விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
    பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*
    மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
    தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய் - எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய் - பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு
மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் - ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன்
தன் ஒப்பார் இல் அப்பன் - தன்னோடொத்தார் இல்லாத மஹான்!

விளக்க உரை

(என்னப்பனெனக்காய்) •••• என்றார்கள் மஹர்ஷிகள். எம்பெருமானாகிறன் வ்ருக்ஷத்தின் நிழலானது மிகவும் அநுகூலமானது, நரகம் தவிர்ப்பது, அதுவே அடையத்தக்கது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து, அப்படிப்பட்ட நிழலைத் தாமக அடையத்தக்கது என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. அப்படிப்பட்ட நிழலைத் தாமாக அடையப்பார்க்கவேண்டாதே எம்பெருமான் தானே தனது நிர்ஹேதுக கிருபையினால் (தன் திருவடிநிழலைத்) தமக்குக் கொடுத்தருளின மஹோபகாரத்தைப் பேசி மகிழ்கிறார். திருவடிநிழலைக்கொடுப்பதாவது திருவடிகளின் கீழேயிருந்து அத்தாணிச் சேவகஞ்செய்து ஆனந்திக்கும்படி செய்தருள்வதேயாம். •• என்கிற ஸுதர்சந சதக ஸூக்தியும் இங்கு நினைக்கத்தகும். உலகத்தில் பிதாவாயிருப்பவன் தாயாயிருக்க முடியாது, தாயாயிருப்பவள் தோழியாயிருக்க முடியாது, இப்படிப்பட்ட விருத்த தர்மங்களெல்லாம் எம்பெருமான் திறந்தே குடிகொண்டிருக்கின்ற வென்கிறார் முதலடியில். இகுளாய் என்கிறவிடத்தில் இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி, - “(இருளாய்) தோழியாய். இது தமிழர் நிர்வாஹம். நம்முடையவர்கள், செவிலித்தாய் என்று நிர்வஹிப்பர்கள், தாய்க்குத் தோழியா யிருக்குமிறே செவிலித்தாய், அத்தைச் சொல்லுகிறது.“ என்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி (“இருளாய்) இகுளையென்று தோழிக்குப்பேராய் அத்தைக்குறைத்து இகுளென்று கிடக்கிறது.“ என்று.

English Translation

My Lord and father is my mother and my faster-mother. The golden father, the gem-hued father, the pearly father, my father, -he resides in Tiru-vinnakar with golden walls around. Peerless Lord, he gave me the shade of his golden feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்