விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மல்லோடு கஞ்சனும்*  துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
    அல்லி மலர்த்தண்துழாய்*  நினைந்திருந்தேனையே,*
    எல்லியில் மாருதம்*  வந்தடும், அதுவன்றியும்,*
    கொல்லை வல்லேற்றின் மணியும்*  கோயின்மை செய்யுமே!.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல்லொடு – மல்லர்களும்
கஞ்சனும் – கம்ஸனும்
துஞ்ச – முடியும்படி
வென்ற – வெற்றிபெற்ற
மணி வண்ணன் – நீலமணிவண்ணனான கண்ணபிரானுடைய

விளக்க உரை

சாணூரன் முஷ்டிகன் முதலான மல்லர்களையும் கம்ஸனையும் தீர்க்க நித்திரை செய்யும்படியாகக் கொன்றொழித்த கண்ணபிரானுடைய கலவி கிடைக்கப் பெறாதொழியினும் அவனது திருமேனியில் ஸம்பந்தம் பெற்ற திருத்துழாய் மாலையாகிலும் சிறிது கிடைக்குமோவென்று அல்லும்பகலும் இதுவே சிந்தனையாகக் கிடக்கிற என்னை அந்திக்காற்றும் மாட்டின் கழுத்து மணியோசையும் வருத்துகின்றனவே யென்கிறாள். எம்பெருமானுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தை நான் கருதாமல் ஊராரோடொப்ப உண்டுடுத்துக் களித்துத் திரிந்தேனாகில் ஒன்றுக்கும் நான் வருந்த வேண்டியிராது; அதில் ஆசை வைத்தமையாலன்றோ பிறர்க்கு இன்பமளிப்பவற்றால் நான் துன்புறவேண்டிற்றாயிற்று என்கிறாள். மாருதம் - வடசொல் (

English Translation

The gem-hued Lord vanquished the wrestlers and killed kamsa, My mind keeps thinking of his cool Tulasi garland. The evening breeze comes to kill me. Not alone, the strong bull;s neck-bell sounds like a death-knell!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்