விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
    சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*
    பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
    அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் சுடரும் - சந்திர ஸூர்யர்களும்
நிலனும் - பூமியும்
பொங்கு ஆர் - பொங்குதல் பொருந்திய ஸமுத்ரங்களும்
பொருப்பும் - மலைகளும்
நெருப்பும் - அக்நியும் (ஆகிய இவையடங்கலும்)

விளக்க உரை

தொடங்கும்போதே ‘எங்கானு மீதொப்பதோர் மாயமுண்டே’ என்ற அழகு என்னெ!, மேன்மையின் எல்லையிலே நிற்கிற பரபரன் நீர்மையின் எல்லையிலே நிற்கிறவிது என்ன ஆச்சரியம்! என்ன கபடச்செயல்!, இப்படிப் பட்ட மாயம் பகவத் விஷயத்தில் தவிர வேறு எந்த விஷயத்திலாவது காணக் கிடைக்குமோ? என்கிறார் நீர் கண்ட மேன்மையும் நீர் கண்ட நீர்மையும் என்கொல்? என்ன. முந்துறமுன்னம் மேன்மையை உப்பாதிக்கிறார் நரநாரணனாய் என்று தொடங்கி. நரநாரணனாய் என்றதிலேயே ஒரு மாயமுண்டு, அதாவது – சீரிய சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆசார்யபதம் செலுத்த வேண்டியதான் தன்னை சிஷ்யனாக அமைத்துக் கொண்ட மாயம். அதுவும் ‘எங்கானு மீதொப்பதொர் மாயமுண்டே’ என்றதில் விவக்ஷிதமாகலாம். அளவெண்ணெய் என்பதை உம்மைத் தொகையாகக் கொண்டால் அளையையும் வெண்ணையையும் என்றதாகிறது. (அளை - தயிர்) இனி, வினைத்தொகையாகக் கொண்டால், அளையப்படுகிற வெண்ணெய் என்றதாகிறது. அளைதல் -துழாவுதல்.

English Translation

My Lord came as Nara-Narayana and divulged the sacred texts. He is also the one who packed the twin Orbs, the Earth, the oceans, the mountains and the fires, -all within his stomach! And look, now he is a child leashed to a mortar for stealing the cowherd-dame;s butter! Can there ever be a greater wonder than this anywhere?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்