விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நில்லாத பெருவெள்ளம்*  நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,* 
    மல்ஆண்ட தடக்கையால்*  பகிரண்டம்  அகப்படுத்த காலத்து,*  அன்று-
    எல்லாரும் அறியாரோ*  எம்பெருமான்  உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,* 
    அல்லாதார் தாம்உளரே?*  அவன்அருளே  உலகுஆவது அறியீர்களே?     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெடு விசும்பின் மீது – நெடுகிய ஆகாசத்தின் மீது
ஓடி – வழிந்தோடி
நிமிர்ந்தகாலம் – ப்ரவஹித்தபோது
மல் ஆண்ட தடகையால – மிடக்கையுடைய பெரிய திருக்கையினாலே
பகிரண்டம் – பகிரண்டங்களை

விளக்க உரை

ஓரிடத்திலும் நிலைநில்லாதே பேராரவாரத்துடன் பெருகி வருகின்ற மஹாப்ரளயவெள்ளமானது அபாரிச்சிந்நமான ஆகாசத்துக்கு மேலேபோய்ப் பெருகுங்கால் “அண்டரண்டபகிரண்டத் தொருமாநில மெழுமால்வரை முற்றும்” என்கிறபடியே எல்லாப் பொருள்களையும் தனது மல்லாண்ட திண்டோளாலே வாரிப்பிடித்துத் திருவயிற்றிற் புகப்பெய்தருளின காலத்திலே அயனரனிந்திரன் முதலான எல்லாத் தெய்வங்களும் எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் என்பதை அறியாதாருண்டோ? அப்படி எச்சிலாகாதே தப்பிநின்ற தெய்வம் ஒன்றுமில்லை என்பதை இன்று நாமுரைக்கவேணுமோ? உலகத்தினுடைய ஸத்தை அப்பெருமானுடைய அநுக்ரஹரதீனமென்பதை அறியமாட்டீர்களோ? இனியாகிலுமறிந்து தொண்டர்காள்! அண்டனையே ஏத்தீர்களே. பகிரண்டம் என்ற வடசொல் பரமபதத்துக்குப் புறம்பான மற்ற அண்ட ஸமூகங்களைச் சொல்லவுமாம்; பிரளயவெள்ளத்திற்கு வெளிநிலமான பரமபதத்தைச் சொல்லவுமாம்.-“ஸர்வேச்வரன் பிரளயம் சென்று அடராதபடி தன் திருக்கையாலே பரமபதத்தைத் தன் கைக்கீழ் யிட்டுக் கொண்டு நின்றகாலமென்னவுமாம்” என்ற வியாக்கியான வாக்கியங்காண்க.

English Translation

When the restless ocean flood rose to the sky and submerged everything, the Lord with battle-strong arms held the universal space outside its reach. Does no one remember those days? Is there a single god who is not the stuff that the Lord ate and regurgitated? Do they not see that the whole world exists by his grace?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்