விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*
    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமகள் மருவிய - எரிய பிராட்டியார் பொருந்தியிருக்கப்பெற்ற
கொழுவிய செழு - மிகவும் செழுமைதங்கிய
மலர் - தாமரைப்பூவிலே
முழுசிய - அவகாஹித்த
பறவை - (வண்டுகளாகிய) பறவைகளினுடைய

விளக்க உரை

‘திருமகள் மருவிய’ என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும் ஆகலாம். கணபுரத்துக்காகில் செல்வம் மல்கியவூர் என்றவாறாம். மலர்க்கு ஆகில், எம்பெருமானார் கத்யத்தில் “பத்மவங லயாம்” என்று அருளிச்செய்தபடியே தாமரை மலர்தோறும் பெரிய பிராட்டியார் உறைகின்றமை உணரத்தக்கது.

English Translation

The Lord who wieled an ae and has a cloud hue resides permanantly with the lady Sri in kannapuram where lotus blossoms everywhere are thronged by bees that sing in beautiful panns.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்