விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
    காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*
    பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
    நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காணும் ஓ! கண்ணபுரம் என்ற காட்டினாள் - ‘வாரீர்! பாருங்கோள் இதோ கண்ணபுரம்’ என்று (பிறர்க்கும்) காட்டினாள்;
பாணனார் திண்ணம் இருக்க - சேர்விக்கும ஆசார்யருடைய த்ருடாத்யவஸாயம் குறையற்றிருக்கையாலே
இனி இவள் நாணுமோ - இனி இவள் வெட்கப்பட்டு மீளக்கூடுமோ;
நறையூரார்க்கே - திருநறையூர்ப் பெருமானாகிய எம்பெருமானுக்கே
நன்று நன்று - (தன் எண்ணம்) நன்றாய்த் தலைக்கட்டிற்று.

விளக்க உரை

‘இப்பரகாலநாயகியை மநுஷ்ய ஸஞ்சாரமில்லாத வோரிடத்திலே கொண்டு போய் வைத்தால் திருக்கண்ணபுரத் தெம்பெருமானிடத்து இவளுக்குண்டான அபிநிவேசம் ஒருவாறு தணியக்கூடும்’ என்றெண்ணித் திருத்தாய் இவளை ஒரு உயர்ந்த மாடமாளிகையிலே கொண்டு வைத்தாள்; அவ்விடமெ நீணிலாமுற்றம் எனப்படுகின்றது; உந்நதமாயும் நிலாவோடு கூடினதாயுமிருக்கிற முற்றம் என்றபடி. அவ்விடத்தில் நின்றுகொண்டு திருக்கண்ணபுரத்தை நோக்கினாள். காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள் = ‘சாண்நீளச் சிறுக்கியான வுனக்கு இப்படிப்பட்ட ப்ராவண்யம் தகாது’ என்று அடிக்கடி சிக்ஷிக்கின்ற தாயாகிய என்னையும் அஞ்சாதே அழைத்து ‘அதோபார், திருக்கண்ணபுரம் தெரிகிறதா?’ என்று விரலாற் சுட்டிக் காட்டுகின்றாளே. (அன்றியே) திருக்கண்ணபுரத்தைப் பாருங்கள்; கையெடுத்துக் கும்பிடுங்கள்’ என்று பன்னியுரைக்கப் புகுந்து விவக்ஷிதங்களைப் பூர்த்தியாகச்சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் ‘காணுமோ கண்ணபுரம்’ என்று வாயாற் சொல்லி மற்றதை ஹஸ்த முத்ரையாலே பூரிக்கின்றாள் என்றுமாம். பாணனார் திண்ணமிருக் இனியிவள் நாணுமோ? = நாயகனால் நாயகிபக்கலில் அனுப்பப்படுகின்ற தூதுவன்போன்ற ஒருவனுக்குப் பாணன் என்று பெயர்; (பாணன் பாடுமவன்.) நாயகியினுடைய ப்ரணய ரோஷங்களைப் போக்கி அவளை நாயகனோடே சேர்ப்பிக்குமவன் பாணன் என்று கொள்க. (திருவரங்கக் கலம்பகத்தில் (81) “விடாது பூமடந்தைமார்......அடாததன்று பாண! ...” என்ற செய்யுள் நோக்குக.) இங்குப் ‘பாணானார் என்றது பூஜோதிக்தி; சேதநனை ஈச்வரனோடே சேரச்செய்கின்ற ஆசாரியரே இங்குப் பாணனா எனப்படுகிறார். திண்ணமிருக்க இனியிவள் நாணுமோ? = “உங்களோடெங்களிடைமில்லையே” என்னும்படி தேஹபந்துக்களோடே உறவையறுத்து பகவத்விஷயத்திலேயே அவகாஹிக்கச் செய்கிற ஆசார்யனுடைய வலிமை இவளுக்கு இருக்கும்போது இனி இவள் அவ்விஷயத்தில் நின்றும் மீளமாட்டாள் போலு மென்கை. (நாணுமோ?) நாணாவது லஜ்ஜை; இலக்கணையால், லஜ்ஜையின் காரியமான மீட்சியை இங்கு விலக்ஷிக்கிறது. நன்று நன்று நறையூரார்க்கே இவளை மீட்கப்பார்க்கிற நமக்கு நல்லகாலமில்லை; முதலிலே இவளைத் தன் வலையிலகப்படுத்திக்கொண்ட திருநறையூர் நம்பியின் எண்ணமே நிறைவேறா நின்றமையால் அவர்க்கே நல்லகாலமாயிருக்கின்ற தென்கை.

English Translation

She stood on the moonlit terrace and surveyed the horizon, then brightened and said, "Look, Kannapuram!", pointing that-a-ways, With madal singers waiting eagerly, will she retreat from her suicidal act now? Good, good, for the Naraiyur Lord who has shown her the way.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்