விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்ஆரும் காணாமே*  பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,* 
    ஆரானும் அவனுடைய திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது,*  உள்ளத்து-
    ஓராத உணர்விலீர்! உணருதிரேல்*  உலகுஅளந்த உம்பர் கோமான்,* 
    பேராளன் பேரான*  பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவனுடைய திருவயிற்றில் – அப்பெருமானுடைய திருவயிற்றில்
நெடுங்காலம் கிடந்த்து – வெகுகாலம் வரையில் அடங்கியிருந்ததை
உள்ளத்து – நெஞ்சிலே
ஓராத – சிந்திக்கப்பெறாத
உணர்வு இலீர் – மூடர்களே!

விளக்க உரை

இப்பூமண்டலத்தில் ஒருத்தரையுங் காணவொண்ணாதபடி எங்கும் தானேயாய்க் கொண்டு கடல்வெள்ளம் பரம்பினகாலத்திலே ஒருவர் தப்பாமல் எம்பெருமானுடைய திருவயிற்றிலே நெடுங்காலம் கிடந்து ஸத்தை பெற்ற தன்மையை ஆராயமாட்டாத அறிவு கேடர்காள்! நீங்கள் பெற்றிருக்கிற சைதந்யம் பயன்படவேண்டில், தன்னுடைய ஸர்வஸ்வாமித்வம் தோன்ற பேசிக்கொண்டிருத்தல் உங்கட்குத் தக்கதாம் என்றராயிற்று.

English Translation

O Foolish people! Do you not realise that when not a bit of land could be seen and the whole world was one big ocean, everyone was in his auspicious stomach for a very long time? If you can understand this, prate the thousand names of the Lord of gods who measured the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்