விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னே! இவரை*  அறிவன், மறைநான்கும்*
    முன்னே உரைத்த*  முனிவர் இவர்வந்து*
    பொன்னேய் வளைகவர்ந்து*  போகார் மனம்புகுந்து*
    என்னே இவரெண்ணும்*  எண்ணம் அறியோமே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை நான்கும் – நால் வேதங்களையும்
உரைத்த – (நான்முகனக்கு)உபதேசித்த
முனிவர் – முனிவராவர்
வந்து – (ஒருகால் என்பக்கலில்)வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து – பொன்மயமான கைவளைகளை விரும்பி

விளக்க உரை

இன்னாரென்றறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார்சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” என்ற வாயாலே “அன்னே யிவரை யறிவன்” என்கிறாள். எம்பெருமான் எனது பொன்வளையிலே ஆசை கொண்டவராய் என்னெஞ்சிற் புகுந்து போகாதே யிருக்கிறார்; இவர் என்னை என்னென்ன செய்யக் கருதியிருக்கிறாரோ அறியேன் என்கிறாள் பின்னடிகளில். என் வளையில் ஆசை வைத்திருக்கிறார் என்றது - எனக்கு உடனே பிரிவை உண்டாக்கி உடலை இளைப்பித்து வளைகள் கழன்றொழியுமாறு செய்யவே கருதி யிருக்கின்றார் என்றபடி. இப்போது இவர் மனம் புகுந்து போகாமலிருக்கிறது உடனே பிரிவுக்கு இட்ட அடியாம் என்கை.

English Translation

O Dear companion! I know this person. He is the one who came as a sage in the yore and discoursed the four vedas. Today he comes to steal our bangles, enters our hearts, and does not leave. Alas! We do not know what is in his mind.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்