விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்னெஞ்சே! நம்பெருமான்*  நாளும் இனிதமரும்,*
    அன்னம்சேர் கானல்*  அணியாலி கைதொழுது,*
    முன்னம்சேர் வல்வினைகள் போக*  முகில்வண்ணன்,*
    பொன்னம்சேர் சேவடிமேல்*  போதணியப் பெற்றோமே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்நெஞ்சே – நல்லமனமே!
நம் பெருமான் – நமக்கு ஸ்வாமியானவன்
நாளும் – எப்போதும்
இனிது அமரும் – திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமாய்
அன்னம் சேர் கானல் – அன்னப்பறவைகள் சேர்ந்து வாழ்கிற நெய்தல் நிலங்கள் யுடையதாய்

விளக்க உரை

ஆகாசம் பாராதே ஆறு கடவாதே மலையுமேறாதே நாமிருந்த திருவாலி நாட்டிலே எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கும்படியான பாக்கியம் பெற்றோமே; கைப்பட்ட பொருளைக் கணிசியாமல் கைக்கு எட்டாப் பொருளை ஆசைப்பட்டு உடம்பு வெளுக்க வேண்டாதே இருந்தவிடத்தில் தானே எம்பெருமான்றன் திருவடி மலர்களைச் சூடிப் புனிதராகப் பெற்றோமே! என்று உகப்போடே தலைக்கட்டுகிறது. இதுதானும் நெஞ்சு இசையப்பெற்றதனாலுண்டான பேறன்றோவென்று முந்துற நெஞ்சைக் கொண்டாடுகிறார். கீழ்ப்பாட்டில் நன்னெஞ்சே! என்றது-அதுகூலிக்கைக்காகக் கொண்டாட்டம்; இப்பாட்டில் நன்னெஞ்சே! என்கிறவிது அநுகூலித்ததற்குக் கொண்டாடுகிற கொண்டாட்டம்.

English Translation

O Good Heart! The Lord resides permanently in swan-lake-surrounded-fertile-fields Tiruvali, Offering flowers at the golden hued feet of the dark-cloud Lord, we have rid ourselves of our age-old karmic past!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்