விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண*  முதலோடு வீடும் அறியாது,* 
    என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப*  எழில் வேதம் இன்றி மறைய,*
    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,* 
    அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த*  அது நம்மை ஆளும் அரசே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண் இது வந்தது என்ன – திடீரென்று இப்படியான விது என்னோ? என்று
திசைப்ப – திகைத்து நிற்கும்படியாகவும்
எழில் வேதம் – அழகிய வேதங்கள்
இன்றி முறைய – இல்லாமல் மறைந்து போனவளவிலே
பின்னையும் – மீண்டும்

விளக்க உரை

ஹம்ஸரவதார வரலாற்றைப் பேசும் பாசுரம் இது. முன்னொரு காலத்தில் மதுகைடபரென்ற அசுர்ர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபஹாரித்துக்கொண்டு கடலில் முழுகி மறைந்துவிட, ஞான வொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் போரிருள் மூடி நலியா நிற்க, பிரமன் முதலியோரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றும் செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ள மிரங்கித் திருமால் கடலினுட்புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளினன்; இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடக் கூறுவதலுமுண்டு.

English Translation

Long ago lwhen the worlds were engulfed in darkness, the celestials, not knowing the origin or the end, despaired and asked, "What has happened to us?". Even the Vedas disappeared in answer to the prayers of gods and sages, the Lord came as a swan and divulged the sacred texts, lifting the darkness of the world and pleasing all. That Avatara is our protector and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்