விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
    வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*
    செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
    கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெற்றி தொழிலார் - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும்
வேல் - வேற்படையையுடையருமான
வேந்தர் - அரசர்கள்
விண் பால் செல்ல - வீரதஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி
வெம் சமத்து - வெவ்விய போர்க்களத்தில்

விளக்க உரை

“ஒற்றைக்குழையும் - ஒருகாது என்றது கலப்பையை ஒரு தோளிற் சுற்றிக்கொண்டு புறப்படுகையாலே ஒருகாதுக்குழையே புறம்புள்ளார்க்குத் தோன்று மென்னுங் கருத்தாலே என்று கொள்வது” என்றுரைத்துள்ளார். மற்றும் பிரமாணகதிக்குப் பொருந்திய நிர்வாஹமுண்டேல் கண்டு கொள்வது. கண்ணபிரானால் பல வேல்வேந்தர்கள் அமர்க்களத்தில் வீரஸ்வர்க்கத்திற்குச் செலுத்தப்பட்டபோது அதற்குப் பலராமன் துணையாயிருந்தது பற்றியும், கம்ஸனுடைய தம்பியாகிய ஸுநாமாமுதலிய பலமன்னர்களைத் தானே கொன்றிட்டதுபற்றியும் “ வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்துச் செற்ற கொற்றத்தொழிலானை” என்றது. செந்தீமூன்றுமில்லிருப்பக் கற்றமறையோர் கண்ணபுரம் = நித்தியாக்நிஹோத்ரிகளும் வித்வான்களுமான ஞானானுட்டான ஸம்பந்நர்கள் திரண்டுவாழுமிடம் திருக்கண்ணபுரம் என்க.

English Translation

Displaying on earning on one shoulder and a plough on the other, the Lord appeared on Earth and victoriously sent mighty warrior kings to heaven. I know he is in kannapuram, where learned Vedic seers fend to the three sacred fires in every home.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்