விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-
    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ததும்ப – செறிய
ஆ ஆ என்று – ஐயோவென்று
தொண்டர்க்கும் – பக்தர்களுக்கும்
அமரர்களுக்கும் – தேவர்களுக்கும்
முனிவர்க்கும் – ரிஷிகளுக்கும்

விளக்க உரை

அண்டபித்தியையும் அளாவிச்சென்று அலையெறிகின்ற மஹா ப்ரளயவெள்ளம் பரந்தவளவிலே ‘ஐயோ! நம்முடைய உலகுக்கு இப்படிப்பட்ட அநா;த்தம் விளைந்திட்டதே!’ என்று திருவுள்ளம் நொந்து ஹாஹாகாரம்பண்ணித் தொண்டர்க்கும் தேவாகட்கும் முனிவாகட்கும் மற்றுமுள்ளார்க்கும் மஹா க்ருபைபண்ணி ஏழுலகங்களையும் திருவயிற்றினுள்ளே வைத்து உஜ்ஜீவிப்பித்தருளின பரமோதாரனாய் நீலமணிவண்ணனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமான திருக்குடந்தை நகரைப் பாடி யாடுங்கோளென்கிறார். உண்டு ஒத்த திருவயிறு ஸ்ரீ ஏழுலகங்களையும் உட்கொண்ட வயிறு மிகப் பருத்திருக்க வேணுமே; அப்படியில்லை; உட்கொள்வதற்கு முன்பு எங்ஙனமிருந்ததோ அங்ஙனமேயிருந்தது, (அல்லது) மற்ற அவயவங்களைப் போலவே யிருந்தது என்றவாறு.

English Translation

When the floor of the Universe disappeared under the deluge waters, the Lord came full of grace saying, Oh! Oh!", and protected his devotees, gods and celestials by taking them into his stomach. The benevolent Lord of tem-hue resides in cool kudandai city. Sing and dance his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்