விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருந்தான் என்னுள்ளத்து*  இறைவன், கறைசேர்*
    பருந்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த, செங்கண்*
    பெருந்தோள் நெடுமாலைப்*  பேர்பாடி ஆட*
    வருந்தாது என் கொங்கை*  ஒளிமன்னும் அன்னே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கண் – செந்தாமரைக் கண்ணனும்
பெருந்தோள் – பெருமைதங்கிய திருத்தோள்களையுடையனுமான
நெடுமாலை – ஸர்வேச்வரனுடைய
பேர் – திருநாமங்களை
பாடி ஆட – வாயாரப்பாடிக் கூத்தாட

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தோன்றின வருத்தம் சிறிது தலைமடிந்து மகிழ்ச்சி தோற்றப் பேசுகிற பாசுரம் இது. எம்பெருமான் இனி விட்டுப் போகிறவனல்லானாக என் ஹ்ருதயத்திலே புகுந்திருக்கின்றான். ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு அரைகுலைய மடுவின் கரையிலே ஓடிவந்து அருள்செய்த வாத்ஸல்யமெல்லாம் திருக்கண்களிலே தோன்றும்படியிராநின்றான். இஷ்டப்பட்ட எம்பெருமானுடைய திருநாமங்களை ப்ரீதிக்குப் போக்குவீடாகப்பாடி உடல் இருந்தவிடத்திலிருக்கமாட்டாதே ஆடுமளவில் என் கொங்கைகள் வருத்தந்தீர்ந்து புகர் பெறுகின்றபடி பாராய் என்கிறாள். (கறைசேர்) கறை என்னுஞ்சொல் பல பொருள்களையுடையது; உரல் என்கிற பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. இனி, உதிரம் என்ற பொருளும் கொள்ளத் தக்கதே, முதலையின்வாய் கௌவப்பெற்று விரணத்தினால் ரக்தமொழுகப் பெற்ற கால் என்றப்படி. பரசுரத்தின் முடிவிலுள்ள அன்னே என்பதைப் பாதபூரணமாகவுங் கொள்ளலாம், தோழீ! என்றபடியாகவுங் கொள்ளலாம்.

English Translation

O Dear companion! The Lord in my heart is the strong-armed, red-eyed, ancient Lord who graced the heavy-footed elephant Gajendra in distress. Singing and dancing his praises, my breasts, no more sad, are regaining their colour.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்