விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*
    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏர் ஆர் - அழகுமிக்க
முகில்வண்ணன் தன்னை - மேகம்போன்ற திருநிறத்தையுடையனாய்
இமையோர் பெருமானை - நித்யஸூரிகட்குத் தலைவனான திருமாலைக்குறித்து,-
கார் ஆர் வயல் மங்கைக்கு - கருமைபொருந்திய கழனிகளையுடைய திருமங்கை நாட்டுக்கு
இறை - தலைவரான

விளக்க உரை

செல்வம் மிக்க திருவீதிகளை யுடைய சிறுபுலியூரில் சலசயனக்கோயிலிலுறையும் பெருமான் விஷயமாகத் திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய இத்திருமொழியை வாயாலேசொல்லி ஆச்ரயிக்கவே, பாபங்கள் தாமே ‘நமக்கு இவ்விடம் இருப்பல்ல’ என்று விட்டுப்போம் என்று பயனுரைத்ததாயிற்று.

English Translation

This garland of songs by fertile-fields Mangai king kaliyan, is on the Lord of Sirupuliyur Salasayanam with wide streets, Lord of cloud hue, Lord of the celestials. Those who master it and offer worship will never accrue bad karma.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்