விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
    எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*
    வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண்ணில் நுண்பொருள் தானே - எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே;
ஏழ் இசையின் சுவை - ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்;
வண்ணம் நல்மணிமாடங்கள் - பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
இன்று என் மனத்து செறிந்து புகுந்தான் - இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான்
திண்ணம் - இது ஸத்தியம்

விளக்க உரை

பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார் (கண்ணுள் நின்று அகலான்) ஸதா பச்யந்தி ஸூரய என்கிற படியே ஸதாதர்சனம் பண்ணுவதற்கு இடமாக ஒரு திருநாடு இருப்பதாக நினையாதே இங்கேயே ஸதாதர்சனமாம்படி யிராநின்றான். (கருத்தின்கண் பெரியன்) கருத்தாவது மனோரதம்; அதில்பெரியனம என்றது-பெரிய பெரிய மனோரதங்களைப் பண்ணா நின்றானெ;னறபடி. தம்மைப் பரமபதற்தெறக் கொண்டு போவதிலும், ஆதிவாஹகரை நியமிப்பதிலும், தான் முன்னே துரந்தரனாய்க் கொண்டுபோமதிலும் அவன் பார்க்கிற பாரிப்பு தம்;மாலெண்ணி முடிக்குந் தரமன்று என்றவாறு. (எண்ணில் நுண்பொருள்) எத்தனை தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இது புரிந்துகொள்ள முடியாத ஸூகூஷ்ம விஸயமென்பது கருத்து. அவருடைய பாரிப்பு நம்மால் வாய்கொண்டு சொல்லவெண்ணாத மாத்திரமன்று; நெஞ்சுக்கும் எட்டாதபடி கஹனமானது என்கை. (பழிசையின் சுவைதானே) பரமரஸிகன் என்னலாமத்தனை, ஸப்தஸ்வரங்களுக்கு மேற்பட்ட போக்யமான வஸ்து இல்லை; அந்த ஸப்தஸ்வரங்களின் சுவையே வடிவெடுத்தவெனன்று அவருடைய ராஸிக்யத்தைக் குலாவாமேயொழிய ஆழ்வாரளவிலே அவன்கொண்ட பாரிப்புகளை நெஞ்சாலும் நினைக்கப்போகாது என்றதாயிற்று.

English Translation

The Lord beyond the intellect is inside my eyes. He is the subtle essence of the seven Svaras. The Lord of Tirupper is surrouned by jewel-mansions. He swells and fills my heart today

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்