விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*
    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெறி ஆர் – பாரிமளம் மிக்க
பொழில் சூழ் – சோலைகளாலே சூழப்பட்டு
வியன் – வியக்கத்தக்கதான
குடந்தை – திருக்குடந்தையிலே
மேவி – பொருந்தியிருப்பவரும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அன்னே யிவரையறிவன்” என்ற பரகால நாயகியை நோக்கித் தோழியானவள் ‘நங்காய்! இவரை எங்ஙனே அறிந்தாய்? ‘இன்னாரென்றறியேன்’ என்று முன்பு சொன்னாய்; இப்போது அறிவேனென்கிறாய்; பொருந்தாத வார்த்தை யாயிருக்கின்றதே!’ என்ன் இவரை நான் அறிவெனென்பதே உண்மையென்கிறாள். இவரையறியோம் என்று நான் எங்ஙனே சொல்லக்கூடும்? “இங்கே போதுங்கொலோ இனவேல் நெடுங்கண் களிப்பக், கொங்கார்சோலைக் குடத்தைக் கிடந்தமால் இங்கே போதுங்கொலோ” என்று நான் மநோரதித்த படியே வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவியான பெருமானன்றோ எழுந்தருளியிருக்கிறார்; ‘இவன் இதைத் திருடினான்’ என்று சொல்லவொண்ணாதபடியான இளம்பிராயத்தையுடையனாய்ப் பொய்யடியிட்டுப் போய்ப்புக்கு உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ‘ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சமுள்ள த்ரவ்யத்தை உட்கொள்ளப் பெற்றோம்’ என்று உகந்தாப் போலே என்னைத் தழுவியணைத்துத் தலைதடுமாறாகப் பாரிமாறி ஆநந்தத்தின்மேலெல்லையிலே யிருக்கினற இவரை ‘அறியோம்’ என்று எங்ஙனே சொல்லக்கூடு மென்கிறாள்.

English Translation

He resides in the fragrant groves-surrounded Kudandai. He came as a little child and quickly waklked over to the rope-shelf, and ate butter, with pleasure, How can we say we do not know him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்