கரிய குருவிக்கணங்கள் இதற்கு முந்தியும் பலகால், மாலின் வரவுசொல்லி மருள்பாடியும் அவ்வெம்பெருமான் வரக்காணாமையினாலே இதுவரையில் இவற்றின் பாட்டு பொய்யாயொழிந்தது, இப்போதாவது அங்ஙனன்றி மெய்யாகத் தலைக்கட்டுமா; என்பது மற்றொரு கருத்து.


    595.   
    கோங்கு அலரும் பொழில்*  மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல்* 
    தூங்கு பொன் மாலைகளோடு*  உடனாய் நின்று தூங்குகின்றேன்* 
    பூங்கொள் திருமுகத்து*  மடுத்து ஊதிய சங்கு ஒலியும்* 
    சார்ங்க வில் நாண் ஒலியும்*  தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ!*       

        விளக்கம்  


    • இப்பாசுரத்தின் கருத்து மிகவும் ஆழ்ந்தது. திருமாலிருஞ் சோலைமலையிற் கொன்றை மரங்களின்மீது தொங்குகின்ற கொன்றைப்பூ மாலைகளோ டொப்ப நானும் தூங்குகின்றேன் என்று கூறுகின்ற ஆண்டாளுடைய கருத்து யாதெனில்; - கேண்மின்; திருமாலிருஞ்சோலைமலையில் ஸாத்விக புருஷர்கள் ஏறிப்போவர்களேயன்றி ராஜஸ தாமஸ புருஷர்கள் ஏறிப்போகமாட்டார்கள். கொன்றைமலர்கள் சிவன் முதலிய தேவதாந்தரங்களின் ஆராதனைக்கு உபயோகப்படக்கூடியவை யாதலால் அம்மலர்கள் ராஜஸ தாமஸ புருஷர்கட்கு உபயுக்தமாகுமேயன்றி ஸாத்வித புருஷர்கட்கு அவைகொண்டு பயனில்லை. இனி ஸாத்விகமாத்ரப்ராப்யமான திருமாலிருஞ் சோலைமலையில் மலர்கின்ற கொன்றை மலர்கட்கு ஏதாவது உபயோகமுண்டோவென்று சிந்தித்தால், அவை அங்கே மலர்ந்து அங்கே வீழ்வதொழிய வேறொருபயோகமும் அவற்றுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும். ஆகவே, அம்மலர்களின் ஜன்மம் எப்படி விணோ அப்படியே என் ஜன்மமும் வீணாயிற்றே! என்கிறாள். “தாமஸ புருஷர்கள் புகுரும் தேஸமன்று, ஸாத்விகர் இதுகொண்டு காரியங்கொள்ளார்கள், பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவதரஹமான வஸ்து இங்ஙனே இழந்திருந்து க்லேஸப்படுவதே!“ என்ற விடாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையை நோக்குமின்.


    596.   
    சந்தொடு காரகிலும் சுமந்து*  தடங்கள் பொருது* 
    வந்திழியும் சிலம்பாறு*  உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச்*
    சுரும்பு ஆர் குழற் கோதை*  தொகுத்து உரைத்த* 
    செந்தமிழ் பத்தும் வல்லார்*  திருமாலடி சேர்வர்களே* (2)     

        விளக்கம்  


    • இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைகட்டுகிறாள் பிறந்தகத்தில் நின்றும் புக்கத்துக்குப் போம் பெண்கள் வேண்டிய தனங்களைக் கொண்டுபோமாபோலே சந்தனமரங்களையும் காரகில் மரங்களையும் வேரோடே பறித்து இழுத்துக்கொண்டு, வழியிடையே உள்ள பலபல தடாகங்களையும் அழித்துக்கொண்டு பெருவேகமாக வந்து ப்ரவஹியா நின்ற சிலம்பாற்றையுடைய திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர் விஷயமாகச் சுரும்பார் குழற்கோதை யருளிச்செய்த இப்பத்துப் பாட்டையும் ஓதவல்லவர்கள் தன்னைப் போலே வருந்தாமல் ஸுகமாகத் திருமாலின் திருவடித்தாமரைகளை யணுகி நித்ய கைங்கரிய ஸம்பத்துடனே வாழப்பெறுவர்கள் - என்றாளாய்ந்து. சந்து - ‘சந்தனம்‘ என்ற வடசொற் சிதைவு. தடங்கள்பொருது - தடம் என்று கரைக்கும் பெயராகையாலே, இருகரையையும் அழித்துக்கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று. “ஒருமத்த கஜம் கரைபொருதுவருமா போலே“ என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.


    1022.   
    வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
    மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 
    எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
    திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        

        விளக்கம்  



    1114.   
    உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
    'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 
    களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
    இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

        விளக்கம்  


    • (களங்கனிமுறுவல்.) களங்கனி வாய்க்கு இனிப்பாயிருப்பதுபோல் முறவல் காட்சிக்கு இனிதாயிருப்பதால் முறவலுக்குக் களங்கனியை உவமைகூறினரென்க. ஆகவே இது பயனுவமையாம்: (பயனைப் பற்றிவரும் உவமை-பயனுவமை.) “மாரிவண்கை, கற்பகவள்ளல்” என்ற விடங்களிற்போல. பண்பும் தொழிலும் பயனு மென்றிவற்றுள், ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து, ஒப்புமைதோன்றச் செப்புவது உவமை” (31.) என்றார் தண்டியலங்காரத்தும்: இங்கே, களங்கனியாலுண்டாகிறபயனும் முறவலாலுண்டாகிற பயனும் ஒத்திருத்தலால் (--இரண்டும் இனிப்பாயிருந்தலால்) இவ்வுவமை ஒக்குமென்க. (இளங்கனியிவளுக்கு.) ‘கன்னி’ என்பது கனி யென்று தொகுத்தல் விகாரம் பெற்றிருக்கின்றது: ‘கந்யா’ என்னும் வடசொல் கன்னியென விகாரப்படும்.


    1573.   
    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     

        விளக்கம்  


    • “ஒருமா நொடியும் பிரியான்” என்னுமாபோலே க்ஷணகாலமும் என்னெஞ்சை விட்டுப்பிரிகிறதில்லை யென்னுமிதுவே காரணமாகப் பெரும்புகழோங்கப் பெற்றவனும் திருமாலிருஞ் சோலையில் பரமபோக்யமாக ஸேவை ஸாதிப்பவனும் கருப்பஞ்சாறு போலே ரஸமயனாயிருப்பவனும்? க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபிநி யென்னுமோர் அந்தணன் பாடே நான்கு வேதங்களையு மோதிப் பாண்டிதயம் பெற்றவனும் திருப்பாற்கடலிலே துயில் கொள்பவனும் தனது திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவிப்பித்தவனுமான திருநறையூர் நம்பியைத் திருக்குணங்களை யெல்லாம் என்னை யநுபவித்துவனுமான திருநறையூர் நம்பியைத் தவிர்த்து மற்றொருவனையும் பாடமாட்டே னென்கிறார். எள் + தனை, எட்டனை; மிகச்சிறிய அளவுக்கு எள்ளை உவமை கூறுவதுண்டு; க்ஷண காலமும் என்றபடி.


    1760.   
    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*
    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        

        விளக்கம்  


    • தோழீ! இவருடைய திருக்கண்களினழகை என் சொல்லுவேன்!, புண்டரீகாக்ஷரென்னலாம்படி யிராநின்றார். ஓங்கிப் பரந்த மலைகள் போலே விளங்குகின்றனவாய்த் தோள்வளைகள் முதலியவற்றின் புகர் விஞ்சி விளங்கப் பெற்றவையான ஆயிரந்திருத்தோள்களும் அவயவந்தோறும் திருவாபரணங்களும் விளங்கப் பெறுமழகை என்ன சொல்லுவேன்! ஒரு அலங்காரமும் வேண்டாத வடிவுதானே அமையாதோ என்ன வேண்டும்படியான அழகு விலக்ஷண மாயிருக்கின்றது காண் – இவ்வழகை நோக்குங்கால் இவர் ஸாதாரண புருஷராயிக்க ப்ரஸக்தியில்லை; திருமெய்யமலையில் எழுந்தரளி யிருப்பவரும் இவ்வுலகையெல்லாம் இரண்டேயடியால் தாவியளந்தவருமான நாயகராகவே யிருக்கத் தகுங்காண் என்கிறாள். பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின் – “கீழே ‘நான்கு தோளும்’ என்னச்செய்தே ஆயிரந்தோ ளென்கிறத – ஆயிரந்தோளானால் கண்டநுபவிக்குங் கரணங்கள் அனேகங் கொண்டநுபவிக்க வேண்டும்படி யிராநின்றாரென்கை” என்பதாம். அதாவது – கீழ்ப்பாட்டில் “ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்” என்று நான்கு திருத்தோள்களுள்ளனவாகச் சொல்லி, இப்பாட்டில் ஆயிரந் தோள்களாகச் சொல்லி யிருப்பதேன்? என்னில்; நான்கு தோள்களே ஆயிரந் தோள்களாகத் தோன்றினவென்கை. 1.“நம்பியைக்காண நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும்” என்றாற்போலே ஆயிரங்கண்கள் கொண்டு காணவேண்டும்படி அழகு விஞ்சின திருத்தோள்க ளென்றவாறு.


    1765.   
    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*
    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

        விளக்கம்  


    • மேகமண்டலத்தளவுஞ் செல்ல ஓங்கி, சந்திரன் வந்து தீண்டும்படியான உயர்த்தியை யுடைத்தான திருமாலிருஞ்சோலை மலையை இருப்பிடமாகக் கொண்ட பரமரஸிகர் தாமு எழுந்தருளி என்னுடைய அவயவங்களெல்லாவற்றையும் விரும்பி ஒரு நொடிப்பொழுதும் விட்டு நீங்குமவரா யிருக்கின்றிலர்; திருநீர்மலை யெம்பெருமான் போலவும் திகழ்கின்றார்; அறுதியிட்டுச் சொல்லமாட்டுகின்றிலேன்; மிகவுயர்ந்ததொரு பொன் மலைமேலே காளமேகம் படிந்து வருமாபோலே பெரிய திருவடியின் மீது வீற்றிருந்து எழுந்தருளுங் கோலத்தை வந்து காணுங்கோள்! ; இவ்வழகுக்குப் பாசுரமிட என்னாலாகுமோ? இவருடைய அழகு விலக்ஷணமென்னுமித்தனையோ – என்றாளாயிற்று பின்னடிகளில், கருடன் பொன்மலையாகவும் எம்பெருமான் மாமுகிலாகவும் வருணிக்கப்பட்டமையறிக. “காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல” என்ற திருவாய்மொழியை அடியொற்றினபடி.


    1818.   
    முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
    அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*
    சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
    வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)

        விளக்கம்  


    • நெஞ்சே! ப்ராப்தமான பகவத் விஷயத்தை வணங்கினாலும் வணங்கு, தவிரிலும் தவிரு, முந்துறமுன்னம் விஷயாந்தரஸங்கத்தை யொழித்து நிற்கப்பாராய் என்கிறார் முதலடியில். இவ்வாழ்வார்மேல் பதினோராம்பத்தில் “கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூழ அவனை உள்ளத்து, எண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லாமினியவாறே“ என்றருளிச் செய்கிறார், இதன் உட்கரத்து யாதெனில், “எம்பெருமானைச் சிந்திக்க வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, எம்பெருமானைச் சிந்தியாத பாவிகளை நெஞ்சிவிட்டெண்ணா திருக்கவேணுமென்பதே என்னுடைய நிர்ப்பந்தம்“ என்பதாம். அதுபோலவே இங்கும் அருளிச்செய்கிறார் – பகவத் விஷயத்தைப் பற்றவேண்டுவது முக்கியமன்று, இதர விஷயப்பற்றை விட்டொழிக்க வேண்டுவதே முக்கிய என்பது தோன்ற முந்துறவுரைக்கேன் என்கிறார். விட்டொழிக்க வேண்டியவர்களை “விலைக்குழல் மடவார்“ என்று சிறப்பித்துக் கூறுவானேன்? உபாதேயமான விஷயங்களுக்கன்றோ சிறப்பான விசேஷணமிட வேண்டும், ஹேயமான விஷயங்களுக்கு அவற்றின் இழிவு தோன்ற விசேஷணமிட வேண்டாவோ? என்னில், இஃது உண்மையே, ஆழ்வார் தம் முடைய கருத்தாலே விரைக்குழல் மடவார் என்கிறாரல்லர், உலகர் சொல்லிக் கொண்டு திரிகின்ற வாக்கியத்தை க்ஷேபமாக அநுவதிக்கிறபடியா மத்தனை. ஆழ்வாருடைய நாவீறு இருந்தபடி. தடுமாறல் - இதனை எதிர்மறை வினைமுற்றாகவுங் கொள்ளலாம், (நெஞ்சமே) தடுமாறாதே என்றபடி, தடுமாற்றமாவத - கலங்குதல், குழம்புதல், “மடவார் கல்வியையா விட்டுவிடுவது“ என்று ஆலோசியாமல் சடக்கென விட்டுத் தொலை என்றவாறு. அதனை விட்டால் வேறொன்றைப் பற்றவேணுமே, அதுதன்னை யருளிச் செய்கிறார் மேல் மூன்றாமடிகளாலே. ஸப்தத்வீபங்களையும் ஸப்த ஸமுத்ரங்களையும் எடத்துக் கூறினது மற்றுமுள்ள பதார்த்தங்களுக்கெல்லாம் உபலக்ஷணமென்க. தானே காரியப் பொருள்களாக விரிந்து நிற்கின்ற பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாயும், சந்தன மரங்களையும் சிறந்த ரத்னங்களையும் மயில் தழைகளையும் உருட்டிக்கொண்டு அருவிகள் ப்ரவஹிக்கப் பெற்றதாயுமுள்ள திருமாலிருஞ்சோலைமலையை வணங்குவோம் வா என்றாராயிற்று. ஸம்தத்வீபங்களாவன - “நாவலந் தீவே இறலித் தீவே, குசையின் தீவே கீரவுஞ்சத் தீவே, சான்மலித் தீவே தெங்கின் தீவே, புட்கரத் தீவே யெனத் தீவேழே.“ (திவாகரம்) ஸப்த ஸமுத்ரங்களாவன -“உவரோடு கரும்புமது நெய் தயிர், பால் புனல், மாகடலேழென வகுத்தனர் புலவர்“ (இதுவுமது) சந்து -“சந்தநம்“ என்ற வடசொல்லின் சிதைவு. மாலிருஞ்சோலை - பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றும் என்று வடமொழியிற் கூறடிபடுவதும், “கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமலை“ என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிற நான்கு திருப்பதிகளுள் ஒன்றுடம், “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்“ என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமை யுடையதுமானதொரு திவ்யதேசம். “ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் “மாலிருஞ்சோலைமலை“ என்று திருநாம்மாயிற்று, மால் பெருமை -இருமை - பெருமை, இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட் பன்மொழியாய் நின்றன. இனி, மால் -உயர்ச்சி, இருமை - பரப்பு என்று கொண்டு உயர்ந்து பரந்த சோலைகளையுடைய மலையென்றலு முண்டு.


    1819.   
    இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*
    விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே

        விளக்கம்  


    • நெஞ்சமே! திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா, அஃது எப்படிப்பட்ட தலம் தெரியுமோ? மேலுலகத்தவர்கள் தங்கள் போல்வாரான பக்தர்களை நோக்கி, “நல்ல பூமாலைகளையும் அர்க்கிய பாத்ய ஆசமநீயங்களுக்கு உரிய தீர்த்தத்தையும் சேகரித்துக்கொண்டு புறப்படுங்கோள்“ என்று சொல்லிப் பலரையுங் கூட்டிக்கொண்டு வந்து ஆச்ரயிக்கத் (திப்பாற்கடலிலே) திருவனந்தாழ்வான் மீது திருக்கண்வளர்ந்தருளின பெருமான் அவ்விடத்திற்காட்டிலும் இதுவே பாங்கான விடமென்று போந்தருளித் திருவபிஷேகமணிந்து வாழுமிடமாயிற்று இத்திருமலை. இன்மும், விண்டு விரிகின்ற மூங்கில்கள் வளரப்பெற்ற சுற்றுப்பக்கங்களில் நறுமணம் மிக்க குறிஞ்சிப் பூக்களினுடைய செவ்வித்தேனிலேபடிந்த வண்டுகளையுடைய பர்யந்தங்களை யுடையது.


    1820.   
    பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
    அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*
    கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
    மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

        விளக்கம்  


    • பிணிகள் வளரநின்ற சரீர சம்பந்தம் தொலையவேணமென்று பக்தர்கள் தன்னைத் துதித்துப் பிரார்த்திக்கும் பொருட்டு விசாலமான இந்நிலவுலகத்தைப் படைத்தருளினவனும், இப்படி தன்னதான விபூதியைக் கொள்ளைக்கொண்ட மாவலியின் செருக்கை யடக்குதற்காக அழகிய வாமநமூர்த்தியாகத் திருவ்வதரித்து மூவடிமண் இரந்து நீரேற்றுப் பெற்று நிமிர்ந்து மூவுலகமளந்து கொண்டவனுமான பெருமான் நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்கப்பெற்ற திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா மட நெஞ்சே! (கணிவளர் இத்யாதி) ‘கணி’ என்று சோதிடனுக்குப் பெயர், (கணிப்பவன் என்று காரணப்பெயர்) அத்தலத்தில் காலங் கூறுதற்குச் சோதிடரில்லை, வேங்கை முதலிய மரங்களை காலங்கூறுவனவாம். அந்தந்த மரங்கள் உரிய காலங்களிலே புஷ்பிக்கின்றமையால் ‘இதுஇன்னகாலம், இது இன்னகாலம்’ என்று அதுகொண்டே அனைவரும் காலமுணர்ந்து கொள்ளும்படி யிருத்தலால் ‘கணிவளர் வேங்கை’ எனப்பட்டது. அன்றியே, கண்ணி என்பது கணியெனத்தொக்கியிருப்பதாகக் கொண்டு, பூங்கொத்துகள் வளரப்பெற்ற வேங்கைமாமென்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாதென்க. கவண் -கற்களை யெறியுங்கயிறு. குறவர்கள் ரத்னங்களைக் கவண்களிலிட்டு எறிவதாகக் கூறியவிதனால் ரத்னங்கள் எளிதாகக் கிடைக்குந் தலம் இது என்றாம்.


    1821.   
    சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
    நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*
    கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

        விளக்கம்  


    • சூர்மையில் ஆய -சூர்மையாவது சூரத்தனம், பயங்கரத்தன்மை, அதனோடு கூடிய என்றபடி. இனி, “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்கிற படியே, ;சூர் என்று தெய்வப்பெண்ணைச் சொல்லிற்றாகி, தெய்வப்பெண்ணாகிய யசோதைப் பிராட்டியின் வடிவுகொண்டு வந்தவளாகையாலே ஆரோபிதமான தெய்வப்பெண் தன்மையோடு கூடின என்று முரைக்கலாம்.


    1822.   
    வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய*  மணிமுடி ஒருபதும் புரள,* 
    அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட*  அமர்செய்த அடிகள்தம் கோயில்,*
    பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப*   பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
    மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!    

        விளக்கம்  


    • த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸயசித்“ (இரு பிளவாகப் பிளந்து இரு பக்கங்களிலும் இரு துண்டமாக விழுந்தாலும் விழுவனேயன்றி ஒருவர் காலில் தலைசாய விழமாட்டேன்) என்று வணங்காமுடி மன்னனாய் இறுமாந்திருந்த இராவணன் அமர்க்களத்திலே மடிய, தேவதைகளுடைய வரத்தாலே திண்ணயவையாய் மணிமயங்களான அவனது முடிகள் பத்தும் புற்று மறிந்தாற்போலப் புவிமேல் சிந்திப் புரள அவனது கபந்தமானது தைவாவேசங்கொண்டது போல நின்றாட, ஸங்கல்பத்தாலன்றிக்கே படையெடுத்து வந்து வீரவாசி தோற்றப் பூசல் பொருத பெருமானுறையுமிடமான திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா மடநெஞ்சே! என்கிறார். ஒன்றோடொன்று பிணைந்து மிக்க ஒக்கத்தையுடைத்தான மூங்கில் மலை முழஞ்சிலே வைத்த தேன் கூட்டளவும் வளர்ந்து தனது நுனியாலே அதனுடைய வாயை கிழிக்க, அங்குள்ள தேனீக்கள் சிதற, அதனால் எங்கும் தேன் மணநாறப் பெற்ற சாரலையுடையதாம் இத்திருமலை. அணங்கு - தெய்வம், அணங்கெழுதல் -தெய்வாவேசங் கொள்ளுதல். கவந்தம் மென்னும் வடசொல் விகாரம், தலைநீங்கிய உடற்குறை பிரசம் -தேனுக்கும் தேனீக்கும் பெயர்.


    1823.   
    விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
    குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
    தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
    மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

        விளக்கம்  


    • கடல் மணலே மிகுதி யென்னலாம்படியாக நீர்ப் பகுதியை முழுதும் முகந்துகொண்ட மேகங்கள் ஆகாசத்தை ஏறிப் பரமகம்பீரமாக முழங்க அம்முழக்கத்தைச் செவியுற்ற சிங்கம் மலையிலுள்ள யானையை இப்படி அச்சங்கெட்டுக் கர்ஜிக்கின்றதென்று மயங்கி “நாம் வாழுமிடத்திலே யானையும் இப்படி செருக்குக் கொள்ளக் கடவதோ?” என்று சீறி அதற்குப் பிரதிகர்ஜனை செய்ய பெற்றதாம் இத்திருமலை. மடங்கல் - சிங்கம்.


    1824.   
    தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
    தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
    வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
    மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

        விளக்கம்  


    • மரதகப் பச்சையின் நிறங்கொண்டு ஆகாசப் பரப்புடைய ஓங்கி யிருந்துள்ள சேலையினுள்ளில் நீலப்பாளை வழியே போய்ப்புக்கு மான்கள் தேனைப்பருகா நின்றுள்ளதாம் இத்திருமலை. அதர் - வழி.


    1825.   
    புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
    பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*
    கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
    மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

        விளக்கம்  


    • புதமிகுவிசும்பு -“அம்புதம்“ என்னும் வடசொல் மேகமென்னும் பொருளது, அச்சொல்லே இங்கு முதற்குறையாகப் புதம் என வந்துள்ளது. “கபோலம்“ என்னும் வடசொல் “கவுள்“ எனச் சிதைந்து கிடக்கிறது. (களிவண்டு பருக மதமிகுசாரல்) கடலில் ஒரு மூலையிலே கொசு இருந்து நீரைப் பருகினாலும் கடல் வற்றாதாப் போலே எத்தனை வண்டுகள் பானம் பண்ணினாலும் மதநீர் வற்றாதே பாய்ந்து வெள்ளமிடு மென்ப.


    1826.   
    புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*
    சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 

        விளக்கம்  


    • ‘வேதம் அப்ரமாணம்’ என்று சொல்லுகின்ற அவிவேகிகளான சமணர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்கள் தங்களுடைய கொள்கைக்குத் தக்கவாறு மனம்போனபடியெல்லாம் பிசகாகப் பிதற்றாநிற்க, ‘அந்தோ! இப்பாவிகள் நம்மை இழந்து நித்ய ஸம்ஸாரிகளாய்த் தடுமாறுகின்றனரே!’ என்கிற பரிதாபம் திருவுள்ளத்தில் ஒருபுறமிருந்தாலும் “இப்பாவிகளுக்கு நாம் வேண்டாவாகிலும் நம்மையே உகந்திருக்கும் அன்பர்கட்கு நாம் உதவப்பெற்றோமிறே!“ என்றுகொண்டு திருவுள்ளமுவந்திருக்கின்றவரும் எங்கள் குலத்துக்கு நாதரும் அயர்வறும்மரர்களதிபதியுமான பெருமான் நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொக்க முகங்கொடுக்கலாம் தேசம் இதுவென்று திருவுள்ளம் பற்றி நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்குமிடமான திருமாலிருஞ் சோலையைத் தொழுது மெழு நெஞ்சமே! என்கிறார்.


    1827.   
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
    தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*
    கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
    கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)

        விளக்கம்  


    • எங்கும் தேன் நசையாலே வண்டுகள் படிந்த சாரலையுடைத்தான திருமாலிருஞ்சோலை மாலையிலே விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அழகரை அவ்வடிவழகில் ஈடுபட்டு ஆச்ரயிக்குமவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைத் துதிப்பதாகிற பாகவத நிஷ்டையிலே ஊன்றினவரான திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய இத்திருமொழியைக் கொண்டு ப்ரீதிக்குப் போக்குவிட்டுப் பாடும்படியான பாக்கியமுடையவர்கள் கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகராயிருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.


    1828.   
    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*
    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)

        விளக்கம்  


    • திருமாலிருஞ்சோலையழகரோடே கூடும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோவென்று ஆழ்வார் கவலைப்படுதல் இத்திருமொழிக்குப் பரமதாற்பரியம். மூவரில் முன் முதல்வன் - இந்திரனைக்கூட்டி மூவராக்கி, அம்மூவர்களிற் காட்டிலும் முபுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர். இரண்டாமடியில் “பூ வளருந்தி“ என்றும் பாடமுண்டு. புவனம் - வடசொல்.


    1829.   
    புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
    முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*
    சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
    கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  

        விளக்கம்  


    • ஸ்ரீரங்கத்தில் திருப்புன்னை மரத்திற்கு ஸம்பிரதாய முறையில் ஒரு விசேஷமுண்டாதலாள் இங்குப் புன்னையையிட்டு விசேஷிக்கப்பட்டது.


    1830.   
    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 
    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   

        விளக்கம்  


    • கருமாணிக்க மாமலையை - மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க. “அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை - ஆய்தல் - ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.


    1831.   
    சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
    பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*
    திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   

        விளக்கம்  



    1832.   
    தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
    வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*
    தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
    வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!

        விளக்கம்  



    1833.   
    நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
    வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*
    தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)

        விளக்கம்  


    • நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கு மரியான்) நேசமாவது - ஸ்நேஹம் அதாவது பக்தி, அஃதில்லாதவர்களுக்கு எம்பெருமான் அரியவன் என்றது தகுதியே, நினையாதவர்க்கு மரியான்“ என்றது எங்ஙனே பொருந்தும்? நேசமில்லாதவர்களுக்கு அரியனாகும்போது நினையாதவர்களுக்கு எளியனாக ப்ரஸக்தியே யில்லாமையாலே அப்ரஸக்தப்ரதிஷேதம்போல “நினையாதவர்க்கு மரியான்“ என்ன கூடாதனடறோ? “இந்தச் சரக்கை நூறு காசு கொடுத்தாலும் கொடுக்கமாட்டென் ஒரு காசு கொடுத்தாலுங் கொடுக்கமாட்டேன்“ என்று சொல்லுவது எப்படி அஸம்பாவிதமோ அப்படியே இதுவும் அஸம்பாவிதமன்றோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும், கேண்மின், நேசமிலாதவர்க்கு அரியான்“ என்று மாத்திரம் சொல்லிவிட்டால், நேசமிலாதவர்களான சிசுபாலாதிகளுக்கு ப்ராப்தியுண்டானதாகச் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கு என்ன கதி? வைதுவல்லவா பழித்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைதத்தென்பதைப் பராசர முனிவர் சொல்லிவைத்தார். கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடிதாட்பாலடைந்த தன்மையறிவாரை யறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும். ஆக, நேசமிலாதவர்களில் தலைவனான சிசுபாலனுக்கு எளியவனாகக் காண்கையாலே “நேசமிலாதவர்க்கு அரியான்“ என்றதற்கு மேலே ஒன்றுசொல்லிப் பரிஷ்கரிக்க வேண்டியதாயிற்று, அதற்காகவே “நினையாதவர்க்கு மரியான்“ என்றது, சிசுபாலன் நேசமிலாதவர்களிற் சேர்ந்தவனாயினும் நினையாதவர்களிற் சேர்ந்தவனல்லன், வைகிறவனுக்கும் பேர்சொல்லி வைய வேண்டுதலால் அதற்குறுப்பாக சிசுபாலன் எம்பெருமானை நினைத்தவனே யென்க. இனி, “பரபக்திக்கும் அத்சேஷத்துக்கும் வாசிவையாதே தன்னைக் கொடுப்பா னொருவனென்கை“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திப்படியே விவரணம் செய்து கொள்ளவுமாம். நேசமுள்ளவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் எளியனும் என்பது முதலடியின் தேர்ந்த கருத்து. இதனால் எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியமே வெளியிடப்பட்டதாம். பரமபக்தியுண்டானாலன்றிச் சிலர்க்கு இரங்கியருளான், சிலர் திறத்தில் அந்யபரமான சிந்தனையையும் வியாஜமாகக்கொண்டு மடிமாங்காயிட்டு அருள்புரிவானென்றவாறு. ஆக இப்படிப்பட்ட திருக்குணம் வாய்ந்தவனும் இத்திருக்குணத்தை வடமதுரையிற் பிறந்தருளிப் பிரகாசிப்பித்தவனும், அது தன்னை எட்டுப்புறத்தில் கேட்டுப் போகவேண்டாதபடி திருமாலிருஞ்சோலையிலே விளக்கா நிற்பவனுமான பெருமானை என்மகளான பரகாலநாகயகி காணப்பெறுவளோ? என்றதாயிற்று.


    1834.   
    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*
    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 

        விளக்கம்  



    1835.   
    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!

        விளக்கம்  



    1836.   
    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*
    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)

        விளக்கம்  


    • ஆச்ரிதர்களுக்கு ஆபத்து வந்தவாறே தாமதமின்றி ரக்ஷித்தருள்வதற்காகத் திருவாழி திருச்சங்குகளை எப்போதும் திருக்கைகளில் ஏந்தியுள்ளவனும், அந்தத் திருப்படைகளில்லாமலும் ரக்ஷிக்கவல்ல தோள்மிடுக்கை யுடையவனும், ரக்ஷித்தருளா தொழியினும் விட வொண்ணாதபடி திவ்யமான யஜ்ஞோபவீதமணிந்த அழகு வாய்ந்தவனும், ரக்ஷ்யவர்க்க முள்ளவிடந்தேடித் திருவேங்கடமலையிலே வந்து நிற்பவனும், “அதுதானும் பரத்வத்தோடொக்கும்“ என்று சொல்லவேண்டும்படி மிக நீசரானார்க்கும் முகங்கொடுத்துக்கொண்டு திரு மாலிருஞ்சோலையிலே வந்து நிற்கையாகிற நீர்மையிலேற்றத்தை யுடையவனுமான ஸ்ரீமந்நாராயணனை என் மகள் நண்ணப்பெறுவளோ? சிலம்பியலாறு - “சிலம்பு“ என்கிற சொல்லியிட்டு வ்யவஹரிக்கப் படுகின்ற ஆறு, நூபுரகங்கை யென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேல் ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க, அக்காற்சிலம்பினின்று தோன்றியதனால் “சிலம்பாறு“ என்று பெயராறயிற்று. நுபுரகங்கை பெயன்ற வடமொழிப்பெயரும் இதுபற்றியதே (நூபுரம் - சிலம்பு, ஒருவகைக் காலணி) “சிலம்பியலாறுடைய“ என்றவிடத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளையருளிய வியாக்கியானம் - “ஸ்வர்க்கதினின்னும் அப்ஸரஸ்ஸுக்கள் வந்து ஆச்ரயிக்க, அவர்களுடை சிலம்பினுடைய யுடைத்தான் ஆற்றையுடைய திருமாலை என்றுள்ளது.


    1837.   
    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*
    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  

        விளக்கம்  


    • இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில் “இவளாற்றாமை யிருந்தபடியால் அவனோடே அணைந்த்தல்லது தரிக்கமாட்டாள் போலே யிருந்தது, அணைத்துவிட வல்லளோ? அன்றிக்கே இங்ஙனே நோவுபடுமித்தனையோ? என்று சங்கித்துப் பின்னையும் அவனைக் கிட்டியேவிடுவளென்று அறுதியிட்டுத் தரிக்கிறாளாயிருக்கிறது“ என்றருளிச் செய்திருக்கக் காண்கை யாலே இப்பாட்டில் “அணியாயிழை காணுமென்று“ என்றதை நிச்சயபரமாகவே உரையிடவேண்டும். ஆனால், கீழ் ஒன்பது பாசுரங்களிலும் (சொன்ன விஷயத்தையே யன்றோ நிகமனப் பாரசுரத்தில் எடுத்துறைக்க வேண்டும், கீழெல்லாம் நிச்சமினறி ஸந்தேஹிப்பதாக் தானே உள்ளது, நிச்சயித்ததாக எங்குக் கிடைத்தது? என்று சிலர் சங்கிப்பர், இப்பாசுரத்தில்


    1855.   
    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*
    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே

        விளக்கம்  


    • ‘பத்தராவி’ என்பதற்கு இருவகையாகப் பொருளருளிச்செய்வர், பக்தர்களுக்கு ஆவியாயிருப்பவன் என்பது ஒருபொருள், பக்தர்களைத் தனக்கு ஆவியாகவுடையவன் என்பது மற்றொரு பொருள். “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்“ என்று கீதையிலருளிச்செய்தபடியே ஞானிகளான பக்தர்களைத் தனக்கு உயிர்நிலையாக வுடையவன் என்றவாறு. (பால் மதியை) சந்திரனைப்போல எப்பொழுதும் ஆனந்தமாகக் கண்டு கொண்டிருக்க வேண்டிய வடிவுபடைத்தவன் என்றபடி. “அணித்தொத்தை“ என்றும் “மணித்தொத்தை“ என்று பாடபேதம் வியாக்கியானத்திலுள்ளது. தொத்து -பூங்கொத்து, மாலைபையுஞ் சொல்லும்.


    1969.   
    மஞ்சுறு மாலிருஞ் சோலை*  நின்ற மணாளனார்,*
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார்*  நினைகின்றிலர்,*
    வெஞ்சுடர் போய் விடியாமல்*  எவ்விடம் புக்கதோ,*
    நஞ்சு உடலம் துயின்றால்*  நமக்கினி நல்லதே! 

        விளக்கம்  


    • திருமாலிருஞ் சோலைமலையிலே நித்யவாஸம் செய்தருளாநின்ற அழகப்பிரானார் பெண்மைக்கு ஈடாக என்னெஞ்சிலிருந்த அடக்கத்தைக் கொள்ளைக்கொண்டு போய் விட்டார்; போனவர் ‘ஒருத்தியை இப்படி ஸர்வஸ்வாபஹராம் பண்ணிவந்தோமே, அவன் எப்பாடுபடுகிறாளோ!’ என்று நெஞ்சில் இத்தனை இரக்கமு மற்றிராநின்றார். அவர்தாம் அப்படி இரக்கமற் றொழிந்தால் ஸூர்யபகவானும் இரக்கமற் றொழியவேணுமோ? ஆவன் அஸ்தமித்தால் மீண்டும் முப்பது நாழிகையிலே உதிக்கவேணுமென்று ஒரு நியதியில்லையோ! அந்த நியதியையுங் கடந்து அடியோடு முகங்காட்டாதே எங்கோ புக்கொளித்தானே! இங்ஙனே எம்பெருமானும் இரக்கமற்றவனாகி அவனுடைய பாரிஜநமும் இரக்கமற்றொழிந்ததான பின்பு ஏதுக்கு நாம் இந்தவுடலைச் சுமந்து வருந்தவேணும்? இவ்வடலம் சிதிலமாகி முடியப் பெறுமாகில் அதுவே நமக்குச்சிறந்த வாழ்ச்சியாகுமே யென்கிறாள். விரஹிகளுக்கு இரவு நீட்டித்துத் தோற்றுதல் இயல்பாதலால் “வெஞ்சுடர்போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ” என்னப்பட்டது. நஞ்சு = ‘நைந்து’ என்பதன் போலி (‘ஐந்து’ என்பதற்கு ‘அஞ்சு’ என்று போலியாவது போல) ‘உடலம்’ என்றதில் அம்-சாரியை. துயின்றால்=தீர்க்க நித்திரையாகிய மரணத்தையுடைந்தால் என்றபடி உபசாரவழக்கு. எம்பெருமானை அநுபவிப்பதற்கு உபயோகப்படாத சாறிரம் ஒழிவதேநன்று என்கிறாள். “நகமிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க, யோகணைவான் கவராத உம்பினால் குறைவிலமே” என்ற திருவாய்மொழியுங் காண்க.


    2020.   
    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*
    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)

        விளக்கம்  


    • எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மநுஷ்யயோநியிற் பிறந்துவைத்தும் உணர்வின் பயன் பெறாதவர்களாகையாலே மானிடவரல்லர் என்று நான் ஸித்தாந்தம் செய்து கொண்டேன் என்கிறார். உணவுகளையுண்டு வயிறு நிரப்புகை, விஷயபோகங்கள் செய்கை, உறங்குகை முதலிய காரியங்கள் பசுக்களுக்கும் மானிடர்க்கும் பொதுவாகையாலே, இனி மானிடரென்கிற ஏற்றம் பெறவேண்டில் எம்பெருமானுக்கு ஆட்படுகையொன்றினால் தான் ஏற்றம் பெறவேண்டும் அஃதில்லாதர் மானிடவரல்லர் என்னத்தட்டில்லை. “என்மனத்தே வைத்தேனே” என்கையாலே, இது எவ்விதத்தாலும் மாறமாட்டாத ஸித்தாந்தம் என்றதாம். கீதாசார்யன் மே மதம் என்றது போல.


    2034.   
    பாயிரும் பரவை தன்னுள்*  பருவரை திரித்து,*  வானோர்க்கு- 
    ஆயிருந்து அமுதங் கொண்ட*  அப்பனை எம்பிரானை,*
    வேயிருஞ்சோலை சூழ்ந்து*  விரிகதிர் இரிய நின்ற,* 
    மாயிருஞ்சோலை மேய*  மைந்தனை வணங்கி னேனே.  

        விளக்கம்  


    • தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிராநி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில்கொண்டிரா நின்றான்; அன்னவனை வணங்கியுய்ந்தேனென்கிறார். கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது. எம்பெருமான் அவாப்தஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்; நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது. ”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க. கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன்பேறாக நினைத்திருந்ததனால்.


    2227.   
    பயின்றது அரங்கம் திருக்கோட்டி,*  பல் நாள்-
    பயின்றதுவும்*  வேங்கடமே பல்நாள்,*  - பயின்றது-
    அணி திகழும் சோலை*  அணி நீர் மலையே* 
    மணி திகழும் வண் தடக்கை மால். 

        விளக்கம்  


    • பாகவதர்கள் லாபநஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில் ஸ்ந்நிதிபண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்யதேசங்களில் சிலவற்றைப்பேசி அநுபவிக்கிறார். திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் அநுநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார். ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன, அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு. “அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல் தனிவிசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.


    2229.   
    உணர்ந்தாய் மறை நான்கும்*  ஓதினாய் நீதி* 
    மணந்தாய் மலர் மகள் தோள் மாலே!*  - மணந்தாய் போய்-
    வேய் இரும் சாரல்*  வியல் இரு ஞாலம் சூழ்,* 
    மா இரும் சோலை மலை.

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு. ‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘ என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும்பரமோ? கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய். அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான் ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய், ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய், திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய், இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று. உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு, ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில், வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது.


    2235.   
    வெற்பு என்று இரும் சோலை*  வேங்கடம் என்று இவ் இரண்டும்*
    நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல்,*  - நிற்பு என்று-
    உளம் கோயில்*  உள்ளம் வைத்து உள்ளினேன்,*  வெள்ளத்து-
    இளங் கோயில் கைவிடேல் என்று.  

        விளக்கம்  


    • எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ, அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ, அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில் எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார். ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“ என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.


    2342.   
    பண்டுஎல்லாம் வேங்கடம்*  பாற்கடல் வைகுந்தம்,* 
    கொண்டுஅங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு
    வளம்கிளரும் நீள்சோலை*  வண்பூங் கடிகை,* 
    இளங்குமரன் தன் விண்ணகர்.  (2)

        விளக்கம்  


    • இப்பாட்டை இரண்டுவகையாக நிர்வஹிப்பதுண்டு, அவற்றுள் முதல்வகை எங்ஙனே யெனின், ஸ்ரீவைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடைய எம்பெருமானுக்குத் திருப்பாற்கடல் திருவேங்கடம் திருக்கடிகை முதலிய திருப்பதிகள் முன்பெல்லாம் கோயிலாக அமைந்திருந்தன, (அதாவது –என்னுடைய நெஞ்சகம் அவனுக்குக் கோயிலாகக் கிடைப்பதற்குமுன்பு) இப்போதோ வென்னில், அவன் விரும்பியெழுந்தருளி யிருப்பதற்குப் பாங்காக என்னுடைய நெஞ்சகம் அவனுக்கு ஆலயமாகக் கிடைத்து விட்டதனால் அத்திருப்பதிகளிற் பண்ணுமாதாத்தை என்னெஞசிலே பண்ணிக்கொண்டு கிடக்கிறான் என்பதாம். மூலத்தில் ‘பண்டெல்லாம்‘ என்றவளவுக்கு இவ்வளவு விசாலமான கருத்துக்கொள்வது சிரமமென்று தோன்றினால், வேறொருவகையான நிர்வாஹம் காட்டுவோம், - ஆழ்வார் இப்பாட்டால திருக்கடிகைக்குன்றைச் சிறப்பித்துக் கூறுவதாகக்கொள்க. திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய திருப்பதிகளிற் காட்டிலும் * வண்டுவளங்கிளரும் நீள் சோலை வண்பூங்கடிகையிலே அதிகமான ஆதாரத்தைப் பெருக்கி அஃதொன்றையே கோயிலாகக் கொண்டிருக்கிற னென்பதாகக் கொள்க.


    2420.   
    அழைப்பன்*  திருவேங்கடத்தானைக் காண* 
    இழைப்பன்*  திருக்கூடல் கூட*  மழைப்பேர்
    அருவி*  மணிவரன்றி வந்துஇழிய* யானை 
    வெருவி அரவுஒடுங்கும் வெற்பு. 

        விளக்கம்  


    • பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம், மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம், அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம். பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம், ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை. அன்றியே, அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம். சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது. “திரையன்பாட்டு“ என்ற ஓர் பழையநூலில் – “கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப், படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“ என்றதனாவ் மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது. “ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல், நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும், “பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும், “இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும் உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது. அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப. யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை, யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.


    2780.   
    மின்னி மழைதவழும் வேங்கடத்து எம் வித்தகனை,*
    மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,*

    கொல்நவிலும் ஆழிப் படையானை,* -கோட்டியூர்-


        விளக்கம்  


    • மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்தசோலைகளையுடைய மலை. வந்திரி எனப்படும். கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது. அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்களை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி. திரு மய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும் இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது. அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.


    3002.   
    கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
    வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*
    வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  

        விளக்கம்  


    • வளரிளம்பொழில் சூழ்மாலிருஞ்சோலை யென்பதைக் கூரத்தாழ்வான் ஸூந்தரபா ஸூஸ்தவத்தில் அப்படியே மொழிபெயர்த் தருளியிருக்கின்றார்-“வர்த்திஷ்ணு பாலத்ருமஷண்ட மண்டிதம் வநாசலம்” என்று திருமாலிருஞ்சோலை-நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பாண்டியநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும், வநகிரி என்று வடமொழியிற் கூறப்படுவதும், ‘கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமரை’ என்று சிறப்பாக எடுத்துப் கூறப்படுகின்ற நான்கு திருப்பதிகளுள் ஒன்றும், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமையுடையதுமானதொரு திவ்ய தேசம். “ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே” என்றபடி மிகப் பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் “மாலிருஞ்சோலைமலை” என்று திருநாமமாயிற்று. மால்-பெருமை; இருமை-பெருமை, இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட்பன்மொழியாய் நின்றன. மால் என்று உயர்ச்சியாய், இருமை என்று பரப்பைச்சொல்லிற்றாய். உயர்ந்துபரந்த சோலைகளையுடைய மலையென்றலு முண்டு.


    3003.   
    சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
    அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*
    மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
    பதியது ஏத்தி*  எழுவது பயனே.    

        விளக்கம்  


    • மதிதவழ்குடுமி என்றதையும் ஆழ்வான் அந்த ச்லோகத்திலேயே “சசதரரிங் கணாட்யசிகம்“ என்று மொழி பெயர்த்திருகின்றமை காண்க. மாலிருஞ் சோலைப்பதி – மாலிருஞ் சோலையாகிற பதி என்றும், மாலிருஞ் சோலையிலுள்ள பகவந்மத்திரம் என்றும் கொள்ளலாம்.


    3004.   
    பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
    புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*
    மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    அயல்மலை அடைவது*  அது கருமமே.

        விளக்கம்  


    • திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று, திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு. பரமபதத்திலிருக்கிற இருப்பையும் மற்றுமுள்ள அவதாரங்களையும் சிந்திப்பதனால் பயனொன்று மில்லையென்பது முதலடியின் உட்கருத்து. பயனல்ல என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. நிஷ்ப்பலமானவற்றை என்றபடி. சுவர்க்கம்


    3005.   
    கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
    பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*
    வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
    திருமலை அதுவே*  அடைவது திறமே.   

        விளக்கம்  


    • ஒருவர்க்கும் எளிதில் கழித்துக்கொள்ள முடியாத கரும பந்தங்களைக் கழிப்பதற்கும், அவை கழிந்து அடிமை செய்து வாழுகைக்குமாகவே எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை யடைவதே தகுதியென்கிறார். முதலடியில் உய்ய என்கிற வினையெச்சம் (இரண்டாமடியில்) உறை என்ற வினையைக் கொண்டு முடியும். பீடுறை – பீடு தோற்ற உறையுமிடம், பீடுடனே உறையுமிடம் என விரிக்க பீடு –பெருமேன்மை. வருமழைதவழும் – இங்கு ‘மழைதவழும்‘ என்பதே போதுமாயிருக்க, வரு என்ற அடைமொழி கொடுத்த ஸ்வாரஸ்யத்தை நம்பிள்ளை காட்டியருளுகிறார் காண்மின் – “ஊருக்கு இரண்டாயிற்று மழை, நின்றவிடத்திலே நின்று வர்ஷிப்பதொரு மேகமும், போவது வருவதாயிருப்பதொருமேகமும்“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.


    3006.   
    திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
    அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*
    மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
    புறமலை சாரப்*  போவது கிறியே.

        விளக்கம்  



    3007.   
    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*
    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.

        விளக்கம்  


    • திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார். ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதரித்துத் தன்னுடைய ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணாதிசயங்களைக் காட்டியருளின பெருமான்தானே, பிற்பட்டவர்களும் இழவாமைக்காக இப்போது திருமலையில் நித்யஸந்நிதி பண்ணியிராநின்றானென்பது இரண்டாமடியின் கருத்து. விஷயாந்தர ப்ராவண்யத்திலே நெஞ்சைச் செலுத்தாமல் திருமாலிருஞ்சோலையாத்திரை வழியிலே நெஞ்சைச் செலுத்துங்கோள் என்றாராயிற்று. திருமலைக்கு மறியொடு பிணைசேர் என்ற அடைமொழி கொடுத்து ஸாபிப்ராயம், அங்குக் குட்டியுந் தாயும் பிரியா திருத்தல்போல, நாமும் தாயுந் தந்தையுமாயிவ்வுலகினில் வாயுமீசனைப் பிரியாதிருத்தல் நன்று என்று காட்டியவாறு. ஈற்றடியில் நெறிபட என்பதை ஒரு முழுச் சொல்லாகக் கொண்டு ‘நன்றாக‘ என்றும் கொள்வர், திருமாலிருஞ்சோலையை நன்றாகச் சிந்திப்பது நலம் என்றவாறு.


    3008.   
    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*
    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.

        விளக்கம்  


    • மலமறுமதிசேர் என்றதற்கு இரண்டு வகையான நிர்வாஹ முண்டு, * மதிதவழ்கின்ற மாலிருஞ்சோலை யாகையாலே திருமலை சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கையாலே. சந்திரன் போகும்போது, சிகரங்களிலே தேய்ப்புண்டு சாணையிலிட்டாற்போலே களங்கமற்றிருக்கும்படியைச் சொல்லுகிற தென்று ஒரு நிர்வாஹம் (மதி – சந்திரன்) இனி, வடமொழியாக்க்கொண்டால் மதியென்று புத்திக்குப்பெயர், நிர்மலமான புத்தியை (பக்தர்கட்கு)ச் சேர்விக்கின்ற திருமலை என்பது பிள்ளானுடைய நிர்வாஹம். புத்திக்கு மலமாவது – ஸந்தேஹம், ப்ரமம், மறப்பு முதலியனவாம். திருமலையைத் தொழுவார்க்கு மயர்வற்ற மதியுண்டாகுமென்றபடி. மலமறுமதிசேர் என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறலாம். ஆழ்வான் ஸுந்தரபதஹுஸ்வத்தில் – “யதீயசிகராகதாம் சசிகலாம் து சாகாம்ருகா, திரிக்ஷ்ய ஹர சேகரீ பவநம் ஆம்ருசந்தஸ் த்த, ஸ்பருசந்தி த ஹி வேதாந்தரஸமாச்ரிதேதி ஸ்புடம்“ என்கிறார். திருமலையினுச்சியில் உள்ள குரங்குகள், அங்கே சந்திரன் கையால் எட்டிப்பிடிக்கக் கூடியவனாக இருந்தும், அவன் ருத்ரசிரஸ்ஸம்பந்தமாகிற தோஷம் படைத்தவனென்பது பற்றி, அவனைத் தொடுவது மில்லையென்று, ஒரு அதிசயோக்தி கூறினாராகிறார். அப்படிப்பட்ட தோஷத்தைச் சந்திரன் போக்கிக் கொள்வதற்காக வந்து சேருமிடமான திருமலை – என்னலாம்.


    3009.   
    வலஞ்செய்து வைகல்*  வலம் கழியாதே,* 
    வலஞ்செய்யும் ஆய*  மாயவன் கோயில்,*
    வலஞ்செய்யும் வானோர்*  மாலிருஞ்சோலை,,* 
    வலஞ்செய்து நாளும்*  மருவுதல் வழக்கே.

        விளக்கம்  



    3010.   
    வழக்கு என நினைமின்*  வல்வினை மூழ்காது,* 
    அழக்கொடி அட்டான்*  அமர் பெருங்கோயில்,*
    மழக் களிற்று இனம் சேர்*  மாலிருஞ்சோலை,* 
    தொழக் கருதுவதே*  துணிவது சூதே.

        விளக்கம்  



    3011.   
    சூது என்று களவும்*  சூதும் செய்யாதே,* 
    வேதம் முன் விரித்தான்*  விரும்பிய கோயில்,*
    மாது உறு மயில் சேர்*  மாலிருஞ்சோலைப்,* 
    போது அவிழ் மலையே*  புகுவது பொருளே.     

        விளக்கம்  



    3012.   
    பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
    மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*
    தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
    அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.

        விளக்கம்  


    •  பயன்படும் என்று இவ்வுலகத்தைப் படைத்தவனுடைய நற்குணங்கள் விஷயமாக மயக்கம் இல்லாத, வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த கொடையையுடைய ஸ்ரீசடகோபரால் ஆத்துமாக்கள் ஞானத்தைக் கொள்ளும்படியாக அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களும் பாவங்களை அழித்து, அருட்கடலான இறைவனுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.


    3013.   
    முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
    அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*
    படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
    கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   

        விளக்கம்  


    • உரை:1

      திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார். உனது முகச்சோதி முடிச்சோதியாய் மலர்ந்ததுவோ? = திருமுக மண்டலத்தின் காந்திஸமூஹம் மேல்முகமாகக் கிளர்ந்து கிரீட ஜ்யோதிஸ்ஸாக ஆயிற்றோ? என்பது கேள்வி. உண்மையில் திருமுகமண்டலத்திக்குமேல் திருவபிஷேகமென்று தனியே இல்லை; திருமுகச் சோதிதான் மேலே படர்ந்து திருமுடியாகத் தோற்றுகிறது என் கை இங்கு ஆழ்வாருக்கு விவக்ஷிதம். பட்டர் ஸ்ரீ ரங்கராஜஸ்வத்தில் இப்பாசுரத்தின் முதலடியை ஒரு சிறுச்லோகமாக அருளிச் செய்தார்; அதாவது * கிரீடசூடரத்தராஜி: ஆதிராஜ்ய ஜல்பிகா, முகேந்தகாந்திருந்முகம் தரங்கி தேவ ரங்கிண: * என்பதாம். திருமுடியில் நின்றும் திருவடியிலே கண்வைத்தார்; அடிச்சேரி தீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? என்கிறார். ஆஸனபத்மமென்று கீழே தனியே ஒன்று இல்லை; கீழ்நோக்கிக் கிளர்ந்த திருவடியின் தேஜ: புஞ்சமே ஆஸநபத்மமாகத் தென்படுகின்றது என்கை இங்கு விஷக்ஷிதம். 

      உரை:2

                   பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!


    3014.   
    கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
    சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*
    ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
    பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!       

        விளக்கம்  


    • உரை:1

      அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப்பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார். கட்டுரைக்கில் - வருணிக்கப் புகுந்தால் என்றபடி. அழகை நெஞ்சினாலும் கண்களாலும் ஆர அநுபவிக்க வேண்டுமேயொழிய, உபமானமிட்டு வாய்கொண்டு பேசுவது கூடாது என்பது இதில் தொனிக்கும். திருக்கண் திருவடி திருக்கை முதலிய அவயவங்களுக்குத் தாமரையை உவமையாக் கவிகள் பேசுகின்றார்களெனினும் இது சிறிதும் பொருந்தாத த்ருஷ்டாந்தமே என்பது முதலடியின் கருத்து. சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனியொளி ஒவ்வாது = தேவரீருடைய அப்ராக்ருதமான திருமேனியின் ஸமுதாய சோபைக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்னை ஒப்பாகச் சொல்லுதலும் பொருந்தாது என்றபடி. நீலமேக ச்யாமளனான எம்பெருமானுக்குப் பொன்னை உவமை கூறுதற்கு ப்ரஸக்தியே யில்லாதிருக்க, அப்ரஸக்த ப்ரதிஷேதம் இங்கு ஏதுக்குப் பண்ணுகிறது என்று சிலர் நினைக்கக்கூடும்; “பொன்னிவர்மேனி” என்றும் “கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்தன்” என்றும் சொல்லுகிற கணக்கிலே அழகருடைய திருமேனி பொன்னிறமாகவே விளங்குதலால் ப்ரஸக்த ப்ரதிஷேதமே இங்குப் பண்ணுகிறது என்க. * ருக்மாபம்* என்றும் * ஹிரண்மய* புருஷோத்ருச்யதே * என்றுமுள்ள ப்ரமாணங்களைக் கொண்டும், நிர்வஹிப்பர். ஹிரண்யவர்ணையான பிராட்டியின் சேர்க்கையாலுண்டான நிழலீட்டாலே எம்பெருமானும் ஹிரண்மயனாகத் தோற்றுவனென்ப.

      உரை:2

      உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்! 

       

       


    3015.   
    பரஞ்சோதி! நீ பரமாய்*  நின் இகழ்ந்து பின்,*  மற்று ஓர் 
    பரம் சோதி இன்மையின்*  படி ஓவி நிகழ்கின்ற,*
    பரஞ்சோதி நின்னுள்ளே*  படர் உலகம் படைத்த,*  எம் 
    பரஞ்சோதி கோவிந்தா!*  பண்பு உரைக்கமாட்டேனே.

        விளக்கம்  


    • உரை:1

      ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதேயன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார். உலகில், வடிவழகிலோ செல்வத்திலோ சிறிது ஏற்றமுடைய ஒருவனைக் கண்டால் ‘அப்பா! உன்னைப்போன்ற தேஜஸ்வி ஒருவனில்லை; உன்னைப்போன்ற செல்வன் எங்குமில்லை’ என்று புகழ்வது உலக வியற்கையாக உள்ளது; அப்படி யல்லாமல் ‘எந்த வுலகத்திலும் எந்த வ்யக்தியிடத்திலும் இப்படிப்பட்ட தேஜஸு இல்லை’ என்று திண்ணமாய்ச சொல்லும்படியாகத் தேஜ : பூர்த்தியுள்ளது தேவரீர் பக்கலிலே யாகையாலே ஒப்புயர்வற்ற பரஞ்சோதியாயிருக்கின்றீர்; உலகங்களையெல்லாம் ஸ்ங்கல்ப ஏகதேசத்திலே ஸ்ருஷ்டித்து, அப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட லோகத்தினுடைய ஸ்வபாவம் தேவரீர்க்குத் தட்டாதபடி நிற்கிற தேஜோநிதியே! கோவிந்தனான நீர்மைக்கு எல்லை காணவொண்ணாபடி யிருக்கிற பரம ஸுல்பனே! எந்தக் குணந்தான் என்னாற் சொல்லாலாகும்? மேன்மைக்கு எல்லை கண்டாலும் நீர்மை தரை காணவொண்ணாமேயிரா நின்றதே! எதுவும் அநுபவித்துப்போமித்தனை யொழிய, பாவியேன் வாய் கொண்டுபேச நிலமாக இல்லையே! என்று தவிக்கிறார்.

      உரை:2

      எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது! 
       


    3016.   
    மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
    மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 
    மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
    மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?

        விளக்கம்  


    • உரை:1

      மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா? 

      உரை:2

      “கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில். இம்மலர்தலை மாஞாலம் நின்மாட்டாய மதிகொடுத்தாய் - என்கிற வரையில் ஒரு வாக்கியம். இவ்வுலகமானது இயற்கையாகவே தேவரீருடைய திவ்யமங்கள் விக்ரஹத்தில் செநஞ்சைச் செலுத்தமாட்டாதது; அதற்குமேலே தேவரீரும் அறிவைக்கெடுக்கவல்ல பல மதாந்தரங்களையும் விரவர்த்தனம் செய்துவைத்தீர் என்றபடி. ஒன்றோடொன்று சேராத பலபல அவைதிக மதகங்களைத் தேவரீர் உலகில் பிரவர்த்திப்பித்ததனால் ஏற்கனவே பகவத் விஷயத்தில் ருசியற்ற ஜனங்களை பின்னையும் இதர விஷயங்களில் மண்டி மாண்டு போவதற்கு வழி செய்ததாயிற்று என்றவாறு. மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் = கெட்டுப்போகிற ஜனங்களை மீட்பதிலேயாவது தேவரீருடைய திருவுள்ளம் ஊற்றமுற்றிருந்தால் குறையில்லையாகும்; பாழும் ஜனங்களைத் தேவரீர் கவனியாமல், திருமேனியிலுள்ள திருத்துழாய் மாலை முதலிய போக்ய வஸ்துக்களிலே தேவரீர் ப்ராவண்யம் கொண்டிராநின்றது. இப்பாடியாகில் மாஞாலம் வருந்தாதே?= உலகமெல்லாம் வேதரீரை இழந்துபோகவேண்டியதுதானே. விபரீத மதங்களை உலகில் பரவச்செய்யாதிருந்தால் அவ்வளவாக ஜனங்கள் கெட்டுப்போக ப்ரஸக்தியிராது; “வணங்குந் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் வணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவைதோறு அணங்கம் பலபல வாக்கி” என்னும்படியாகப் பலசமய பேதங்களை யுண்டாக்கிவைத்தீர்; அதனால் ஜனங்கள் பலவகையாகப் பாழ்பட நேர்ந்தது; பாழ்பட்டாலும் திருத்தும் வழியிலே தேவரீர் ஊக்கம் கொண்டிருந்தாலாவது நன்றாகும்; அதுவுமில்லாமே ஸ்வகோய்தையை யநுபவிப்பதிலேயே தேவரீர் ப்ரவணராயிருக்கையாலே இவ்வுலகம் இழந்தே போக வேண்டியதாயிற்றே! என வருந்திக் கூறியவாறு.

       


    3017.   
    வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
    வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*
    வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
    ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?

        விளக்கம்  


    • உரை:1

      அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?

      உரை:2

      நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப்பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்திவைத்தாயில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார். * வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய் = எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம் எப்படிப்பட்டதென்றால் (வருந்தாத) ஒரு ப்ரயத்நத்தினால் ஸித்தமன்றிக்கே ஸ்வஸங்கல்ப மாத்திரத்தினால் பரிக்ருஹீதம். இன்னமும் எப்படிப்பட்டதென்னில், (அருந்தவந்த) பக்த ஜனங்களின் தவப்பயனோ என்னலாம்படி யிருக்கும் இன்னமும் எப்படிப்பட்ட தென்னில், (மலர்கதிரின்) எங்கும் பரந்த வொளியையுடையது. ஆக இப்படிப்பட்ட திருமேனியையுடைமை முதலடியால் சொல்லப்பட்டது. “வருந்தாத ஞானமாய்” என்றது. நம்மைப்போல் ப்ரயாஸப்பட்டு ஞானம் ஸம்பாதிக்க வேண்டாதே எம்பெருமான் இயற்கையாகவே விசாலமான ஞானம் படைத்தவனென்றவாறு.


    3018.   
    ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
    சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*
    போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
    மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  

        விளக்கம்  


    • உரை:1

      ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்! 

      உரை:2

      எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத்குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்றவத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார். (ஓதுவாரோத்து) ஒத்து என்று வேதத்திற்குப் பெயர்; ஓதுவார்களையிட்டு நிரூபிக்கப்படுவன வேதங்கள்; (எங்ஙனே யென்னில்;) ஆதர்வணம், தைத்திரீயம், காண்வம், என்று வ்யபதேசங்கள் விளைந்திருப்பதானது ஓதுவார்களையிட்டு வந்ததன்றோ, ஆசார்ய ஹ்ருதயத்தில்- “வேதம் ஒதுவாரோத்தாகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர்பெற்றது” என்றவிடமும் அவ்விடத்து வியாக்கியமான ஸ்ரீஸூக்தியும் காணத்தக்கன. எவ்வுலகத்து எவ்வெவையும் = ப்ரமாணங்களான சாஸ்த்ரங்கள் இந்நிலவுலகத்தில் இருப்பதுபோல் மற்றும் பல வுலகங்களிலுமுண்டே; ஸ்வர்க்கலோகத்திலும் ப்ரஹ்ம லோகத்திலும் ஆங்காங்குள்ளாருடைய ஞான வளவுக்குத் தக்கபடியே. பிரமாணங்கள் பரந்திருக்கும். ஸ்ரீராமாயணமென்கிற ஒரு க்ரந்தத்தை யெடுத்துக் கொள்வோம்; இது இவ்வுலகில் ஸங்கிரஹப்படியாயும், ப்ரஹ்மலோகத்தில் விஸ்தாரப்படியாயு மிருப்பது ப்ரஸித்தம். இங்ஙனமே மற்றுங் காண்க. ஆக இப்படிப்பட்ட ச்ருதீதிஹாஸ புராணாதிகள் யாவும் (சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை) உன்னுடைய புகழை வர்ணிப்பதில ஸம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது தவிர வேறில்லை; ஒரு குணத்தையும் முற்றமுடியச்சொன்னபாடில்லை என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்; - “உன்னுடைய கல்யாண குண விஷயமான வித்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை. விஷயந்தன்னை எங்கு மொக்க விளாக்குலை கொண்டதுமில்லை.”


    3019.   
    வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
    மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  
    கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
    சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     

        விளக்கம்  


    • உரை:1

      ஞானத்திற் சிறந்த பலபேர்கள் திரண்டு ஏத்தினாலும் அதுவும் பகவத் குணங்களுக்குத் திரஸ்காரமாகவே தலைக்கட்டு மென்கிறார். (“வாழ்த்துவார் பலராக”) இதில் ஆக என்பதை வினையெச்சமாகக் கொண்டு, ‘உன்னைத் துதிப்பவர்கள் பலர் உண்டாவதற்காக’ என்று பொருளுரைப்பர் பலர்; பட்டர் அங்ஙனன்றியே ஆக என்றவிதனை வியங்கோள் வினைமுற்றாகக் கொண்டு “வாழ்த்துகின்றவர்கள் பலபேர்கள் இருக்கட்டுமே” என்று பொருளுரைப்பராம். எத்தனை பேர்கள் திரண்டு வாழ்த்தினால்தானென்ன? வேதங்களிற் காட்டிலும் ஏற்றமாகத் துதிக்க வல்லார் யாருமிலரே? என்பது பட்டர் நிர்வாகத்தின் கருத்து. (நின்னுள்ளே யித்யாதி.) பெருமானே! உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமனாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்களா உன்னுடைய திருக்குணங்களை வருணிப்பதற்கு உரியார்? “சங்கராத் ஜ்ஞாநமந்விச்சேத்” என்றபடி சிவபிரான் ஞானத்திற் சிறந்தவனேயாயினும் அவனுமுட்பட மற்றும் பல அமரர்களும் திரண்டு ஏத்தினாலும் அவத்யமேயாகுமென்றாராயிற்று. சூழ்ந்து- ஒவ்வொருவர் ஒவ்வொரு குணத்தை வருணிப்பதாக வைத்துக் கொண்டு என்றும், திரள் திரளாகக்கூடி என்றும் பொருள்படும்.

      உரை:2

      பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

       


    3020.   
    மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
    மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
    மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
    மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     

        விளக்கம்  


    • உரை:1
       
      குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே! 
       
      உரை:2
       
      சிவபிரானைச் சொன்னபிறகு அவனிலும் கீழ்ப்பட்டவனான இந்திரனை யெடுத்துரைக்க ப்ரஸக்தி யில்லாமையாலே இந்திரனென்கிற பொருள் ஏலாது. அமரர்களனைவர்க்கும் நான்முகன் கோனாதலால் அந்த நான்முகனை இங்கு விவக்ஷிப்பதாக நிர்வஹிப்பாருண்டு. கீழ்ப்பாட்டில் “அரன்முதலா” என்றிருப்பதனாலே நான்முகனும் அவ்விடத்திலேயே ஸங்கரஹிக்கப்பட்டவனாகக் கூடுமென்று திருவுள்ளம் பற்றிய பட்டர் இங்கு அமரர்கோன் என்பதற்கு விலக்ஷணனாய் உத்ப்ரேக்ஷாஸித்தனான ஒருபிரமனைப் பொருளாகப் பணிப்பராம். ப்ரஸித்தனான பிரமன், ப்ரஹ்ர பாவகைகர்ம பாவகை என்ற இரண்டு பாவகைகளையுடைனாயிருப்பன்; இப்படியல்லாமல் ப்ரஹ்ம பாவநை யொன்றையேயுடையனான வொரு பிரமன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; அவன் ஏத்தினாலும் அவத்யமேயாகும் என்கிறார். இப்பாட்டால்- என்பது பட்டருடைய திருவுள்ளம்.


    3021.   
    மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
    தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 
    மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
    தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 

        விளக்கம்  


    • உரை:1
       
      தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா? 
       
      உரை:2
       
                  எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது. எம்பெருமானுடைய திருவவதாரங்களுக்கு மூன்று வகையான பிரயோஜனங்கள் பேசப்பட்டுள்ளன. *பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்குதாம், தர்மஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே. *என்று சிஷ்டர்களைக் காத்தல், துஷ்டர்களைத் தொலைத்தல், அறநெறியைத் தாபித்தல் என மூவகைப்பட்ட காரியங்களுக்காக எம்பெருமான் அப்போதைக்கப்போது திருவவதாரங்கள் செய்தருள்வதாகச் சொல்லப்பட்டது. இங்ஙனம் மூவகையாகச் சொல்லப்பட்டுள்ள பிரயோஜனங்களை ஆராய்ந்து பார்க்குமளவில் மூன்றுங் சேர்ந்து ஒரே பிரயோஜனமாகத் தேறும்; “பரித்ராணாயஸாதூநாம்” என்பதனாற் சொல்லப்பட்ட ஸாதுஜந ஸம்ரக்ஷணமாகிய காரியம் துஷ்ட நிக்ரஹத்தையும் தர்மஸம்ஸ்தாபநத்தையும் உறுப்பாகக் கொண்டதாதலால் ஸாது பரித்ராண மென்பதொன்றே அவதாரப்ரயோஜநமென்றதாகும். ஸாதுக்களை ஸம்ரக்ஷிக்க வேண்டில் அதற்காக எம்பெருமான் அவதாரம் செய்ய வேணுமோ? ஸகல ஜகத்ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் ஸங்கல்ப லவலேஸத்தாலே நிர்வஹித்துப் போருகின்ற பரம சக்தியுக்தனான எம்பெருமான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே ஸாது பரித்ராணமும் செய்தருளக் கூடாமையில்லையே; “மஹர்ஷிகள் வாழ்க; ராவணாதிகள் மாள்க.” என்று பரமபதத்தில் வீற்றுருந்தபடியே ஸங்கல்பிக்குமளவால் தலைக்கட்டமாட்டாத காரியமல்லையே,அப்படியிருக்க, ஏதுக்கு நாட்டில் பிறந்து படாதன படவேணும்? என்று பலர் சங்கிப்பதுண்டு: அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இரா நின்றது இப்பாசுரம்


    3022.   
    மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
    முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 
    பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
    இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   

        விளக்கம்  


    • உரை:1

      மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே! 

      உரை:2

      பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தையறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார். “மறையினுள் நின்ற” என்றாவது “நால்வேதத்துள் நின்ற” என்றாவது சொன்னால் போதுமே; ‘மறையாய நால்வேதம்’ என்பானேன்? என்னில்; கேண்மின்; வேதம் என்றாலும் மறை என்றாலும் பர்யாயம் எனினும் அர்த்தஸக்தியில் வாசியுண்டு; வேதம் என்றால் விளங்கக்காட்டுவது என்று பொருள்;மறை என்றால் மறைத்துக் காட்டுவது என்று பொருள். ஆஸ்திகராயிருப்பாருக்குத் தன் அர்த்தங்களை வெளியிட்டு காட்டுதலால் வேதம்; பாஹ்யராய் நாஸ்திகரா யிருப்பார்க்கு மறைத்தலால் மறை; ஆகவே, மறையாய நால்வேதமென்றது தகுதியே. “துஷ்ப்ரக்ருதிகளுக்கு மறையாய் ஸத்ப்ரக்ருதிகளுக்கு வேதமாயிருக்கும்” என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.


    3023.   
    வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
    சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*
    துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)

        விளக்கம்  


    • உரை:1

      மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

      உரை:2

      வியப்பாய வியப்பில்லா = வேறொரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படத்தக்கவையெல்லாம் இங்கே கண்டால் ‘இது என்ன ஆச்சரியம்’ என்று உபேக்ஷிக்கும்படியாயிருக்குமென்க. உலகத்தில் ஒருவனுக்கு நாலு பசுக்கள் கொடுத்தானென்றால் அது ஆச்சரியப்படத்தக்கதாயிருக்கும்; பெருமாள் ஒருவனுக்குப் பதினாயிரம் பிசுக்கள் கொடுத்தாரென்றாலும் ஆச்சரியப்படுதற்கு விஷயமில்லையே. ஸ்ரீராமாயண- அயோத்யா காண்டத்தில் முப்பத்திரண்டாம் ஸர்க்கத்திற் கூறப்பட்டுள்ள த்ரிஜட வ்ருத்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கதாகும். மெய்ஞ்ஞான வேதியனை = உள்ளது உள்ளபடியே பிரதிபாதிக்குமதான வேதத்தினால் போற்றப்படுபவன் என்க. சாயப்புகழார் = ஜயம் என்ற வடசொல் சயமெனத் திரிந்தது; ஸம்ஸாரத்தை வென்று அதனால் புகழ்பெற்றவர்கள் (விரக்தர்கள்) பலர் வாழுமிடமாம் திருக்குருகூர்.


    3024.   
    முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
    அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
    வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
    எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)

        விளக்கம்  


    • உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார். எம்முகில் வண்ணனே: = எம்பெருமான் உலகங்களைப் படைத்ததெல்லாம் ஆழ்வார் தமக்காகவே யென்று கொண்டிருக்கின்றமை எம் என்பதனால் தொனிக்கும். முகிலுக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம் நிறத்தினால் மாத்திரமன்று; தன்மைகள் பலவற்றாலுங் காண்க. பின்னடிகளின் கருத்து:- உன்னைப் பிரிந்து தரிக்க கில்லாமல் செல்லுகிற நாளில், பிரிந்து நோவுபடுகைக்கீடான பாவங்களை வேரறுத்து உன்னடி சேர்ந்து உய்வது


    3025.   
    வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
    பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*
    தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
    நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?

        விளக்கம்  


    • ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார். இங்கே ஈட்டின அவதாரிகை பரமபோக்யம். அதாவது- “உம்முடைய உடம்புகொண்டு நாமிருந்தவிடத்தே வந்துகிட்ட மாட்டிற்றிலீராகில் நம்முடம்பைக் கொண்டு நீரிருந்தவிடத்தே வந்துகிட்டினோமே; வாமந வேஷத்தைக் கொண்டு மஹாபலி முன்னே வந்து நின்றோமே; அங்கே கிட்ட மாட்டிற்றிலீரோவென்ற அதுக்கும் தப்பினேனென்கிறார்” என்று. மிகக் கடினமான பூமிப்பரப்பை யெல்லாம் மெல்லிய திருவடிகளாலே அளந்து, அந்தச்செயலாலே என்னை யீடுபடுத்திக்கொண்ட வாமன மூர்த்தியே! யாவரையும் மயக்க நீ வைத்த மூலப்ரக்ருதியிலே தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே பலவகைப்பட்ட பிறப்புக்களில் சிக்கிக்கொண்டே கிடக்கிற நான், ஸர்வேஸ்வரனான உன்னாலும் அறுக்க முடியாதபடியான பாபத் தொடர்ச்சிகளை முதலிலே யறுத்து உன்னுடைய திருவடிகளைச் சேர்த்து நான் நிலைபெருவது என்றைக்கோ என்றாராயிற்று. இப்பாசுரத்தின் இனிமையே வடிவெடுத்த ஆறாயிரப்படி காண்மின்:- “இப்படி நீ தந்த உபகரணத்தைக்கொண்டு பின்னையும் நான் ஸம்ஸார ஸமுத்திரத்திலே போய்விழுமளவில் என்னை யெடுத்தருளுகைக்காக இங்கே புகுந்தருளினாய்; பின்னையும் உனக்கெட்டாததொருபடி நான் அந்த ஸம்ஸாரமாகிற கடலினுள்ளே போய் அழுந்தா நின்றேன். இப்படிக் கடலிலே யழுந்துகைக்கு ஹேதுவாய் அநாதிஸித்தமாய் மஹாபலவத்தாயிருந்த என்னுடைய பரப பரம்பரைகளை முதலரிந்து உன்னுடைய நிரவதிக போக்யமான திருவடிகளை நான் சேர்ந்து பிள்ளை யொருகாலமும் பிரியாதே நிற்பது என்றோவென்கிறார்.


    3026.   
    கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
    எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*
    பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
    சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    

        விளக்கம்  


    • ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார். பாரதப்போரில் பஞ்சபாண்டவர்களே எதிரிகளை முடித்தார்கள் என்று அவிவேசிகள் நினைப்பார்கள்; அவர்களை வியாஜ மாத்திரமாக வைத்துக்கொண்டு கண்ணபிரானே பூமியின் பாரங்களைத் தொலைத்தருளினன் என்பது உண்மை; அப்போது கண்ணபிரானது திருக்கையில் ஒரு கோல் இருந்தது; அதுதான் துரியோதனாதியரைக் கொலை செய்யக் கருவியாயிருந்தது, அதனை ஆழ்வார் இங்குக் “கொல்லாமாக் கோல்” என்கிறார். கொல்லுகைக்குக் கருவியாக அல்லாமல் குதிரையை நடத்தக் கடவதான முட்கோலாலே கொலை செய்ததாக அருளிச் செய்கின்றார். இங்கு உணர வேண்டிய விஷயமாவது:- கண்ணபிரான் பள்ளிகொண்டிருக்கும்போது துரியோதனனும் அர்ஜுநனுமாகக் கடைத்துணை வேண்டிவந்தார்கள். துரியோதனன் தான் மஹாப்ரபுவாகையாலே திருமுடிப் பக்கத்திலே யிருந்தான். அர்ஜுநன் திருவடி வாரத்திலேயிருந்தான். கண்ணபிரான் பள்ளியுணர்ந்து எழுந்தவுடனே திருவடி வாரத்தில் அர்ஜுநனை முந்துறு முன்னம் கடாக்ஷிக்கும்படியாயிற்று. பிறகு துரியோதனனையும் பார்த்தான். இருவரையும் குசலப்ரச்நம் பண்ணிவிட்டு ‘நீங்கள் இங்கு வந்த காரியம் என்?, என்று கேட்கையில், துரியோதனன் ‘நான் முன்னே வந்தேன்; என் காரியமே முக்கியமாகச் செய்யவேணும்’ என்ன; அது கேட்ட கண்ணபிரான் ‘நீ முன்னம் வந்திருக்கலாம்; ஆனாலும் நான் முன்னம் பார்த்தது அர்ஜுனனையே; அது கிடக்கட்டும்; உங்களுடைய அபேக்ஷிதம் இன்னதென்று சொல்லிக் கொள்ளுங்கள்’ என்ன; ‘இப்போது நடக்கப்போகிற யுத்தத்திற்குத் துணை செய்ய வேண்டும்’.


    3027.   
    சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
    ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*
    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
    வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  

        விளக்கம்  


    • பெருமானே! அவதாரங்களுக்குத் தப்பினேன் என்பது மாத்திரமேயோ? எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ வ்யாபியாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே பார்த்தருள வேணுமென்கிறார். ஸமஸ்த சேதநரையும் உன் பக்கலிலே சூழ்ந்துக் கொள்ளவற்றான அத்யந்த விலக்ஷ்ண ஜ்ஞானத்தையுடையையாய், ஸங்கோச விகாஸங்களொன்று மின்றியே என்றைக்கும் எவ்விடத்தும் வியாபித்து என்னை அடிமை கொள்வதற்காக விருக்கிறவனே! உன் திருவடிகளொழியப் புறம்புண்டான விஷயங்களில் நசையெல்லாமற்று உன்றன் பொன்னடிகளில் பரம போக்யமான கைங்கரியத்தை நான்பெறும்படி இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும் செய்தருளவேணும் என்கிறார். சூழ்ச்சி ஞானச் சுடரொலியாகி என்றது ஸாபிப்ராயம்; எல்லாரையும் சூழ்த்துக் கொள்ளவற்றான உன்னுடைய திய்வ ஜ்ஞானமும் என்னைச் சூழ்ந்துக்கொள்ளமாட்டதொழிந்ததே! என்றபடி. என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி யெங்கணும் நிறைந்த வெந்தாய்! என்றதும் ஸாபிப்ராயம்; எல்லா விடத்திலுமுண்டான எல்லாவற்றிலும் பூர்ணமாக வியாபித்திருந்தும் என்னை அகப்படுத்திக் கொள்ளமாட்டாதொழிந்தாயே! என்றபடி.


    3028.   
    வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
    சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 
    கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
    எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   

        விளக்கம்  


    • (வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார். வந்தாய்போலே வந்தும் என்றது ப்ரஹ்லாத கஜேந்த்ராதிகளுக்கு வந்தாப்போலேயாகிலும் வந்து என்றபடி. ஆனைக்கு அருள் செய்ததுபோலே எனக்கும் அருள் செய்து என் ஆர்த்தியைப் பரிஹரிக்கின்றிலை; இப்படி உதவாமையாகிறவிதுவே நித்தியமாய்ச் சொல்லுமாகில், நான் என்னுடைய முயற்சியினால் உன்னை வந்து சேருகையென்று ஒரு பொருளுண்டோ? இனி உன்னுடைய வடிவழகைக் காணப்பெறாதே இழந்து போமித்தனையன்றோ! என்றாறாயிற்று


    3029.   
    கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
    அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
    பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
    நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?

        விளக்கம்  


    • பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார். கிற்பன்கில்லேன் என்றிலன் = கிற்பன் என்றிலன், கில்லேன் என்றிலன் என்று அந்வயிப்பது. பெரியோர்கள் சில காரியங்களைச் செய்யவேண்டுபடியாக விதிப்பர்கள்; சில காரியங்களைச் செய்ய வேண்டாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டடாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களை ‘அப்படிச் செய்கிறேன்’ என்று சொல்லுவதும்,செய்ய வேண்டாவென்று மறுக்கும் காரியங்களை ‘செய்வதில்லை’ என்பதும் சாஸ்த்ரவச்யர்களுக்குக் கடமையாகும். இந்தக் கடமையை நான் தவறிவிட்டேனென்கிறார் இங்கு முதலடியில். தவ்ம் மே என்று எம்பெருமான் சொன்னால் ஆமாம் என்று நான் இசைந்திருந்ததுமில்லை, ‘அஹம் மே’ என்று சொல்லாமலிருந்ததுமில்லை என்றபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட ஓர் ஆயாஸமின்றிக்கே, பேற்றில் வந்தால் அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாயிருக்கும்; அதுக்கீடாக ஒன்றைச் செய்யவல்லீரே? என்றால், ஓம், அப்படிச் செய்கிறேன் என்றிலன். “இதர விஷயப்ராவண்யமாகிறது- ஆயாஸம் கனத்துப் பேற்றில் ஒன்று இன்றிக்கேயிருக்கும். அத்தைத் தவிர வல்லீரே?” என்றால், ஒம், தவிருகிறேன் என்றினை.”- என்று.


    3030.   
    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
    மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*
    எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
    மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதையாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார். “எஞ்ஞான்று நாம்” என்றவிடத்து, ‘எஞ்ஞான்று’ என்றும் பிரிக்கலாம். ‘எஞ்ஞான்றும்’ என்றும் பிரிக்கலாம். பூருவாசாரியர்களுக்கு இரண்டுவகையும் உடன்பாடே ‘எஞ்ஞான்று’ என்று பிரித்தால் ‘மேவும்’ என்ற வினைமுற்றோடே அந்வயிக்கும். எஞ்ஞான்று மேவுதும்- என்றைக்கு அடைவோம்? என்றைக்கும் அடைய வழியில்லையென்பது குறிப்பு. ‘எஞ்ஞான்றும்’ என்று கொண்டால் பக்கத்திலேயே அதற்கு அந்வயமாகும். எப்போது மிரங்கி என்றவாறு. இப்பக்ஷரத்தில் ‘மேவுததுமே என்றவிடத்து ஏகாரம் எதிர்மறையாய் மேவமாட்டோமென்றவாறாம்.


    3031.   
    மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
    ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*
    பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
    கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?

        விளக்கம்  


    • எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார். மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் = நாம் செய்கிற தீவினைகளை நல்வினைகளினால் போக்கிக் கொள்ள வேணுமென்பது நூற்கொள்கை; நானோ பாவங்களை மாத்திரஞ் செய்தேனேயன்றி அவற்றைப் போக்கவல்ல நற்கிரிசை யொன்றுஞ் செய்திலேன். எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்புப் போலவும், இவ்வாத்மாவோடு பிரிக்க முடியாதபடி பொருந்தியிருப்பனவும் பலபல துன்பங்களை வினைப்பனவுமான பாபங்களை விஹிதகர்மாநுஷ்டானத்தாலே போக்கிக் கொண்டேனில்லை.


    3032.   
    கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
    பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*
    மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
    தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  

        விளக்கம்  


    • ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார். பிரானே! நான் இருக்குமிடமோ ஸம்ஸாரம்; இதுவோ தூறு மண்டிக்கிடக்கிறது. இங்கிருந்து கிளம்ப வழியில்லை. இருந்தவிடத்தில் நின்றும் பலகாலும் கூப்பிடாநின்றேன். நீ ஆபத்துக்கு உதவுபவனல்லையாகில் நான் இவ்வளவு கூப்பீடு செய்யமாட்டேன்; திருவாய்ப்பாடியில் பசுக்களெல்லாம் பெரு மழையில் நோவு பட்டக்காலத்தில் ஒன்றின்மேல் ஒரு துளி விழாதபடி ஒரு மலையைத் தூக்கியெடுத்து ரக்ஷித்தாய்* அங்ஙனம் ஒரு ஊர்க்கு உதவின மாத்திரமன்றிக்கே எங்குமொக்க எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தருளினாய்; அன்று நான் எந்த மூலையிலே கிடந்தேனோ? அப்படி ஸர்வஸ்வதாகம் பண்ணின காலத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்புகுகிறேன்? அஸாத்யமான விஷயத்தில் நாம் நசை பண்ணுவது வீண் என்று தெரிந்தும் வாளா இருக்க மாட்டிற்றிலேன்; கூப்பீடே போதுபோக்காக விருக்கின்றேன் என்றாராயிற்று. கொடுவினைத்தூற்றுள் நின்று” என்றவிடத்திற்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- கூப்பீடு கேட்டு இரங்கியெடுப்பதாக ஈச்வரன் கை நீட்டினால், நீட்டினகை வாங்கவொண்ணாத நிலத்திலேயிற்றுக் கூப்பிடுவது” பாவியேன் என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை:- ஸ்ரீஜநகராஜன் திருமகள் ஸ்ரீவால்மீகிபகவானாஸ்ரமபரிஸரத்திலே கூப்பிட்டாப்போலே, சிலர் ஐயோவென்னக் கூப்பிடுகிறேனோ?’


    3033.   
    தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
    அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*
    கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார். இப்பாட்டில் முன்னடிகட்கு இரண்டுவகையான நிர்வாஹம் :- இவ்வுயிர்விட்டு நீங்குங்காலத்தில் யமபடர்கள் வந்து கிட்டிப் பாசத்தை வீசினால் அப்போது உண்டாகும் தயரம் பொறுக்கவொண்ணாததாயிருக்கும்; அந்தத்துயரம் நமக்கு நேரவொண்ணாதபடி எம்பெருமான் தன் காட்சியைத் தந்தருளின படியாலே தரிப்புப்பெறலாயிற்று- என்பது ஒரு நிர்வாஹம். மற்றொரு நிர்வாஹமாவது - இங்கு யமதூதர்களால் நேரும் நலிவைச்சொன்னது. அந்தத் துயரத்தோடு ஒத்ததான பகவத் விச்லேஷ வ்யஸநத்தைச் சொன்னவாறு; அது தொலையும்படி எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றே னென்கிறார் என்பதாம். ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “அத்தோடு ஸஜாதீயமான அல்லல் என்று எம்பார் அருளிச்செய்வது. (அதாவது) அவ்வோபாதி க்லேசம் போருமாயிற்று பகவத் விச்லேஷத்தால் வருமது இவர்க்கு. அன்றிக்கே, பகவத் அலாபமேயானபின்பு யமசந்யதையும் வந்ததே யன்றோவென்று அந்த யமவச்யதை போம்படியாக என்று ஆண்டான் நிர்வஹிக்கும்படி.”


    3034.   
    உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
    குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
    செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
    உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)      

        விளக்கம்  


    • இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். “உயிர்களெல்லா வுலகமுமுடையவனை” என்று இப்போது சொல்லுவதானது எம்பெருமானுக்கு நித்யஸித்தமாகவுள்ளபடியைச் சொல்லுகின்றதன்று; ஆழ்வாரைத் தரிக்கச் செய்ததனால் எம்பெருமானுக்கு விலக்ஷணமானவொரு புகர் உடையவனாய் ஆகப்பெற்றதுபோல் விளக்கமுற்றான்; அவ்விளக்கத்தை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்கிறபடி. இங்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் காண்மின்; “இவர் தரித்தவாறே அவன் எல்லாவுயிர்களையும் எல்லா லோகங்களையும் உடையவனானான்; ஸர்வரக்ஷகனுக்கு ரக்ஷ்யத்திலே ஒன்று குறையிலும் ரக்ஷகத்வம் குறைபட்டதாமிறே.” குயில்கொள் சோலை = இதுவரையில் ஆழ்வார் உறாவிக்கிடந்தமையால் அங்குள்ள சோலையிற் குணில்களும் உறாவிக்கிடந்தன; இவர் தரித்தவாறே, திருநகரியும் தரித்து அங்குண்டான சோலைகளும் தரித்து அவற்றிலுள்ள குயில்களும் அழகாகக் கூவத்தொடங்கினவென்க. செயிர் - குற்றம்; சொற்குற்றம் பொருட்குற்றம் முதலியன இல்லாத என்றபடி. இப்பத்துக் காசரமே ப்ரக்ருஸம்பந்தத்தைப் போக்குமென்றது - எம்பெருமான் திருவுள்ளத்தில் உகப்பையுண்டுபண்ணி அவ்வழியாலே ஸமீஹிதஸித்தியைப் பெறுவிக்குமென்றபடி.


    3849.   
    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-
    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 

        விளக்கம்  


    • உயிர்காத்து ஆட்செய்மின் - நீங்கள் கவிபாட வேணுமானால் முன்னம் நீங்கள் இருந்தாக வேணுமே; இத்தலையுடானாலன்றோ அத்தலைக்கு மங்களா சாஸனம் பண்ண முடியும். ஆகவே முன்னம் உங்களை நோக்கிக்கோண்டு கவிபாடப் பாருங்கோள் என்கிறார். செஞ்சொற்கவிகள்! என்ற விளிக்குச்சேர “உயிர்காத்துக் கவிபாடுமின்* என்ன வேண்டியிருக்க ஆட்செய்மின் என்கிறது - கவிபாடுகையும் வாசிகமான ஆட்செய்கையாகையாலே “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்று பண்டே சொல்லி வைத்திருக்கிறாராழ்வார். எம்பெருமான் வாசிக கைங்காரியமாகிற அடிமையைக் கொள்வான் போலப் புகுந்து பின்பு நீர்மைக் குணத்தினால் உயிரைக் கொள்ளை கொள்ளுமவனாதலால் அந்த நீர்மையில் உள்குழையாதே வலிய நெஞ்சராயிருங்கோ ளென்கிறாராயிற்று. சிற்றாள் கொண்டான் என்கிற ஸ்வாமி பணிப்பராம் - “ஆழங்காலிலே யிழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாபோலே ஆழ்வாரும் கொண்டைக்கோல் நாட்டுகிறார்” என்று. ஆழ்வார் இப்படியருளிச்செய்வதன் பரமதாற்பாரியமென்ன வென்றால், எம்பெருமானுடைய மற்றைக் குணங்களெல்லாவற்றிலுங் காட்டில் சீல குண மொன்று மிகவும் ஆற்றவொண்ணாதது, இதற்குத் தப்பிப்பிழைப்பது அர்து - என்பதேயாம். அக்குணத்தின் சீர்மையையெடுத்துக் காட்டுகிற ளுக்திசாதுரியம் “உயிர்காத்தாட்செய்மின்” என்பது. இன்னாருயிரைக் காத்து ஆட்செய்யும்படி வ்யக்தமாகச் சொல்லாமையாலே, எம்பெருமானுயிரைக் காத்து ஆட்செய்மின் என்பதாகவுங் கொள்ளலாமென்று உடையவர் அருளிச் செய்வராம். அதன் கருத்து யாதெனில், அவன் மேல்விழவிழத் தாங்கள் இறாய்த்தால் அவனை யிழக்க நேருமே; அப்படி யாகாமே அவருயிரைக் காவுங்கோள் என்பதாம். இப்பொருளிளல் சுவை யொன்று மில்லையேயென்று சிலர்மயங்குவர். கேண்மின்; என்னுடம்பில் அவன் சாபலம்காட்ட, அதை நான் தடுக்க, பின்னையும் அவன்மேல்விழ, பிரானே! உனக்குப் பாரதந்திரியம் ஜீவிக்கவேணுமேயென்று நான் விலங்கிட்டாற்போல் வார்த்தை சொல்ல் அதன்மேல் அவன் கைகூப்பி நிற்க, அந்த சீல குணத்திலே உருகும்படியான நிலைமை எனக்கு ஏற்பட்டது; நீங்களும் என்னைப்போல் அவனை விலக்கத் தொடங்கினீர்களாகில் அவனை யிழக்கவே நேரும்; பின்னை யாரைக் குறித்துக் கவிபாடுவது? ஆகவே அவருயிரைக் காத்து ஆட்செய்மின்கள்; அவன் விரும்பிய போகத்தை நான்தான் குலைத்தொழிந்தேனாகிலும் நீங்களாவது குலைக்காதபடி அவன் வழியே யொழுகி அநுபவிக்கப்பாருங்கள் - என்பதான சுவைக்கருத்து உணர்க. இவ்விஷயத்திலே தாமிழந்து அனர்த்தப்பட்ட படியை யருளிச்செய்கிறார் மேல் திருமாலிருஞ் சோலை வஞ்சக்கள்வனென்று தொடங்கி, தான் சேஷியாகவும் நான் சேஷபூதனாகவுமிருக்கிற இம்முறையை நிலைநாட்டுவதற்காக வருவான்போல வந்து, தன்னுடைய கள்ளச் செயல்வல்லமையினால் அத்தலையித்தலையாம்படி பண்ணி என்னைத் தன் தலைமேல் தூக்கிக்கொண்டு உலாவுவானாயிருந்தான். இப்படிப் பட்ட வஞ்சகக் கள்வனவன் என்பதை நான் பண்டே யறிந்துவதை;துங்கூட வலையில் சிக்கவேண்டியதாயிற்று; அவன் மாமாயனாகையாலே, மாயப்பொடி தூவி மயக்கிவிடுகிறானே! என் செய்வேனென்கிறார்போலும். ‘பெய்யுமா முகில்போல் வண்ணா! உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலே!” என்றார்களே இவனுடைய வஞ்சக்கள்வ மாயங்களில் பழகின கோபிகளும், அறிந்தும் தப்பவொண்ணாமை கூறினபடி மாமாய னென்று.


    3850.   
    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-
    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.

        விளக்கம்  


    • ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில். பாட்டின் முடிவிலேயிருக்கிற “என்னை முற்றுமுயிருண்டு” என்பதைப் பாட்டினடியிலே கொண்டு கூட்டிக்கொள்வது. என்னைமுற்றுமுயிருண்டு தானேயாகிநிறைந்து - என்னை ஸர்வப்ராகாரத்தாலும் பாரிபூர்ணமாக புஸ்ரீரித்துத் தானே பாரிபூர்ணனானான்; இருதலை ஒன்று சேர்ந்து பாரிமாறப் புகுந்து ஒரு தலையை ஒன்றுமில்லையாக்கி ஒரு தலையை பூர்ணமாக்கிக் கொள்வது நியாயமோ? எல்லாவுலகு முயிரும் தானேயாய் - அவன்தான் ஸர்வேச்வரனானதும் என்னை முற்றுமுயிருண்டபிறகே. உண்மையில் எம்பெருமான் ஆழ்வார்திருவாக்கில் புகுந்து புறப்படவில்லையாகில் அவன் ஸர்வேச்வரனென்று பேர்பெற முடியாதே. குதர்க்கிகளான துர்வாதிகள் தாம் தாம் கொண்ட தெய்வங்களைப் பரதெய்வமாகப் பேசி நிறுத்த, ஸ்ரீமந்நாராயணன் நான் தெய்வமல்லேன்’ என்று பிற்காலிட்டே கிடந்தான்; ஆழ்வார் திருவவதாரித்து *திண்ணன் வீடு* ஒன்றுந் தேவு முதலான திருவாய்மொழிகளில் எம்பெருமானே பரதத்துவ மென்பதைக் கல்வெட்டாக ஸ்தாபித்தருளினபடியாலே, இதற்குப் பிறகே எம்பெருமான் தன்னை ஸர்வேச்வரனாகச் சொல்லிக்கொண்டு வெளியேறியுலாவ முகம்பெற்றான். ஆகவே “தானே யாகி நிறைந்து எல்லாவுலகுமுயிருந்தானேயாய்” என்றது பொருந்தும். யானென்பான் தானேயாகி - நானென்று நாமமாத்திரமான நான் அவன்தானென்னலாம் படியானேன். அதாவது, பரதந்திரரான தம்மை அவன் ஸ்வாந்திரராக்கி, இவாரிடத்திலே தான் பாரதந்திரியம் வஹிக்கலானான் என்கை. இங்கே ஈடு :- “தம்மைத் தடவிப்பார்த்த விடத்தில் காண்கிறிலர்; அவன் தலையாலே சுமக்கக் காண்கிறவித்தனை” என்று. தன்னைத்தானே துதித்து - எம்பெருமான் துதிக்கு விஷயபூதன் மாத்திரமல்லன்; ஸ்துதிக்குக் கர்த்தாவும் அவனேயாயிற்று. *குருகூர்ச்சடகோபன் சொல்* என்று நான் சொன்னதாகச் சொல்லிவைத்ததும் அவனேயாயிற்று. அவன் யாவனென்னில்; தன்னுடைய அநுபவம் எனக்குப் பரமபோக்யமாவதற்காக எனக்குத் தேனாகவும் பாலாகவும் கன்னலாகவும் அமுதமாகவும் நின்ற திருமாலிருஞ் கோலைக்கோன். இப்படி நான் ரஸித்துப் பருகவேண்டிய அமுதம் என்னை முற்றுமுண்டதே!


    3851.   
    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*
    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?

        விளக்கம்  


    • எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார். கீழ்ப்பாட்டில் “என்னை முற்று முயிருண்டே” என்று சொல்லியிருக்கவும் மீண்டும் “என்னை முற்றுமுயிருண்டு” என்றருளிச் செய்கிறார்; இஃது அந்தாதித் தொடைக்காக அருளிச்செய்வதன்று. உண்டு என்றொரு சொல்லையிட்டுத் தொடங்கினாலும் அந்தாதித் தொடைக்கு அமையுமே. மறுபடியும் “என்னை முற்றுமுயிருண்டு” என்கையாலே, ஆழ்வாரை யநுபவிக்கை எம்பெருமாளுக்குப் பெறாப்பேறு பெற்றதாயிருக்கையாலே, அதையறிந்துகொண்டு தெகுடாடிச் சொல்லுகிறபடி. இங்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார் - “*யஸ்ய ஸா ஜநகாத்மஜா - அப்ரமேயம் ஹி தத் தேஜ:* என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவருயிரை எங்கும் புக்கு அநுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம்” என்று. இதன் கருத்தாவது - எம்பெருமாளுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை யநுபவிப்பதனால் உண்டு என்பதாம். என் மாயவாக்கை - என்னுடைய ஆத்ம வஸ்துவை யநுபவித்து அவ்வளவோடே பரியாப்தி பெறுபவனாயிருந்தானோ? *அழுக்குடம்பு என்றும் *பொல்லா வாக்கை யென்றும் சொல்லுகிறபடியே ஹெயமென்று இவர்தாம் அருவருத்து இகழா நிற்கச் செய்தே அவன் இதில் பரமபோக்யதாபுத்திபண்ணி மேல்விழா நின்றான். என்னை முற்றும் தானேயாய் - இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான தேஹத்திலும் புக்கு வியாபிக்கையாலே தானே யென்னத் தட்டில்லை. நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும், என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காணமுடியாததாகி அவனேயென்ன நின்றதாயிற்று. ஆக இப்படியாயிரா நின்றமாயவம்மான் விரும்பி வர்த்திக்குமிடமான திருமாலிருஞ்சோலை மலையுள்ளதிக்கை நோக்கிக் கைகூப்பப் பெற்றேன்; அதாவது, அவனை யுகந்து, அவ்வழியாலே அவன் விருமபினதேசத்தை யுகந்து, அத்தோடு ஸம்பந்தமுடைய திக்கை யுகந்து இப்படி ஸம்பந்தி ஸம்பந்திகள் வரையிலும் உகப்பு பெருகிச் செல்லும்படி அவகாஹித்தேன். இப்படிப்பட்ட நான், இன்னம் போவேனே கொலோ!-இத்திருமாலிருஞ் சோலையுள்;ள திசைக்கு அப்பால் வேறொரு போக்கிடமுடையேனோ?


    3852.   
    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*
    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.

        விளக்கம்  


    • என்கொலம்மாள் திருவருள்கள்! -மிகப் பெரியார்களுக்கு ஏதேனும் அந்யதாஜ்ஞாந விபாரிதஜ்ஞான முண்டானால் சிறியர்கள் அவர்களை நோக்கி ‘தேவாரிர் இப்படி ப்ரமிக்கலாமா? என்று கேட்கலாகாது; அவ்விதமாகவே இங்கு என்ன க்ருபை!’ என்று உபசார வழக்காவே சொல்லவேணும்; அவ்விதமாகவே இங்கு ‘என்கொலம்மான் திருவருள்கள்.’ என்கிறது. இப்படியும் அஸ்தாநே ப்ரமிக்கலாமோ? என்பது இங்குக் கருத்தாகும். எம்பெருமான் அவாப்த ஸம்ஸ்தகாமனா யிருந்துவைத்து ஒன்றும் பெறாதாரைப்போலே இப்படி கிடந்து படுகிறனே! இது என்ன மருள்!ஒன்றும் என்று சொல்லவேண்டுமிடத்து என்கொலம்மான் திருவருள்களென்கிறாராயிற்று. ஸர்வேச்வரனுக்கு நிரதிஷ்டநப்ரமமுண்டாமாகாதே” என்பது ஈட்டு ஸ்ரீஸக்தி. உலகில் ஒருவன் கயிற்றைப் பார்த்து ஸரிப்பமென்று ப்ரமிக்கிறான்; முத்;துச் சிப்பியைப் பார்த்து வெள்ளியென்று ப்ரமிக்கிறான்; ஏதோவொரு ஆலம் பனனிருந்து ப்ரமமுண்டாகிறதேயன்றி ஒரு ஆலமபனமு மின்றிககேப்தமமுண்டாகும் போலும் என்கிறாராம் ஆழ்வார். “நன்கென்எடரலும் கைவிடான” என்பதை நோக்கி இது அருளிச்செய்தபடி. பெருக்கனாயிருக்கும் ராஜபுத்திரன் ஒரு நீசமான என்னுடம்பிலே வியாமோஹம் பண்ணித் திரிகிறனே! இது என்ன ப்ரமம்! என்றவாறு. ஞாலத்தூடே நடந்துழக்கி - பூமியெங்கும் உலாவித் திரிந்து என்பது சப்தார்த்தம். திரிவிக்கிரமனாகி உலகளக்கிறதென்னும் வியாஜத்தாலே எங்கும் வியாபித்து ஆழ்வாரை யநுபவிக்கைக்கு ஏகாந்த ஸ்தலமேதோவென்று ஆராய்ந்து தெற்குத் திருமலை வாய்ப்பான இடமாகக் கண்டபடியாலே அங்கே நின்றருளினானாயிற்று. (நங்கள் குன்றம் கவிடான்-நன்கென்எடலம் கைவிடான்) “அங்குத்தைக் வாஸம் ஸாதனம், இங்குத்தை வாஸம்ஸாத்யம்” எ;று ஸ்ரீவசனபூக்ஷணத்திற் பணித்தபடியே திருமலையில் வாஸத்தை உபாயமாகக் கொண்டும் ஆழ்வார் திருமேனியிலுறைகையை உபேயமாகக்கொண்டுமிரா நின்றான். (நண்ணாவசுரா நலியவே) இப்படி யிருக்கிற விருப்பிலே விரோதிவர்க்கும் தன்னடையே தொலைந்தாயதயிற்று. இதன் கருத்து யாதெனில், எம்பெருமாளுக்கு திவ்யமங்கள் விக்ரஹமில்லை, திருக்கல்யாணகுணமில்லை யென்றிப்படி பிதற்றும் ஆஸூரவர்க்கலெம்மாம் திருமாலிருஞ் சோலைமலையில் எம்பெருமான் நின்ற நிலைகண்டவாறே தொரைந்ததாமே; அப்படியே, அப்பெருமான் ஆழ்வார் திருமேனியிற் பண்ணும் வியாமோஹம் இப்படிப்பட்டதென்றறிந்தாவறே ஆழ்வார்டத்தில் குறைகளை யெண்ணுகிற ஆஸூரவர்களெல்லாம் தொரைந்தாதாமே என்றவாறு.


    3853.   
    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.

        விளக்கம்  


    • “நண்ணாவசுரர்நலிவெய்த” என்றவிடத்து ஈட்டில் அருளிச்செய்வது பாரீர்- “அவ்யபதேச்யனுக்கு அனந்தரத்திலவன், தமப்பன் செய்ததைக்கேட்டு இவனென் செய்தானானான்! என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம் குலைந்ததோ? என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம குலைந்ததோ? திருவாய்மொழி யென்னும் ஸ்ரீராமாயணமென்றும் வலிநன இரண்டு ப்ரந்தங்களுண்டாயிருக்கக்-என்றானாயிற்று. இப்படி உகவாதார் நெஞ்சுளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து -என்று. இதனைச் சிறிது விவாரிப்போம். இங்கு அவ்யபதேச்யனென்றது க்ர்மிகண்ட சோழனை. அவருடைய பெயரை வாயாலே யெடுத்துரைக்கக் கூசி அவ்யபதேச்யனென்றது. அவருக்கு அனந்தரத்திலவன் -அவருடைய மகன். அவன் தகப்பன் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திற்கு விரோத மாகச் செய்த அதர்க்கணச் செயல்களகை; கேள்விப்பட்டானாம்; பெருமாள் கோவிலே இடித்துப்போட்டானென்று கேள்விப்பட்டு ஐயோ! ஒரு கோவிலை இடித்துப்பபோட்டகனால் என்னாகும்! இதனால் தர்சனம் குலைந்ததாமோ? திருவாய்மொழியும் ஸ்ரீராமாயணமுமாகிய இரண்டு பிரபந்தங்களன்றோ ஸ்ரீ வைஷ்வணவ தாரிசனத்திற்குக் கல்மதில்களாயிருப்பவை; அவற்றை யசைக்க முடியுமோ ஒருவர்க்கு? என்றானாம் கிர்மிகண்ட சோழனது மகன். இதனால், திருவாய்மொழியானது ஆஸூரப்ரக்ருதிகள் மண்ணுண்ணும்படியாகவும் தேவப்ரக்ருதிகள வாழ்ந்து போம்படியாகவும் அவதாரித்தது என்னுமிடம் ஒரு சிறுவன் வாயினாலும் வெளிவந்ததென்று காட்டினபடி. எண்ணாதனக ளெண்ணும் நன்முனிவாரின்பம் தலைசிறப்ப-எண்ண முடியாத வற்றை யெண்ணுகின்றவர்களான ந் முனிவர்கள் மஹானந்தம் பெறுமதபடியாகத் திருவாய்மொழி அவதாரித்ததாம். எண்ணாதவற்றை யெண்ணகைவாயது என்னென்னில்; திருவாய்மொழி அவதாரிப்பதிற்கு முன்பு பல மஹானகள சபைகூட்டி ‘எம்பெருமானுடைய ஸ்வரூபகுண விக்ரஹ விபூதிகளை யெல்லாம பாரிபூப்த்தியாகப் பேசவல்ல பிரபந்தம் ஒன்றுகூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தமொன்று அவதாரிக்க வேணுமென்று மாமெல்லருங்கூடி எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேணும்’ என்று பேசி யெழுந்துபோனார்கள். அவர்களே திருவாய்மொழி அவதாரித்த பின்பு மறுபடியும் ஒரு மஹாஸபை கூட்டி ‘எம்பெருமாளுக்கு இன்னமும் குணவிக்ரஹ விபூதிகள் உண்டாகவேணும்’ என்றார்களாம். உள்ள குணவிக்ரஹ விபூதிகள் யெல்லாம திருவாய்மொழியிற் பேசிமுடித்து விட்டாராழிவார்- என்பது இதன் கருத்து. இது தான் எண்ணாதனகளெண்ணுகையாம. இன்பந்தலைச்சிறப்ப என்றவிடத்து ஈட்டில் -திருவாய் மொழியவதாரித்தபின்பு ‘அவருக்கு குணவிபூதிகள போராது’ என்றிருந்த விழவுதீற்ந்து அத்;தால் நிரதிசயாநந்திக்ளாக.” என்று ஸ்ரீஸூக்தி அச்சிடப்பட்டுள்ளது. எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போராது என்றிருந்த இழவு திருவாய்மொழி யவதாரித்தபின்பு தீர்ந்தாகச் சொல்லுவது பொருந்துகிறநதா? என்று பார்க்கவேணும். திருவாய்மொழி அவதாரிப்பதற்கு மிலர்; எம்பெருமாளுக்குள்ள குணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதாரிக்கவிலலையே! என்றுதான் இழவுப்டிருந்தார்கள் யாருமிலர். எம்பெருமாளுக்குள்ள கணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதாரிக்கவில்லையே! என்று தான் இழவுப்படடிருந்தார்கள். திருவாய்மொழி அவதாரித்தபின்பு அந்த இழவு தீற்ந்து, எம்பெருமானு;ககு குணவிக்ரஹ விபூதிகள் போராது என்று இழவுற்றாராயினர். இதுவே நம்பிள்ளை தீருவுள்ளம். இத்திருவள்ளத்தைக் காட்டியே மேலே குறித்த ஸ்ரீஸூக்தியை யருளிச்செய்தார். அதை வைத்தர்கள். ஸ்ரீ ஸூக்தியில பிழையில்லை. அதை ஸேவிக்கவெண்டிய ர்தி எங்ஙனே யென்னில்; “திருவாய்மொழி யவதாரித்த பின்பு அவருக்கு கணவிபூதிகள் போராது என்று, அருநடதா விழவு தீற்ந்து அத்தால் நி;ரதிசயானந்திகாளாக” என்று ஸேவிக்கவேணும். திருவாய்மொழி யவதாரித்தபின்பு எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போதாதென்று நினைத்து, முன்னிருந்த இழவுதீரப் பெற்றகென்பதாகக் கொள்க.


    3854.   
    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*
    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 

        விளக்கம்  


    • திருமாலிருஞ: சோலைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார். “திருமால் திருமாலிருஞ் சோலையானேயாகி என்னையாஉமால்” கொண்டு நிற்கிறவன்-என்னை யடிமைகொள்கைக்காக என் பக்கல் பியாமோஹம் வயிற்றினுள்ளே வைத்து ஊழியழி தலையளிக்குந் திருமால்-மூவுலங்களையும் தன் சிறிய திருவயிற்றினுள்ளே வைத்துச் சிறந்த ரகூஷணம் செய்தருளுமவன்; இப்படிப்பட்டவன் என்னையாளும் மால்- ப்ரளயாபத்தில் ஜகத்துக்கு தன்னை யொழியச் செல்லாயிருக்குமவன். சிவனும் பிரமஎம் காணாது அருமாலெய்தி அடி பரவ அருளை யிந்தவம்மான் -சிவன் பரமன் முதலானார் காணப்பபெறாதவர்களாய்க் காணவேணுமென்று ஆசை கொண்டு பக்தியுக்தர்களாய்த திருவடிகளை ஸ்தோத்ரம்பண்ண அவர்களுக்கு முகம் தோற்றமே கடக்க நன்று அருள்செய்யும் ஸர்வேச்வரன், என்னை யாளும்மால் எனக்குக் கண்ணுக்கிலக்காம்;படி திருமலையிலே வந்து நின்று என்று என்னை அடிமை கொள்கையிலே பெரும்பித்தனானான். ஆக இப்பாட்டு மூன்று வாக்கியார்த்தமாக அந்வயித்ததாயிற்று. (1) திருமாலிருஞ்சோலையானேயாகி என்னையாளும்மால் (2) செழுமூவுலகும் தன்னொருமாவயிற்றினுள்ளேவைத்து ஊழியூதிதலையளிக்குந் திருமால் என்னையாளம்மால் (3) சிவனும் பிரனுங்காணாது அருமாலெய்தியடி பரவ அருளையீந்;தவம்மான் என்னையாளும்மால்.


    3855.   
    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*
    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   

        விளக்கம்  


    • இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார். திருமால்ருஞ்சோலைமலை எப்படிப்பட்ட தென்னில்; மருள்கள் கடியும் மணிமலைப்ராப்தி விரோதிகளான அவித்யை முதலிய ஸகல அஜ்ஞானங்களையும் அனைவர்க்கும் போக்க்கடவதாய் விலகூஷணமான திருமலை. பின்னையும் எப்படிப்பட்ட தென்னில்; தேவரும் முனிவருமேத்துமம்மான திருமலை-தேவர்களும் மஹாரிஷிகளும் ஏத்த நின்ற ஸர்வேச்வரன் தான விருன்பி வந்து லே;விழுந்து படுகாடு கிடக்கம தேசம். அந்த தேவர்கள் யாவரென்னில்; ப்ராப்தனான் நீயெ அருள்செய்தாக வேண்டும்? என்ற சைகூப்பிப் பல்வாசைகளைக் காட்டிப் பிரார்திதிக்கின்ற ஈச்வராபி மாநியான ருத்ரனும்; அவருக்குங்கூட ஞானமளிப்பவனாய்த் தந்தைகயான பிரமஎம், தேவஜாதிக்கெல்லாம தலைவனென்று இறுமாந்திருக்கின்ற தேவேந்திரனுமாவர். இத்தேவர்களோடு கூட, அஜ்ஞானவிருளை வேரறப்போக்கியிருக்கும் ஸமர்தாக்களான மஹாரிஷிகளுமாக இப்பெரியார்களெல்லாரும் ஒருமிடறு செய்து ஏத்தநின்ற ஸர்வேச்வரன் வர்த்திக்கும் திருமலை திருமாலிருஞ்சோலைமலையென்று துதித்தாராயிற்று.


    3856.   
    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*
    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)

        விளக்கம்  


    • திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில். இதில் முதலடியில்-திருமாலிருஞ்சோலைமலையையும் திருப்பாற்கடலை சொல்லப்படுகிறது. இரண்டாமடியில்-ஸ்ரீ வைகுண்டத்தையும வடக்குத் திருமலையையும் ஆழ்வாருடைய திருமேனியையும் ஏகாரிதியாக விரும்புகிறபடி சொல்லப்படுகிறது. ஆக, இரண்டு திருமலைகளிலும் பரவ்யூஹங்களிலும பண்ணும் விருப்பத்தையெல்லாம் தம் திருமேனி யொன்றிலே பண்ணாநின்றான் என்றாராயிற்று. மூன்றாமடியில்; வேறோர்டம் சலசாதே தம்முடைய ஆத்மவஸ்துவிலும் மநோவாக்காயங்களிலும் ஏகாரிதியாக விருப்பம் செய்திருக்கிறபடியைப் பேசுகிறார். இப்பாட்டில் ளும்மைகள் பியோக்கிக்வேண்டு மிடங்களில் ஏகாரம் பிரயோகிக்கப் பட்டிருப்பது குறிக்கொள்ளப் படவேண்டும். திருமாலிருஞ்சோலைமலையும் திருப்பாற்கடலும என்தலையும்என்றாப் போலேயென்றோ சொல்ல வேண்டும்; ளும்மையை விட்டு ஏகாரமிட்டதன் கருத்தை நம்பிள்ளை விளக்கியருளுகிறார்-“ஸெளாரியைப் போலே அனேகம் வடிவுகொண்டு நில்லா நன்றானாய்த்து” என்று. ஸௌபாரி யென்பவன் மாந்தாதாவின் ஐன்பது பெண்களை மணம் புணர்ந்து தனித்தனி ஐம்பது வடிவுகளெடுத்து அத்தேவியமாருடனே தனித்தனியே ‘என் கணவன் என்னொருத்தியை விட்டு வேறொருததிபால ஒரு நொடிப் பொழுதும் செல்கின்றிலன்’ என்றே நினைத்திருந்தாளாம். அப்படியே எம்பெருமானும் இப்பாட்டிற் சொல்லப்படுகிற இடங்களில ஒன்றிலிருக்கும்போது மற்றென்றில் இல்லை யென்று நினைக்கலாம்படி யிருந்தமை தோற்றவே ளும்மையை தவிர்த்து ஏகாரம் பிரயோகிக்கப் பட்டதென்று கொள்க. ஒருமா நொடியும் பிரியான் - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமுங் பிரிகின்றலனென்ற படி. ஒன்றைவிட்டு மற்றென்றில் கால்வாங்கிப் போகாமல் அஸ்தமிதாந்பாவனானயிருந்து அநுபவிக்கினறானென்கை இப்படி யநுபவிப்பவன் யாவனென்ன; (என்னுழி முதல்வ னொருவனே.) காரியவாஸ்தையிலும் காரணாவஸ்தையிமுள்ள சேதநா சேதநங்கனுடைய ஸத்தை தன் அதீன மாம்படி யிருக்குமவன் தன்எடை ஸத்தை என் அதீனமாம்படி என்பது கருத்து.


    3857.   
    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*
    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 

        விளக்கம்  


    • ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது. ஆறாயிரப்படி யருளிச்செயல்-‘நமக்க இந்த ஸம்ருத்தியெல்லாம் திருமலையாலே வந்து ஸம்ரத்திகிடாய், நெஞ்சே! இனித் திருமலையைக் கைவிடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச் சொல்ல; இ;;வாத்மாவினுடைய நிகர்ஷம் பாராதே இத்தோடே கலந்தருளினாயேயாகிலும் என்னுடையஹேயனான இந்த ப்ரக்ருகியில் அபிநிவேசத்தை விட்டருளவேணுமென்று எம்பெருமானை ப்ரார்த்திக்கிறார்.” என்று. ஈற்றடியில் மனமே! என்று விளியிருப்பது போல எம்பெருமானே! என்று மற்றொரு விளியில்லாமையால் பாட்டு முழுதும் நெஞ்சை நோக்கியே சொல்லுவதாகக் கொள்ளலாமென்று கருதினர் பன்னீராயிரவுரைகாரர். நெஞ்சே! நமக் த்யாஜ்யமான தேஹப்ராணாதிகள் மங்கும்படியாகச் செறிந்து ஆச்ரயிக்கப்பாராய்; நம் காரியம் செய்து முடிக்குந்தனையும் திருமாலிருஞ்சோலை மலையைக் கைவிடாதே கொள்; இ;த்தாலே நீ வாழிவாய்-என்று ஏகவாக்யமாவே உரைத்திட்டார். இது சுவையுடைத்தன்று ஆழ்வார் தம் திருவுள்ளததை நோக்கி “வாழி மனமே கைவிடல்” என்று அருளிச் செய்தவுடனே எம்பெருமானும் தன் திருவுள்ளத்தைக் குறித்து ‘ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாகையாலே நீயும் அத்திருமேனியை ஒருகாலும் விடாதே கிடாய்” என்று கூறினானாக. அது கேட்ட ஆழ்வார், பிரானே! இது யுக்தமன்று இதைத் தவிரவேணும் என்று கால்கட்டுகிறார். உடலு முயிரும் மங்க வொட்டு - சாரிரமும் பிராணனும் மங்கும்படி இசையவேணும். (வெறுப்புக்கு இலக்காக வேணுமேயல்லது - என்று ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுக்கும் உணர்த்தினாராயிற்று. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“மங்கவொட்டென்கையாலே இதுக்கு முன்புத்தை ஆழ்வாருடைய இருப்பு ப்ராப்த சேஷத்தால்ல; பகவதபிப்ராயத் தாலே யென்னுமிடம் தோற்றுகிறது ஈச்வரன் பற்றி விடேனென்றிருக்கையாலே இருந்தாரென்கிறது” என்று.


    3858.   
    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*
    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 

        விளக்கம்  


    • பிரானே! உடலுமுயிரும் மங்கவொட்டென்று வேண்டச் செய்தேயும இப்படிப் மேல் விழுகிறாயே, இது தகுமா? எ;னறு ஆழ்வார் கேட்க, அதற்கு எம்பெருமான் ‘சாந்து பூசுவார் பரண்யை;யுடைத்தோ பூசுவது? சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயமன்றோ’ என்று சொல்ல; விர்வான ளுக்திகளாலே ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறாராயிற்று. (உன் மாமாயை மங்கவொட்டு) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யா என்று கீதையில் நீ தானே சொல்லிவைத்தாயே; ஒருவராலும் தப்பவொண்ணாதபடி குருவிபிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதரம் தவிரப்பாராய். (திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே!) பரமபதத்தை விட்டு நீ திருமாலிருஞ்சோலை மலையிலே வந்து நிற்கிறது அடியார்கள் சொன்ன படியே நடந்து ஆச்ர்ற்தபாரதந்திரியத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றோ? இன்னமும் என் சொற்கேளாதே நீ ஸ்வாந்திரனாயே நின்று நினைத்தபடி செய்வ கொள்ள வேண்டாவே. (யானே நீ யாகி யென்னை யளித்தானே!) என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பாரிவு உண்டோ அவ்வளவு பாரிவு உனக்கும் இல்லையோ? யானே நீ யென்னலாம்படி யிருந்துவைத்து இ;ப்போது எனக்கு அநபிமதமானதைச் செய்யத்தகுமோ? என்று இங்ஙனே ஆழ்வார் சொல்லச்செய்தேயும் எம்பெருமான் இணங்காதிருப்பதுகண்டு, தேஹத்தின் ஹேயமான தன்மையைப் பின்னடிகளால் (8.8) என்கிற திருவாய் மொழியிலே ஜீவாத்மாவின் சீர்மையை; எம்பெருமான் ஆழ்வார்க்கு உணர்த்தினான்; இப்போது ஆழ்வார் எம்பெருமாளுக்கு அசேநந்தின் தன்மையை உணர்த்துகிறார்; சிஷ்யாசர்ய க்ரமம் மாறினதாயிற்று. பொங்கு ஐம்புலஎம் - சப்தாதி விஷயங்கள் ஐந்தும், அவற்றிலே அகப்படுத்து கைக்கு உறுப்பான செவிகண் முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் அவ்விஷயங்களில் ப்ரவர்த்திக்கைக்கு ஹேதுவான கைகால் முதலான கருமேந்திரியங்களில் ஐந்தும், சாரிரத்திற்கு ஆரம்பங்களான நிலம்நீற் முதலான பூதங்கள் ஐந்தும் ஆகஇவை இருபது; ஸம்ஸாரதசையில் ஜீவனோடீட மிகப்பொருந்தியிருக்கிற மூலப்ரக்ருதி, வ்யவஸாய ஹேதுவான மஹான், அபிமாந ஹேதுவான அஹங்காரம், ஸங்கல்பஹேதுவான மநஸ்ஸூ ஆக இவை நான்கு; இவ்விருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டரவாக நீ கட்டிவைத்திருக்கிற மாயையிலே இப்போது நீ வீணாகப் பண்ணுகிற ஆதரத்தை விட்டுத் தொலைக்கப்;பாராய் - என்றாராயிற்று. திருமாலிருஞ் சோலைமேய நங்கள் கோனே! யானே நீயாகி யென்னை யளித்தானே!, பொங்கைம்புலஎம் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களாகிற உன்மாமையை மங்கவொட்டு என்று அந்வயிப்பது. இங்து ஐம்புலன்களுக்கு பொங்கு என்று அடைமொழி கொடுக்கப்பட்டது; பரமபோக்யமென்று பிரமிக்கச் செய்யுந் தன்மைவாய்ந்த என்றபடி.


    3859.   
    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*
    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)

        விளக்கம்  


    • பாட்டுத் தோறும் திருமாலிஞ் சோலையென வருவதுகொண்டே தெரிந்து கொள்ளக்கூடிய தன்றோ; “இவை பத்தும திருமாலிருஞ் சோலைமலைக்கே” என்று விசேஷித்துச் சொல்லுவதன் கருத்து யாதென்னில்; கேண்மின்; கீழே (2-10.) கிளரொளியிளமைப் பதிகத்தில் “மயல்மிகு பொழில் சூழ்மாலிருஞ்சோலைக் என்கிறார்; அஜ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம் என்பது கருத்து; ஸம்சயமும் அஜ்ஞானத்தில் ஒரு வகுப்பாகையாலே, மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் தமக்கும் அஜ்ஞானமுண்டாகி “முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரை யாயலர்ந்துவோ?” என்று ஸம்சயிக்க நோந்தது; இவ்வளவே யன்றிக்கே ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுங்கூட தம்முடைய ஹேயமான தேஹத்திலே ஆதரம் பண்ணும்படி நேர்ந்ததானது மயல்மிகு பொழில் சூழ்மாலிரஞ் சோலையில் வாஸத்தின் பலனே யென்று காட்டுகை ஒரு கருத்து; அப்படி அவன் தம்முடைய தேஹத்திலே பண்ணின ஆதரத்தைத் தவிர்த்துக்கொண்டதும் திருமாலிருஞ் சோலை வாஸத்தினால்தான்; அடியார்களுக்கு விதேயனாகைக்காகவே அர்ச்சாவதார பாரிக்ரஹமாகையாலே இதை ஆழ்வார் உணர்த்தவே ஆழ்வாருடைய கட்டளையை மீறலாகாதென்று கொண்டு தவிர்ந்தானாயிற்று; இதுவும் திருமாலிரஞ் சோலை வாஸத்தின் பலனே யென்று காட்டுகை மற்றொரு கருத்து. இப்பாட்டின் முன்னடிகளில் சொல்லப்பட்டிருக்கிற விஷயமே இப்பதிகத்திற்குப் பலன் என்று கொள்ளக்கடவது. மான் ஆங்காரம் மனம் கெட-மஹான் அஹங்காரம் மநஸ்ஸென்று மூன்றைச் சொன்னது ப்ரகிருதிக்கும் உபலகூஷணம். சாரிரஸம்பந்தம் நசிக்கும்படியாக என்றபடி, ஐவர் வன்கையர் மங்க-வன்கையரான ஐவர் மங்க; பெருமிடுக்குடைய பஞ்சேந்திரியங்களும் மங்கும்படியாகவும் என்றபடி. கீழ்ப்பாட்டில் ஐந்தைந்தாகச் சொன்னவை யெல்லாவற்றுக்கும் உபலகூஷணமிது. ப்ரக்ருதி ப்ராக்ருதாத் மகமான தம்முடைய திருமேனியிலே நசைகெட்;டு என்றதாயி;ற்று. தான் ஆங்கார மாய்ப்புக்கு-என்னை யநுபவிக்கப் பெரிய செருக்கோடே வந்து புகுந்து என்றபடி. தானே தானே யானானே - நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி யென்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வராருளிச்செய்த ஆயிரத்துள்; மானாங்காரத்து இவை பத்தும் - இதற்கு இரண்டுபடியாகப் பொருளளிருளிச் செய்வர்; -மஹான் அஹங்காரம் முதலியவற்றின் கூட்டரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காகச் சொன்ன இப்பதிகம் -என்றும், பெரிய செருக்கோடே சொன்ன இப்பதிகம் என்றும். ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக்கட்டுகை அணித்து என்னுமத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறையில்லையே.


    3860.   
    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)

        விளக்கம்  


    • எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார். தீருமாலிஞ் சோலைமலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறைப்புகந்தான் - என்னுற்ரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்று மடிமாங்காயிட்டு விஷயீகாரிக்குமவனான எம்பெருமாளுக்கு என் பக்கலிலே ஒரு பற்றாசு கிடைத்தது; அது ஏனென்னில், என்வாயில் திருமாலிருஞ்சோலைமலை யென்று ஒரு சொல் யாத்ருச்சிகமாக வெளிவந்தது; மற்ற மலைகளிற் காட்டிலும் திருமாலிருஞ்சோலைமலைக்கு ஒரு வைலகூஷண்யமுண்டென்று கொண்டு புத்தி பூர்வகமாகச் சொன்னனல்லேன்; பலமலைகளையும் சொல்லிப்போருகிற வாரிசையிலே திருமாலிருஞ்சோரைiலையென்று இதனையும் சொன்னேனத்தனை; இவ்வளவே கொண்டு அவன் பிராட்டியோடுங் கூடவந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தோனாயிற்ற. விபீஷ்ணாழ்வான் பக்கலிலே மித்ரபாவமே அமையுமென்றவனன்றோ இப்பெருமான். அஹ்ருதயமாகச் சொன்னதையும் ஸஹ்ருதயமாக்கிக் கொடுக்க வல்லவளான பிராட்டி அருகே யிருக்கையாலே மலையைப்பற்றின என்வாக்கு அவருக்கு மலையாகவே ஆய்விட்டதென்கிறார். எம்பெருமாளுக்கு நீற்வண்ணனென்றொரு திருநாமமுண்டு; நீர்ன் தன்மைபோன்ற தன்மையையுடையவன் எம்பெருமான்; மிகச் சிறிய த்வாரமொன்று கிடைத்தாலும் நீர் உள்ளே புகுந்து நிறைந்து விடுமே; அப்படியே நீர்வண்ணான எம்பெருமானும் உள்ளே புகுவதற்கு ஸ்வல்பத்வாரம் பெற்றால் போதுமே; திருமாலிருஞ்சோலைமலை யென்ற ளுக்திமாத்ரமே ஸ்வல்பத்வாரமாயிற்றென்க. இப்படி தம் நெஞ்சு நிறையப்புகுந்த பெருமான் எவ்விடத்திலுள்ளானென்ன அவ்விடம் சொல்லுகிறது பன்னடிகளால். குருமாமணியுந்து புனல் பொன்னித் தென்பால் தென் திருப்பேர் -சிறந்த ரத்னங்களைக்கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைத்தாகையாலே பொன்னி யென்றும் கநகநதி யென்றும் பேர்பெற்றிருந்திருக்கிற திருக்காவோரியின் தென்கரையிலள்ற்ன திருப்பேர் நகர்-அப்பக்குடத்தான் ஸன்னிதி திருமால் சென்று சேர்விடம் -பரமரஸிகனானவன் தானும் பிராட்டியுமாய் விரும்பிச்சென்று சேரும் தேசம் அதுவாயிருக்கச் செய்தே கிடீர் என்னுடைய அஹ்ருதயமான ளுக்திமாத்ரத்தைக் கொண்டு என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இதென்ன நிர்ஹதுகவிஷயீகாரம்! என்று உள்குழைத்து பேசுகிறபடி. மூன்றாமடியி;ல் குரு என்றது வடசொல் விகாரம்; சிறந்த வென்றபடி. ஒளினிக்கு விலையுயர்ந்தமணிகளை யென்றவாறு.


    3865.   
    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*
    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  

        விளக்கம்  


    • எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார். திருப்பேர் நகரானென்றும் திருமாலிரஞ்சோலையுறை கின்ற பிரானென்றும் இரண்டு திவ்ய தேசங்களை யிங்குச் சொன்னது சீரார் திருவேங்கடமே திருக்கோவலுற்ரே மதிட்கச்சியூரமே என்றோதப்படுமெல்லாத் திருப்பதிகளையுஞ் சொன்னபடி. இப்படி அளவுகடந்த தேச விசேஷங்களைத் தனக்கு இருப்பிடமாக வுடையவன், இன்று வந்து -இப்படி வரவேணுமென்கிற நினைவு நேற்று இன்றியே யிருக்க இன்று வநததாகச் சொல்லுகையாலே நிர்ஹேதுகமாக வந்தமை தெரிவித்தபடி. வரும்போது ‘இருப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே வந்தானாயிற்று. பெருமாள் அரண்யத்திலே ஜடாயு மஹாராஜரைக் கண்டபோது இளையோனே நோக்கி இஹவத்ஸ்யாமி ஸெமித்ரே! ஸாரித்த மேதேநரைக் பகூஷிணா என்று இவர் சிறிகின்கீழே வர்த்திக்கப் பாரா நின்றோ மென்றாப்போலே. என்னெஞ்சு நிறையப் புகுந்தான் -‘நம்முடைய ஹ்ருதயத்திலே இருக்கவேணுமென்று இவனாசைப்பட்டால் இருந்துபோகட்டுமே என்று இசைவு காட்டாதிருந்த என்னெஞ்சிலே நிறையப் புகுந்தானென்கை. விருப்பேபெற்று அமுதமுண்டு கஸித்தேன் கம்ஸ சிசுபாலாதிகளின் நெஞ்சிலும் எம்பெருமானிருப்பதுண்டு; அப்படி யின்றிக்கே அபிமாந பஹூமானங்களோடே இருக்கப்பெற்றேனாதலால் இதுவே அம்ருதபானமாகப் பெற்றே னென்றவாறு.