விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருளக் கொடி ஒன்றுஉடையீர்!*  தனிப்பாகீர்,* 
    உருளச் சகடம் அது*  உறுக்கி நிமிர்த்தீர்,*
    மருளைக் கொடுபாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    இருளத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கருளன் - கருடனாகிற
கொடி ஒன்று உடையீர் - ஒரு த்வஜத்தையுடையவரே!
தனி பாகீர் - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே!
உறக்கில் - தூங்கும்போது
சகடம் அது - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது
 
 

விளக்க உரை

நீர் மிகப் பெரியீர், பெரிய திருவடியைக் கொடியாக வுடையீர், அவனை ஏறி நடத்துவதில் அஸாதாரணமான வல்லமையுடையீர், உறங்கும்போது அஸுராவிஷ்டமான சகடம் மேலே விழ, பாலுக்கழுக்கிற பாவனையிலே நிமிர்ந்த திருவடியாலே அதனைப் பொடிப்படுத்தினீர், இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்தவுமக்கு நாங்கள் லக்ஷியமோ? இப்படி எங்களைக் குழைச்சரக்காக நினைத்து உபேக்ஷிக்கிற நீர் எங்களை நெஞ்சிலும் இட்டெண்ணாதேயிருந்துவிடலாகாதோ? பெண்பிறந்தா ரெல்லாரும் நஞசுண்டாரைப்போலே மோஹிக்கும்படியாகப் பண்ணை நுணுங்கிக்கொண்டு அபர ராத்ரியிலே இங்கு வந்து புகுந்தீரே, இது எதுக்கு? போம், போம் என்கிறாள். மருள - வினையெச்சம். கொடுபாடி - பாடிக்கொடு. கொடு - கொண்டு என்பதன் சிதைவு.

English Translation

O Lord Narayana with many names! You smell strongly of Tulasi fronds! Singing songs of Madana, god of love, you enter the house. O, What is this, What is this, What is this?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்