விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அருளாத நீர் அருளி*  அவர் ஆவி துவராமுன்* 
    அருள் ஆழிப் புட்கடவீர்*  அவர் வீதி ஒருநாள் என்று*
    அருள் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    அருள் ஆழி வரி வண்டே!*  யாமும் என் பிழைத்தோமே?     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி வழி வண்டே - வட்டமான ரேகைகளையுடைய வண்டே!
அருள் ஆழி அம்மானை - அருட்கடலான எம்பெருமானை
கண்டக்கால் - காணும்பொழுது (அவரைநோக்கி)
அருளாத நீர் - (இவ்வளவில்) கிருபைபண்ணாத நீர்
அருளி - கிருபைபண்ணி

விளக்க உரை

வட்டமான வரிகளையுடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், ‘அருள் செய்யாத நீர் திருவருள் புரிந்து, தலைவியினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட்கடலான கருடப்பறவையினை அவர் வீதியில் ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்’ என்று இவ்வார்த்தைகளைச் சொல்லியருள்; வாராத தாமேயன்றி, யாமும் எக்குற்றத்தைச் செய்தோம்?

English Translation

O Clever bees! If you see my compassionate Lord, pray speak to him thus; "You are unjust. Before her life withes, direct your good Garuda bird to walk through her street". Alas! What crime have we committed?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்