விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாய் நினைந்த கன்றே ஒக்க*  என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*  தான் எனக்கு 
    ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*  அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
    வாயனை*  மகரக் குழைக் காதனை*  மைந்தனை மதிள் கோவல் இடைகழி 
    ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை*  என் அன்பனை அன்றி ஆதரியேனே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாய் நினைந்த கன்றே ஒக்க - தன் தாயாகிய பசுவை நினைக்கும் கன்றுபோல
என்னையும் - அடியேனையும்
தன்னையே நினைக்க செய்து - (எம் பெருமானாகிய) தன்னையே சிந்திக்கும்படி பண்ணி (அதற்கு மேலே)
தான் எனக்கு ஆய் நினைந்து - எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து
அருள் செய்யும் அப்பனை - கிருபை பண்ணும் உபகாரகனும்,

விளக்க உரை

கன்றானது எப்போதும் தன் தாயையே நினைத்துக் கொண்டிருக்குமாபோலே உலகுக்கெல்லாந் தாயாகிய தன்னையே நான் நினைந்திருக்குமாறு செய்தவனென்கிறார் முதலடியில். “பரந்த சிந்தை யொன்றி நின்று நின்னபாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே” என்கிறபடியே எம்பெருமானது அருளின்றியே அவனை நினைத்திருத்தல் அமையாதாதலால் ‘என்னையும் தன்னையே நினைக்கச் செய்து’ என்கிறார். நம்முடைய நினைவு மாறினாலும் தான் நினைவுமாறாதே “அஹம் ஸ்மராமி மதபக்தம நயாமி பரமாம் கதிம்” என்ற படியே நம்மை நினைத்திருந்து அருள் செய்பவ னென்கிறது ‘தானெனக்காய் நினைந் தருள் செய்யு மப்பனை’ என்றதனால். அப்படி எங்கேனுங் கண்டதுண்டோ வென்ன, உலகமெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப் பிழைக்கும்படி தானே அபேக்ஷா நிரபேக்ஷாமாகப் பாதுகாத்தருளின செயல் திருஷ்டாந்தமாகப் போராதோ வென்று அதனை யெடுத்துரைக்கின்றார் அன்றிவ்வையகமுண் டுமிழ்ந்திட்ட வாயனை என்று.

English Translation

Like calf that is bleating for mother cow, I do stand and cry seeking my mother-Lord, Constantly I keep thinking of the Lord alone, who in yore became a child on a floating leaf. He adorns himself with Makara-ear RINGS. He become the fourth person among the first Three. The Alvars who were huddled in a vestibule. He's a lion among gods and my only love.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்