விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கான எண்கும் குரங்கும்*  முசுவும் படையா*  அடல் அரக்கர் 
    மானம் அழித்து நின்ற*  வென்றி அம்மான்*  எனக்கு என்றும்
    தேனும் பாலும் அமுதும் ஆய*  திருமால் திருநாமம்*
    நானும் சொன்னேன் நமரும் உரைமின்*  நமோ நாராயணமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கானம் எண்கும் – காட்டுக்கரடிகளையும்
குரங்கும் – குரங்குகளையும்
முசுவும் – ‘முசு’ என்னுஞ்சாதிக் குரங்குகளையும்
படை ஆ – சேனையாகக்கொண்டு
அடல் அரக்கர் – கொடிய ராக்ஷருடைய

விளக்க உரை

அவாந்தரபேதங்களோடு கூடின வாநரஸமூஹங்களை ஸேனையாக் கொண்டு புகுந்து ராவணாதி ராக்ஷஸருடைய செருக்கையடக்கி வெற்றிபெற்ற பெருமானுடைய திருநாமம் தேனும் பாலும் அமுதும் போலே பரமபோக்கியமானது; அதனை நான் அநுஸந்தித்து ஆநந்திப்பதுபோல என்னோடு ஸம்பந்தமுடைய நீங்களும் அனுஸந்தித்து ஆநந்தியுங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியை நோக்கி யருளிச்செய்தாராயிற்று. “(நானும் சொன்னேன்;) இதர விஷயங்களினுடைய பேரையே சொல்லிப் போந்த நானுமன்றோ சொன்னேன்; இனியது கண்டால் எல்லார்க்குங் கொள்ளத் தட்டில்லையிறே. என்னோடு ஸம்பந்தமுடையா ரெல்லாரும் இத்தையே சொல்லிப் போருங்கோள்..........ஆழ்வார்கள் கோஷ்டியில் இதொழிய வேறொரு திருநாமமுண்டாக நினைத்திருப்பாரில்லை.” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் காண்க.

English Translation

The Lord who wiped out the Vanity of the mighty Rakshasas with an army of monkeys, bears and macaques, the Lord who is always sweet as honey, milk and ambrosia to my heart, the Lord who is the husband of Sri, - I shall say; devotees, repeat after me, -the Mantra is Na-ma Na-ra-ya-na-me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்