விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தூயனாயும் அன்றியும்*  சுரும்புஉலாவு தண்துழாய்,* 
    மாய!நின்னை நாயினேன்*  வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்,*
    நீயும் நின் குறிப்பினிற்*  பொறுத்து நல்கு வேலைநீர்* 
    பாயலோடு பத்தர்சித்தம்*  மேய வேலை வண்ணனே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரும்பு உலாவு - வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய் - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய! - ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன் - நீசனான அடியேன்
தூயனாயும் - பரிசுத்தனாகவோ

விளக்க உரை

தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பசுசுத்ததென்னலாம்; மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;- தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்; அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்; சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.

English Translation

O Lord who wears a Tulasi wreath, O Lord of hue like ocean-deep! O Lord who lies in Ocean and the hearts of all the serving meek! O Lord the service, good or bad, by lowly-self this dog-begone, --pray take a note through gaze of love for those who seek your feet alone

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்