விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
    உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட
    சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
    அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெறி ஆர்  – பரிமளம் மிக்க
கரு கூந்தல் – கரிய கூந்தலையுடைய
ஆய்ச்சியர் – இடைச்சிகளாலே
வைத்த – சேமித்துவைக்கப்பட்டதாய்
உறி ஆர் – உறிகளிலே பொருந்தியதாய்

விளக்க உரை

ஸர்வேச்வரனை நினைத்தறியாதவாகள் எத்தனையேனும் சாஸ்த்ரஜ் ஞானத்தாலே சீரியர்களாயினும் அறிவில்லாதவர்களேயாவர் என்றாயிற்று. “ஒண்டாமரையாள் கேள்வனொருவனையெ நோக்குமுணர்வு” என்கிறபடியே எம்பெருமானை அறியுமதுதே அறிவாதலால் “செங்கணெடியானைச் சிந்தித்ததற்யாதர் என்று மறியாதர்” என்னக் குறையில்லையென்க.

English Translation

The lotus-eyed Lord senkanmal came as a child and enjoyed eating the fragrant butter from the rope shelf, kept by the fragrant-coiffured cowherd dames. Those who do not contemplate and realise him are forever ignorant, we know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்