விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*
    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழு மா மரம் - ஸப்தஸால வ்ருக்ஷங்கள்
துளைபட - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி
சிலை - வில்லை
வளைத்து - வளைத்தவனும்,
இலங்கையை - லங்காபுரியை

விளக்க உரை

அன்பர்கட்கு அருந்தொழில்கள் செய்யுமவன் என்று புகழ்பெற்ற பெருமான் இதுவரையில் நமக்குச் செய்திருந்த அருளும் போயிற்று, பகற்பொழுதும் போயிற்று; எம்பெருமானருள் மறுத்தாலும் பகற்பொழுதாகிலுமிருந்தால் ஒருவாறு உலகப்பொருள்களையாவது கண்டுகொண்டு ஆற்றலாம்; அவனருளோடு கூடவே பகற்போதும் போயிற்றே; தோழீ! இதற்கு நாம் என் செய்யக்கடவோம்; நமக்கு ஆரும் துணையில்லையே; ஸூர்யன் தான் தோன்றின ஸமுத்ரத்திலேயே சென்று அஸ்தமிக்க, இன்னம் சிறிது நாளைக்கு ஜீவித்திருக்கவல்ல பிராணனை இன்றே முடிப்பதாக மாலைப்பொழுது வந்து சேர்ந்து விட்டதே! அந்தோ! என்கிறாள்.

English Translation

The discus wielder pierced seven frees and rozed Lanka; this is the grace that he has showered on us, Sister! The day draws to a close, alas, what can we do? We have no help. The sun is sinking into the sea, a deadly eventide comes to kill our flickering souls, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்