விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்குஓர் ஆய்க்குலத்துள்*  வளர்ந்து சென்று,* 
    அங்குஓர்*  தாய்உருஆகி வந்தவள்,*
    கொங்கை நஞ்சுஉண்ட*  கோயின்மை கொலோ,*
    திங்கள் வெம்கதிர்*  சீறுகின்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திங்கள் - சந்திரனுடைய
வெம் கதிர் - கொடிய கிரணங்கள்
சீறுகின்றது - சீறுவதானது
சென்று - (மதுரையில் நின்றும்) போய்
அங்கு ஓர் ஆய் குலத்திலே வளர்ந்து - அந்த விலக்ஷணமான இடைக்குலத்துள்  வளர்ந்து கொண்டிருக்கையில்,

விளக்க உரை

குளிர்ச்சியே இயல்வாகவுடைய சந்திரன் இப்போது என் திறத்திலே தன் தன்மைமாறி வெக்காயம் காட்டுவது வெறுமனன்று “இன்ன இன்ன பதார்த்தங்கள் இன்ன இன்னபடி வர்த்திக்கக்கடவன்” என்று முதலிலே ஸங்கல்பித்தவன் ஸர்வேச்வரனாகையாலே அவனுடைய ஸங்கல்பாதீகமாகவே குளிர்ச்சியை இயல்வாகவுடையனாயிருந்த சந்திரன் இப்போதும் அந்த எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினாலேயே இப்படி சுடவேண்டும். அன்றான் ஒருத்தி மகனாய்ப்பிறந்து ஓரிரவிலொருத்திமகனா யொளித்து வளர்ந்தருளுங்காலத்திலே தன்னை நலிவதாகத் தாயுருக்கொண்டுவந்த பூதனை யென்னும் பேய்ச்சியின் முலையை உயிரோடே உறிஞ்சியுண்ட பராக்ரமத்தையே பாவியேனிடத்திலுங்காட்டவேண்டி அதற்காக இங்ஙனே சந்திரனை ஏவினான் போலும் என்கிறாளென்க. கோயிண்மை = கேட்பாரற்ற செயல் “குழகி யெங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்ம மொன்றில்லை” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க. இச்சொல் வேறு பொருளிலேயும் வருவதுண்டு; “அடிமை யென்னும் அக்கோயின்மையாலே” என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க.

English Translation

He is one who entered another household and grew up there. He sucked the poison breast of an ogress who came as a mother. Aho, the impropriety! The rays of the Moon sizzle me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்