விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
    வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*
    வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
    உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏடீ – தோழீ!
கள்ளத்தால் – கபடவேடித்தினால்
மாவலியை – மாவலியிடத்தில்
மூ அடி மண் கோண்டு – மூன்றடிமண்ணை இரந்து பெற்று
அளந்தான் – அளந்துகொண்டவன்

விளக்க உரை

தோழீ! நீ உகக்கும் பெருமான் பிரமாணிகனல்லன்; க்ருத்ரிம வேஷத்தாலே மாவலி பக்கலில் மூவடிமண் வாங்கி மூவுலகுமளந்தவனாகையாலே நயவஞ்சகன்; அது கிடக்கட்டும் ஒருவர்க்கும் சென்று கிட்டவொண்ணாதபடி எங்கேயோ திருப்பாற்கடலிலும் திருவேங்கடமலையிலும் இருப்பவனாகச் செல்லுகிறார்களேயன்றி ஸந்நிஹிதனல்லனேயென்ன தோழீ! இவ்வளவேயோ நீயறிந்தது? திருமங்கையாழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து வஸிப்பதற்கு உபாயாநுஷ்டாநம் செய்கிறபடியாகவன்றோ அவன் திருப்பாற் கடலிலும் திருமலையிலும் வஸித்தது; இப்போது அவ்விடங்களையெல்லாம் விட்டு ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே ஸந்நிஹிதனாயுளன்காண்க என்கிறாள்.

English Translation

"Aho, Sister! By the deceit he practised in measuring three strides of land, they say he resides in the Ocean of Milk and in Venkatam, see!". "Though residing in the ocean of Milk and in Venkatam, he resides permanently in the heart of Kalikanri also, So tally!".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்