விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே*  ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
    சூடோமே*  சூடும் துழாயலங்கல்? சூடி,*  நாம்
    கூடோமே கூடக்*  குறிப்பாகில்? நன்னெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூடோமே – அணிந்துகொள்ளமாட்டோமோ?
சூடி – அப்படி அணிந்துகொண்டு
கூட – அவனோடு கூடுகைக்கு
குறிப்பு ஆகில் – உன் இசைவு உண்டாகில்
நாம் கூடோமே – நாம் கூடப்பெற மாட்டோமோ?

விளக்க உரை

“மந ஏவ மதுஸ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ” என்று நன்மை தீமைகளுக்கு நெஞ்சமேயிறே காரணமாக சாஸ்திரங்களிற் சொல்லப்பட்டுள்ளது. “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோப்” என்கிறபடியே நெஞ்சு அநுகூலிக்கப் பெற்றதாகில் அருமை யானதொன்றுமில்லை யன்றோ. இவ்விஷயமே இப்பாட்டில் வெளியிடப்படுகிறது. குறிப்பாகில் என்பதற்கு ‘எம்பெருமானுக்குத் திருவுள்ளமாகில்’ என்றும் பொருள் கூறுவர். ஏம்பெருமானுக்குத் திருவுள்ளமாகில் அரியதும் எளிதாகும்; அஃது இல்லையாகில் எளிதும் அரியதாகும் என்க.

English Translation

O Good Heart! Do we not sing the Lord;s praise? Do we not recite his thousand names and dance? Do we not recall his names and wear the Tulasi garland worn by him? Wearing if, -if he desires it, -will we not unite with him as well?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்