விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளியார் - பாசுபதர்களென்றும்
பிண்டியார் - ஜைநர்களென்றும்
என்றிவர் - சொல்லப்படுகிற புறமதத்தவர்கள்
ஒதுக்கின்ற - சொல்லிக்கொண்டுதிரிகிர
கள்ளம் நூல் தன்னையும் - பொய்யான சாஸ்த்ரங்களையும்

விளக்க உரை

கீழ் எட்டு பாசுரங்களிலும் அருளிச்செய்தபடியே ஆபாஸ பந்துக்கள் உற்ற துணையல்லர் என்கிற வுணர்ச்சியும், விஷயபோகங்கள் நமக்கு ஸ்வரூப ப்ராப்தமன்று என்கிற வுணர்ச்சியும், இஹலோகத்துச் செல்வம் நிலைநிற்ப தன்று என்கிற வுணர்ச்சியும், இவ்வுடல் துச்சம் என்னுமுணர்ச்சியும் உண்டாகப் பெற்றாலும் கண்டவிடமெங்கும் பரவிக்கிடக்கிற வேதபாஹ்யமதங்களிலே அந்வயிக்கப்பெறாமையாகிற பாக்கியமுண்டாவது அருமையாதலால் அதனை இப்பாசுரத்தில் ப்ரஸ்தாவிக்கிறார். வெள்ளியார் என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள்கூறுவர், வெள்ளியென்று சுக்ரனுக்குப் பேராகையாலே அவனைச் செல்லலாம், லோகாயத மதத்திற்கு அவன் ப்ரவர்த்தகனென்க. இனி, வெள்ளிமலையாகிய கைலாஸகிரியை இருப்பிடமாகவுடைய பசுபதியைச் சொல்லவுமாம், பாசுபதமதத்திற்கு அவன் பிரவர்த்தகனாதல் அறிக. (பிண்டியார்) பிண்டியென்று அசோக மரத்திற்குப் பெயர், அதனை இருப்பிடமாகவுடைய அருகதெய்வம் ஜைநர்களுடையது. (ஜைநமதத்தினரான பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலின் தொடக்கத்தில் உள்ள கடவுள் வணக்கத்தில் “பூமலியசோகின் புனை நிழலமர்ந்த“ என்றது காண்க.) (போதியார்) போதியென்று அரசமரத்திற்குப் பெயர், அதனை இருப்பிடமாகவுடையது புத்த தேவதை, (புத்த தேவனைப் போதிவேந்தனென வழங்குதல் காண்க.) ஆகவே போதியாரென்றது பௌத்தரைச் சொன்னபடி. ஆகவிப்படிப்பட்ட பாஹ்ய மதஸ்தர்களின் கொள்கைகள் நமக்கு உபாதய மல்லென்று துணிந்து வைதிக ஸம்ப்ரதாய நிஷ்டையுடையையாகில் நெஞ்சமே! ஸ்வருப ஜ்ஞாநிகளால் ஸேவிக்கப்படுபவரும், ப்ரயோஜநாந்தரபரர்க்குங்கூட உடம்பு நோவக் கடல்கடைந்து அமுதமளித்தவருமான பெருமாள் நித்யவாஸம் பண்ணுமிடமான திருவல்லவாழிலே பொருந்தப்பார் என்றாராயிற்று. தெள்ளியார் என்றது தெளிவுள்ளவர்கள் என்றபடி. தெளிவாவது -;உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானே; என்ற அத்யவஸாயம், அஃது உடையவர்கள் “கலக்கமில்லா நற்றவ முனிவர் கரைகண்டோரு, துளக்கமில்லாவானவர்“ என்கிறபடியே ஆத்மஸ்வரூபம் கைவந்திருக்கும் ஸநகாதி மஹர்ஷிகளும் முக்தரும் நித்யஸூரிகளும். முநீர் - தொகுத்தல்.

English Translation

O Heart! The Raudras, the Arhatas and the Bauddhas go about quoting from heretic texts. If you realise they are not meant for you, and seek a way to elevate your spirit, then learn to speak of the glories of Tiruvallaval, abode of the Lord worshipped by the celestials, the benevolent one who churned the ocean and gave them ambrosia

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்