விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
    பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*
    குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
    அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரக்கம் இன்றி - ஈரநெஞ்சு இல்லாமல்
செய்த - பண்ணின
தீமை - அபசாரமானது
இம்மையே - இப்பிறப்பிலேயே
எமக்கு - எங்களுக்கு

விளக்க உரை

“அத்யுத்கடை - புண்யபாபை இஹைவ பலமச்நுதே.“ என்பது சாஸ்த்ரம். புண்யமோ பாபமோ எல்லைகடந்து செய்யப்படின் அவற்றின் பலன் அந்த ஜன்மத்திலேயே அநுபவிக்கக் கூடியதாகும் என்பது இதன்கருத்து. இந்த சாஸ்த்ரம் தங்கள் திறத்தில் பலித்துவிட்ட தென்கிறார்கள். (எங்கோன் இரக்கமின்றிச் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று.) பாவம் செய்தவன் அவன், அந்தப் பாவத்தின் பலன் அவனளவோடு நில்லாமல் எங்களளவும் பலித்துவிட்டது, (அதாவது) நாங்கள் உயிர்க்கு மன்றாடும்படியான நிலைமை நேர்ந்துவிட்டது என்கிறார்கள். பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக்கண்டால் “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு“ என்று மங்களாசாஸநம் பண்ண ப்ராப்தமாயிருக்க அது செய்யப்பெறாதே மிதுநத்தைப் பிரித்த கொடுமையை நினைத்து ‘இரக்கமின்றி’ என்றது. அன்றியே, ;நாம் செய்யும் பெரும் பிழை நம்மோடு போய்விடாது, இதன்பலனை நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் அநுபவிக்கவேண்டியதாகும், அந்தோ! நம்மால் நம்முடையவர்கட்கும் பெருந்துன்பம் விளையுமே!; என்று மனமிரங்காமல் என்று முரைக்கலாம். இராவணன் செய்த கொடுமையைத் தங்கள் வாயாலே விவரித்துச் சொல்லக் கூசிப் பொதுப்படையாக ;எங்கோன் செய்ததீமை; என்கிறார்கள். இராவணன்பட்டனன் -மேல் ஏழாம் பாட்டில் “ஏழையை யிலங்கைக் கிறைதன்னை எங்களை யொழியக் கொலையவனை“ என்று -குற்றஞ்செய்யாத எங்களைவிட்டு விட்டு குற்றவாளியான இராவணனை மாத்திரம் கொல்லவேணுமென்பதாக வேண்டிக் கொள்கின்றமையால் இராவணன் இன்னமும் முடிந்திலன் என்பது தெரிகின்றதே, அப்படியிருக்க ‘இராவணன்பட்டனன்’ என்று இங்குச் சொல்லுகிறபடி எங்ஙனே? என்று சங்கிக்கக்கூடும், “இனி இவனுக்கு மரணம் ஸித்தம், பிழைப்பது கிடையாது; என்கிற நிச்சயம் தங்கட்கு தோன்றிவிட்டதனால் ‘ஜீவச்சவம்’ என்னுங்கருத்தாலே பட்டனன் என்கிறார்களென்க. குரங்கு நாயகர், குரங்குநாயகர், மென்றொடர் வன்றொடராயிற்று. ஸுக்ரீவன், ஹநுமான், அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களை உளப்படுத்திக் குரக்குநாயகர்கள்! என்றது. அரக்கராடழைப்பாரில்லை – ‘ராக்ஷஸரில் இனி ஆடுபோலே கூப்பிடக்கடவாரில்லை’ என்று நஞ்சீயர் நம்பிள்ளைக்குப் பொருள் பணிக்க, அதனை நம்பிள்ளை கேட்டு, ‘ஆடு என்று வெற்றிக்கும் வாசகமாதலால், இந்தராக்ஷஸஜாதியில் வெற்றி சொல்லுவாரில்லை, (அதாவது) தோற்றோம் தோற்றோம் என்று தோல்வியைச் சொல்லவல்லாருள்ளோ மத்தனையொழிய வென்றோமென்று விஜயத்தைச் சொல்லிக்கொள்ள வல்லாரில்லை. என்று பொருள்கூறலாகாதோ? என்ன, நஞ்சீயரும் இதைக்கேட்டருளி ‘இதுவெபொருந்தும்பொருள், இப்படியே சொல்லிக்கொள்ள அமையும்’ என்று நியமித்தருளினராம்.

English Translation

Masters! Heartlessly our king did many wrongs, here and now they are rebounding upon us, what is the use in our delving on all this, -Ravana has been killed, -whom to tell this? kings of the big monkey clant O, Prince Lakshmana! O Bow-wielder Rama, Alas, no one here to plead mercy for us fiends! We dance in fear to the sound of the wardrum pongottam Pongo!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்