விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
    என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*
    பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
    அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆவன்மேய – (அந்த எம்பெருமான் விரும்பி வர்த்திக்குமிடமாய்
அண்ணல் – சிறந்ததான
மயலயம் – திருவேங்கட மலையையும்
ஆரங்கமும் – திருவரங்கத்தையும்
பாடோமே – பாடுகைக்குத் தடையுடையரா யிருக்கிறோமோ?

விளக்க உரை

“நோக்கி நோக்கியுன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே, நாக்குநீள்வன் ஞானமிலலை நாடோறுமென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளுமல்ல, புறத்தினுள்ளும் நீக்கமின்றியெங்கும் நின்றாய் நின்னையறிந்தறிந்தே” எனற் பாசுரத்தின் கருத்தை ஈண்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும். எம்பெருமான் தம்முடைய ஸகல அவயவங்களிலும் புகுந்து நிற்கச் செய்தேயும் அதில் த்ருப்தி பெறாதே கண்ணாற் காணப் பெற வேணுமென்று ஆசைப்பட்டு வருந்தின நம்மாழ்வாரைப்போலே இப்பரகால நாயகியும் தனது நெஞ்சினுள்ளே எம்பெருமான் உறையப்பெற்று வைத்தும் திருப்தியடையாதே வளையிழக்கிறாள் காண்மின். எம்பெருமான் தூரஸ்தனாயிருந்தால் விரஹம் பொறாதே மேனி மெலிந்து வருந்துதல் தகுதியே; அவன் என் மனத்தினுள்ளே யிருந்து ஸந்நிஹிதனாய் நிற்கச்செய்தேயும் இங்ஙனே என் மேனி மெலிவதற்கு என்ன காரணமோ? இது ஆச்சரியமான ஸம்பவமாயிருக்கின்றதே! என்கிறாள் முன்னடிகளில். பணப் பையிலே ஏராளமான பணம் கடக்கச் செய்தேயும் புறங்கால் வீங்குவாரைப்போலே யாயிற்று இந்த நாயகியின்படியும். சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய்க் கண்ணெதிரே வந்தருளி ஸேவை ஸாதியாமல் உள்ளே யுறைந்து மறைந்துகிடக்குமதனால் என்ன பயன்? என நினைத்திருக்கிறாளாயிற்று. பெண்ணானோம் பெண்மையோம்=பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மையை நன்றாகக் காப்பாற்றிக் கொண்டோமானோம்; கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கைகளை கழலப்பெறுகின்ற நமக்கும் பெண்மைக்கும் வெகுதூரமுண்டு என்றபடி. (நிற்க) இந்த விஷயமெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், “குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவி காத்திருப்பேனே” என்றாற்போலே உள்ளவரையில் ஆவியகை; காத்திருப்பதற்காக, அவன் விரும்பியுரையும் திவ்ய தேசங்களைப் பாடுகையில் ஒரு தடையுடையராயிருந்தோமோ? கைவளைகள் கழன்றொழிந்தா லொழியட்டும் பெண்மைக்குக் கேடு வந்தால் வரட்டும்; அவன் விரும்பியுறையும் திருமலையையும் திருவரங்கத்தையும் பாடுதும் என்றாளாயிற்று.

English Translation

Even though we have placed krishna in our hearts, I wonder why the bangles on our hands do not stay! What mysteries are these? Well have we girls taken care of our femininity ! And yet, we shall not fall to sing the praises of Venkata and Arangam, where he resides.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்