திரு மோகூர்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. கோயில் கலைச் சிறப்புகள் இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது. சங்ககாலத்தில் மோகூர் சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன். இவன் தம்பி இளம் பழையன் மாறன். செங்குட்டுவன் இவனைப் போரில் வீழ்த்தி, இவனது காவல்மரம் வேம்பை வெட்டித் தன் தலைநகர் வஞ்சிக்குக் கொண்டுசென்று, தனக்கு முரசு செய்துகொண்டான். நான்மொழிக் கோசர் இவ்வூரில் வரி தண்டினர். மோகூர் வரி தர மறுத்ததால், கோசருக்கு உதவும் பொருட்டு மோரியர் படையெடுத்து வந்தனர்.

அமைவிடம்

அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில்,
திருமோகூர்-625 107 ,

தாயார் : ஸ்ரீ மோகூர் வல்லி
மூலவர் : ஸ்ரீ காளமேக பெருமாள்
உட்சவர்: ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : மதுரை
கடவுளர்கள்: ஸ்ரீ காளமேக பெருமாள்,ஸ்ரீ மோகூர் வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

    3783.   
    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*
    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)

        விளக்கம்  


    • கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஜுகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்.....வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார். இவ்வூரிலுள்ள தடாகம் இன்றைக்கும் தாளதாமரைத் தடமென்றே வழங்கப்பெறுன்றது. வானமாமலையிலுள்ள ஒரு சோலை * தேனமாம் பொழிலென்ற வழங்கப்பெறுதல் போல. ஆழ்வார் திருவாக்கில் வந்த சொல்லையிட்டே வழங்குதல் சிறப்புடைத்தன்றோ, தாமரைத் தடத்தையும் வயலையும் பேசுகின்ற ஆழ்வாருடைய திருவுள்ளம் யாதெனில், * உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலுயர்ந்து காட்ட, வரம்புற்ற கதிரிச் செநநெல் தாள் சாய்த்துத் தலைவணக்குந் தண்ணரங்கமே * என்று பெரியாழ்வார் அநுஸந்திக்கிறதற்கும் இப் பாசுரம் மூலமாயிருக்கும், ஆகாசமளவும் ஓங்கியிருக்கிற தாமரையைக் காணும் போது உலகளந்த சேவடியை ஸேவித்தாற் போலவிருக்கும், செந்நெற் பயிர்கள் கதிரிக்கனத்தாலே தலைவணங்கியிருக்கும் வயல் நிலையைக் காணும் போது * நமந்தி ஸந்தஸ் த்ரை லோக்யாதபி லப்தும் ஸமுந்நதிம்* என்கிறபடியே வணக்கமே வடிவெடுத்திருக்கும் பாகவதோத்தமர்களை ஸேவித்தாற் போலவிருக்கும் என்க. இப்படிப்பட்ட திருமோகூரிலே, நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று என்கையாலே எம் பெருமாளுக்குப் பரமபத வாஸத்திலுங்காட்டில் இப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் வாஸமே திருவுள்ளத்துக்கு மிகவும் இனிதாயிருக்கு மென்னுமிடம் காட்டப்பட்டதாகும், பரமபதத்தில் பல் விளக்குப் போலே ப்ரகாசம் குன்றியிருந்த திருக்குணங்கள் இருட்டறையில் விளக்குப் போலே ப்ரகாசிப்பது இங்கேயாகையாலே. அசுரரைத்தகர்க்குந் தோளு நான்குடை: இப்போது அர்ச்சாவதாரத்தில் தானே ஆழ்வாருடைய அநுபவம் நிகழ்கின்றது, தோள்களினால் அசுரரைத் தகர்த்தது விபவாவதாரத்திலாகிலும் அந்த விரோதி நிரஸநஸாமர்த்தியம் இவ்வர்ச்சாவதார நிலையிலும் ஆழ்வார்க்கு ப்ரகாசித்தமை விளங்குகின்றது. இவ்விடத்தில் ஈடு “இவர் இப்போதறிந்த படி எங்ஙனேயென்று கேட்க, விடுகாதானாலும் தோடிட்டு வளர்ந்த காதென்று தெரியுங்காணுமென்று அருளிச் செய்தருளின வார்த்தை.’’


    3784.   
    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*
    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 

        விளக்கம்  


    • *திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில் பாட்டின் தொடக்கத்திலேயுள்ள * இலங்கதி மற்றொள்றெம்மைக்கும்* என்கிற வாக்யத்திற்குப் பாட்டின் முடிவிலேயே அந்நயம், “ திருமோகூர் நலங்கழலவனடி நிழல் தடமன்றி யாம் இலங்கதி மற்றொன்றெம்மைக்கும்’’ என்று இயைத்துக் கொள்க. திருமோகூர்த் திருப்பதியிலெழுந்தருளியிருக்கு மெம்பெருமாளுக்கு “ நலங் கழலவன்’’ என்றொரு திருநாமஞ் சாத்துகிறாராழ்வார். நலங்கழலவன்... நன்மைமிக்க திருவடிகளை யுடையவன் என்பது பதப் பொருள். திருவடிகளுக்கு நன்மையாவது எனனென்னில், குணமுடையாரைக் கைக்கொள்வது, தோஷம் நிரம்பியவர்களைக் கைவிடுவது என்றொரு விரதங்கொள்ளாமல் * அநாலோசித் விசேஷாசேஷ லோக சரண்ய!* என்று கத்யத்தில் ஸ்வாமி அருளிச் செய்தபடியே ’ இத் திருவடிகளுக்கு ஆகாதார்ல்லைக் என்னும்படியாக அனைவரையும் கைக் கொள்கை. “ ஆச்ர்தருடைய குணதோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள்’’ என்பது ஈடு. திருமோகூர் எப்படிப்பட்டதென்னில், நலங்கொள் நான் மறைவாணர்கள் வாழப் பெற்றது. ’ நலங்கொள்’ என்கிற அடைமொழி நான்மறைக்குமாகலாம. நான் மறைவாணர்க்குமாகலாம். நான் மறைக்கு ஆகும் போது அபௌருஷேயத்வம் நித்ய நிர்தோஷத்வம் முதலான நன்மைகளைக் கொண்டிருத்தல் விவக்ஷிதம். நான் மறைவாணர்கட்கு ஆகும் போது, வேத தாத்பரியங்களை நன்கறிந்தும் அனுட்டித்தும் அனுட்டிப்பித்தும் போருகையாகிற நலம் விவக்ஷிதம்.


    3785.   
    அன்றியாம் ஒரு புகலிடம்*  இலம் என்றுஎன்று அலற்றி* 
    நின்று நான்முகன் அரனொடு*  தேவர்கள் நாட*
    வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்*  திருமோகூர்* 
    நன்று நாம் இனி நணுகுதும்*  நமதுஇடர் கெடவே.  

        விளக்கம்  



    3786.   
    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*
    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  

        விளக்கம்  


    • தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம், அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என்னவெனில், படர் கொள் பாம்பணைப் பள்ளிகொள்வான்...* ஸூகஸூப்த, பரந்தப: என்கிறபடியே கிடந்த கிடையில் தானே அவர்களுடைய இடர் கெடும்படியாயிருப்பன், ஸங்கல்பமாத்திரத்தாலே எதையும் நிர்வஹிக்க வல்லவனாகையாலே. ’தொடர’ என்ற செயவெனெச்சத்திற்கு... தொடரும்படியாக வென்று பொருள் கொள்ளுமளவில் படர்கொள் பாம்பணைப் பள்ளி கொண்ட திருக்கோலத்திலே அவர்கள் வந்து தொடரும்படியைச் சொன்னவாறு ஈச்சவராபிமாநிகளான தேவரும், சாபாநுக்ரஹ ஸமர்த்தர்களான முனிவரும் தாங்கள் இடர்பட்டவாறே ’இடர்கெட எம்மைப் போந்தளியாய், என்று பல்லைக் காட்டிப் பிரார்த்திப்பது தவிர வேறு அறியார்களென்கை. இரண்டாமடியிலே சுடர்கொள் சோதியை என்றது...எம்பெருமானுக்கு இயற்கையான தேக பொலிவைச் சொல்லுகிறதன்று, ’இவர்கள் ஆபத் காலத்திலேயாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஒரு பிரயோஜனத்தை விரும்பியாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஸ்ன்று நீவப்பின் மிகுதியால் வடிவு புகர் பெற்ற படியைச் சொல்லுகிறது, அன்றியே, விலக்ஷமான அழகையுடைய இப்பெருமாரன ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பற்ற வேடியிருக்க, அந்தோ! இடர் கெட நினைத்துப் பற்றப்பார்க்கிறார்களே யென்னும் பரிதாபந் தோற்றச் சொல்லுகிறபடியுமாம். இக் கருத்தில் ஒரு சிறு சங்கை தோன்றக்கூடும், அதாவது தேவரும் முனிவரும் இடர்கெட வேணுமென்று கோருவது ஆழ்வார்க்குப் பரிதாகஹேதுவாகிறதென்னில், ஆழ்வார் தாமும் இடர் கெட வேணுமென்று கோருகிறாரே அது கூடுமோ- * நன்று நாமினி நணுகுதும் நமதிடர்கெடவே* என்றும் *இடர் கெட வடிபரவுதும் தொண்டீர் வம்மினே* என்றும் சொல்லியிருக்கவில்லையோ?- இது கூடுமோ என்று. இதற்குப் பர்ஹாரமாவது இவருடைய இடர் வேறு. அவர்களுடைய இடர் வேறு. * ஏ ஹி பச்ய சரீராணி* என்று ராக்ஷஸர் தின்ற வுடம்பைக் காட்டி இவ்வுடம்பைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் அவர்கள்; * அழுக்குடம்பு மிந்நின்றநீர்மை யினியாமுறாமை* என்று அவ்வுடம்பைப் கழிக்கத் தேடுகிறவர் ஆழ்வார்; ஆகவே இடரில் நெடுவாசியுண்டென்க.


    3787.   
    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*
    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.

        விளக்கம்  


    • “தெண்டீர் வம்மினே’’ என்று கீழ்ப்பாட்டிற் சொல்லியிருந்தும் மீண்டும் தொண்டீர்வம்மின்’’ என்கிறார்... அந்தாதித் தொடைக்காகவன்று, *ஏ: ஸ்வாது ந புஞ்ஜீத்* என்றும்* இன்கனி தனியருந்தான்* என்றும் சொல்லுகிறபடியே தொண்டர்களில் ஒருவரும் இவ்வநுபவத்தை இழக்கலாகாததென்கிற உத்கண்டையாலே மீண்டு மீண்டு மழைக்கிறபடி. திருமோகூரை வலஞ்செய்து கூத்தாடலாம் வாருங்கோ என்றழைக்கிறார். அங்குறையும் பெருமானெப்படிப் பட்டவனென்னில், நஞ்சுடரொளி ஒரு தனிமுதல்வன்...சுடரொளி மிக்க தன்வடிவழகையும் முதன்மையையுங் காட்டி நம்மை யீடுபடுத்திக் கொண்டவனென்கை. அண்ட மூவுலகளந்தவன்...கீழே’ ஒரு தனி முதல்வன்’ என்பதனால் படைப்பவனென்றது, படைத்து விட்டு விடுகையன்றிக்கே படைத்த ஜகத்தை வலியார் அபஹர்த்தால் எல்லை நடந்து கொண்டு ரக்ஷிக்கு மவனென்கிறது அண்ட மூவுலகளந்தவனென்பதனால், கொண்ட கோயில்... தன் திருவுள்ளத்தாலே உகந்து பர்க்ரஹித்த திவ்யதேசமென்றபடி. வலஞ்செய்வதும் கூத்தாடுவதும் பக்தர்களின் பணியாதலால் அது செய்யவழைக்கிறபடி.


    3788.   
    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        

        விளக்கம்  


    • நடராஜனென்று பேர் பெற்ற தேவதாந்தரம் போலே கூத்தாடுகிறவனல்லன்; நடை நடக்குமழகே கூத்தாடினாற் போலே நெஞ்சைக் கவரும் தாயிருக்குமென்ப. இங்கு ஈட்டில் “ நடக்கப்புக்கால் வல்லாராடினாப் போலே யுருக்கை’’ என்றருளிச் செய்து உடனே * அக்ரதா ப்ரயயௌ ராமா:* என்கிற ஸ்ரீ ராமாயணப்ராணம் காட்டப்பட்டுள்ளது. இந்தப்ரமாணத்தில் யயௌ என்னாமல் ’ப்ரயயௌ’ என்றதனால் நடையில் விசேஷம் காட்டப்பட்டதென்று நம்பிள்ளை திருவுள்ளம், இந்த நடையழகு இராமபிரானிடத்திலன்றிக்கே கண்ணபிரானிடத்தும் காணலாயிருக்கையாலே கோவலன் என்கிறது : * கானகம் படியுலாவியுலாவிக் கருஞ்சிறுக்குன் குழலூதின போது, மேனகையோடு திலோத்தமையரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி, வானகம்பாடியில் வாய்திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே* என்ற பெரியாழ்வார் திருமொழியை இங்கே யோஜிப்பது. குதற்று வல்லசுரர்கள்... ஜாதியோ அஸுரஜாதி, அதிலும் வல்லசுரர்.... வன்மையே வடிவெடுத்தவர்கள், அதற்கு மேல், குதற்று வல்லசுரர்கள்...ஸாதுக்களுக்குப் பீடைகள் செய்வது தவிர வேறு தொழிலற்றவர்கள், அப்படிப்பட்டவர்களுக்குக் கூற்றம்... மிருத்யுவாயருப்பவன் எம்பெருமான். ஏத்தும் நங்கட்கு மமரர்க்கும் முனிவர்க்குமின்பன்...இன்று ஆச்ரயியக்கிற நமக்கும் நித்ய ஆச்ர்தர்களானார்க்கும் இன்பனாமிடத்தில் வாசியற்றிருப்பவன். வாசியற்றிருக்கை மட்டுமின்றிக்கே, இன்பனாமிடத்தில் முந்துற முன்னம் நமக்கு இன்பனாம் என்கிற விசேஷமும் குறிக் கொள்ளத்தக்கது. இப்படிப்பட்ட எம்பெபருமான் திருமோகூராத்தான்....ஆத்தனென்றது ஆப்த னென்ற வடசொல்விகாரம்; பரமபந்து என்றபடி. ஈட்டு ஸ்ரீ ஸூக்தி காண்மின்; “தான் தனக்கல்லாத மரணஸமயத்தில்* அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி* என்னும் பரமாப்ததமன்’’.... இப்படிப்பட்ட பெருமானுடைய தாமரையடியன்றி மற்று அரண் இலம்.. வேறு சிலரை ரக்ஷகராகவுடையோமல்லோம். இலம் இல்லோம்.


    3789.   
    மற்றிலம் அரண்*  வான்பெரும் பாழ்தனி முதலாச்* 
    சுற்றும் நீர்படைத்து*  அதன்வழித் தொல்முனி முதலா*
    முற்றும் தேவரோடு*  உலகுசெய்வான் திருமோகூர்* 
    சுற்றிநாம் வலஞ்செய்ய*  நம் துயர்கெடும் கடிதே.

        விளக்கம்  


    • மரண்’ என்று சொல்லும்படி அவன் ரக்ஷகனாகவல்லனோ வென்னில், அவருடைய ரக்ஷகத்வமிருந்தபடி பாருங்கோளென்கிறார் வான்பெரும்பாழென்று தொடங்கி, வான் பெரும்பாழென்று மூலப்ரக்ருதியைச் சொல்லுகிறது. பாழ் நிலமாயிருந்தால் அதில் அவரவர்களுக்கு வேண்டிய செடி கொடி பயிர்களை விளைத்துக் கொள்ளலாமன்றோ; அது போல மூலப்ரக்ருதியானது சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளவுரிய. நிலமாயிருக்கையாலும, அது தானும் எல்லை கடந்திருப்பதாலும் வான்பெரும்பாழ் என்கிறது. தனி என்பது பெரும்பாழுக்கு விசேஷணமாகக் கொள்ளத்தக்கது, தனி வான் பெரும்பாழென்க. முதலாச் சுற்று நீர் படைத்து.. மூலப்பிரக்ருதி தொடக்கமாக விவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து அதன் வழி... இவ்விதமாக யென்றபடி, தொன்முனி யென்று நான்முகனைச் சொல்லுகிறது. “தேவாதிகளைப் பற்றப் பழையனாய் மனன சீலனான சதுர்முகன் தொடக்கமாக’’ என்பது ஈடு. முற்றுந் தேவரோடு உலகு செய்வான்= எல்லா தேவ ஜாதி யோடுங்கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குபவன். இப்படிப்பட்ட எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருமோகூரை, சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கடிதே கெடும்... நாம் சென்று ப்ரதக்ஷிணப்ரணாமாதிகளைப் பண்ண நம் துயர் விரைவில் தொலையும், வழித்துணையில்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையுமென்கை.


    3790.   
    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   

        விளக்கம்  


    • தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார். ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-........ தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்; ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்; தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே (8...5...1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில் “ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன். *கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற முகுந்தமாலை ச்லோகத்திலும் இப்பொருத்தம் நிரூபிக்கப்பட்டது. பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் * உத்புல்லபங்கஜ தடாகமிவ* பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார். இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது. அதாவதென்னெனில்; உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே; இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார் வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று. இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்; விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம். “பெயர்களாயிரமுடைய’’ என்கிற விசேஷணம் தயரதன் பெற்ற மரகத மணித் தடமாகக் கொள்ளப்பட்ட யென்பெருமானிடத்திலே அந்வயிக்கு மென்று சிலர் கொள்ளுவார்கள்; அவ்வளவி தூராந்வயம் அவண்டர் பக்கத்திலுள்ள வல்லரக்கர்லேயே இந்வயிக்கக் குறையில்லை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்.... “ ஈச்வரன் ரக்ஷித்துப் படைத்த பெயர்களோ பாதி போருமாய்த்து இவர்கள் பரஹிம்ஸை பண்ணிப் படைத்த பெயர்; யஜ்ஞசத்ரு ப்ரஹ்மாத்ரு என்றாப் போலேயிறே இவர்கள் படைத்த பெயர்’’.


    3791.   
    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*
    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.

        விளக்கம்  


    • நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார். தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அப்போதலர்ந்த செந்தாமரை போலேயிருக்கிற திருக்கண்களையும் பவளம் போலே சிவந்த திருவதரத்தையுமுடையனாய் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கவல்ல நான்கு திருத்தோள்களை உடையனாய் அத் திருத்தோள்களுக்கு இரை போரும்படியாக எதிரிட்டு வருகிற அசுரர்களைத் துணிக்குமவனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமாய் சோலைகள் சூழ்ந்ததான திருமோகூரிப்பதியானது கட்டிற்று; இதுவே நமக்கு ரக்ஷகம்; ரக்ஷகம் தேடி நிற்கிற நாம் கிட்டப் பெற்றோம் இத்திருப்பதியை என்றாயிற்று.


    3792.   
    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 

        விளக்கம்  


    • அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார். நல்லமரர், தீமை செய்யும் வல்லசுரரையஞ்சி, நமக்கு நாமடைந்த நல்லரணென்று சென்றடைந்தால், காமரூபங்கொண்டு எழுந்தளிப்பான் என்று அந்வயிப்பது. அசுரர்கள் எப்போதும் அமரர்கட்குத் தீங்கிழைத்துக் கொண்டே இருப்பாகளாதலால் அவர்கட்கு அஞ்சி எம்பெருமானிடம் வந்து ’ நமக்கு நாமடைந்த நல்லரண்’ ( நமக்கு அஸாதாரணமாக நாம் பற்றின விலக்ஷணமான அரண்) என்று கொண்டு வந்தடைகின்ற நல்லமரர்கட்காக, காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான். அடியாருடைய ஆபத் ரக்ஷணதநுரூபமாக வேண்டினபடி பர்க்ரஹிக்கும் திருமேனிக்குக் காமரூபம். அதைக் கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திருமோகூர். இவ்வூர்ன் பெயரை வாயாலே சொல்லி யநுஸந்தித்து அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள் நம்முடையவர்களே! என்றாயிற்று.


    3793.   
    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)

        விளக்கம்  


    • இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார். கூத்துமின் நமர்கானென்று தான் குடமாடு கூத்தனை.... கண்ணன் குடக்கூத்தாடும் போது இங்ஙனே சொல்லிக் கொண்டு ஆடினானாம்; (அதாவது) ’ நம் சேஷ்டிதத்தை உசுப்பாரெல்லாரும் வந்து கண்டு வாய்படைத்த ப்ரயோஜனம் பெறும் படி ஏத்துங்கோள்’ என்று தானே சொல்லிக்கொண்டு ஆடினான். இத்தால், பிறர்க்குப் போலே தனக்கும் மநோஹரமான சேஷ்டிதங்களை உடையவனென்றதாயிற்று. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வார் வாசிகமான அடிமையிலே அதிகர்த்தார்; அது இப்பத்தும் திருமோகூர்த் திருப்பதிக்கென்று வகுக்கப்பட்டது; இத்திருவாய்மொழியைக் கொண்டு ஏத்தவல்லார்க்கு இடர் கெடும்...என்றாயிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்திவை என்றவிடத்து அறியத்தக்க தொன்றுண்டு; திருவாய்மொழித் தனியன்களில்* வான்திழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்றதமிழ் மறைகளாயிரமும்* என்பது மொன்று. இது பட்டரளிச் செய்ததாக ப்ரத்தம். இதில் திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று சொல்லப்பட்டுள்ளது; இது எப்படி பொருந்தும்? திருவாய்மொழியாயிரத்தில் பல பல திவ்யதேசங்களன்றோ அநுபவிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றுள் தென் திருவரங்கமுமொன்று; * கங்குலும் பகலும்* என்ற பதிகமொன்றே ஸ்ரீரங்கநாதன் விஷயமாகக் காணா நிற்க, ஆயிரமும் மதிளரங்கர் வண்புகழ் மேலொன்றதென எப்படிச் சொல்லுகிறார்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம்; அதற்கு உத்தரமுரைத்தவர்கள், * கங்குலும் பகலும் பதிகத்தின் முவில்* முகில் வண்ணனடி மேல் சொன்ன சொல்மாலையாயிரம் * என்கையாலே திருவாய் மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளுக்கே ஸமரிப்பிக்கப்பட்டது; அதிலிருந்து சில திவ்ய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது; ஆனது பற்றியே “திருவேங்கடத்துக்கிவை பத்தும்’’ என்றும்’’ திருமோகூர்க்கு ஈத்த பத்திவை’’ என்றும் “இவை பத்தும் திருக்குறுங்குடியதன் மேல்’’ என்றும் ஆழ்வார் தாமேயருளிச் செய்கிறார்..... என்றார்களாம்.