விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குழையும் வாள் முகத்து ஏழையைத்*  தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,* 
    இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்*  இருந்தமை காட்டினீர்,* 
    மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*  அன்று தொட்டும் மையாந்து,*  இவள் 
    நுழையும் சிந்தையள் அன்னைமீர்!*  தொழும் அத் திசை உற்று நோக்கியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் தாமரை கண்ணபிரான் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான்
இருந்தமை - வீற்றிருக்கும்படியை
காட்டினீர் - நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள்,
இவள் - அதுகாணப்பெற்றவிவள்
அன்று தொட்டும் - அந்நாள் தொடங்கி

விளக்க உரை

உரை:1

(குழையும் வாண்முகத்து) ஏற்கனவே இவளுடைய ப்ரக்ருதி உங்களுக்குத் தெரிந்திருந்தும் இவளைத் துலைவில்லிமங்கலத்தேறக் கொண்டு சென்று தேவபிரானுடைய வடிவழகைக்காட்டிக்கொடுத்தீர்கள் நீங்களே யென்கிறாள் தோழி. குழையும் என்பதம் வாண்முகத்து என்பதும் தலைவிக்குத் தனித்தின விசேஷணங்கள். பகவத்விஷயமென்றால் ஊன்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பவளாயும், •••• என்கிறாப்போலே அகத்திலுள்ள வைலக்ஷண்யமெல்லாம் முகத்திலே தெரியும்படி யிருப்பவவாயுமுள்ள இவ்வேழையை என்றபடி. ஏழையை என்பதற்கு “கிடையாதென்றாலும் மீளமாட்டாத சாபலத்தையுடையவளை“ என்பது ஈடு. ஏழை யென்பதற்கு அறிவில்லாதவளென்று பொருளாய் அதிலிருந்து கிடைத்த தாற்பரியாத்தாம் இது. “நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை, பண்ணப்பணைத்த பெருஞ்செல்வம்“ என்பவாதலால் ஏழையென்ற சொல் அறிவிலியென்று பொருள்படக் குறையில்லை.

உரை:2

குழையும் மென்மையான ஒளி கூடிய முகமும் உடையவள் ; இவளைத் தொலைவில்லி மங்கலத்துக்குக் கொண்டு அவன் இருப்பைக் காட்டினீர்கள். மீளாத சபலம் உடைய இவள் பெருமானின் சுய ஒளி வீசும் தாமரைக் கண்களின் அழகில் ஈடுபட்டாள். அவன் வடிவழகு கண்டதிலிருந்து மழை நீர் போலக் கண்ணீர் வடிக்கிறாள். தேவபிரான் இருக்கும் திசையையே பார்க்கிறாள்.

English Translation

O Ladies, you took this soft radiant girl to Tulaivilli-Mangalam and showed her the Lord of lotus eyes and jewel-stealing radiance. From then on, she is in this mood, lost in thought. She looks in that direction and bows, with tears falling like rain.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்