விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்றப் பறைகறங்க*  கண்டவர்தம் கண்களிப்ப,* 
    மன்றில் மரக்கால்*  கூத்துஆடினான் காண் ஏடீ,*
    மன்றில் மரக்கால்*  கூத்து ஆடினான் ஆகிலும்,* 
    என்றும் அரியன்*  இமையோர்க்கும் சாழலே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பறை கறங்க – பறைகள் ஒலிக்கவும்
கண்டவர் தம் – பார்த்தவர்களினுடைய
கண் – கண்களானவை
களிப்ப – கனிக்கவும்
மன்றில் – நாற்சந்திகளிலே

விளக்க உரை

ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் நாற்சந்திகளிலே நின்று மரக்கால் கூத்தாடினமையைச் சொல்லி ஏசிப் பேசுகிற தோழியின் பரசுரமாகச் செல்லுகின்றன முன்னடிகள்; மரக்கால் கூத்தாவது என்னென்னில்; குடங்களை யெடுத்தெறிந்து ஆடுவதொரு கூத்துப்போலே மரக்கால்களை யெடுத்தெறிந்து ஆடுவதொரு கூத்துக்கு மரக்கால் கூத்தென்று பெயர் என்பர்சிலர்; இது வ்யாக்கியானத்திற்குப் பொருந்தாது; “மரத்தைக் காலிலே கட்டி ஆடினான்காண்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. இதற்குச் சேரப்பொருள் கூறவேண்டில், மிக நீண்டதொரு கொம்பை நிலத்திலே நிறுத்தி அதன்மேலே கால்கட்டை விரலை ஊன்ற வைத்துக்கொண்டு அந்தரத்திலே ஆடுவதொரு கூத்து மரக்கால் கூத்தெனப்படுமென்பதே தகுதி. தோம்பரவர்போலே இப்படி மரக்கால் கூத்தாடுகிறவனையோ தோழீ! நீ பரமபுருஷனாகப் போற்றுவது? என்று தோழி சொல்ல இமையோர்க்கும் அரியவனான பெருமானிவன் என்றறிந்திலையே; அப்படிப்பட்டவனுக்கு உண்டான தாழ்வு குணமேயன்றிக் குறையன்றுகாண் என்று உணர்த்துகிற முறைமையிலே பின்னடிகளில் மறுமொழி கூறிற்றாயிற்று.

English Translation

"Aho, Sister! With drums beating like wild, he danced on stilts in the crossroads, entertaining passers-by See!". "Yes but even if he danced on stilts in the crossroads, he is always hard to attain even by the gods, so tally!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்