விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெற்றாரும் சுற்றமும்*  என்று இவை பேணேன்நான்* 
    மற்றுஆரும் பற்றுஇலேன்*  ஆதலால் நின்அடைந்தேன்*
    உற்றான்என்று உள்ளத்து வைத்து*  அருள் செய்கண்டாய்,*
    கற்றார்சேர்*  கண்ணபுரத்து உறை அம்மானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெற்றாரும் - மாதாபிதாக்களென்ன
சுற்றமும் - உறவினரென்ன
என்ற இவை - என்று சொல்லப்படுகிற இப்படிப்பட்டவர்களை
நான் பேணேன் - நான் உற்றாராக விரும்ப மாட்டேன்;
மற்று ஆரும் - மற்று யாரிடத்திலும்

விளக்க உரை

காமத்தாலே பெற்றுவிட்டுப் போட்டுப்போகிற தாய்தந்தையரையும், “பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் போற்றியென்றேற்றெழுவர், இருள்கொள் துன்பத்தின்மை காணில் என்னே யென்பாருமில்லை” என்கிறபடியே கையில் துட்டுகாசு நடையாடுங் காலங்களில் உறவு கொண்டாடியும் அஃதில்லாத வறுமையில் விட்டொழிந்தும் போருகிற ஆபாஸபந்துக்களையும், புகலாக நெஞ்சிலும் நினைக்கின்றிலேன். விவேகமில்லாமல் வேண்டியபடி வரங்களையளித்துத் தடுமாறியும், ஆபத்காலத்தில் முதுகுகாட்டிஓடியும் போருகிற தேவதாந்தரங்களிடத்திலும் ஒரு பற்றாசு உடையேனல்லேன் ஆக, பரிபூரணமான அநந்யகதித்வத்தையுடையேனான நான் “களைவாய்துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே உன்னைவந்து பணிந்தேன். ‘எங்கும் புகலற்று நம்மையே பற்றி வந்தானிவன்’ என்று திருவுள்ளம் பற்றி அடியேன்பால் அருள்புரியவேணும். இல்லை யாகில், பரமபதம் திருப்பாற்கடல் முதலிய இடங்களைவிட்டுத் திருக்கண்ணபுரத்தே கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பது பயனற்றதாகுங்காண். நீ வர்த்திக்கிற ஊரிலே உள்ளவர்கள் ஸாமாந்யரல்லர்; கலையறக்கற்றுணர்ந்த மாஞானிகள்; வேறு புகலற்று வந்தவனைக் கைக்கொள்வது தகுதியோ? கைவிடுவது தகுதியோ? என்று அவர்களைக் கேட்டாகிலும் நி உணரப்பெறலாம் – என்கிறார்போலும். ‘உற்றானென்று’ என்பதற்கு ‘படாதபாடுகளும் பட்டானென்று’ என்றும் பொருளுரைப்பர். அதாவது – இக்கலியன் நம்மைவிட்டுப் புறம்பேபுக்குப் படவேண்டியதெல்லாம் பட்டுவந்தான்; எங்குமுழன்றலைந்து வருந்தி வந்து சேர்ந்த விவனை இனி நாம் பரீக்ஷிக்கத் தேவையில்லை என்று கடுகக் கிருபைசெய்தருளவேணும் என்கை. உற்றான் – அநர்த்தப்பட்டான் என்றபடி. இச் சொல்லுக்கு இப்பொருள்படுதலை “மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள், உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர்” என்ற திருமாலைப் பாசுரத்திலுங் காண்க.

English Translation

O Lord of kannapuram where learned ones reside! I have no attachments to parents and relatives. I have no friends either, I have come to you alone. Hence treat me as belonging to you and grace me, you must! ????? ????? mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter Visitors Counter

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்