விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பனிப்பரவைத் திரைததும்ப*  பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*  
    இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று*  உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*
    முனித்தலைவன் முழங்குஒளிசேர்*  திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட* 
    கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே*  கழல் தொழுமா கல்லீர்களே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பனி பாவை – குளிர்ந்துபரந்திருக்கிற
திரை – அலைகளானவை
ததும்ப – எறியும்படி
நெடுங்கடலே ஆன சாலம் – மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது
இவர்க்கு – இவ்வுலகத்தார்க்கு

விளக்க உரை

முனித்தலைவன் = நெஞ்சினுள்ளே சிந்தை செய்பவதற்கு முனி யென்று பெயர்; எப்போதும் உலகங்கட்கு நன்மையைச் சிந்தை செய்பவனான தலைவன் என்றபடி. இவ்வுலகங்களெல்லாம் திருவயிற்றினுள்ளே புகம்போது உண்டாகக்கூடிய ஆரவாரத்தின் மிகுதியைச் சொல்லுகிறது ‘முழங்கொலிசேர்திருவயிறு’ என்று.

English Translation

When the whole Earth was covered by the cold rocking waters of one big ocean the Lord appeared says, "They have no protection only more", and took the whole Universe into his great bit golden stomach. He is the ripe Kalakkal-fruit-hued Lord and master of the sages. He is your protector. Yet you have not learnt to worship him with single-minded devotion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்