விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
    குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*
    தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
    மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தட கடல் - ஆழ்ந்தகடலிலே
முகந்து - நீரைமொண்டுகொண்டு
விசும்பு இடை - ஆகாசத்திலே (ஏறி)
பிளிற - சுர்ஜிக்க, (அதைக்கேட்டு)
மடங்கல் - சிங்கமானது

விளக்க உரை

கடல் மணலே மிகுதி யென்னலாம்படியாக நீர்ப் பகுதியை முழுதும் முகந்துகொண்ட மேகங்கள் ஆகாசத்தை ஏறிப் பரமகம்பீரமாக முழங்க அம்முழக்கத்தைச் செவியுற்ற சிங்கம் மலையிலுள்ள யானையை இப்படி அச்சங்கெட்டுக் கர்ஜிக்கின்றதென்று மயங்கி “நாம் வாழுமிடத்திலே யானையும் இப்படி செருக்குக் கொள்ளக் கடவதோ?” என்று சீறி அதற்குப் பிரதிகர்ஜனை செய்ய பெற்றதாம் இத்திருமலை. மடங்கல் - சிங்கம்.

English Translation

O Frail Heart! The Lord who reclines on a venom-spitting serpent came then as a cowherd-lad and threw a demon calf against a wood-apple tree, then danced with pots, and blended with the cowherd-dames in their Kuravai dance. He resides in Malirumsolai where dark monsoon clouds rise from the ocean and roar in the sky, and lions taking them to be elephants, roar back in anger. Come, let us offer worship there

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்