விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*
    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துளு - துள்ளவும் பெற்ற
கணபுரம் - திருக்கண்ணபுரமானது,-
புயல் உறு - பெருங்காற்றோடு கூடின
வரை மழை - கல் மழை
பொழிதர - பொழியுமளவில்

விளக்க உரை

களைபறிக்கிறவர்கள் களைக்கொட்டுகளைக் கொண்டு வியாபரிக்கு மளவிலே சிறுதூறுகளில் நின்றும் புறப்பட்ட முயல்கள் அவர்களது முகத்திலே துள்ளவும், செழிப்பு மிக்க வயல்களிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல் மீன்கள் துள்ளவும் பெற்ற திருக்கண்ணபுரம் – பண்டு இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழுநாள் கல்மழை பெய்வித்த காலத்துக் கோ நிரைகள் கலங்கிநிற்க அக்கலக்கந் தீருமாறு கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப்பிடித்த பெருமானுறையுமிடம் என்பதாம்.

English Translation

The Lord who lifted a mountain and protected the swooning cows against a hailstorm resides in kannapuram amid hills where the harvesters sickle brings out rabbits from their burrows and fertile fields where kayal-fish dance enchanted.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்