விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீற்றம்உள*  ஆகிலும் செப்புவன்,*  மக்கள்- 
    தோற்றக்குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*
    காற்றத்து இடைப்பட்ட*  கலவர் மனம்போல்,*
    ஆற்றத்துளங்கா நிற்பன்*  ஆழிவலவா!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி வலவா – சக்கரப்படையைப் பிரயோகித்தலில் வல்லவனே!
சீற்றம் உள ஆகிலும் – நீ கோபிக்கும்படியான குற்றங்கள் (என்னிடம்) உள்ளனவானாலும்
காற்றத்து இடைபட்ட கலவர் மனம் போல் – பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலே யுள்ளாரது மனம்போல
ஆற்ற – மிகவும்
துளங்கா நிற்பவன் – நடுங்கிநிற்பேன்

விளக்க உரை

சீற்றமுளவாகிலுஞ்செப்புவன் என்ற விதற்கு = வசநபூஷண ரீதியிலே யோஜநாபேதமான அர்த்தமுமொன் றுண்டு சீற்றமுளவாகிலும்-(மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொல்; என்று யான் உன்மேற் குறைகூறுவதனால் உனக்குக்) கோபமுண்டாகுமானாலும் செப்புவன்-(சீற்றத்தை ஜீவிக்கவொட்டாத உன்னுடைய க்ருபையையும், சீற்றங்கண்டு அஞ்சி வாய்மூடியிருக்க வொண்ணாதபடி கரையழிந்து செல்லுகிற ஸம்ஸார் ஆர்த்தியையும், சீறியெடுத்து எறியிலும் வேறுபுகலில்லாமையாகிற அநந்ய கதித்வத்தையுங்கொண்டு) விண்ணப்பஞ் செய்கிறேன் என்பதாம். ‘கீழ்ப்பண்ணின அபசாரங்களாலே சீற்ற மிருந்தாலும்’ என்பது பெரியவாச்சான்பிள்ளை கொண்ட பொருள்; ‘இப்போது அடியேன் சொல்லப்போகிற வார்த்தையினாலே சீற்றமுண்டானாலும்’ என்பது பிள்ளைலோகாசாரியா; கொண்ட பொருள். இவ்வளவே வாசி. (ஸ்ரீ வசந பூஷணம் மூன்றாம் பிரகரணத்தின் முடிவில்- “சீற்றமுள வென்ற அநந்தரத்திலே இவ்வார்த்தத்தைத் தாமே அருளிச்செய்தரிறே. சீற்ற முண்டென்றறிந்தால் சொல்லும்படி யென்னென்னில்; அருளும் ஆர்த்தியும் அநந்யகதித்வமும் சொல்லப்பண்ணும். சீறினாலும் காலைக்கட்டிக் கொள்ளலாம்படி யிருப்பானொருவனைப் பெறறறால் எலலாம் சொல்லலாமிறே” என்றுள்ள ஸ்ரீஸூக்திகளும் அவற்றின் வியாக்கியானமும் இங்கு அறியத்தக்கன. “மக்கள் தோற்றக்குழி தோற்றவிப்பாய்கொல்” என்றதன் கருத்தாவது - நீ சீற வேண்டும்படியான கருமங்களை நான்செய்து அவற்றின் பயனாகச் சில பிறப்புக்களிலே நான் செல்லநேர்ந்தால் தடுத்து என்னை மீட்காமல் அநுமதிபண்ணி உதாஸீநர்போலே யிருந்து விடுகிறாயோ? என்பதாம். வுரிலக்காமையே மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பதாகக் கூறப்படுகிறது. பரமாத்மா கைவிடுதலே ரிவாத்மாவின் பிறவித் துயர்க்கு ஹேது. கிணற்றில் விழுங் குழந்தையைத் தாய் எடாதிருந்தால் தாயே தள்ளினாள் என்கைக்குத் தட்டில்லையே.

English Translation

O Deft discuss spinner! This may vex you, but say it I must. Like seafarers caught in a storm, my heart shudders. I dread the thought that you may cast me into the dungeon of Birth and worldly life again!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்