விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்*  அமரரைத் துயக்கும்* 
    மயக்கு உடை மாயைகள்*  வானிலும் பெரியன வல்லன்*
    புயல் கரு நிறத்தனன்;*  பெரு நிலங் கடந்த நல் அடிப் போது* 
    அயர்ப்பிலன் அலற்றுவன்*  தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துயக்கு அறு மதியில் - கலக்கமற்ற நெஞ்சில் பிறந்த
தல்ஞ்னத்துளற் - நல்ல ஞானத்தையுடையரான
அமரரை - தேவர்களையும்
துயர்க்கும் - கலங்கப்பண்ணுகிற
மயக்கு உடை- மயக்குகறி வல்லமையையுடைய

விளக்க உரை

ஐயம் திரிபுகளாகிய மயக்கம் அற்ற மனத்திலே தோன்றுகிற சிறந்த ஞானத்தையுடைய மேலான தேவர்களையும் மயங்கச் செய்கின்ற குணங்களையும் செயல்களையுமுடைய அவதாரங்கள், ஆகாயத்தைக்காட்டிலும் பெரியனவாக எடுக்க வல்லவனாய், மேகம் போன்ற கரிய நிறத்தையுடையவனாய் இருக்கின்ற இறைவனுடைய பெரிய இந்நிலவுலகத்தை எல்லாம் அளந்த சிறந்த திருவடித்தாமரைகளை மனத்தால் மறப்பு இல்லாதவனாகி, நாவால் அலற்றுகின்றவனாகி, உடலால் தழுவுகின்றவனாகிப் பொருந்தி வணங்குவேன்.

English Translation

He mystifies even the clear-thinking gods, he has wonders that would fill the sky, he has a dark cloud-hued, his lotus-feet measured the Earth, I shall forever sit and praise, adore and worship him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்