விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காரார் மேனி நிறத்து எம்பிரானைக்*  கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி* 
  ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்*  அம்மம் தாரேன் என்ற மாற்றம்*
  பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
  ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்*  இருடிகேசன் அடியாரே*  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கார் ஆர் - மேகத்தோடு ஒத்த;
மேனி நிறத்து - திருமேனி நிறத்தையுடைய;
எம் பிரானை - கண்ணபிரானைக் குறித்து;
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி - வாஸனை வீசாநின்றபூக்களை அணிந்த கூந்தலையுடைய யசோதை;
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் - ”(எவ்வளவு குடித்தாலும்) திருப்திபிறவாத இனிய ஸ்தந்யத்தை இதுவரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்;

விளக்க உரை

ஆராவின்னமுது= யசோதைப் பிராட்டியின் முலை, பூதனையின் முலைபோல் விஷந்தடவப் பெற்றிராமையால், அம்முலையிற்பால் அமுதாகச் சொல்லப்பட்டது.[தருவன் நான் அம்மம் தாரேன்.] ‘தருவன்’’ என்ற எதிர்கால வினைமுற்று (வழுவமைதி யிலக்கணப்படி) ‘தந்தேன்’’ என்ற இறந்தகாலப் பொருளைத் தந்தது மன்றி, ‘தந்த நான் அம்மந்தாரேன்’ என்று பெயரெச்சப் பொருளையுந் தந்தவாறு காண்க: ஆகவே இவ்வினைமுற்று-முற்றெச்சம் என்றற்பாற்று.

English Translation

This decad of sweet songs by Pattarbiran, King of famous Puduvai recalls the words of fragrant coiffured Yasoda to the cloud-hued Lord weaning him from breast milk. Those who sing it well will become devotees of the Lord Hrisikesa.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்