விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பூவை வண்ணனார்*  புள்ளின் மேல்வர,* 
    மேவி நின்றுநான்*  கண்ட தண்டமோ,*
    வீவுஇல்ஐங்கணை*  வில்லி அம்புகோத்து,* 
    ஆவியே இலக்குஆக எய்வதே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஐங்கணை வில்லி - மன்மதனானவன்
வீவு இல் - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல்
அம்பு கோத்து - பாணங்களைத் தொடுத்து
ஆவியே இலக்கு ஆக எய்வது - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது
பூவை வண் ணனார் - காயம்பூவண்ணரான பெருமாள்

விளக்க உரை

பஞ்சபாணனாகிய மன்மதன் தனது கரும்புவில்லிலே மலரம்புகளைத் தொடுத்து என் ஆவியையே இலக்காகக் கொண்டு பிரயோகிப்பதானது, எம்பெருமான பெரிய திருவடியின் மீது எழுந்தருள ஒருகால் நான் ஸேவிக்கப் பெற்றதற்கு இட்ட தண்டனையோ என்கிறாள். பகவத் விஷயத்தில் ஆசைகொள்ளாதர்க்குக் காமவேதனை கிடையாதென்றும், பகவத் விஷயத்தில் ஈடுபட்டது காரணமாகவே தமக்கு இக்காமநோய் உண்டாயிற்றென்றும் தெஜீவித்தாராயிற்று. பூவை -காயாம்பூவில் ஒருசாதியென்பர்.

English Translation

I stood and watched longingly as the kaya-hued Lord came riding Garuda bird, Is this my punishment, ;that Madana the god of love, keeps; piercing my soul with his flower-arrows constantly?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்