விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
    பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*
    தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
    என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவற்கு – எம்பெருமானுக்கு
என் இலங்கு சங்கோடு – எனது ஒளிமிக்கவைகளைகளையும்
எழில் – அழகையும்
தோற்றிருந்தேன் – இழந்திரா நின்றேன்
இது காணீர் – இவ்விருப்பைக் காணுங்கோள்

விளக்க உரை

பலபல அரசர்கள் திரண்டு கிடந்த பாரதப் போரிலே பாண்டவர்கட்கு வெற்றியுண்டாக்குமாறு பார்த்தஸாரதியா யிருந்து தேரை நடத்தினவனும், கண்ணுங் கண்ணீருமாக வந்து அடிபணிந்து இரந்த இந்திரனுக்குத் திருவுள்ள மிரங்கி மாவலியைப் பாதாளத்திலே செலுத்தினவனும், கடல் சூழ்ந்த இலங்காபுரியை யீடழித்தவனுமான எம்பெருமானை ஆசைப்பட்டு நான் பெற்ற பேறு வளையிழந்ததும் நிறமழிந்ததுமே காணீர்! என்று படியெடுத்துக் காட்டுகிறாள் பரகாலநாயகி.

English Translation

In the great Bharata war the Lord drove Arjuna;s chariot. He held the mighty mabali captive in a huge golden cage. He destroyed the ocean-girdled Lanka. Look at this, I have lost my bangles, and my rouge to him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்