விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-
    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மனம் - மனத்தில் நின்றும்
கள்ளம் - க்ருத்ரிமச்செயல்
விள்ளும் வகை கருதி - விட்டு நீங்கவேண்டும் வகையை விரும்பி
கழல் தொழுவீர் - (எம்பெருமானுடைய) திருவடிகளை ஆச்ரயிக்க வேண்டியிருக்கிறவர்களே!
முது பரவை - பழையதான கடலினுடைய

விளக்க உரை

கடல்வெள்ளம் அலையெறிந்து நவரத்னங்களைக் கொண்டு கொழிக்கும் நீர்க்கரைகளையுடைய சிறுபுலியூரென்னுந் திருப்பதியில் சலசயனமென்னும் ஸந்நிதியிலும் அடியேனுடைய நெஞ்சகத்திலும் பொருந்தி வாழ்கின்ற பெருமானைச் சிந்தனை செய்யுங்களென்றாராயிற்று. எம்பெருமான் வ்யாக்ரபாதர் என்னும் மாமுனிக்கு ஸேவைஸாதித்த தலமாதல் பற்றி இவ்வூர் சிறுபுலியூ ரெனப்படுமென்ப. சலசயனம் = மென்ற வடசொல் விகாரம். சலம் – மாயை; உறங்கவான்போல் யோகு செய்வதற்குக் கொண்ட சயனமாதலால் மாயப்படுக்கையென்கிறது. வ்யாக்ரபாத மஹர்ஷிக்குப் பாலசயனமாய் ஸேவை ஸாதித்தானென்க. சிறுபுலியூரென்பது க்ஷேத்ரத்தின் திருநாமம். திருக்கடன் மல்லையில் தலசயனப் பெருமாள் கிடக்குமிடம் தலசயன மென்றதுபோல, இங்குச் சலசயனப் பெருமாள் கிடக்குமிடம் சலசயன மென்னப்படும். நம்மாழ்வார் “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத்து உள்ளேயுறையும் பிரான் கண்டீர்” என்றருளிச் செய்ததுபோலே இவரும் “சிறுபுலியூர்ச் சலசயனத் துள்ளும் என துள்ளத்துள்ளு முறைவாரை” என்றார்.

English Translation

All those who worship the Lord's feet nd seek a change of heart! The waves of the mighty ocean wash out gems everywhere in Sirupuliyur where the Lord Salasayanam resides. He is the Lord in my heart. Worship him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்