விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காரும் வார்பனிக்*  கடலும் அன்னவன்,* 
    தாரும் மார்வமும்*  கண்ட தண்டமோ,*
    சோரும் மாமுகில்*  துளியின் ஊடுவந்து,* 
    ஈர வாடைதான்*  ஈரும் என்னையே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சாரும் - வர்ஷிக்கின்ற
மாமுகில் - காளமேகத்தினுடைய
ஒளியினூடு வந்து - துளியினுள்ளேயிருக்கிற குளிர் சியை ஊட்டிக்கொண்டுவந்து
ஈரம்வாடை - (அதனால்) குளிர்ச்சிமிக்கக வாடைக்காற்றானது
என்னை ஈரும் - என்னை ஹிம்ளிக்கின்றது

விளக்க உரை

தென்றல் வந்து நோவுபடுத்தினமை சொல்லிற்று கீழ்பபாட்டில்; வாடை வந்து நோவுபடுத்துகின்றமை சொல்லுகிறது இப்பாட்டில். பெய்கின்ற மழைத்துளியைத் துணையாகக்கொண்டு வீசுகின்ற வாடைக்காற்றானது, ஏற்கனவே விரஹத்தாலே இளைத்திருக்கின்ற என்னுடலை தற்கொலையாக முடித்திடாதே உயிர்க்கொலையாகச் சித்திரவதம் செய்யாநின்றதே! இதற்கு யாது காரணம்? என்று ஆராயுங்கால், அப்பெருமானுடைய திருமார்புந் திருமாலையுமான அழகைக் காணவேணுமென்று ஆசைப்பட்டேனே, அதற்காக நேர்கின்ற சிக்ஷைபோலும் இது-என்கிறாள். இதனால் பகவத் விஷயத்தில் ஆசை கொள்ளாதர்க்கு மாமுகில் துளியும் வாடைக் காற்றும் இனிதாயிருக்கும்; பகவத் விஷயத்தை ஆசைப்பட்டுப் பெறாதர்க்கு லௌகிக பதர்த்தங்களெல்லாம் பாதகமாயிருக்கும் என்றதாயிற்று. ஈர்த்தல் - அறுத்தல்.

English Translation

The Lord is dark as the rain cloud, and the deep ocean. I desired his Tulasi-garland-chest. Is this the punishment? –the breeze laden with the cool dew of rainclouds blows to pierce my soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்