விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
    நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*
    தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
    பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள திங்கள் – பருவம் நிரம்பாத சந்திரன
சிறை விடுத்து – (அந்நோயாகிய) நிறைத்துன்பத்தினின்று விடுவித்து
ஐவாய் பாம்பின் அணை பள்ளி கொண்டாய் – ஐந்து தலையையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தில் அறிதுயில்கொண்டருள்பவனே!
பரஞ்சோதை – எல்லாவொளிகளினுஞ்சிறந்த ஒளியையுடையவனெ!
வேம்பின் புழு – வேப்பமரத்திலுண்டான புழுவானது

விளக்க உரை

திங்கள் சிறைவிடுத்த வரலாறு வருமாறு:-சந்திரன் தக்ஷமுனிவனது புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்ரங்களையும் மணஞ்செய்து கொண்டு அவர்களுள் ரோஹிணி யென்பவளிடத்து மிகவும் காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங்கூடி வாழ்ந்திருக்க, மற்றை மகளிரின் வருத்தத்தை நோக்கிச் சினங்கொண்ட அம்முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தால் சந்திரன் பதினாறு கலைவடியாகவுள்ள தனது உடல் நாளடைவிற் குறைபலனாகி அங்ஙனம் தனக்கு விரைவில் நேரக்கடவதான அழிவைப் போக்கிக் கொள்ளுவத்றகு வேறு புகலிட மொன்றுங்காணாமல் சிந்தித்து ஸ்ரீரங்க சேஷத்ரத்தை யடைந்து அங்குள்ள நவ தீர்த்தங்களிலொன்றும் கோயிலின் வட புறத்தே யுள்ளதுமான புண்யதீர்த்தத்தில் நீராடி அதன்கரையில் ஒரு புன்னைமரத்தின் நிழலில் இருந்து ஸ்ரீரங்கநாதனைக் குறித்துத் தவஞ்செய்ய, அந்நம்பெருமாள் அவனுக்குப் பிரத்யக்ஷமாகி, மீண்டும் கலைகள் நாள்தோறும் வளர்ந்து வரும்படி அநுக்ரஹித்தனனென்பதாம். அத்திவ்விய தீர்த்தம் இதனால் சந்த்ரபுஷ்காரிணியென்று பெயர் பெற்றது. ஸ்ரீபட்டர் அருளிச் செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் இப்புஷ்காரிணியைப் பற்றின ச்லோகத்தில் “யஸ்யா அப்யாஸதோபரமகமா;ஷணீநாம் சந்த்ரஸ் ஸுதாதீதிதிதாமவாப.” என்றது காண்க. “கோள்வாய் மதியம் நெடியான் விடுத்தாங்கு” (சீவக சிந்தாமணி) எனப் பிறவிடத்தும் திருமால் சந்திரனுக்கு உதவியதாகக் கூறுதல் காண்க. சந்திரன் தர்மகசிபருடைய சாபத்தினால் தனது கலைகள் குறையலுற்றறு வந்து தவஞ்செய்து ஸ்ரீரங்கநாதனது கிருபையினாற் பழையபடி கலைநிரம்பப் பெற்றனனென வரலாறு வழங்குதலுமுண்டு. தேம்பல்-இளைத்தல் தொழிற்பெயர்; தேம்பு-பகுதி; அல்-விகுதி; சிறைவிடுத்துஸ்ரீசிறையாவது காவல்; நிர்ப்பந்தம். இங்குத் துன்பத்துக்கு இலக்கணை. ‘நான்’ என்று மாத்திரஞ் சொன்னால் அஹங்காரமென்கிற யானென்னுஞ் செருக்குத் தோன்றுமென்று ‘அடியேன் நான்’ என்றார். இயற்கையில் கரும்பாயிருக்கிற நீ என் திறத்திலே வேம்பாக ஆனாலும் உன்னவீ நான் விடமாட்டேனென்றது போலவே, இயற்கையில் உனக்கு அடியவனாயிருக்கிற நான் அவ்வடிமை மாறப் பெற்றாலும் உன்னவீ விடமாட்டேனென்பதாக ‘பின்னும்’ என்ற சொல்லுக்குக் கருத்துரைப்பர்சிலர். ‘தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப் பாம்பினணைப் பள்ளிகொண்டாய்’ என்ற தொடர் அடுத்த பரசுரத்தில் வருகிற அரங்கநகரப்பனைக் குறித்ததாம். “துண்ட வெண்பிறையின் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ்பொழில் சூழரங்கநகர் மேயவப்பன்” என்ற திருப்பாணாழ்வார் பரசுரம் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. சந்திரனது உட்குறையைப் போக்கின நீ என் மனக்குறையையும் போக்குவாயென்பது ‘தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து’ என்றதன் குறிப்பு.

English Translation

O Lord who rid the waning Moon of his misery! O Radiant Lord reclining on the five-hooded snake! Just as a caterpillar growing on the bitter Neem tree still eats only Neem, I seek none other than yourfeet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்