விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
    இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*
    உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
    கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உந்த - ஒதுக்கித்தள்ளவும்
ஒரு பால் - இன்னொருபுறத்தில்
ஒண் - அழகிய
செந்நெல் - செந்நெற்பயிர்கள்
கவரி வீசும் - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற

விளக்க உரை

மண்ணாகக் காணப்படுகிற பூமிக்கு அதிஷ்டாந தேவதையாகிய பிராட்டிக்கு விசேஷணம் துவரிக்கனிவாய் என்பது. இவரித்தரசர் தடுமாற = இவரித்தல் – எதிர்த்தல். இவரித்த + அரசர் – இவரித்தவரசர் எனச் சந்தியாக வேண்டுவது அங்ஙனம் ஆகாதது தொகுத்தல் விகாரம். “அரசர் தடுமாற இவரித்து இருள் நாள் பிறந்த அம்மானை” என்றும் அந்வயிக்கலாம்; அப்போது ‘இவரித்து’ என்பதை எச்சத்திரிபாகக் கொண்டு இவரிக்க என்றுரைத்துக் கொள்க. அன்றியே, உருபு பிரித்துக் கூட்டி ‘இருள்நாள் பிறந்து பாரதத்துளரசர் தடுமாற இவரித்த அம்மானை’ என்னவுமாம். க்ருஷ்ணபக்ஷத்தில் நடுநிசியில் அவதரித்ததுபற்றி ‘இருள் நாள் பிறந்த’ எனப்பட்டது. ஒரு பக்கத்தில் கடலலைகள் வந்து முத்துக்களைக் கொழித்துத்தள்ளவும் மற்றொருபக்கத்தில் செந்நெற் பயிர்கள் கதிர்களை வணங்கிச் சாமரம் வீசுவதுபோல் அசையவும் அழகு மிக்கதாம் திருக்கண்ணபுரம். இங்கே ஒரு சங்கை :– திருக்கண்ணபுரத்திற்கு ஏறக்குறைய யோஜனை தூரத்திற்கப்பால் கடலுள்ளது; அப்படியிருக்க, கடல் அணித்தாயிருப்பது போல் கீழ்த்திருமொழியிலும் இத்திருமொழியிலும் அருளிச்செய்தது என்கொண்டு? என்று; இந்த சங்கைக்கு நாம் என்னபரிகாரம் சொல்வோம்; நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் (9-10-1) “வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்” என்றருளிச் செய்யக் காண்கிறோம்; முற்கால நிலைமையில் கடல் மிக அணித்தா யிருந்ததென்னலாம் போலும்.

English Translation

To relieve the distress of the berry-lipped Dame Earth and find elevation of spirit, the Lord took birth on the dark night of krishnastami and caused the Bharata war that destroyed the fyrant kings. I know he is in kannapuram, where waves of the ocean wash pearls on one side and the wind fans ripe ears of paddy like whisks on the other side.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்